Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 537
- Thread Author
- #1
சீமக்கரை:
கார் ஓட்டியபடியே அருகில் இருந்த மாமன் மகனை பார்த்த வேலு டேய் என்றான்.
ம்ம் சொல்லு மாமா என்று வளவன் கேட்க,
என்னடா பிரச்சினை? எதுக்கு இப்படி குடிமூழ்குன போல மொகரகட்டைய வச்சிட்டு இருக்க. நல்லநேரத்திலே பாக்க சகிக்காது. இதில் இப்படியென்றான்.
என்ன மாமா நக்கலா என்க..
உண்மைய சொன்னேன்.நீ சொல்லு வேலையில் எதாவது பிரச்சினையா என கேட்க அதுலாம் இல்லை. மனுசனுக்கு வாழ்க்கை தான் பிரச்சினை என்று வளவன் முணுமுணுத்தான்.
அடிச்சி வாயை ஒடைச்சிடுவேன்டா.உன் வாய்க்குள்ளே முணுவுனா எனக்கு எப்படி தெரியுமென வேலு கத்த...ஒன்னும் இல்ல மாமா நல்லா இருக்கேனென்று கண்ணை மூடி சீட்டில் சாய்ந்த வளவனுக்கு நிலா மேல் கொலவெறி ஏறியது. நல்லா மினுக்கிட்டு நின்னுருப்பாள்.
என்ன ஊர்ல இருந்து எந்த பயல் வந்தானு தெரியலையே இவ மண்டைய ஆட்டி ம் சொல்லிருப்பாள்.உடனே அவனும் கல்யாணத்தை முடிவு பண்டிருப்பானென்று தனக்குள்ளே பேசியவன் கை விரல்களை மடக்கி தனது கோபத்தை போக்கினான்.
இந்த பயலாவது என்ன ஆச்சு என்பதை சொல்றானா பாரு?எவனுக்கு வந்த விதியோனு வீணா போனவன் இருக்கானே என தனது அத்தை மகனை திட்டினான்.
ஓரக்கண்ணால் மாமன் மகனை பார்த்தவன்,இந்த மாட்டை இன்னும் கொஞ்ச நாள் சுத்தலில் விட்டு தான் அடக்கணுமென்று நினைத்தபடியே வேலு காரை ஓட்டினான்.
நீலகிரி:
மருது என தனது பெயரை சொல்வதை அவளின் உதட்டசைவை வைத்து கண்டவன் உள்ள வாங்க சாரென்று சொல்லியவன் அம்மா அம்மா என குரல் கொடுக்க,இதோ வரேன்யா என்று வந்த மயிலா அங்கு வந்த கதிரை பார்த்தவர் வாப்பா நல்லா இருக்கியா என்றார்.
நல்லா இருக்கேன் மா நீங்க எப்படி இருக்கீங்களென்க எனக்கென்னப்பா.நல்லா இருக்கேனென்றவர் இது தான் மருது.நீ போட்டோவில் பார்த்துருப்ப இல்லையா என்று கேட்டார்.
ஆமாங்கம்மா என்றவன் திரும்பி மனைவியை பார்க்க தாமரையோ ஆணி அடித்தபோல வாசலில் இருந்து சற்று தள்ளியே நின்றிருந்தாள்.
இவள் எதுக்கு இப்படி நிக்குறாளென்று நினைத்தான்.
யாரைப்பா பாக்குறயென்று மயிலாவும் வாசல் பக்கம் வந்து பார்த்தவர் அங்கு நிற்பவளை கண்டு தாமரை என்று வேகமாய் ஓடி போய் அவள் கையை பிடித்தவர் நல்லா இருக்கியா பாப்பா ?
இப்போ தான் இங்கு வர தோணுச்சா பாப்பா என்றவர் வாடா ஏன் இங்கையே நிக்குறயென்று அவளை கூப்பிட்டுக்கொண்டு வீட்டிற்குள் வந்தார்.
தாமரையென்று கதிர் கூப்பிட கணவனின் கணீர் குரலில் சுதாரித்தவள் கணவனோடு மயிலாவின் காலில் விழ யாத்தேஏஏஏ நல்லா இருக்கப்பா என்று இருவரையும் தூக்கி விட்டவர் வாங்க வந்து உட்காருங்களென்று சோபாவை காட்டி சொல்ல...
எப்படி இருக்கீங்கம்மா என்றாள்.
நல்லா இருக்கேன் பாப்பா.நீ எப்போ வந்தயென்க,ரெண்டு நாள் ஆகுதுங்கம்மா.மிலனும் அங்கிளிலும் நல்லா இருக்காங்களா என்றவளுக்கு நல்லா இருக்காங்கடா பாப்பா.
செத்த இருங்க வந்துடுறேனென்று கிச்சனிற்குள் சென்றவர் சிறிது நிமிடத்தில் இரண்டு டம்ளர் வரகாப்பி கொண்டு வந்து கொடுக்க ஆர்வமாய் வாங்கி ரசித்து குடித்தவள் உங்க கை பக்குவம் மாறவேயில்லைங்கமா என்றாள்.
ஹிஹிஹி என சிரித்தவர் அப்படிலாம் ஒன்னும் இல்லை பாப்பா. சரி போய் குளிச்சிட்டு வாங்க சாப்டலாமென்றவர் கதிரு பாப்பாவை கூப்டு போப்பா.
ம்ம் என்றவன் வாயென்று அங்கிருந்த படியில் ஏறி மேலே போக தாமரையும் எழுந்து பின்னே போனவள் ஹாலில் இருந்த மருதுவை பார்த்தவாறு படியில் ஏற அவனோ அவள் ஒருத்தி இருப்பதை கண்டுகொள்ளவேயில்லை.
ஏனோ மருதுவின் பாரா முகம் நெஞ்சுக்குள் சுருக்கென்ற வலியை தாமரைக்கு கொடுத்தது. முதல் தளத்திற்கு வந்தவளோ கதிர் போன ரூமிற்குள் சென்றவள் சுற்றி பார்த்து விட்டு ஜன்னலின் அருகில் சென்று கதவை திறக்க தூரத்து மலையும் மேகமும் தெரிந்தது.
லக்கேஜை அங்கிருந்த கபோர்டில் வைத்தவன் கதவை தாழிட்டு விட்டு இயற்கையை பார்ப்பவளின் பின்னாலிருந்து இடையோடு இறுக்கி அணைத்தவன் ப்ரஷாகலையாடி என்க...
ம்ம் என்றாள்.
என்னடி யோசனையென்று அவள் தோள்பட்டையில் தாவங்கட்டையை வைத்து கேட்க கணவனின் நெருக்கம் ஏனோ தற்பொழுது அவள் மனநிலைக்கு எரிச்சலாய் வந்தது.
நான் குளிச்சிட்டு வரேனென்று கணவனின் கையை விலக்கியவள் பேகை திறந்து டவளை எடுத்துக் கொண்டு ரெஸ்ட் ரூமிற்குள் நுழைந்தவள் அந்த கதவின் மேலே சாய்ந்து உட்கார தனது ஆருயிர் நண்பனின் பாராமுகம் கண்ணீரை வரவைத்தது.
வாயை மூடி சத்தமின்றி அழுதவள் இன்னைக்கு உன்னோட வாழ்க்கை இப்படியானதுக்கு நானும் ஒரு காரணம் என்ன மன்னிச்சிடு மருது என்று மானசீகமாக தனது நண்பனிடம் மன்னிப்பு கேட்டாள்.
ரொம்ப நேரம் ரெஸ்ட் ரூமிற்குள்ளே இருக்க முடியாது என்பதை உணர்ந்தவள் எழுந்து குளித்து முடித்தவள் இருக்கீங்களா என்று குரல் கொடுக்க ம்ம் என்று கதிரின் குரல் கேட்டது.
நான் டிரஸ் மாத்தணும் கொஞ்சம் வெளியில போங்க என்று சொல்ல சரி என்று சொல்லி அவன் கதவை திறந்து மூடும் சத்தம் கேட்டு வெளியே வந்தவளை உடும்பு போல் இறுக்கி அணைத்தான்.
கணவனின் திடீர் தாக்குதலில் அதிர்ந்தவள் ஆஆஆ என்று கத்த போக மனைவியின் செய்கையை உணர்ந்து அவள் உதட்டை தனது பாணியில் மூடியவன் அணைத்தவாறு அங்கிருந்த மெத்தையில் விழ ம்ம் என்றாள்.
ஏய் உன்னை என்ன ரேப்பா பண்ணுறேன் எதுக்குடி இப்படி பண்ணுறயென்று கதிர் கோவமாக கேட்க,யோவ் மாங்கா மடையா..
இது என்ன நம்ப வீடா?
இஷ்டத்திற்கு இருக்க என்று தாமரை கேட்க ஓ ஆமா இல்ல சாரி என்றவன் பொண்டாட்டியை பன்னீர்ல நனைந்த ரோஜா போல் பார்த்தவுடன் ஜிவ்வுனு காதல் பொங்கிடுச்சுடா அதான் என்று சொல்ல...
அட போயா..
உனக்கு நல்லா பொங்கச்சி என்று அவனை தள்ளி விட்டு எழுந்தவள் தேவையான டிரெஸ்ஸை எடுத்துக்கொண்டு அவனை முறைத்து பார்த்தாள்.
ஆமா சிவாஜி கணேசன் பேத்தி அப்படியே கண்ணாலே எரிக்கிறாள் என்று முணவியவன் சரி டி போறேன் போறேன் என்று எழுந்தவன் அவள் சுதாரிப்பதற்குள் அவளிடமிருந்த டவலை உருவிக்கொண்டு வேகமாக ரெஸ்ட் ரூமிற்குள் ஓட,கணவனின் இந்த அதிரடியில் அடபாவி மனுசாயென்று பதறியோடிவள் வெளியில வாயா உனக்கு இருக்கு என்றவாறு தயாராகி உட்கார்ந்திருந்தாள்.
சிறிது நிமிடத்தில் ஏய் இருக்கியா இல்லையா என்று கதிர் குரல் கொடுக்க தாமரை சத்தம் போடாமல் அமைதியாக இருந்தாள்.
ஓ கீழே போய்விட்டாள் போலயென்று வெளியே வந்தவன் அங்கு முறைத்தவாறு சேரில் உட்கார்ந்திருப்பவளை பார்த்து கண்ணடிக்க போடா என்றாள்.
எதேஏஏ போடாவா
அடிங்கொப்பன் மவளே புருஷனை போடானா சொல்லுற இன்னைக்கு நீ தொலைஞ்சடி என்று அவளை நோக்கி வந்தவன் எட்டி தாமரையின் கையை பிடித்து இழுக்க அய்யோ என்று அவனோடு ஒட்டிக்கொண்டாள்.
மாமா ஈரமென்று தன்னை அணைத்து நிற்பவனிடம் சொல்ல இருக்கட்டும் என்றான்.
யோவ் இப்ப தான் நான் டிரஸ் மாத்துனேன் என கொஞ்சம் காட்டமாக சொல்ல ஆத்தா மலையேறிட போறாளென்று தனக்குள் சொல்லியவன் அவளை விட்டு டிரஸ் மாத்தி முடிக்க வேறு பக்கம் திரும்பியிருந்தவளிடம் இப்போ திரும்புடி என்று சிரித்தான்.
பின்னர் இருவரும் கீழே வர அங்கு மயிலாவும்,மூக்கையனும் பேசிக்கொண்டிருக்க அங்கிளென்றாள்.
வா பாப்பா நல்லா இருக்கியாடா என்க அவரிடமும் இருவரும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர்.
அந்த மலையம்மன் புண்ணியத்தில் தீர்காயுசா இருங்களென்று வாழ்த்தியவர் ஏ புள்ள சாப்பாட்ட குடுயென்றார்.
நீங்களென்று கேட்க இப்போ தான் ஆச்சுமா நீங்க போய் சாப்பிடுங்களென்று இருவரையும் அனுப்பி வைத்தார்.
டைனிங் டேபிளில் உட்கார இருவருக்கும் புட்டும் கடலைகறியும் மயிலா பரிமாற ரசித்து சாப்டனர். உங்க சமையலை ரொம்ப மிஸ் பண்ணுனேன் மா என்றவள் அதையம்மா டூட்டிக்கு அதுக்குள்ளே போய்ட்டாங்களாயென்று கேட்டாள்
வேதாக்கா நேற்று மீட்டிங் போனவங்கள் இன்னும் வரலை பாப்பா.சொல்லிட்டு தான் போனாங்கள் வர லேட்டானால் மறுநாள் வரேனென்று என்க...
ஓஓஓ என்றவள் எங்கே மருதுயென்று தயங்கியபடி கேட்க கொஞ்ச நேரம் முன்ன தான் கோவைக்கு வேலையா போயிருக்கான்மா என்றார்.
நம்மை பார்க்க விருப்பம் இல்லாமல் தான் மருது போயாச்சென்று நினைத்தவள் அவள் எப்படி இருக்காளென்று கேட்க...
நல்லா இருக்கா பாப்பா.பொண் குழந்தை பிறந்துருக்கு நேற்று தான் பதினாறு படைச்சாங்களென்றார்.
ம்ம் என்றவள் பேசுவாளாமா?.
பேசுவாள்.வருவாள் வந்து வீட்டை சுத்தி சுத்தி பார்த்துட்டு போய்டுவாளென்றவர் மதியம் என்ன ஆக்கட்டும் கதிரு என்க ..
உங்க விருப்பம்மா என்றான்.
சரி நான் அப்படியே எல்லாரையும் பார்த்துட்டு வரேனென்று தாமரை சொல்ல ம்ம் பார்த்து போய்ட்டு வா பாப்பா என்றனர்.
நீங்களென்று கணவனை பார்க்க நீ போய்ட்டு வா என்றவன் மூக்கையனோடு விவசாயத்தை பற்றி பேசினான்.
தான் வாழ்ந்த ஊரை பார்த்துக்கொண்டே சென்றவளை தெரிந்தவர்கள் கண்டு நலம் விசாரிக்க அவளும் பதில் சொல்லியவாறு சென்றாள். வெறும் ஐம்பது குடும்பங்கள் அடங்கியது அந்த மலைக்கிராமம்.
ஒருவழியாக அந்த சிறிய கிராமத்தை சுத்தி வந்தவளின் பார்வையில் மருது தனியாக உட்கார்ந்திருப்பது தெரிந்தது.
நண்பனிடம் பேசி மன்னிப்பு கேட்க வேண்டுமென்று வேகமாக வந்தவளின் காலடி சத்தம் கேட்டு சாய்வான மரக்கிளையில் உட்கார்ந்திருந்தவன் திரும்பி பார்க்க தான் உருகி உருகி காதலித்தவள் கண் முன்னால் வருவதை கண்டு உள்ளம் துடித்தது.
அவளை பார்த்துவிட்டு அங்கிருந்து செல்ல போக மருது என்று அவனை தடுத்து நிறுத்தினாள்.
எதுவும் சொல்லாமல் திரும்பி நின்றவனிடம் ஏன் டா என்கிட்ட பேசமாட்டுற