• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Jun 26, 2025
Messages
97
88. கோவிலில் உடையும் கை....

மருத்துவமனையில் மலரும் புதிய உறவு....

போனில் ஜேம்ஸ் சொல்லியதை கேட்டு அதன்படியே செய்து கொண்டு இருந்தாள் அழகி.

சரியாக ஜேம்ஸ் சொன்ன அம்மன் கோவிலும் வர அதன் அருகில் வண்டியை நிறுத்தியவள்... மெதுவாக தன் தாத்தாவிடம் திரும்பி சஞ்சனாவிற்காக இந்த கோவிலில் ஒரு சிறு பூஜை செய்து விட்டு செல்லலாம்...
என்று சொல்லி அனைவரையும் அழைத்து செல்ல...

கோவில் உள்ளே செல்ல சரியாக 5 பேர் அவர்களை வழி மறித்து நின்றனர்.

அழகியும் உள்ளுக்குள் எழுந்த பயத்தை உள்ளுக்குள்ளேயே மறைத்துக் கொண்டு, மிகவும் இயல்பாக கேட்பது போல் உங்களில் யார் ஜேம்ஸ் என்று கேட்டாள்...

அதற்கு அங்கு வந்த ஐந்து பேர்களில் ஒருவன்... மேடம் நான் தான் ஜேம்ஸ்... உங்கள் பாதுகாப்புக்காக மிஸ்டர் சனாதன் சார் தான் இங்கே அனுப்பி வைத்தார் என்று சொன்னான்.....

அழகிக்கு உள்ளே உதறல் எடுத்தாலும், தன்னுடைய அப்பாயி, தாத்தா பற்றிய கவலை இல்லை வயதானாலும் அவர்கள் திறமையானவர்களே... ஆனால் இப்போது சரோ அம்மாவின் காலும், கவியின் காலும் அடிபட்டு இருக்க அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது சரியாக.....

வீரா தாத்தா வந்து சரிப்பா பேரன் சொல்லி தானே எங்களுக்கு பாதுகாப்புக்கு வந்து இருக்கிறீர்கள்..
மகிழ்ச்சி. சற்று நேரம் கொஞ்சம் இங்கேயே இருங்கள் நாங்கள் சஞ்சனா பேத்திக்கு ஒரு அர்ச்சனை பண்ணி விட்டு வருகிறோம் என்று சொல்லி கொண்டே தன் மகள் அமர்ந்து இருந்த வீல் சேரை நகர்த்திக் கொண்டு, தான் வாங்கி வந்திருந்தால் அர்ச்சனை பொருட்கள் அடங்கிய கூடையை தன் மனைவியிடம் கொடுத்து கருவறை நோக்கி சென்றார்.

அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட மெய்யழகியும் அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்றாள். அந்த இடைவெளியில் எதையோ பறிகொடுத்துதல் போல் இருந்த மிதுனாவிடம் உள்ள நிலைமையை சுருக்கமாக சொல்ல...

மிதுனா அப்ப திட்டமிட்டு செஞ்சு இருக்காங்க சஞ்சனாவை சரியா... ஓகே இனிமே நான் பார்த்துக் கொள்கிறேன் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு... சரி அழகி பார்த்துக்கலாம் பயப்படாதே, இப்போ சாமி கும்பிடு என்று சொல்லி சாமி கும்பிட்டுக் கொண்டு இருக்க...

ஐயரும் சஞ்சனாவிற்கு ஆக அர்ச்சனைகள் செய்து விட்டு அர்ச்சனை கூடையோடு வந்தார். அதை வாங்கிக் கொண்ட முத்தாயி... சிறிது நேரம் கவி மா நீயும் சரோஜாவும் இங்கேயே அமர்ந்து இருங்கள். நாங்கள் நான்கு பேரும் பிரகாரத்தை சுற்றி விட்டு வருகிறோம் என்று சொல்ல...

அங்கு அவர்கள் பாதுகாப்புக்காக நின்று கொண்டு இருந்த ஐந்து பேரில் நான்‌ தான் ஜேம்ஸ் என்ற அறிமுகப்படுத்திக் கொண்டவன் அவர்கள் அருகில் வந்து...

பாட்டி மன்னித்து கொள்ளுங்கள்... இப்போது சூழ்நிலை சரியில்லை அதனால் அனைவரும் சீக்கிரமாக வந்தீர்கள் என்றால் நம் காரில் மருத்துவமனைக்கு சென்று விடலாம் என்று அழைத்தான்.

இப்போது மிதுனாவோ... ஓஹோ அப்படியா சரி எங்கே தனா மாமாவிற்கு ஒரு போன் பண்ணி தாங்க, அவரிடம் உங்களைப் பற்றி விசாரித்து விட்டு சஞ்சனாவையும் விசாரித்து விட்டு பிறகு பொறுமையாக கிளம்புவோம் என்று சொல்ல...

அந்த ஜேம்ஸ் என்றவன் தன் சகாக்களை பார்த்து என்ன.. டா.. இது ரொம்ப வம்பா போச்சு என்று சைகையில் பேச...

அப்போது மற்றொருவன் அங்கே வந்து, சரி சரி பேசிக் கொண்டு இருக்காமல் அவர்கள் பிரகாரத்தை சுற்றி விட்டு வரட்டுமேடா.. கோவிலுக்கு வந்தால் பிரகாரத்தை சுற்றுவது இயல்பு தானே என்று சொல்ல...

அப்போதும் மிதுனா மறுபடியும் வாங்கண்ணா நீங்கள் என்ன இந்துவா இந்த அண்ணா ஜேம்ஸ் என்று சொல்லிக் கொண்டார் தானே இவர் கிறிஸ்டினாக இருக்கிறார். அது தான் இவருக்கு தெரியவில்லை நம் சம்பிரதாயம் கொஞ்சம் கூட்டிட்டு போய் அங்க உட்கார்ந்து நம் பாரம்பரியத்தையும் நம் வழக்கத்தையும் சொல்லிக் கொடுங்கள் அதற்குள் நாங்கள் ஒரு முறை... இல்லை இல்லை உங்களுக்கு தான் தெரியுமே மூன்று முறை சுற்றி விட்டு வருகிறோம் என்று சொல்லிக் கொண்டே மிதுனா தாத்தா அம்மாச்சி அழகி மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு சுற்றி வர செல்ல...

அந்த ஐந்து பேரில் அவர்களைத் தொடர்ந்து ஒருவனும் வந்து தொடர்ந்து வந்தான்.

தங்களை தொடர்ந்து வருபவனை பார்த்து .. ஐயோ அண்ணா உங்களை பார்ப்பதற்கு நம் ஆட்கள் தான் இருக்கிறீர்கள் உங்களுக்கு தெரியாதா பிரகாரத்தை தான் ஒற்றைப்படையில் சுற்றி வரணுமே தவிர, ஒற்றைப்படையில் ஆட்கள் போகக்கூடாது நாங்க நான்கு பேர் இருக்கிறோம் நாங்கள் நான்கு பேர் மட்டும் சென்று சுற்றி வருகிறோம்.

நீங்கள் சென்று அங்கு இருக்கும் பெண்மணிகளுக்கு துணையாக இருங்கள். அதிலும் எங்கள் சரோஜா அம்மா மிகவும் முக்கியமானவர் எங்கள் குடும்பத்திற்கு என்று சொல்லி விட்டு, அவன் நகரும் வரை நாங்களும் நகர மாட்டோம் என்று அடம்பிடித்துக் கொண்டு நின்றார்கள்.

மற்றொருவன் அருகில் வந்து.. இப்ப நமக்கு காரியம் தான் முக்கியம்.. தயவு செய்து அவர்களை போகவிடு என்று சொல்லி விட்டு.. நீங்கள் அனைவரும் சென்று சுற்றி விட்டார்கள் ஆனால் சீக்கிரமாக வாருங்கள் நமக்கு நேரம் குறைவாக இருக்கிறது என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டு, அங்கு கோபமாக நின்று கொண்டு வந்தவனை இழுத்துக் கொண்டு சென்றான்.

அவர்களை காணவில்லை என்று தேடி அவர்களுடைய ஆட்கள் இங்கு வந்து சேருவதற்குள், இங்கு இருந்து அவர்களை கடத்திக்கொண்டு சென்றாக வேண்டும்.. இது கோவிலாக இருக்கிறது இங்கு நாம் பிரச்சனை பண்ணினா கண்டிப்பாக நாம் மாட்டிக்கொள்வோம் என்று சொல்லி அவனை அமைதி படுத்தினான்.

அதே நேரம் பிரகாரத்தை சுற்றி வரும் நேரத்தில் வீரா முத்தாயி இருவரிடமும் இப்போது நடக்கும் பிரச்சினைகளை சுருக்கமாக சொல்லி முடிக்க.. சரியாக கோயில் அலுவலகத்தில் இருந்து விரைவில் உங்கள் கஷ்ட தீர்க்கப்படும் என்று கோரசாக சத்தம் கேட்க... அனைவரும் கோவிலில் கூறும் ஏதோ பொன்மொழிகள் என்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் நினைக்க...

அங்கு இருந்த நான்கு பேருக்கும் அப்போது தான் நிம்மதியின் பெருமூச்சு வந்தது. சரி தாத்தா அம்மாச்சி நீங்கள் இருவரும் அம்மா கவியோடு அமர்ந்து அவர்களுக்கு துணைக்கு எடுங்கள் நாங்கள் மீதம் இருக்கும் இரண்டு சுற்றுகளையும் சுற்றி விட்டு வருகிறோம் என்று சொல்லிக்கொண்டே அவர்கள் இருவரையும்.. வயதானவர்கள் முடியவில்லை என்று சொல்லி விட்டு அழகி மிதுனா இருவரும் பிரகாரத்தை சுற்றுவதற்கு சென்றார்கள்.

அப்போது தன்னை ஜேம்ஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவனுக்கு தொலைபேசியில் அழைப்பு வர.. சற்று தள்ளி சென்று போனை அட்டென்ட் செய்து பேசினான். அந்த பக்கம் இருந்து என்ன செய்தி சொல்லப்பட்டதோ தெரியவில்லை ஆனால் சரியான கோபத்தோடு வேகமாக வந்தவன்...

அங்கே நின்று கொண்டு இருந்த தன்னுடைய சகாக்களை பார்த்து டேய் இப்ப தான் அண்ணன் போன் பண்ணினார். இவர்களுடைய ஆட்கள் இவர்களை சேவ் பண்ணுவதற்கு உள்ளே வந்து விட்டார்களாம். அண்ணனுக்கு மிக முக்கியம் இதோ இங்கே இருக்கும் இந்த கவி என்ற இந்த பெண் ... இவள் தான் வேண்டுமாம். அதனால் இவளை மட்டும் நான் தூக்குறேன்....

நீங்கள் அனைவரும் இடையில் எவன் வந்தாலும் வெட்டி தள்ளுங்கள் என்று சொல்லிக் கொண்டு, கவியின் மீது கையை வைக்கப் போகும் சமயம்.. வேகமாக அவன் கையை இழுத்து தன் காலை தூக்கி தொடையின் மீது வைத்து கரும்பு கட்டை உடைப்பது போல் ஓங்கி ஒரு அடி வைக்க அவனுடைய ஆ ஆஆஆ..... என்ற அலறல் சத்தத்தையும் மீறி அவன் எலும்புகள் அனைத்தும் நொறுங்கும் சத்தம் அனைவருக்கும் கேட்டது.

அதே நேரம் மருத்துவமனையில்..

உதயா வந்து பேசிய பிறகு இயல்புக்கு திரும்பிய சனாதன் பார்வை என்னமோ நொடி கூட அகலாது ஐசியூவின் வாசலிலேயே இருந்தாலும், கைகள் தன் ஆட்களுக்கான உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டே இருந்தது... மனதை தன்னவளுக்கும் மூளையை தன் சொந்தங்களுக்கும் ஒப்படைத்து விட்டு, வெளியே அமைதியாக அமர்ந்திருப்பது போல் அமர்ந்து இருந்த சனாதனை பார்த்து உதயாவால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. அவனும் இங்கு வந்தது முதல் சனாதன் செய் ஒவ்வொரு செயலையும் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறான்.

உண்மையில் தன் தங்கைக்கு இப்படி ஒரு கணவன் கிடைப்பதற்கு எந்த அண்ணனுக்கு தான் பிடிக்காது. அவனையே பார்த்துக் கொண்டு இருந்ததில் உணர்ச்சி வேகத்தில் சூப்பர் மாமா.. யு ஆர் தி பெஸ்ட் என்று சொல்ல...

ஒரு முறை உதயாவை திரும்பி பார்த்து விட்டு மறுபடியும் திரும்பி ஐசீயூவை மட்டுமே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான் சனாதன்.

அப்போது வந்ததில் இருந்து தங்களுக்கு உதவி புரிந்த அந்த சிஸ்டர் அந்த பக்கமாக செல்வதை பார்த்து விட்டு, மாமா இதோ வந்து விடுகிறேன் என்று சனாதனிடம் சொல்லி விட்டு அந்த சிஸ்டரை நோக்கி சென்றான் உதயா.

அந்த சிஸ்டர் அங்கு ஒரு பேஷன்டிடம் பேசிக்கொண்டே இருந்தாள். அவளுக்கு பின்புறமாக நின்று கொண்டு அவள் அந்த பேஷன்டிடம் பேசி முடிக்கும் வரை அமைதியாக நின்று கொண்டு இருந்தான்.

உதயா அந்த சிஸ்டருக்கு பின்பக்கமாக நின்று கொண்டு இருந்ததால்... அதை அறியாத அந்த சிஸ்டர், அந்த நபரிடம் பேசிக் கொண்டே முன்னேறி செல்ல..

ஐயோ போகும் அவளை எப்படி கூப்பிடுவது என்று தெரியாமல்.. ஹலோ... ஹலோ என்று சொல்ல...

அவளோ யாரோ போனில் பேசுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு முன்னேறி சென்று கொண்டே இருந்தாள்.

அடடா இது வேலைக்காகாது என்று நினைத்து வேகமாக அவளுக்கு பின்னே ஓடிச் சென்று அவளுக்கு முன்னாடி சென்று ஹலோ என்று சொல்ல..

அவன் சொல்லிய ஹலோவில் அந்த சிஸ்டருக்கு சிரிப்பு வந்து விட .. ஓ.. ஓஹோ ..அப்ப நீங்கள் தான், சற்று முன்பு ஹலோ.. ஹலோ.. என்று கூப்பிட்டுக் கொண்டு இருந்தீர்களா என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

அவளின் சிரிப்பில் ஒரு நொடி மயங்கினாலும்.. பிறகு தன்னை நிதானபடுத்திக் கொண்டு அட ஆமாம் உங்களை தான் கூப்பிட்டேன். நீங்கள் தான் திரும்பி பார்க்காமல் வந்து விட்டீர்கள் என்று ஆதங்கத்தோடு சொன்னான்.

ஏன் சார் நான் நீங்கள் வந்ததில் இருந்து உங்களுடன் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். என்னுடைய நேம் பேஜ் பார்க்கவில்லையா நீங்கள்... என்று தன் சட்டையின் வலது புறத்தில் இருக்கும் பெயரை எடுத்துக்காட்ட...

அப்போதும் உதயா அவளின் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு உங்கள் பெயரை நீங்களே சொல்லுங்கள் என்று சொன்னான்.

மருத்துவமனைக்கு வந்த பல இளைஞர்களில் இவளின் பெயரை பார்ப்பது போலவே உங்களின் அழகை ரசித்தவர்கள் ஏராளம்... ஆனால் தானே தன் கையில் எடுத்துக்காட்டியும் தன் வாயால் கேட்க ஆசைப்படும் அந்த இளைஞனை விசித்திரமாக பார்த்துக் கொண்டு நின்றாள்.


இணைந்திருங்கள்

சொல்லவா... வேண்டாமா...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top