மறுநாள் ஈவினிங் , நித்யாவின் அத்தானான அரவிந்தை அவள் வீட்டு பக்கத்தில் உள்ள ஒரு காஃபி ஷாப்பில் சந்தித்தாள்.
"நித்து, எப்படி இருக்க?" என்று சந்தோசமாக பேசினான் அரவிந்த்.
"நல்லா இருக்கேன் அத்தான். நீங்க எப்படி இருக்கீங்க?"
"அச்சோ, எவ்வளவு நாள் ஆச்சு உன் வாயால இந்த வார்த்தையை கேட்டு. இந்தா நித்து"...
தன் வலது கை மணிக்கட்டில் புல்லாங்குழல் மற்றும் மயிலிறகு டாட்டூ போட்டு இருந்தாள் நித்யா.
" என்னோட லவ்வர் நேமை சிம்பாலிக்கா போட்டு இருக்கேன் " என்று சொல்லி வெட்கத்துடன் சிரித்தாள்.
புவனா சுடிதாரை சற்று பக்கவாட்டில் தள்ளி கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடையில் போட்டிருந்த டாட்டூவை காண்பித்தாள்...
"காதல் சுகமானது"
சென்னை ரயில் நிலையம்.
அந்த காலை வேளையிலேயே மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது சென்னை ரயில்வே நிலையம்.
ஹிந்தியிலும், தெலுங்கிலும், மலையாளத்திலும் இன்னும் என்ன பாஷை என்று தெரியாத மொழிகளில் பேசியபடி மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
ரயில்களின் ஒலியும், ரயில் கொம்பு...