அப்போது மது பத்தாவது வகுப்பு படித்து கொண்டு இருந்தான். ஒருநாள் வயலுக்கு சென்ற கேசவ் மூர்த்தி வீடு திரும்பவில்லை. மாலை அவரது சடலம் தான் வந்தது. கொடிய விஷ பாம்பு கடித்ததால் மரணம் என ரிப்போர்ட் கூறியது.பிள்ளைகள் இருவரும் நிலைகுலைந்து போயினர். அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை முறை இன்னும் மாறியது...
1. அன்னை மடி நீ!
தஞ்சை பகுதியை சேர்ந்த அழகிய நெல் பூக்கும் பூமி அது.ஊர் பெயர் கூட பூந்துறை தான். இன்னமும் மண் வாசனை மாறாத கிராமம். இருபுறமும் பசிய புல்வெளிகளை பக்க துணையாக கொண்ட குறுகிய தார் ரோட்டு சாலைகளை இப்பொழுதும் இங்கு பார்க்கலாம். வயல்கள் மட்டுமன்றி சாலையை ஒட்டி நிழல் பரப்பும் புளிய மரம்...