Member
- Joined
- Mar 16, 2025
- Messages
- 57
- Thread Author
- #1
அத்தியாயம் - 14
வண்டியை நிறுத்திவிட்டு “இறங்கு” என்றார். இருவரும் மாமரத்து நிழலுக்கு அடியில் சென்று அமர்ந்தார்கள். எப்போது வந்தாலும் ஒரு அறை மணி நேரத்திற்கு “இந்த மாந்தோப்பை நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கினேன் தெரியுமா ? “ என்ற தலைப்பில் பேசிய பிறகுதான் அடுத்த விஷயத்திற்கே வருவார். அன்றும் அப்படித்தான் தொடங்கி பின் விஷயத்திற்குள் நுழைந்தார்.
“சரி அது இருக்கட்டும். நான் சொல்ல வந்த விஷயம் என்னனா… அந்த புள்ள இனிமே நம்ம வீட்லயே இருக்கட்டும்டா “
“என்னப்பா சொல்றீங்க “ மனதில் ஒரு பக்கம் சந்தோஷம்பட்டாலும், அதற்கான காரணமும் அவசியமும் என்ன என்று தெரிந்து கொள்ள விளைந்தான்.
“ஆமா. தெரிஞ்சோ தெரியாமையோ நமக்குள்ள ஒருத்தியாகிட்டா. அவள அப்படியே தவிக்க விடுறது நியாயமில்லை “
“சரிதான். விஷயம் என்னனு கொஞ்சம் தெளிவா சொல்றீஙகளா ? “
“ஆதி உன்னைய நான் வேற காலேஜ்க்கு ஏன் மாத்துனேனு தெரியுமா? “
“நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றது உங்களுக்கு புடிக்காம அப்படி பண்ணீங்கனு நெனச்சேன் “
உன் அம்மாவும் அப்படி நெனச்சிட்டுதான் என்கிட்ட சண்ட போட்டா. அதுவும் ஒரு காரணம்தான். ஆனா அது மட்டுமே காரணம் இல்ல.
காலேஜ்ல இருந்து கால் பண்ணி பேசுன மறுநாள், என்கிட்ட விஷயத்த சொன்ன உங்க சார் மறுபடியும் கால் பண்ணிருந்தாரு. என்னவா இருக்குமோனு பயந்துகிட்டே அட்டென்ட் பண்ணே.
உங்களுக்கு கால் பண்ணி சொன்ன அதே விஷயத்தான் யாமினி அப்பா கிட்டையும் சொன்னே. ஆனா அதுக்கு பதில் வேற மாதிரி இருந்தது. ரொம்ப கோவமா அவர் பேசுனதால, அவர் வீட்டுக்கே போய் எடுத்து சொல்லி புரிய வைக்கலாம்னு போனேன்.
என் கண்ணு முன்னாடியே அந்த பொண்ண சின்ன புள்ளனு கூட பாக்கம அந்த அடி அடிக்குறாரு. வாய்க்கு வந்தத எல்லாம் பேசுறாரு. கண்ணால பாத்த நானே பதறிப்போயிட்டேன். அப்போ அனுபவிச்ச அந்த பொண்ணுக்கு எப்படி இருக்கும்?. இது உங்க பையனுக்குத் தெரிஞ்சா அந்த பொண்ணு அப்பா கூட பிரச்சனதான் ஆகும்.
இப்போதைக்கு ரெண்டு பேரும் பிரிஞ்சு இருக்குறதுதான் அவங்க நிம்மதிக்கும் வாழ்க்கைக்கும் நல்லது. இது ஒரு வேள வயசுக் கோளாறா இருந்தா பிரிஞ்சது பிரிஞ்சபடியே இருக்கட்டும். இதையும் தாண்டி அவங்கள இந்த பிரபஞ்சம் ஒன்னு சேத்தா சந்தோஷப்படுற முதல் ஆள் நானாதான் இருப்பேன் அப்படினு சொல்லிட்டு வச்சிட்டாரு.
அவர் பேசுனதுல ஒரு நியாயம் தெரிஞ்சதாலையும் உன்ன காரணமா வச்சு மறுபடியும் அந்த புள்ளைக்கு எந்தப் பிரச்சனையும் வந்திரக் கூடதுனும் யோசிச்சுதான் அந்த முடிவ நான் எடுத்தேன்.
ஹாஸ்டலுக்கு போக விருப்பமே இல்லாம நீ உன் அம்மா கிட்ட அழுதத அவ வந்து என்கிட்ட அப்படியே சொல்லிட்டா. ஆனா அதே காரணத்துக்காக நான் உன் அம்மாகிட்ட அழுதத அவ உன்கிட்ட சொல்லிருக்க மாட்டா அவ்வளவுதான்.
எல்லாம் நல்லதுக்குதானு நெனச்சு பண்ணேன்.
உங்க ரவி சித்தப்பா வீடு கட்ட வீட்டு மணை வாங்கிருந்தேன். ரிஜிஸ்டரேஷன்காக நான் அங்க போயிருந்தேன். திரும்ப வரும்போது ஒரு டீ கட வாசல்ல நின்னு டீ குடிச்சிட்டு இருந்தேன்.
தூரத்துல இருந்து யாரோ ஒருத்தர் என்னைய பாத்துகிட்டே நடந்து வர்ற மாதிரி தோனுச்சு. கிட்ட நெருங்கவும்தான் தெரிஞ்சது அது ஒரு பொண்ணுனு. யார் இந்த பொண்ணு? எதுக்கு நம்மளவே பாக்குது? அப்படின்னு யோசிச்சிட்டு இருக்கும்போதே கிட்ட வந்துருச்சு.
எனக்கு சுத்தமா அது யாருனே தெரியல. அதுவா கிட்ட வந்து பேசுச்சு. எடுத்தவுடனே “அப்பா” அப்படினுதா சொல்லுச்சு. ஒரு பொண்ணு குரல்ல “அப்பா”னு என்ன கூப்பிடுது, அத நான் கேக்குறேன் அவ்வளவுதான். வெளிய இருந்து பாத்தவங்களுக்கு வேணா அது சாதாரணமா இருந்திருக்கலாம். அவ்வளவு ஏன்? நான் பேசுறத இவ்வளவு பொறுமையா உக்காந்து கேக்குற உனக்கும் கூட இது சாதாரணமா தெரியலாம். ஆனா எனக்கு அப்படி இல்ல.
சோர்ந்து போன முகத்தோட அப்படி சொன்னதும் என்ன இத்தன நாள் வீராப்பா இறுக்கிப் பிடிச்சிட்டு இருந்த ஓதோ ஒன்னு சட்டுனு விட்ட மாதிரி இருந்தது.
மனசுக்குள்ள நெருட ஆரம்பிச்சது. அந்த மாதிரி எல்லாம் எனக்கு இருந்ததே இல்ல. நான் பேசுறது எனக்கே கேக்கல, ஆனாலும் நான் பேசுனேன்.
“என்னமா”னு கேட்டேன். எங்கிட்ட அவள அறிமுகப்படுத்திகிட்டா. நான் புரிஞ்சுகிட்டேன்.
அவ சின்ன வயசா இருக்கும்போதே அம்மா தவறிட்டாங்கனு உனக்கும் தெரியும்னு நெனைக்குறேன். அதுக்கப்புறம், அந்த பொண்ணோட அப்பா குடிக்க ஆரமிச்சிருக்காரு. குடி பழக்கம் வந்ததுல இருந்தே சொந்த வீட்லயே பல கொடும அவளுக்கு நடந்திருக்கு. ஆனாலும், பெருசு படுத்தாம மறுநாள் ஸ்கூலுக்கு போவேனு சொன்னா.
அவ அப்பாவுக்கு குடி பழக்கம் மட்டும்தானு நெனச்சிட்டு இருந்திருக்கா, சரியா ஒரு மாசம் முன்னாடி அவ அப்பா ஒரு ஆக்ஸிடன்ட்ல தவறிட்டாரு. சொந்த பந்தம்னு சொல்லி தூக்கி, தாங்கி, தடுக்கவும் யாரும் இல்ல. அவ்ளோ பெரிய வீட்டுல ஒத்த ஆளா அனாதையா இருக்கும்போது திடீர்னு ஒரு பொம்பள வந்து… இந்த வீடு எனக்குதான் சொந்தம். உங்க அப்பா என்னைய ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணி எங்களுக்கு ரெண்டு புள்ளையும் இருக்கு. உனக்குத் தெரிஞ்சா நீ கஷ்டபடுவனு மறச்சு வச்சிருந்தாரு. அவரே இல்லாம போய்ட்டாரு. இனி யாரு கஷ்டபட்டா எனக்கு என்ன?. இனிமே இந்த வீடு எனக்கும் என் புள்ளைங்களுக்கும்தான் சொந்தம் நீ வெளிய போ அப்படினு சொல்லி சண்ட போட்டு வெளிய தள்ளிருக்கு.
தன்னோட வாழ்க்கையில என் அனுமதி இல்லாமையே ஏதேதோ எனக்கு நடக்குதேனு கலங்கி நின்ன புள்ளைக்கு என்ன பண்றதுனே தெரியல.
அந்த புள்ள அழுதுகிட்டே பேசும்போது சத்தியமா என்னடா வாழ்க்கன்ற மாதிரி வெறுத்துப் போயிருச்சு.
அத என்ன பேசி சமாதானப் படுத்துறதுனு தெரியாம யோசிச்சிட்டே இருந்தேன். அந்த முகத்த அப்படி பாத்துட்டு அங்கையே விட்டுட்டு வர மனசு இல்லாமதான் வீட்டுக்கே கூட்டிட்டு வந்தேன் என்றார் அப்பா.
ஆதிக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. இதுவரை தான்தான் கஷ்டப்படுவதாக நினைத்துக் கொண்டிருந்தான். யாமினி யின் நிலை பற்றித் தெரிந்தவுடன் அவன் கவலையெல்லாம் கண்ணாடிச் சில்லாய் நொறுங்கியது.
“வீட்ட விட்டு அனுப்பிட்டாங்கனு சாதாரணமா சொல்றிங்க. இவ எப்படி விட்டா?. எதுவும் பண்ணலயா? “
“என்னப்பா பண்ணுவா பாவம் சின்னப் பொண்ணு. பேசுற நம்ம ஆயிரம் பேசலாம். அனுபவிக்குறவங்களுக்குதான் தெரியும் அதோட வலி என்னனு”
“ம்ம்… சரி நம்ம வீட்டுக்கு வர்ற வரைக்கும் யார் வீட்ல இருந்தாலாம் ? “
“ஏதோ ஒரு பொண்ணு பேர்… ம்ம்ம் காயத்ரினு நெனைக்குறேன் அவங்க வீட்லதான்”
“அவளோட க்ளோஸ் ஃபிரண்டுதான்”
ஆதியின் முகம் மாறுதலும் பேச்சில் தடுமாற்றமும் அவன் சொல்லாமலேயே அவன் கேள்வியை அப்பாவிற்குச் சொன்னது.
“டேய் ஆதி நீ ஒன்னும் கவலப்படாத. இனிமே நான் பாத்துக்குறேன். நீ படிக்குற வேலைய மட்டும் பாரு “ என்றார் அப்பா.
சிறுபிள்ளையில் சக்கரம் உடைந்த வண்டியை அப்பா வேலைக் களைப்பென்றும் பார்க்காமல் சரி செய்து கொடுத்தபோது பற்றிக் கொண்டதுபோலவே அவர் கையைப் பற்றினான். மீண்டும் வீடு திரும்பிய இருவரும் யாமினியின் சிரித்த முகத்தைப் பார்த்து நிம்மதியடைந்தார்கள்.
“எங்கடா போனீங்க ரெண்டு பேரும்? எவ்ளோ நேரம் வெயிட் பண்றது? “ என்றாள் அம்மா ஜோதி.
“இல்ல மம்மி நானும் அப்பாவும் ஜிம்முக்குத் தேவையான பொருள் கொஞ்சம் வாங்க வேண்டியது இருந்தது. அதத்தான் வாங்க போனோம் “
“சரி சரி முதல்ல சாப்பிடுங்க “
மதிய உணவு சாப்பிட மூன்று மணி ஆகிவிட்டது என்று சிபி சலித்துக்கொள்ள, “இவ்ளோ சலிப்பா பேசுற அளவுக்கு ஐயா அப்படி என்ன வேல செஞ்சிங்க “ என்றான் ஆதி.
“வீடியோ கேம் விளையாண்டேன் அப்புறம்… ஆல்பம் பாத்தேன் “
“ஆல்பம் பாக்குற ஐடியா யார் கொடுத்தா? அம்மாதான? “
“ஆமாடா”
“நெனச்சேன்.வீட்டுக்கு யாராவது புதுசா வந்துட்டா அவங்க கிட்ட ஆல்பத்த காட்டாம விட்டுட்டா தெய்வ குத்தம் ஆகிரும்ல… ஏம்மா? “ என்று கேளிக்கையாக அம்மாவைப் பார்த்துப் பேசினான் ஆதி.
“நீங்க போனீங்களே அப்படியே கூடவே எங்களையும் கூட்டிட்டு போயிருந்தா பரவாயில்ல. விட்டுட்டு போய்ட்டு பேச்ச பாரு. வீட்ல இருக்கும்போது வேற என்ன பண்றது?. என்றாள் ஜோதி.
அனைவரும் சாப்பிட்டு முடிக்க ஆதி “சாயங்காலம் ஆறு மணி பஸ்ல நான் ஹாஸ்டல் கெளம்புறேன்ப்பா “ என்றான்.
“சரி இன்னும் டைம் இருக்குல கொஞ்ச நேரம் தூங்கி எந்திரி உன்னைய பஸ்டான்ட்ல விட்டுட்டு அப்புறம் அப்படியே நானும் ஜிம்முக்கு போறேன்” என்றார் அப்பா.
சொன்னபடியே அப்பாவின் அறையில் ஆதி உறங்கிக் கொண்டிருந்தான். அதே அறையில் அப்பா புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தார். கிளம்ப வேண்டிய நேரம் நெருங்கியதால் அவனை தூக்கத்திலிருந்து எழுப்பிவிட ஜோதி அவ்வறைக்குள் நுழைந்தாள். அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
உள்ளே நுழைந்ததும் தன் கனவரின் பார்வை தன்னிடம் ஏதோ சொல்லத் துடிக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு அவளே “என்ன? “ என்று கேட்டாள்.
“இல்லமா. உன்னப் பாத்தா வியப்பா இருக்கு, பெருமையா இருக்கு, நான் ரொம்ப லக்கினு தோனுது “
“என்ன புக்குல எழுதியிருக்க வசனத்த சொல்லிக் காமிக்கிறீங்களா? “
அவர் மீண்டும் விரிந்த கண்களில் ஆச்சர்யம் வழியப் பேசினார்.
“நேத்து அந்த புள்ளைய கூட்டிட்டு வந்தேன். இன்னைக்கு நம்ம புள்ளைய வெளிய கூட்டிட்டு போனேன். உனக்கு எங்கிட்ட எந்த கேள்வியும் கேக்கனும்னு தோனலையா? “
“கேள்வி கேக்கனும்னு எந்த அவசியமும் இல்ல. நீங்க எது பண்ணாலும் சரியாதான் இருக்கும். அத கேட்டு மட்டும் நான் என்னங்க பண்ண போறேன்?. சரி நேரம் ஆகிருச்சு புள்ளைய எழுப்பி விடுங்க காஃபிய குடிச்சிட்டு கெளம்பட்டும் “
“ம்ம்ம் சரி”
தான் எந்த நிலையில் இருந்து எந்த முடிவு எடுத்தாலும் தன் பின்னே நின்றுகொண்டு ஒரு சத்தமில்லா உந்துதலைப் போல வழிநடத்தி, காணும் வெற்றியை எல்லாம் அழகு பார்க்கும் மனைவி கிடைப்பதெல்லாம் வரம் என்று சொல்வார்கள் என்று புத்தகத்தில் எழுதியிருந்த வசனத்தைப் படித்து, நம்மைப் பற்றித்தான் எழுத்தாளர் எழுதியிருக்கிறார் என்று பூரித்தார் அவர்.
தொடரும்...♡