• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
47
ஆபீஸில்...

அண்ணன் தம்பி ஐந்து பேரும் அமர்ந்து ப்ராஜெக்ட் பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள்.

அப்போது லிபின் நாங்க நாலு பேருமே ஒரு ஒரு பிரான்ச் போக போறோம் நீ எந்த பிராஞ்சிக்கு வருகிறாய் என்று தன் கடைக்குட்டி தம்பியிடம் கேட்டான் மிதுன் தேவ்.

அண்ணா நான் ருத்ரா அண்ணா கூட போறேன் அண்ணா.

ஓகே.. ருத்ரா உங்க ஆபிஸ்க்கு நாளையில் இருந்து புவனா வருவா.. அதே மாதிரி எஸ் டி உன் ஆபீஸ்க்கு தான் சஞ்சனா வர போகிறாள். கர்ணா உனக்கு அங்க போய் யாராவது உதவிக்கு ஆள் வேண்டும் என்றால் இன்டர்வியூ வைத்து எடுத்துக் கொள். இல்லை அங்கு இருப்பவர்களில் உனக்கு கம்பேர்டபுளா யாராவது இருந்தால் அவர்களை உன் துணைக்கு வைத்துக் கொள். அப்பா 20 டேஸ் தான் சொல்லி இருக்காங்க அதுக்குள்ளார எல்லாருமே இந்த ப்ராஜெக்ட்டா கரெக்டா முடிக்கணும் ஆல் தி பெஸ்ட் என்று மிதுன் தன் தம்பிகள் நால்வரிடமும் சொல்லி விட்டு வேறு ஏதேனும் சொல்ல வேண்டுமா என்று கேட்டான்.

அண்ணா தப்பா எடுத்துக்க வேண்டாம் அந்த சஞ்சனாவை என் பிரான்சுக்கு மாற்ற வேண்டாமே.. எனக்கு அவளைப் பார்த்தாலே இருட்டேட்டிங்காக இருக்கிறது. எப்ப பாரு தேவையில்லாம சிரிச்சு கிட்டு.. பேசி கிட்டு ... அவளை பார்த்தாலே ஒரு மாதிரி கடுப்பா வருது அண்ணா. ப்ளீஸ் அவ அங்க வந்தா என்னால இயல்பாக வேலை பார்க்க முடியாது என்று கட்டன் ரைட்டாக சொன்னான்.

அதே நேரம் சரியாக மிதுன் நம்பருக்கு போன் செய்தால் சஞ்சனா.

என்ன இவளுக்கு எப்படி என் நம்பர் கிடைத்தது என்று யோசித்தான். அவன் யோசனையில் இருக்க அந்த அழைப்பு கட்டாகியது.

நால்வருமே யார் அழைப்பது அண்ணா என்று கேட்டதும் தான் அழைப்பு கட் ஆகியதை பார்த்து விட்டு சஞ்சனா என்று மட்டும் சொன்னான் மிதுன்.

மற்றவர்கள் அமைதியாக இருக்க சனாதன் மட்டும் தன் முகத்தில் ஒருவித சலிப்பு தன்மையை காட்டினான்.

மறுபடியும் அவளே அழைத்தாள் இந்த முறை உடனடியாக போனை அட்டென்ட் செய்தவன் லவ்ட் ஸ்பீக்கரில் போட்டு தங்களுக்கு எதிரில் இருந்த மேஜை மீது வைத்தான்.

ஹலோ.. எம் டி சார் குட் ஈவினிங். பட் நான் பேச போற விஷயம் உங்களுக்கு எப்படின்னு எனக்கு தெரியாது. இப்ப தான் கேள்விப்பட்டேன் என்னை நாளைக்கு நீங்க போக சொன்ன பிரான்ச்சில் உங்கள் தம்பி எஸ் டி இருப்பதாக கேள்விப்பட்டேன். சாரி, நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா.. நான் உங்க அடுத்த தம்பி கர்ணா பிரான்ச் போய்க்கட்டுமா என்று கேட்டாள்.

ஏன் என்று மட்டும் ஒரே வார்த்தையில் கேள்வி எழுப்பினான் எம் டி (மிதுன்).

ஏன் என்று எல்லாம் எனக்கு காரணம் சொல்ல முடியாது. சொன்னால் நீங்கள் தான் வருத்தப்படுவீர்கள் அதற்காக தான் கேட்கிறேன் நான் அந்த பிரான்ச் போகட்டுமா வேண்டாமா... என்று கடுப்பான குரலில் அவள் பேசுவது இங்கு இருந்த அனைவருக்குமே புரிந்தது.

அவள் பேச பேச சனாதன் கோபத்தின் உச்சிக்கே போய்க் கொண்டு இருந்தான்.

மிதுன் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாகவே இருக்க பொறுமை இழந்த சஞ்சனா... சார், எனக்கு என்னமோ அவனை பார்க்கவே பிடிக்கல. அவனைப் பார்த்தாலே ஒரே இருட்டேட்டிங்கா இருக்கு. எப்ப பாரு இஞ்சி தின்ன குரங்கு மாதிரி குறுகுறுன்னு மூஞ்சிய வச்சிக்கிட்டு.. என்னால அந்த பிரான்ச் போக முடியாது அங்க தான் போகணும் என்றால் நாளையில் இருந்து நான் வேலைக்கு வரல. நான் வேலையை ரிசைன் பண்ணிக்கிறேன்.

அதற்கு ஏதாவது நஷ்ட ஈடு பே பண்ணனும் என்றாலும் சொல்லுங்கள் என்று படபடவென்று பேசிய சஞ்சனா.. இப்போது அமைதியாக இருந்தாள்.

அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு சனாதன் தன் அண்ணனுடைய போனை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று விட்டான்.

வெளியில் சென்று பத்து நிமிடங்களுக்குப் பிறகு உள்ளே வந்தவன்.

இந்த அண்ணா உன்னுடைய போன்.. ஓகே நாளைக்கு ஆபீஸ் எல்லோருமே போகணும். ப்ராஜெக்ட் வொர்க்கும் சீக்கிரமாக முடிக்க வேண்டும். அதனால் இப்போது எல்லாரும் வாங்க வீட்டுக்கு போகலாம் என்று அழைத்துக் கொண்டு அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு.. அப்புறம் அண்ணா, நீங்கள் எதையும் நினைத்து குழப்பிக்கொள்ள வேண்டாம் அவள் என்னுடைய ஆபீஸ் வர ஒத்துக்கொண்டாள் என்று சொல்லியவன்...

வேறு எதுவும் பேசாமல் தன் காரை நோக்கி சென்றான்.

மற்றவர்களும் இங்கு என்னடா நடக்குது என்று ஒருவருக்கொருவர் தங்களை பார்த்துக் கொண்டு.. பிறகு தோள்களை குலுக்கிக் கொண்டு...

சரிங்க அண்ணா வாங்க போகலாம் என்று சொல்லி விட்டு பியூனை அழைத்து, ஓகே நாங்க கிளம்புகிறோம். நீங்க மற்ற எல்லா இடத்திலும் அனைவரும் சென்று விட்டார்களா என்று ஒரு முறை செக் செய்து விட்டு ஆபீஸை பூட்டி செக்யூரிட்டி கிட்ட கீ செயினை கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று சொல்லி விட்டு, அனைவருமே தங்கள் கார்களில் தனித்தனியாக தங்கள் வீட்டிற்கு சென்றார்கள்.

தன் வீட்டு மொட்டை மாடியில் தனியாக பேசி விட்டு வந்த சஞ்சனாவின் முகம் கடுப்பாக இருப்பதை கவனித்த சரண் அவளை தனியாக தள்ளிக் கொண்டு போனான்.

என்ன டா பாப்பா என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்க என்று கேட்டான்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவள்... எனக்கு அவனைப் பார்த்தாலே புடிக்கல டா அண்ணா. எப்ப பாரு குறுகுறுன்னு பார்த்துகிட்டே இருக்கான் டா. அது மட்டும் இல்லடா அவனோட பார்வையில அப்படி ஒரு திமிர்த்தனம் தெரியுதுடா.
அப்படியே அந்த நக்கலா பாக்குற அந்த கண்ணு ரெண்டையும் புடிங்கி... அப்படியே அடுப்பில் சுட சுட தோசை கல்லை வைத்து அதில் இரண்டு முட்டைய பொத்து ஊத்தி அந்த கண்ணு அதுக்குள்ள போட்டு..

அப்படியே ஆஃப்பாயில் மாதிரி எடுத்து அவனுக்கு கொடுத்து அவன் வாயாலே திங்க சொல்லணும்.. என்று பொறுமி கொண்டே இருந்தவளை பார்த்து... அதற்கு மேல் சிரிப்பை அடக்க முடியாத சரண்...

வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டான். வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தவன்... ... ஏய்... பாப்பா... யாருடா அந்த புண்ணியவான் என்று சிரிப்பிற்கு இடையில் ... சிரித்துக்கொண்டே கேட்க அவன் ஆரம்பத்தில் சிரிக்கும் போது கோபம் ஆனவள்.... ஆனால் அவன் பேசிய தொடர் பேச்சில் தனக்கும் தன்னுடைய கோபம் மறைந்து தன் அண்ணன் சரணோடு சேர்ந்து.. சிரித்துக் கொண்டு இருந்தாள் சஞ்சனா.

அப்போது அங்கு வந்த உதயா..

இருவரும் சிரித்து முடித்து விட்டீர்களா என்று கேட்டான்.

உதயாவை பார்த்ததும் அமைதியாக இருந்தனர் இருவரும்.

தன் தங்கை சஞ்சனாவை தன் அருகில் வர சொல்லி அங்கு இருந்த மேடையில் அமர்ந்தவன்...

சரணையும் ஒரு பார்வை பார்க்க அவனும் அவர்களோடு வந்து அமர்ந்தான்..

இப்ப சொல்லு உன்னுடைய எம்டி பார்க்கும் போது உனக்கு கடுப்பாக வருகிறது .. கோபமாக வருகிறது ... சரி ஏன் எரிச்சல் கூட வரலாம் ஆனால் அவன் பார்வையில் உனக்கு அருவருப்பாக தோன்றுகிறதா என்று கேட்டான்.

அச்சச்சோ அப்படி எல்லாம் எதுவும் இல்லை அண்ணா என்று பதட்டத்தோடு கூறினாள். அவனைப் பார்த்தால் தப்பானவன் போல் தெரியவில்லை.

ஆனால் முதல் சந்திப்பிலேயே எங்கள் இருவருக்கும் முட்டிக்கொண்டது அண்ணா. நான் அவன் கண் முன்னாடி அவங்க அண்ணாவை அடித்து விட்டேன்.
நான் வேண்டும் என்று எல்லாம் அடிக்கவில்லை.

அது அவனுக்கும் தெரியும். அவன் அண்ணாவுக்கும் தெரியும். இருந்தும் எங்கள் மூவரையும் பிரித்து விட்டார்கள். அது தான் கோபத்தில் அவனிடம் வேலைக்கு வரமாட்டேன் என்று சொன்னேன் என்று தன் பக்கத்து நியாயத்தை எடுத்து சொன்னாள்.

சரி டா பாப்பா.. நீ ஏன் இப்படி நினைக்கிறாய்.. அவர்கள் உங்கள் மூவருக்கும் பனிஷ்மென்ட் கொடுத்ததாக.. அவர்கள் இந்த ஊருக்கு மட்டும் இல்ல நம் நாட்டுக்கே புதியவர்கள். இவ்வளவு நாட்களும் வெளிநாட்டில் இருந்து விட்டு இங்கு வந்து இருக்கிறார்கள்.

இதே கம்பெனியில் வேலை பார்த்த உங்களின் அனுபவத்தை வைத்து உங்களை தங்கள் ஒவ்வொருவருக்கும் துணையாக கூட அவர்கள் வைத்துக் கொள்ள நினைத்து இப்படி செய்து இருக்கலாம் அல்லவா என்று கேட்டான் உதயா.

அட அப்படியா சொல்கிறாய் அண்ணா.. அதே மாதிரி தான் விநாயகம் அங்கிள் கூட சொன்னார். நான் தான் நம்பவில்லை. ஆனால் நீங்கள் சொல்லும் போது அப்படியும் இருக்கலாம் என்று நம்ப தோன்றுகிறது என்று தன் அண்ணன் மீது உள்ள நம்பிக்கையும் பாசத்தையும் அவள் இயல்பாக சொல்லிக் கொண்டு இருந்தாள்.

சரி இப்போ உனக்கு மனசுல இருந்த பாரம் குறைந்து விட்டதா என்று கேட்டான் உதயா.

தேங்க்யூ சோ மச் அண்ணா. ஃபீல் பெட்டர் நவ் என்று தன் அண்ணனை இறுக்கி கட்டி பிடித்துக் கொண்டாள் சஞ்சனா.

ஓகே அண்ணா வாங்க ரொம்ப நேரமாயிடுச்சு, இருட்டிடுச்சு கீழ போய் எல்லாரும் சேர்ந்து நல்ல சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் கார்ட்ஸ் விளையாடிட்டு தூங்கலாமா ரொம்ப நாளாச்சு என்று கேட்டாள்.

ஓகே டா என்று சொல்லி விட்டு முன்னே சென்றான் உதயா.

அவன் முன்னே சென்ற பிறகு.. பின்னே சரணை இழுத்துக் கொண்டு சென்றாள் சஞ்சனா.

சரண் ஏண்டி எனக்கு என்னமோ நீ அண்ணன் கிட்ட ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி பேசினாலும்... எனக்குத் தெரிந்து உன் வாலுத்தனம் மொத்தத்தையும் அந்த அப்பாவியின் மீது காட்ட தான் போகிறாய் என்று நினைக்கிறேன்... என்ன நான் சொல்வது சரி தானே என்று தன் தங்கையின் கோல்மால் புத்தி தெரிந்து கேட்டான்.

அச்சச்சோ சரண் என்ன டா அண்ணா இப்படி இருக்கிற... நான் உன் செல்ல தங்கை தானே என்னை போய் நீ சந்தேகப்படலாமா என்று பாவமாக கேட்டாள் சஞ்சனா.

ம்ம் ... அவளின் முகத்தை பார்த்து விட்டு... இல்லடி எனக்கு என்னமோ அப்படித்தான் தோன்றுகிறது என்று மறுபடியும் சொன்னான் சரண்.

அச்சச்சோ மக்கு சரண் அண்ணா... நானும் அதையே தான் சொல்கிறேன் என்னைப்பற்றி தெரிந்தும் சந்தேக படலாமா?.. கண்டிப்பாக அவனை வச்சு செய்ய தான் போகிறேன் என்று சொல்லி விட்டு சென்றாள்.

அதானே பார்த்தேன்.. எங்கே இவள் கூட வாலை சுருட்டி வைத்துக் கொண்டு நல்ல பிள்ளையாக மாறிவிட்டாளோ என்று தப்பாக நினைத்து விட்டேன். தனக்குள் சொல்லிக் கொண்டவன் தன் தலையில் தட்டி கொண்டு சென்றான்.
ஆமாம் இந்த சனாதனும்.. சஞ்சனாவும் அப்படி என்ன பேசி இருப்பார்கள்...

இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top