Member
- Joined
- Mar 16, 2025
- Messages
- 57
- Thread Author
- #1
அத்தியாயம் - 1
டிக் டிக் கடிகார சத்தம், டப் டப் தண்ணீர் சொட்டு சத்தம், எப்போதாவது அடிக்கும் காற்றில் அசையும் ஜன்னல் சத்தம், அயராது ஆட்டமிடும் கைவளையல் சத்தம் அத்தோடு ஒவ்வொரு வேலை முடிந்து அடுத்த வேலை தொடுங்கும் முன் விடும் பெருமூச்சு இவைகள்தான் என் வீட்டில் என்னுடன் சுழன்று கொண்டிருக்கும். எல்லா நேரமும் அல்ல, காலை ஒன்பது மணி முதல் மாலை நான்கு மணி வரைமட்டும்.
இந்த நேரத்தில் மட்டும் கடிகார முள்ளிற்கும் கால நேரத்திற்கும் கால் வலி வந்துவிடும் போல நகரவே நகராது. என் தனிமையைப் போக்கிக்கொள்ளத் தேவையில்லாத பல வேலைகளைச் செய்து நேரத்தையும் பணத்தையும் விரையம் செய்வதற்கு எனக்கு விருதே கொடுக்கலாம்.
“என்ன பாக்குறீங்க?... யாருடா இவ ஏதோ லூசு மாதிரி பேசிட்டு இருக்காளேனு பாக்குறீங்களா?... நான்தா பாக்கியலட்சுமி “
கையில் ஸ்மார்ட் போனுடன் நின்றுகொண்டிருந்த பொடியன் அவன் அம்மாவைப் பார்த்து முறைத்தபடியே கண்ணசைவில் ஏதோ சொல்ல அப்பாவி அவளுக்கு எதுவுமே விளங்கவில்லை.
“டேய் சிபி கரெக்டாதான சொல்றேன்… அப்புறம் ஏன்டா இந்த பார்வ பாக்குற?… ம்ம் நீ இப்படியே பண்ணிட்டு இருந்தீனா அப்பாகிட்ட நீ யூடியூப் சேனல் வச்சு நடத்துற அதுல என்னையவேற பேச சொல்றனு சொல்லி குடுத்து அடி வாங்க வச்சிருவேன் “
நாக்கைச் சுழற்றிக் கடித்துக்கொண்டே தலையில் மாங்கு மாங்கு என்று சிறுவன் அடித்துக்கொள்ள அமர்ந்திருந்த அம்மா பதறி எழுந்து வந்து அவனைக் கட்டிக்கொண்டு… “சரி சரி டென்சன் ஆகாதடா செல்லம் அம்மா ஒன்னும் சொல்ல மாட்டேன் “
“உன்னாலதான்மா என் டைம் வேஸ்ட் ஆகுது “
“எது என்னலாயா? சொல்லுவடா சொல்லுவ. எனக்கிருக்குற வேலையில உனக்காக இத பண்ணலாம்னு நெனச்சன்பாரு இப்படியும் சொல்லுவ இதுக்கு மேலையும் சொல்லுவ… கேக்குறவன் கேனையனா இருந்தா எரும மாடு இங்கிலீஷ் பாட்டு பாடுமாம் அது மாதிரில்ல இருக்கு”
“இதெல்லாம் நல்லாதான்மா பேசுற… ஆனா எழுதிக் கொடுத்த டையலாக்கதான் ஒழுங்கா பேசத் தெரியாம மாத்தி மாத்தி சொல்ற “
“பெரிய டைரக்டர் இவரு. இவரு எழுதிக் கொடுத்த டையலாக்க நான் தப்பா பேசிட்டனாமா அதுக்குக் கோவபட்டுட்டு வீடியோ எடுக்குறத கட் பண்ணிட்டு வந்து உக்காந்துட்டாரு. என்னடா தப்பா சொன்னே? சொல்றா பாக்கலாம் “
“ம்மா உன் பேர் என்னமா? “
“ஜோதி “
“ஆனா நீ என்ன சொன்ன தெரியுமா? “
“தெரியுமே.ஜோதினுதான் சொல்லிருப்பேன் எந்த முட்டாளாச்சும் சொந்தப் பேர மாத்தி சொல்லுவாங்களா? “
“எந்த முட்டாளும் சொல்ல மாட்டாங்க. ஆனா நீ சொல்லுவ”
உனக்கு வெறும் வாயில் சொல்லிப் புரிய வைக்க முடியாது என்னை எப்படியாவது பேசி திசை திருப்பிவிட்டு நியாயம் உன் பக்கம்தான் இருக்கிறது என்று வாயாடுவாய். இரு உனக்கு ஆதாரத்தோடு நிரூபிக்கிறேன் என்று போனில் எடுத்த வீடியோவை ஆன் செய்து காட்டினான். அதில் ஜோதி தன் பெயரை பாக்கியலட்சுமி என்று மாற்றிக் கூரியது வந்தவுடன் அழுங்காமல் எழுந்து ஓடித் தப்பித்துவிடலாம் என்று நினைத்தாள். கையை இருக்கிப் பிடித்து உக்கார வைத்து மடியில் ஏறி அமர்ந்து கொண்டு எந்த ஆர்பாட்டமும் செய்யாமல், தப்பித்து ஓட முயற்சிக்காமல் அமைதியாக உட்கார்ந்தால், ஒரே கடி கன்னத்தில் மட்டும் அப்படி இல்லை என்றால் சென்ற வாரம் என்ன நடந்ததென்று யோசித்துப்பார் என்று சிபி அம்மாவை மிரட்டினான். ஜோதியும் கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டு அம்மா பாவம் இல்லையா சிபி குட்டி என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
ஜோதி பேசும் சத்தம் எல்லாம் சிபியின் காதிற்கு அருகில்கூட வரவில்லை “நீ பேசுனா வாய்க்கு இது நல்லா வேணும். இந்த வச்சுக்கோ “என்று சொல்லியபடி அம்மாவின் இடது கண்ணத்தில் நறுக்கென்று கடித்தான். அம்மா செல்ல வலியில் கத்தக் கடித்துக் கொண்டிருந்த அந்த எலிப் பல்லை உள்ளே இழுத்துக்கொண்டு இதழ் வைத்து அழுத்தி இதம் தந்துவிட்டு மடியை விட்டு இறங்கி ஓடினான் சிபி.
அப்போது பார்த்து வீட்டின் கதவை யாரோ தட்ட, யாரும் வரும் நேரமும் இல்லை. இப்போது யார்? என்று தனக்குள்ளே கேள்வி எழுப்பிக்கொண்டு அவள் கண்ணத்தில் படிந்திருந்த எச்சிலை சேலை முந்தானையில் துடைத்து விட்டுக் கதவைத் திறந்தாள் ஜோதி. தோள் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு சோடா புட்டியும் புத்தக நோட்டுமாய் இரு பெண்கள் வாசலில் நின்றிருந்தார்கள்.
“வணக்கம் “
“ம்ம் வணக்கம் யார் நீங்க? “
“நாங்க மக்கள் தொகை கணக்கெடுக்க வந்திருக்கோம். உங்க வீட்ல இருக்கவங்க பேரும் வயசும் சொல்ல முடியுமா? “
“சரிங்க சொல்றேன் “
“குடும்பத்துல மொத்தம் எத்தன பேருங்க? “
“நான், என் வீட்டுக்காரர், அப்புறம் ரெண்டு பசங்க மொத்தம் நாலு பேர் “
“ம்ம் சரி சரி… உங்க வீட்டுக்காரர் பேர் சொல்லுங்க “
இந்தக் கேள்வி கேட்ட அடுத்த பத்து நொடி ஜோதி தயக்கத்தோடு அவர்களையே பார்த்தாள். அவர்கள் ஜோதியை வித்தியாசமாக பார்த்துப் பேரை சொல்லும்படி கேட்டார்கள். அவள் அதற்கும் எந்த பதிலுமே சொல்லாமல் தயக்கத்துடனே அங்கும் இங்குமாய் பார்த்துக்கொண்டிருந்தாள் .
கடைசியில் தலையைத் திருப்பி “சிபி… இங்க வாடா ஒரு நிமிஷம் “ என்று அழைத்தாள். அப்போது அவள் கன்னத்தில் இருந்த பல் பதிந்த அச்சைப் பார்த்து கணக்கெடுக்க வந்திருந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு குருஞ்சிரிப்பு சிரித்து தலையைக் குணிந்தார்கள்.
மேல் சட்டை இல்லாமல் டவுசருடன் ஒரு பொடியன் வீட்டிலிருந்து வெளியே வந்து நின்றான். வந்து நின்றவன் இருவரையும் வெறிக்கப் பார்த்துவிட்டு யார் என்று கேட்டான். இந்த விளக்கம் எல்லாம் உனக்குத் தேவையில்லை அப்பா பெயரைச் சொல்லு என்றாள் ஜோதி.
ஏன் அப்பா பெயர் உனக்குத் தெரியாதா? எதாவது பெரிய வேலையா இருந்தால் என்னைக் கூப்பிடு இந்த மாதிரி வேலைக்கெல்லாம் என்னை கூப்பிட வேண்டாம் என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடினான்.
வந்தவர்கள் மாறி மாறி கைக்கடிகாரத்தைப் பார்க்க, அவர்களை சமாளிக்கவும் தெரியாமல் கனவன் பெயரையும் சொல்லாமல் ஜோதி திகைக்க அவளுக்கு ஒரு ஐடியா கிடைத்தது.
“இப்போ வந்துட்டு போனது என் சின்ன பையன். வாண்டு, சேட்ட புடிச்சவன். ஒரே ஒரு நிமிஷம் மட்டும் பொறுங்க என் பெரிய பையன சொல்ல சொல்றேன்” என்று சொல்லி இடுப்பில் சொறுகி வைத்திருந்த செல்போனை எடுத்து மகனிற்கு அழைத்து அவர்களிடம் பேசச் சொல்லிக் கொடுத்தாள். அவர்களும் விவரத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டு நோட்டில் எழுதிவிட்டு ஜோதியைப் பார்த்து “உங்க வீட்டுக்காரர் பேர் உங்களுக்குத் தெரியாதா என்ன? உங்களுக்கு ரெண்டு பசங்களாச்சு பாத்துக்கோங்க இன்னும் என்ன வெக்கம்? “என்று கேட்க்க சிரித்தபடியே நின்றாள். வந்த வேலை முடிந்ததும் இருவரும் சென்றார்கள்.
அப்பா வருவதற்கு நேரம் ஆகிவிட்டது, சமயல் வேலை இருக்கிறது நீ சேட்டை செய்யாமல் டிவி பாரு என்று சொல்லிவிட்டு சமயலறையில் நுழைந்து பாத்திரங்களை உருட்ட ஆரம்பித்தாள் ஜோதி. அப்போது எதிர்பாராத விதமாக யாரோ அவள் கண்களைக் கைகளால் மூட அசையாமல் நின்றாள். யார் என்று கண்டுபிடிக்கத் தன் கைகளால் தடவிப் பார்த்தாள்.
யார் என்று சரியாகத் தெரியவில்லை. சிபிக்கு கை எட்டாது அவன் இவ்வளவு வளரவில்லை அதனால் அவனாக இருக்க முடியாது. பிறகு யார் ? என்று மூக்கினால் நுகர முற்பட்டு மூக்கை உறிஞ்ச அவள் சிறுபிள்ளைத் தனத்தைப் பார்த்துச் சிரித்து தானாகவே மாட்டிக் கொண்டார் சிபியின் அப்பா.
“என்ன விளையாட்டு இது? ம்ம்… இன்னைக்கு நேரமே வந்த மாதிரி இருக்கு? “
“ஆமா ஆமா… பெரிய ராஜா இருக்கார்ல அதான் நான் வந்துட்டேன் “
“அட ஆமாங்க இன்னைக்கு ஞாயித்துக் கிழமன்றதவே நான் மறந்துட்டேன் “
“ஆமா நீதான் உன் பேரையே மறக்குறியாமல்ல அப்புறம் இது மட்டும் எப்படி நியாபகம் இருக்கும்? “
“ஆமா அது எப்படி உங்களுக்குத் தெரியும்? நீங்கதா வீட்லயே இல்லையே “
“சின்ன ராஜா கால் பண்ணி அப்டேட் பண்ணிட்டாரு “
“ஓஓ அப்படியா சங்கதி”
சின்ன ராஜா நீங்க என்னென்ன பண்றீங்கனு அப்பா கிட்ட நான் அப்டேட் பண்றதுக்குள்ள நோட்ட எடுத்து ஹோம் வொர்க் பண்ணுங்க நேத்து அவுத்து எறிஞ்ச ஸ்கூல் பேக் அத தொடக் கூட இல்ல என்று சொல்லிக் கொண்டே கடாயைக் கிண்டிக் கொண்டிருந்தாள் ஜோதி.
நீங்கள் வந்து கண்ணை மூடியதும் நீங்களா? இல்லை ஆதியா? என்று ஒரு நிமிடம் குழம்பிவிட்டேன். அதனால்தான், எதுவும் பேசாமல் நின்றேன். அப்போதுதான் புரிந்தது ஆதி எவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்துவிட்டான் என்று. நேற்றுதான் ஈரக்கையோடு அவனை வாங்கி தோளில் போட்டது போன்று இருக்கிறது. ஆனால் இன்று அவன் என் தோளைத் தாண்டி வளர்ந்துவிட்டான் என்றாள் ஜோதி.
எனக்கும் நீ ஆதி என்று சொல்லி விடுவாயோ! என்கிற அச்சம் இருந்தது என்றார் சிபியின் அப்பா.
“ஆதி மட்டும் இல்ல இன்னும் கொஞ்ச நாள்ல நானே உன் தோளத் தாண்டி வளந்துருவேன் நீயேக் குட்டச்சி “ என்று சொல்லி சிபி கிண்டலடிக்க பதிலுக்கு ஜோதியும் அவனை “டவுசர் பாண்டி டவுசர் பாண்டி “ என்று சொல்ல சிபி அப்பா எல்லாக் கவலையையும் மறந்து சிரித்துக் கொண்டிருந்தார்.
ஞாயிற்றுக் கிழமை என்பதால், மதிய உணவிற்கு மசால போட்டு மாமிசத்தைச் சமைத்து வட்டமாக தரையில் அமர்ந்து கதை பேசிக்கொண்டே சாப்பிடுவது வழக்கம். சமைத்த உணவுகளை எடுத்துத் தரையில் வைத்துவிட்டு ஆதிக்காக மூவரும் காத்திருந்தார்கள்.
வந்தவன் பைக்கை நிறுத்திவிட்டு சல்லென்று அவன் அறைக்குள் நுழைந்து ஐந்து நிமிடம் கழித்து வந்தான். முகத்தில் ஒரு இனம் புரியாத சந்தோஷம். சிரிப்பும் வெட்கமும் கலந்த முகமாய் வியர்வையைத் துடைத்துவிட்டு மதிய உணவு உண்ண அமர்ந்தான். ஏன்? என்ன? என்றெல்லாம் மூவரில் ஒருவர் கூடக் கேட்கவில்லை.
தொடரும்...♡