Member
- Joined
- Mar 17, 2025
- Messages
- 75
- Thread Author
- #1
நிகழ் காலம்.
குழலி விடியற்காலையில் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
அவள் விரும்பும் தினசரி நாளிதழ்கள் அங்கே இருந்தது. அதில் கருடப்பார்வை நாளிதழும் உண்டு.
ஆனால் கருடப் பார்வை நாளிதழ் ஒரு நாளும் படிக்க மாட்டாள்.
எல்லா நாளிதழில்களிலும்,
அடுத்து வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் இருந்தது.
கட்சிகள் பரபரப்பு செய்தி.
இந்த முறை நாடாளுமன்ற தேர்தல், மிக குறுகிய காலத்தில் நடக்கிறது என்று பல அரசியல் விமர்சகர்களின் கருத்துக்கள் என்று பல செய்திகள் இருந்தது.
குழலி சிலவற்றை படித்து விட்டு,
கட்சி அலுவலகம் செல்ல தயாரானாள்.
கட்சி அலுவலகத்திற்கு பஸ்ஸில் போகும் போது, பூமிகா மெசேஜ் செய்தார்.
அதில் நாடாளுமன்ற தேர்தலில், உங்கள் கட்சி தென் மண்டலத்தில் எப்படி வெற்றி பெறலாம் என்றும், உங்கள் பரப்புரைக்காக சில முக்கிய குறிப்புக்களை தயார் செய்ய இருப்பதால், என்னால் சில நேரங்களில் உங்கள் மெசேஞ்ஜுக்கு
பதில் அனுப்ப இயலாது என்று மெசேஜ் இருந்தது.
குழலி அதைப் பார்த்து விட்டு, என் வெற்றிக்காக நீங்கள் பாடுபடுகிறீர்கள்.
உங்களை நான் என்றும் மறக்க மாட்டேன் என்றும் , உங்களை எப்போது நேரில் சந்திக்கலாம்? என்று மெசேஜ் அனுப்ப,
அதைப் படித்து விட்டு,பதிலுக்கு பூமிகா, நேரம் வரும் போது நானே உங்கள் முன் வருவேன் என்று மெசேஜ் செய்து விட்டு,
அடுத்த மெசேஜ்,ஒரு சின்ன திருத்தம். இதில் என் வெற்றிக்காக நீங்களும் குரல் கொடுக்கீங்க, என்று அனுப்ப,
குழலி அதைப் படித்து விட்டு,
சரி சரி இருவருக்கும் வெற்றி தான் என்று மெசேஜ் செய்து விட்டு கூடவே சிரிப்பு உள்ள இமோஜியையும் அனுப்பினாள்.
வாக்காளர் முன்னேற்ற கழக அலுவலகம்.
பாராளுமன்ற தேர்தலில், தென் மண்டலத்தில் நம் கட்சி அனைத்து தொகுதிகளிலும் கலந்து கொள்கிறது
மேலும் 10 தொகுதியில் நிற்கும் வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டார் நிறுவனர் ஆதித்யன்.
குழலியை பார்த்து " கொள்கை பரப்பு செயலாளரே, உள்ளாட்சி தேர்தலில் உங்கள் பரப்பரையால் , நம் கட்சி வெற்றி பெற்றது போல், இதிலும் உங்கள் பரப்பரையால் நம் கட்சி வேட்பாளர்கள் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று உங்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன் " என்றார்.
குழலியும்" என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளும் செய்து நம் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பேன் " என்றாள்.
பாராளுமன்ற தேர்தலில்
பம்பரமாக சுழன்று
பரப்புரை செய்தாள் குழலி.
பாராளுமன்ற தேர்தலும் நல்ல படியாக முடிந்தது.
பாராளுமன்ற தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியானது.
வாக்காளர் முன்னேற்ற கழகம்,
தமிழகத்தில் தென் மண்டலத்தில் போட்டியிட்ட 10 தொகுதிகளில் 5 இடம் பெற்று, முதல் முறையாக வாக்காளர் முன்னேற்ற கழகத்தின் கட்சி வேட்பாளர்கள் பாராளுமன்றத்தில் அடி எடுத்து வைக்க போகிறார்கள்.
அதிலும் குறிப்பாக நிறுவனர் ஆதித்யன் பெற்ற வெற்றியின் வாக்கு வித்தியாசம் தமிழகத்தில் அவர் தான் முதலிடம்.
இந்த வெற்றிக்கு காரணமான குழலியை, பாராட்டியதை எல்லா பத்திரிக்கைகளிலும் வரும் படி நிறுவனர் செய்தார்.
ஒரே நாளில் குழலி தமிழகம் முழுவதும் பிரபலமானாள் .
தமிழகம் மட்டுமின்றி டெல்லியிலும் பிரபலமானார்.
மத்தியில் ஆட்சியை பிடிக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், மத்தியில் ஆட்சி அமைக்க ஒரு தேசிய கட்சி, வெற்றி பெற்ற பல சின்ன கட்சிகளிடம் ஆதரவு கேட்டது.
அதில் வாக்காளர் முன்னேற்ற கழகமும் இடம் பெற்றது. மத்தியில் ஆட்சி அமைக்க, தேசிய கட்சி பல கட்சிகளுடன் டெல்லியில் பேச்சு வார்த்தை நடத்தியது.
தேசிய கட்சி, மத்தியில் ஆட்சி அமைக்க வாக்காளர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஆதித்யனுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு உடன் படிக்கை ஏற்பட்டது.
அது வாக்காளர் முன்னேற்ற கழகத்திற்கு ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியும், அந்த ராஜ்ய சபா உறுப்பினருக்கு மத்திய இணை அமைச்சர் பதவியும் வேண்டும் என்று உடன் படிக்கை ஆனது. ஆனால் அந்த ராஜ்யசபா உறுப்பினராகவும், மத்திய இணை அமைச்சர் யார் என்பதையும் நான் பின்னே சொல்கிறேன் என்று தேசிய கட்சி தலைவரிடம், ஆதித்யன் சொன்னார்.
இது பல பத்திரிகையில் பரபரப்பு செய்தியாக வந்தது.
வாக்காளர் முன்னேற்ற கழகத்தின் ராஜ்ய சபா உறுப்பினராக யார் வருவார் மற்றும் அவரே மத்திய இணை அமைச்சர் ஆவார் என்றும்,
அவர் யாராக இருக்கும்? என்று பல பத்திரிகையில் தலையங்கத்தில் வந்தது.
குழலிக்கு அந்த தலையங்க செய்தியை பார்த்து விட்டு பூமிகா, வாழ்த்துக்கள் மூக்கி என்று அந்த செய்தியுடன் வாட்சப்பில் மெசேஜ் அனுப்பினாள்.
குழலி அத
குழலி தன் அப்பாவின் சின்ன தாத்தாவின் பேரன் திருமணத்திற்காக, குடும்பத்துடன் சென்றாள்.
குழலி தான், வாக்காளர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ராஜ்ய சபா உறுப்பினராகவும், மத்திய இணை அமைச்சரும் ஆகப் போகிறார் என்றும் ஒரு பத்திரிக்கையில் யூகம் தெரிவித்தது மூலம், அனைவரும் குழலியை பார்த்ததும், வாழ்த்துக்கள் தெரிவிப்பதும், இவள் எனக்கு ரொம்ப நெருங்கிய உறவு முறை என்று, அவர்களாகவே இல்லாத உறவை இருப்பதாக காட்டி பெருமை கொழித்தார்கள்.
குழலியை, நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி உன் கணவனுடன் இருந்தால் நீயும் பிரபலமாகி இருப்ப,
என்று நக்கல் செய்தவர்களும், இன்று திருமண மண்டபத்தில் குழலியை பார்த்து விட்டு, "நீ பிரபலமாக வருவ"
என்று எங்களுக்கு தெரியும் என்று புதுசாக பவுசு காட்டினார்கள்.
அங்கே மணமகளின் அண்ணன்,
குழலியை சுற்றி விருந்தினர் இருப்பதை பார்த்து விட்டு, ' இவரை எங்கோ பார்த்து இருக்கிறோமே?' என்று யோசித்து விட்டு, தன் தங்கை கணவரிடம், குழலியை கையை காட்டி " அவர் யார்"? என்று கேட்க,
அதற்கு திருமண கோலத்தில் இருக்கும் மாப்பிள்ளை " அது என் பெரிய தாத்தா மகனின் மகள் எனக்கு அக்கா " என்று சொல்லி விட்டு, "குழலியைப் பற்றிய அனைத்து தகவல்களையும் " சொல்லி விட்டு"
எங்க அக்கா அடுத்து மத்திய அமைச்சர் ஆகப் போகிறார் "என்று
மாப்பிள்ளை சொன்னார்.
இதற்கிடையில் திருமண மண்டபத்தில் சுந்தரத்தை சந்தித்த,
கோமதியாள் புரம் அரசு மேல்நிலைப்பள்ளி துணை தலைமை ஆசிரியர் நாகராஜன்,
" சுந்தரம், என்னை மன்னிக்கவும்"என்று கையெழுத்து கும்பிட,
அதற்கு சுந்தரம் " எதற்கு நான் உங்களை மன்னிக்கனும்" என்று கேட்க,
நாகராஜன் " அன்னைக்கு நான் உன் மருமகனை பற்றி சொன்னது பொய்.
மேலும், என்னை சஸ்பென்ட் செய்ய
வைத்தது உன் மருமகன் என்று தப்பாக நினைத்து, அவரை பழி வாங்க உங்களிடம் பொய் சொன்னேன்" என்று சொல்லி விட்டு தலையை கவிழ்ந்தார்.
சுந்தரமும் அதைக் கேட்டு , அதிர்ச்சியாகி" என்னய்யா நீயெல்லாம் வாத்தியாரு, உன் பேச்சை கேட்டு, என் மருமகனை தப்பா நினைத்து விட்டேனே.! , இனிமேல் நீ என் மூஞ்சியிலேயே முழிக்காதே" என்று சொல்லி விட்டு கோபமாக வேறு இடத்திற்கு சென்றார்.
அதேபோல், அதே திருமண மண்டபத்தில் வைத்து, வளவனின் நண்பனும், "பூங்குன்றன் மீது தவறு இல்லை.அதற்கு காரணம் நான் தான் என்றும் . உண்மை தெரிந்தால் நீ என் மீது கோபப்படுவ, அதான்..." என்று சொல்லி முடிக்கும் முன்,
வளவனின் கை, அவன் கன்னத்தில் இருந்தது. , வளவன் அடிச்ச அடியில்" ஆ..." என்று கத்த, வளவன்" நீயெல்லாம் ஒரு நண்பனா?, உன்னால் என் மாப்பிள்ளையை இதுவரை தப்பாக நினைக்க வைத்து விட்டாயே" என்று சொல்லி விட்டு அங்கிருந்து கோபமாக சென்றான்.
தொடரும்,