- Joined
- Aug 31, 2024
- Messages
- 961
- Thread Author
- #1
3
கனவின் வேகத்தைப் பொறுக்காது எழுந்து அமர்ந்திருந்தவனின் அறைக்கதவு தட்டப்பட, தாயைத் தேடியது அவனுள்ளம். ஆனால் எழ முடியாமல் கனவு அவனை ஆக்கிரமித்திருந்தது.
“ராஜா என்னாச்சிப்பா? ஏன் அலறின? முதல்ல கதவைத்திற.”
எதுவும் புரியவில்லை அவனுக்கு. அக்குரல் காதில் கேட்டுக் கொண்டேயிருந்தது.
“உயிர் வாங்க! உயிர் தேடி வா!” சட்டெனக் காதை மூடிக்கொண்டான். தொடர்ந்து கேட்ட அப்பா அம்மாவின் சத்தத்தில் கதவைத் திறக்க...
“ஏன் அலறின ராஜா? கனவு எதாவது கண்டியா? ஏன் இப்படி ஏசியிலும் வியர்த்திருக்கு?” வேகமாக தன் முந்தானையால் மகனின் முகம் துடைத்தார் சிவகாமி.
“கனவுதான்மா. வேற எதுவுமில்ல” என்றவன் கண்களில் கனவுகளின் மிச்சம்.
“கனவுக்கா இந்த அலறல்?”
“அந்தக் கனவு அப்படியே தத்ரூபமா கண்ணுக்கு முன்னால நடக்கிற மாதிரி இருந்ததுமா. வயசு வித்தியாசமில்லாம அத்தனை சடலம். ஐயோ! பார்க்க முடியலம்மா. அப்ப ஒரு பையன் மலையிலிருந்து விழும்போதே மறுபிறப்பு எடுத்து வருவேன் சொன்னான்.”
“ஓ... அப்புறம்?” என்றார் மகனை கட்டிலில் உட்காரவைத்து தண்ணீர் கொடுத்தபடி. மகன் கடைசியாகச் சொன்னதில் யோசனையுடன் மகனின் முகம் பார்த்தபடி அமர்ந்திருந்தார் குருமூர்த்தி.
“யாரோ என்னை தேவதானம்பட்டி காமாட்சியம்மன் கோவிலுக்கு வா கூப்பிடுறாங்க. நான் மாட்டேன்னு மறுத்து சொன்னதுக்கு, உனக்கான கடமை இங்க காத்திருக்கு. உனக்கானவளும் காத்திருக்கா! நீ வருவ! வரணும்! வந்தே ஆகணும்! இல்ல நான் வரவைப்பேன்னு கத்தி சொல்லிட்டு மறைஞ்சிட்டாங்கமா” என்றதும் முகம் பேயறைந்தாற் போலானது குருமூர்த்திக்கு.
‘இல்ல அங்க போகக்கூடாது. அங்க போனா என் பையன் எனக்கில்ல. அவன்.. அந்தப்பையன் கொண்டு போயிருவான். எனக்கிருக்கிறது ஒரே பிள்ளை. என் பையன் எனக்கு வேணும். நான் யாருக்காகவும் என் பிள்ளையை விட்டுக்கொடுக்க மாட்டேன்.’ குருமூர்த்தி மனம் நடப்பதைச் சமாளிக்க வழிதேடியது.
“அந்த ஊரா? ஏங்க நாம கடைசியா போனப்ப நீங்களும் பையனும் மட்டும் போயிட்டு வந்தீங்களே. தாய் காமாட்சி நம்மைக் கூப்பிடுறாங்க. நாம போயிட்டு வரலாம்ங்க. அந்தத் தாயே வந்து கூப்பிடுறதுன்னா எதாவது காரணமிருக்கும்.”
“எவ்வளவு பெரிய காரணங்களாயிருந்தாலும் நாம அங்க போறதுன்றது முடியாத காரியம் சிவா. தேவையில்லாம மனசைப்போட்டுக் குழப்பிக்காம சாமியைக் கும்பிட்டுப் படு கதிர். காலையில ஆஃபீஸ் கிளம்பணும்” என்று அங்கிருந்து நகர சிவகாமிக்குள் சில்மிஷமாக கணவனைச் சீண்டிப்பார்க்கும் எண்ணம் வந்தது.
மகனின் தலைவருடி “ரொம்ப டயர்டாயிருந்தா படுத்துக்க ராஜா” என்று வெளியே வந்த சிவகாமிக்கு எப்படி அந்தத் தாயிடம் செல்வது என்ற எண்ணமே அதிகமானது.
சாமி விஷயங்களில் எப்பொழுதும் விளையாட்டு கூடாது என்று பெரியவர்களால் சொல்லி வளர்க்கப்பட்டவர் சிவகாமி. தற்பொழுது மகன் கனவின் தாக்கம் தனக்குள்ளும் தெரிய ஏதோ ஒன்றை கணவர் தன்னிடம் மறைப்பதாகப்பட்டது. அது தெரிய வேண்டுமென்றால் தமிழ்நாடு செல்லவேண்டும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்தது.
படுத்தவன் திரும்பவும் கண்மூட சற்று நேரத்திற்கெல்லாம் “அத்தான் என்னைக் காப்பாத்துங்க.” ஒரு பையனின் குரலைத் தொடர்ந்து... “என்னை மறந்துட்டல்ல?” இளம்பெண் ஒருத்தி. “வர்றேன்னு சொன்னீங்களே அத்தான். ஏன் இன்னும் வரல. உங்களுக்காக வருடங்கடந்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்றாள் இன்னொரு பெண்.
அவர்களின் முகங்கள் பளிச்சென தெரிய வேகமாக எழுந்தமர்ந்தவன் இப்பொழுது அலறவில்லை. ஆனால் ஏன் இந்த தொடர் கனவுகள் என்பது அவனுக்குப் புரியவில்லை. அதுவும் இதுவரையில்லாத வகையில் கனவுகளின் படையெடுப்பு. ‘யாரைப் பழிவாங்கணும்? என் உதவி யாருக்குத் தேவை? யாரை மறந்தேன்? எனக்காகக் காத்திருக்கும் அப்பெண் யார்?’ மனதிற்குள் குழப்பங்கள் அதிகரித்ததே தவிர அமைதியில்லை. பால்கனி வந்து வானத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
கனவின் தாக்கத்திலிருந்து இன்னும் வெளிவரவில்லை திருமொழி. எப்பொழுதும் கனவு வரும்தான் அது தன் ஒட்டுமொத்த கோபத்தையும் பிரதிபலிப்பதாய் இருக்கும். இன்றோ அனைத்திற்கும் மாறாய் இருந்தது.
அருகில் மருமகளின் அசைவை உணர்ந்து “என்னாச்சி திரு? அதே கனவா? எதையும் யோசிக்காம தூங்கு. இந்தக் கனவுகளிலிருந்து உனக்கு என்னைக்குத்தான் விடுதலையோ!”
“இல்லை அத்தை. இது வேற... எப்படிச் சொல்றது தெரியல” என்றவளுக்குள் அக்கனவும் அதன் தாக்கங்களும் உடலை நடுங்கச் செய்தது.
“என்னடா? என முகம் வருடி அருகிலிருந்த தண்ணீர் கொடுத்து குடிக்கவைக்க...
அவர் மடியில் முகம் புதைத்து “என்கிட்ட ஒருத்தன் வா கல்யாணம் பண்ணிக்கலாம் கேட்கிறான் அத்தை. அப்படியே நேர்ல நின்னு கேட்கிற மாதிரியிருக்கு.”
“என்ன திருமா? நிஜமாகத்தான் சொல்றியா? ஆள் எப்படியிருந்தான்?”
“அவன் பார்க்க நல்லாத்தான் இருந்தான்.”
“உன் கனவு எப்பவும் பலிக்கும்னு நம்புவல்ல. அப்ப இந்தக் கனவும் பலிக்கும்தான. பேசாம அவனைக் கல்யாணம் பண்ணிக்க.”
“அத்தைய்ய்ய்... என்னைத் தெரிஞ்சும் எப்படி நீங்க இப்படிச் சொல்லலாம். அவன் எவ்வளவு நல்லவனாயிருந்தாலும் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியுமா? அப்புறம் என்னோட லட்சியத்தை எப்படி நிறைவேத்துறது?”
“இந்த லட்சியம்லாம் வேண்டாமே திரு.”
“இந்த லட்சியத்தினாலதான் அத்தை நான் உயிரோட உயிர்ப்போட இருக்கேன். இது மட்டும் இல்லன்னா... நான் போய் பலவருஷம் ஆகியிருக்கும்.”
“ஸ்ஸ்.. என்ன பேச்சுப் பேசுற நீ. உன்னை மாத்திடலாம்னு நினைச்சாலும் என்னால முடியல. ப்ச்... படுத்துத்தூங்கு” என்று தானும் படுத்தார்.
தனக்கு வந்த கனவை எண்ணியபடியே படுத்தவள் கண்முன் புன்னகை முகத்துடன் வந்தான் அவன். ‘திரும்பவுமா!’ என்ற அலறல் மனதினுள். ஆனால் கண்களை மூடிக்கொண்டளுக்கு சற்று முன் வந்த கனவு காட்சியாக விரிந்தது.
முகத்தில் புன்னகையுடன் தன் இரு கைநீட்டி அவளைத் தன்னிடம் அழைக்க, திருவோ வர மறுக்க... அவளின் கையைத் தன்புறம் இழுத்துப்பிடித்து முகம் நிமிர்த்தி அவள் கண்களை நேருக்கு நேர் பார்க்க... அப்பார்வை தனை ஏதோ செய்வதை உணர்ந்தாள். கண்கள் தன்னையறியாமல் மூட அக்கண்களில் அவன் முத்தமிட... சட்டென்று வழிகளைத் திறந்து முறைத்துப் பார்க்க... சிரித்தபடி பட்டென்று சொன்னான் “நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.”
ஷாக்கடித்தாற்போல் அவனை விட்டு விலக முயற்சிக்க விடாமல் பிடித்தவன் “உன் லட்சியத்தை நிறைவேற்ற வந்தவன் நான்தான்” என்றான்.
“என் லட்சியம் இவனுக்கெப்படித் தெரியும்? முதல்ல என் லட்சியம் என்னன்னாவது தெரியுமா? அவன் முகத்தில் எதையோ தேடி ஏமாந்தனவோ அவளின் விழிகள்!” சின்னதாக சலிப்பு வர விழிகள் கேள்வி கேட்டன அவனிடமே!
“உன் அனைத்தும் நானறிவேன். வா.. நீ நான் நாமாகிடலாம்.”
“இல்ல என்னால ஒத்துக்க முடியாது. நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்கிறதாயில்ல. நீங்க வேற ஆளைப்பாருங்க” என அவனை உதறித்தள்ளி நகர... அவனோ அவளின் கைபிடித்திழுக்க தன்மேல் மோதியவளை சிரிப்புடன் பார்த்து “நான் பார்த்த முதலும் கடைசியுமான ஆள் நீதான். என் ஆயுளுக்கும் நீ மட்டும் போதும் பெண்ணே!” என்றான் ரசனையுடன்.
“முடியாது. என்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது. நீ போ” என அலறியடித்து எழுந்திருந்தாள்.
இப்பொழுதும் அக்கனவும் அவனும் கண்முன் வர சற்றுப் பயம் வந்தது அவளுள். தன் கனவுகள் எப்பொழுதும் உண்மையைச் சுமந்து வருபவை. அதைப்போல் இதுவும் ஆகிவிடுமோ என்ற பயமே அவளுள். ஆகாது என்ற தெளிவு மனதினுள் இருந்தபோதும், தன் கண்களை அவன் நேருக்குநேர் பார்த்து மெஸ்மரிசம் செய்தானோ! அதில் தானும் வசீகரிக்கப்பட்டு கண்மூடிய நிமிடங்கள் நினைவில் வந்தது.
மயங்காதே என்றது மூளை. நான் மாட்டேன் என்றது மனம். இதுவரை பார்க்காதவன் இனி பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தாலும் விட்டு விலகிச்செல்ல வேண்டுமென்று முடிவு செய்தாள்.
திருமொழியின் முடிவை உடைப்பானா, இவள் கனவுகளின் நாயகன்!
காலையில் தன்வீட்டு வாசலில் நின்றிருந்தவனைப் பார்த்து ஆச்சர்யமாகி “ஹேய் தம்பிப்பையா! என்னடா காலையிலேயே வீட்ல வந்து நிற்கிற? அச்சோ! இன்னும் எதுவும் செய்யலையேடா” என வருத்தப்படுவதுபோல் சொன்னாள்.
“திரு என்ன பேச்சிது? வார்த்தையை அடக்கு” என்றதும்தான் தன் விளையாட்டுப் பேச்சின் வினை புரிய “சாரி” என்றாள்.
“அடப்போக்கா! இதுக்கெல்லாமா ஃபீலாவ. சும்மா கெத்தா சௌண்ட் விடுறதுதான் உனக்கழகு. நீங்க அக்காவைத் திட்டாதீங்க அத்தை” என்றான் காமாட்சியிடம்.
அவரோ “ஆத்தாடி! பேச்சைப் பாரேன். நமக்குன்னு வர்றதெல்லாம் வாய்ச்சவடால் உள்ளதால்ல இருக்கு” என்று வாயில் விரல்வைத்தார்.
“என்னடா தம்பிப்பையா காலையிலேயே தரிசனம் குடுக்கிற?”
“உன் கையால காஃபி குடிச்சா சீக்கிரம் மோட்சமடையலாம்னு எங்க அத்தை சொன்னாங்க. அதான்கா வந்தேன்.”
அவன் தலையில் ஒரு கொட்டு வைத்து “முதல்ல காரணம் சொல்லு?” என்றாள்.
அவளின் உரிமையான செல்ல அடியை ரசித்தாலும், “ஸ்ஸ்.. சும்மா சும்மா அடிக்காதக்கா. அப்புறம் குள்ளமாகிரப் போறேன்” என்றான். அதற்கு அவள் முறைக்க... “நேத்து சொன்னேன்ல பத்திரிக்கை வைக்க வந்தேன்னு. சரி இங்கதான் அக்கா ஒருத்தி கிடைச்சிருக்காளே அவளை ஏன் விட்டு வைக்கணும்னு தான் வந்துட்டேன்.”
அவனிடமிருந்து பத்திரிக்கையை வாங்கியபடி, “யாருக்குக் கல்யாணம்?” என்றதும் அவன் ‘தனக்குத்தான்’ என... சட்டென்று இருமல் வந்தது திருமொழிக்கு.
அவளின் அத்தை தண்ணீர் கொடுத்து முதுகைத் தடவ “அப்ப நீ தம்பியில்லையா? அண்ணனா? இது தெரியாம வாடா போடான்னு. அச்சோ!” என்று தலையில் கைவைத்தாள்.
“இதுக்குத்தான் திரு யோசிச்சிப் பேசணும்னு சொல்றது.” காமாட்சி அறிவுரை சொல்ல...
“நான் என்ன அத்தை பண்றது. நீங்களே பாருங்க. பார்க்க கலரா ஒல்லியா இப்பதான் காலேஜ் முடிச்ச பையன் மாதிரியிருக்கான். அப்புறம் எப்படி நினைக்கிறதாம்?”
“ஹையோ யக்கா! என் அறிவுக்கொழுந்தே! நீ அப்படிக் கூப்பிடுறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு. எங்கம்மாவுக்குப் பொண்ணா, அண்ணன் தம்பி எங்க ரெண்டு பேருக்கும் சகோதரியாயிரு போதும். என்ன பார்க்கிற? நம்ம அண்ணனுக்குத்தான் கல்யாணம்.”
“நம்ம அண்ணனா!” ஆச்சர்யத்துடன் சற்று அசடுவழிய...
அதைக்கண்டு சிரித்தவன் “நீ சொன்ன மாதிரி நான் உனக்கு இளையவன்தான்னு அத்தைகிட்ட நேத்தே கேட்டுட்டேன்” என்றதும் “ஓ...” என்று அவன் அடுத்துக் கேட்ட “நீ கல்யாணம் செய்த பிறகுதான் நான் செஞ்சுப்பேன்” என்றதில் “அப்ப உனக்கு கல்யாண பிராப்தம் கம்மிதான்டா அம்பி” என்றாள் சீரியஸாக முகம் வைத்து.
“என்னக்கா இப்படிப் பொசுக்குன்னு சொல்லிட்ட?”
“அடி.. அக்காவை வா போ சொல்ற.”
“அதுலதான்கா கிக் கிடைக்குது” என்றதும் அடுத்த கொட்டு நங்கென்று வைத்து “இதுல உனக்கு கிக் கிடைக்காது கிர்ருன்ற எபக்ட்தான் கிடைக்கும். கிடைக்குதா?” என்றாள்.
தலையைப் பாவமாகத் தடவியவன் “ம்.. ரொம்பவே. அதுக்காக அக்காவை வாங்க போங்க சொல்லமாட்டேன். வேண்டாம் பச்சப்புள்ளையை அடிக்காதக்கா. இப்பவே மண்டையில் ஒரு கொண்டை முளைச்சிருக்கு” என்றான் அடுத்து அவள் கை ஓங்கியதைத் தடுத்தபடி.
“சரி வா உள்ள” என்றாள் சிரித்தபடி.