• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 16, 2025
Messages
57
அத்தியாயம் - 21

“ஒரு டைம் மெசேஜ் பண்ணி ரிப்லை வரலனா வெயிட் பண்ணணும். இப்படி ஆயிரம் மெசேஜ் பண்ணி வச்சிருந்தா ஒரு மனுசன் என்னதான் பண்றது?“

“நீ ஒன்னும் பண்ண வேணாம். வீட்ல எல்லார்கிட்டையும் பேசுற எங்கிட்ட பேச மட்டும் உனக்கு புடிக்கல. நான் உனக்காகதான இருக்கேன். நீ ஏன் இப்படி பண்ற?. நான் அப்படியே எங்கையாவது தொலஞ்சு போயிருக்கனும். இப்போ பாரு உனக்கும் புடிக்காம, உன் வீட்டுக்கும் பாரமா இருக்கேன் “

“யாமினி சும்மா வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு இருந்தீனா பல்ல ஒடச்சிருவேன். இப்படியெல்லாம் பேச உனக்கு யாரு கத்துக் கொடுத்தது “

“பாரு இப்போ கூட யார் மேலையோ இருக்க கோபத்த என்கிட்ட காட்ற. உனக்கு என் மேல கொஞ்சம் கூட பாசமே இல்ல. உன் வீட்ல எல்லாரும் அமைதியா குணமா பேசுறாங்க நீதான் இப்படி கத்ததுற”

“நீ பெரிய ஒழுங்கு மாதிரி என் கேரக்டர கொற சொல்லாத. சாவடிச்சிருவேன் உன்ன “

“இப்படியெல்லாம் என்னையக் கண்டுக்காம இருக்குறதுக்கு ஒரே அடியா என்னைய நீ கொன்னே போட்டர்லாம். போக வழி தெரியாம உன்ன நம்பி இருக்கேன்றதாலதான நீ இப்படி பேசுற? “

“யாமினி அறிவு எதுவும் இல்லாம பேச்சா உனக்கு?. நீ எங்க என்ன நம்பி இருக்க?. நம்ம ரெண்டு பேருமே நம்ம வீட்ட நம்பியும் அப்பா அம்மாவ நம்பியுமாதான் இருக்கோம். அங்க நீ எப்படியோ அதே மாதிரிதான் நானும். இந்த உலகத்துல எந்த அம்மா அப்பா பையன் லவ் பண்ணி பிரச்சனையான பொண்ணு வாழ்க்க பாழாப் போயிறக் கூடாதுனு வீட்டுக்கு கூட்டிட்டு வந்து வச்சிருக்காங்க?. அப்பா நம்ம ரெண்டு பேருக்கும் பண்ணிருக்குறது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா?. யாமினி நம்ம இந்த வயசுலயே லவ் பண்ணது நம்மளுக்கு மட்டுமாதான் சரி. அவங்களுக்கு அது தப்பான விஷயம்தான். அதையும் மீறி அவங்க நம்ம வாழ்க்கை நல்லா இருக்கனும்னுதான பாக்குறாங்க. வீட்ல இருக்க வரைக்கும் சரி. நம்மலால அப்பா வெளிய எத்தன பேருக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கு தெரியுமா? “

“எல்லாம் புரியுது. அதுக்கும் நீ பேசாததுக்கும் என்ன சம்பந்தம் “

“அவங்க நமக்காக யோசிக்கும்போது நம்மதான் அந்த மரியாதைய காப்பாத்திக்கனும். நான் ஒன்னும் உன்கிட்ட பேசாம இல்ல. அவங்க முன்னாடி உன்கிட்ட பேசாம இருக்கேன். அவ்வளவுதான். அவங்க நம்ம மேல வச்சிருக்கிற நம்பிக்கைக்கும் பாசத்துக்கும் கொஞ்சமாவது மரியாதையா நடந்துக்க வேணாமா? “

ஆதி என்ன சொல்ல வருகிறான் என்பதே யாமினிக்கு மூன்று மணி நேர சண்டைக்குப் பிறகுதான் புரிந்தது. அதன் பிறகு எப்படியோ பேசி சமாதானம் ஆகி இருவரும் மனம் ஒத்து தூங்கப் போனார்கள். நடந்த வாக்கு வாதத்திலே ஆதியிடம் அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டதை சொல்லாமல் விட்டுவிட்டு பிறகு புரண்டு கொண்டு இருந்தாள்.

மீண்டும் அழைத்துப் பேசி இதுவும் சண்டையில் முடிந்தால், அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால் சரியான சூழல் இருக்கும் போது அவனிடம் சொல்லிக்கலாம் என்று முடிவு செய்தாள்.

மறுநாள் காலையில் ஜோதியும் யாமினியும் தெரிந்தவர் வீட்டு விசேஷத்திற்குச் சென்றார்கள். ஜோதிக்குத் தெரிந்த சிலரும் அங்கு வந்திருந்தார்கள். ஜோதியிடம் நலம் விசாரிக்க வந்த அனைவருமே “உனக்கு ரெண்டு பசங்கதான? அப்போ இந்தப் பொண்ணு யாரு?” என்றுதான் கேட்டார்கள். அவளும் “இது என் அண்ணனோட மக ஊர்ல இருந்து வந்திருக்கா. வீட்ல இருந்தா பொழுது போகாதுனு கூட்டிட்டு வந்தேன் என்று சமாளித்தாள்.

அப்படியா சரி இந்த பொண்ணு என்ன பண்ணுது படிக்குதா? என்று கேட்கும் சிலரிடம் பேச்சை மாற்றி, சிரித்து சமாளித்து, அவர்களை திசை திருப்பி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள். அது யாமினியை விட ஜோதிக்குதான் மனதை பாதித்தது.

விசேஷம் முடிந்து வீடு திரும்பும் போது மனதில் குறுகுறுத்துக் கொண்டிருந்த ஜோதி, யாமினிடம் “யாமினி உன்ன நான் வீட்டுலயே விட்டுட்டு வந்திருக்கனும் “ என்றாள்.

“அவங்க கேள்வியா கேட்டு நச்சறிச்சதுக்கு இப்படி சொல்றீங்களா? “

“ம்ம்ம் ஆமா உனக்கு மனசு கஷ்டமாகிரும்ல. அதான் எனக்கு ஒரு மாதிரி இருக்கு “

“எனக்கு எந்த கஷ்டமு இல்ல. நீங்க ஒன்னும் நெனைக்காதீங்க “

“ம்ம்ம்”

யாமினி வீட்டிற்கு வந்த பிறகு ஜோதிக்கு புதிதாக ஒரு தோழி கிடைத்தது போல இருந்தது. பெண் பிள்ளையைப் பெற்றிருந்தால் கூட இவ்வளவு இணைப்போடு இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். எந்நேரமும் ஜோதியுடனே இருக்கும் யாமினி சமைப்பது, துணி துவைப்பது, பாத்திரங்களை கழுவி வைப்பது, பூ கட்டுவது வரை எல்லா வேலையிலும் பங்கு போட்டுக் கொண்டு சிரித்துக் கதை போசிக் கொண்டு தோழி போல இருப்பாள்.

இருவரும் சேர்ந்து பேசாத தலைப்பே இல்லை. வீட்டில் எப்போதும் தனிமையை மட்டுமே உணர்ந்த ஜோதிக்கு யாமினியின் வருகை வரப் பிரசாதம்தான். ஆனால், யாமினி வாழ்க்கை மீது அவளுக்கு மிகுந்த அக்கறை இருந்தது. அதனால் தன் கணவனிடம், யாமினியைப் படிக்க வைக்கலாமா ? என்று கேட்டாள்.

உங்களுக்கு பணம் சமாளிப்பது கடினமாக இருந்தால், நானும் வேலைக்குப் போய் சம்பாதிக்கிறேன் என்றாள்.

ஜோதி சொல்லி அதை அவள் கணவன் மறுத்ததே இல்லை. பணம் பற்றிய சிந்தனை எல்லாம் உனக்குத் தேவையில்லை. நீ யாமினிடம் அவள் என்ன படிக்க ஆசைப் படுகிறாள் என்று கேள் மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.

ஜோதி யாமினிடம் இதைப் பற்றி கேட்டபோது, அவளுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அவள் மனதில் இருந்ததெல்லாம் எந்நாளும் இவர்களுக்கு பாரத்தைக் கொடுத்துவிடக் கூடாது என்பது மட்டும்தான். ஜோதியின் முகத்திற்கு நேரே மறுக்க முடியாததால், நான் யோசித்து நாளைக்கு சொல்கிறேன் என்று சொல்லி அந்த பேச்சை முடித்தாள்.

யாமினி ஆதியிடம் இதைப் பற்றி கேட்டபோது, அவனுக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பின் இருவரும் பேசி ஒரு முடிவு எடுத்தார்கள்.

“ஆதி உங்க வீட்ல எனக்காக இதுவரைக்கும் பண்ணிட்டு இருக்க உதவிக்கே நான் என்ன திருப்பித் தரப் போறேன்னு தெரியல. வீடு இப்போ என்ன நிலமையில இருக்குனு நானும் கூடவே இருந்து பாத்துட்டுதான இருக்கேன். உனக்கும் சிபிக்கும் ஃபீஸ் கட்டவே கஷ்டமா இருக்கு. அப்பா முழுக்க முழுக்க ஜிம்லயேதான் இருக்காரு. அவருக்கு கொஞ்சம் கூட ரெஸ்ட்டே இல்ல. எல்லாம் தெரிஞ்சும் அவங்கள கஷ்டப்படுத்த நான் விரும்பல. அதுனால நான் படிக்கல. நான் படிக்கலனு சொன்னா, சொல் பேச்சு கேக்க மாட்டேன்றேனு தப்பா நெனச்சிருவாங்களோனு வேற எனக்கு பயமா இருக்கு. அதுனால நீயே ஈவ்னிங் பேசும்போது அம்மா கிட்ட சொல்றியா ? “

“சரி நான் சொல்லிக்குறேன். நீ சொல்றதும் சரிதான். ஆனா நீயும் என்ன மாதிரிதான? உனக்கும் காலேஜ் போகனும் படிக்கனும்னு ஆசை இருக்கும்ல? “

“எனக்கு இப்போதைக்கு எந்த ஆசையுமே இல்ல. நீ நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போய் சம்பாதிச்சு என்னைய படிக்க வைக்க மாட்டியா அப்போ?”

“நீ என்னதான் மழுப்பி பேசுனாலும் எனக்கு மனசு கேக்கல. எங்க வீட்டுக்கு வந்ததால உன் லைஃப் பாதிக்கப்படுதோனு எனக்கு கவலையா இருக்கு “

“லைஃப்னா என்னனே எனக்கு இந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் புரிஞ்சது. நான் இங்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா நிம்மதியா இருக்கேன். அம்மா கிட்ட பேசி புரிய வை அது போதும் “

“சரி நான் பேசுறேன்”

குடும்ப கஷ்டத்த மனசுல வச்சு யாமினி எடுத்த இந்த முடிவு ஆதிக்கு சரியா பட்டாலும் ஜோதிக்கு அது சரியாபடல.

“அவளும் படிக்கட்டும் எனக்கு மூனு பேருமே ஒன்னுதான். அப்பா கிட்ட நான் பேசிட்டேன்” என்று ஜோதி சொன்னாலும் யாமினி தன் முடிவில் உறுதியாக இருந்தாள். தினமும் ஒரு பத்து முறையாவது இதைப் பற்றி ஜோதி யாமினியிடம் பேசியதால், யாமினி தன் பிடியில் இருந்து சற்று கீழே இறங்கினாள்.

காலேஜ் போவதற்கு பதிலாக நான் மேக்கப் கிளாஸ் போறேன் என்று ஜோதியிடம் கூறினாள்.
நீ எங்கே வேண்டுமாலும் போ. உனக்குப் பிடித்தது எதுவாக இருந்தாலும் செய். ஆனால் வீட்டில் மட்டும் அடைபட்டு இருக்காதே என்று ஜோதி அறிவுரை சொல்ல, யாமினியும் அதை ஏற்றுக்கொண்டாள்.

பியூட்டீசியன் கோர்ஸ் மூன்று மாதம்தான். செலவும் குறைவாகவே இருக்கும். வகுப்பு நேரமும் குறைவாகத்தான் இருக்கும், வீட்டில் ஜோதிக்கு உதவியாக இருக்கவும் விரைவாக படித்து முடித்து வேலைக்கு செல்லவும் நல்ல யோசனையாக இருக்கும் என்பதால் யாமினி இந்த முடிவை எடுத்தாள்.

வீட்டிலிருந்து அரை மணி நேரப் பயணத் தொலைவில் அமைந்துள்ள ஒரு பார்லரில் சேர்ந்து தினமும் வகுப்பிற்குச் சென்றாள்.

அது ஜோதி மற்றும் யாமினியின் மனதிற்கு திருப்தி அளித்தது.
ஆதியும் யூடியூபில் மிகவும் பிரபலமான ஆளாக உருமாற ஆரம்பித்தான். அவன் கதைக்கும் கதை சொல்லும் பானிக்கும் ஒரு பெரிய ரசிகர் கூட்டமே சேர்ந்தது.
அவன் அடுத்ததாக பதிவேற்றிய வீடியோக்கள் அடுத்த நாள் கதையில் என்ன திருப்பம் ஏற்படப் போகிறதோ என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாகவே அமைந்தது.

வீடு திரும்பிய ஜோதாவின் வாழ்க்கையும் பாக்ஸிங் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த அக்பரின் வாழ்க்கையும் அதன் பிறகு எப்படி இருந்தது?. இருவரும் எப்படி சந்தித்து பின் கரம் பிடித்தார்கள் என்பதை விளக்கிச் சொன்ன வீடிக்கோக்கள் லட்சக்கணக்கான பார்வையாளர்களை சென்றடைந்து சப்ஸ்கிரைபரின் எண்ணிக்கையை ஏற்றிவிட்டது.

கல்லூரி படிப்பை முடித்த ஜோதா, அக்பரைத் தொடர்பு கொள்ள பல முயற்சிகள் எடுத்தும் இறுதியில் தோற்றுதான் போனாள். அவளுக்கென அழகான குடும்பம் இருந்தும் தனிமையையே உணர்ந்தாள்.

தொடரும்...♡
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top