கதையின் போக்கு என்னவென்றே புரியவில்லை சகி. கெவின் & கிஷோர் யாரு? எதுக்கு எல்லா வரியின் முடிவிலும் இரண்டு புள்ளிகள் (..) வச்சிருக்கீங்க. போட்டியில் வெற வாழ்த்துகள்!
இன்றைய பிள்ளைகளைக் கஷ்டம் தெரியாமல் வளர்க்கிறேன் என்று பெற்றவர்கள் தவறான வழியைக் காட்டுகிறார்கள். ஹரீஸ் திருந்தியதைப் போல் மற்றவர்கள் திருந்துவது எப்போது? அருமை சகி போட்டி வெற்றிபெற வாழ்த்துகள்!
கதையின் தலைப்பே கதையை சொல்லிவிட்டது. தன் பக்கம் பார்த்தால் அது நியாயம். அதையே எதிர் பக்கம் பார்த்தால் அநியாயம். இன்றைய மனிதனின் மனநிலை இதுதான். அவரவர் நியாயம் அவரவருக்கு. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சகி.
கோபம் இருக்கும் இடத்தில் நல்ல குணம் இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால், அதே கோபம் சில நேரங்களில் பெரிய பிரளயத்தையே உண்டாக்குவதும் உண்டு. கோபம் மனிதனிடத்தில் இயல்பான ஒன்றாக இருந்தாலும், அதைக் கட்டுக்குள் வைத்திருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை அழகா சொல்லிட்டீங்க சகி. போட்டியில் வெற்றி பெற...
ஆத்தர் ஜீ அதெப்படி இந்த விக்கல் மட்டும் நேரம் பார்த்து வருது? எனக்கென்னமோ இந்த அன்பழகியோட அம்மாதான் செந்தூரனின் அத்தையா இருப்பாங்களோன்னு தோணுது. அந்தக் காணம போன தங்கச்சி ராகிணிதான், அன்பழகி செந்தூரனுக்குச் சொந்த அத்தைப் பொண்ணு சரிதானா?
என்ன ஆத்தர் ஜீ சாமியம்மாவை கொலைகாரியா மாத்தி வச்சிருக்கீங்க. தெய்வ குத்தம் ஆகாதா... நீங்க சொல்ற இந்த சாமியம்மாவுக்கும் நான் பல செய்திகளில் கேள்விப்பட்ட சாமியம்மாவுக்கும் எதுவும் சம்பந்தம் இருக்குமோன்னு தோணுதே...
கோர்ட்டில் வழக்கு வாதாடுற மாதிரி தெரியலையே... செந்தூரன் சொல்ற கதையை எல்லாம் ஆர்வமா கேட்கிற மாதிரி இருக்கு. கோர்ட்டில் அத்தனை பேர் முன்னாடி எப்படி விக்கல் வரும்? கடைசியா வந்த விக்கல் எதுக்காம்?