Member
- Joined
- Mar 16, 2025
- Messages
- 57
- Thread Author
- #1
அத்தியாயம் - 26
இந்த முடிவில் அக்பருக்கும் பெரிதாக உடன்பாடு இல்லை. எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக அவளை செயல்பட வைப்பதுதான் அவருக்குத் தெரிந்த காதலாக இருந்தது. அதே நேரத்தில் எல்லாரையும் எதிர்த்து நிற்க முடியாது. யாராவது நம்மையும் நம் முடிவையும் ஏற்றுக் கொள்ள தயாராகும்போது நாமும் அவர்களையும் அவர்களது முடிவையும் ஏற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்றும் அவர் நினைத்தார்.
எல்லாம் நல்லவிதமாக சென்றுகொண்டிருக்கும் சமயத்தில் இதை ஜோதாவிடம் சொன்னால் அதை அவள் எப்படி ஏற்றுக் கொள்வாள் என்கிற பயம் அக்பருக்கு அதிகமாகவே இருந்தது. அதனால் இந்த விஷயத்தை தன் அம்மாவை விட்டு ஜோதாவிடம் கேட்கச் சொன்னார். அம்மா அவளிடம் கேட்டபோது சற்று நேரம் அமைதியான ஜோதா பிறகு சரி என்று சொன்னாள்.
அம்மாவும் அவளும் பேசுவதை மறைந்திருந்த அக்பர் முன்வந்து ஜோதாவைப் பார்த்து “என்னடி கஷ்டமா இருக்கா?. இங்க இப்படி ஒரு ரூல் இருக்கும் போது அத நம்மளால மீற முடியாது. பெரியவங்க எது சொன்னாலும் நம்ம நல்லதுக்காகவாதான் இருக்கும். உனக்கு புரியும்னு நெனைக்குறேன். இப்போதைக்கு கல்யாணத்துக்கு மட்டும் அவங்க சொல்ற மாதிரி கேட்டு நடந்துக்கோ. அப்புறம் நீ வீட்ல இருக்கும் போது எப்படி வேணாலும் இருக்கலாம்” என்று அமைதியான குரலில் சொல்லியும் பாதி சொல்லாமலும் பாதியாய் தினறினார்.
அக்பருடைய நிலை புரிந்த ஜோதா, “இந்த சின்ன விஷயத்துக்காக நீங்க ஏங்க என்கிட்ட போய் கெஞ்சுறீங்க. உங்களுக்காக என்ன செய்ய சொன்னாலும் நான் செய்வேன். எல்லாத்துக்கும் தயாராதான் வந்திருக்கேன். இப்போ திடீர்னு வந்து சொன்னதும்தான் ஒரு மாதிரி இருக்கு. மத்தபடி எனக்கு ஒன்னும் இல்ல” என்று சொன்னாள்.
சிறப்பாய் வாழ்ந்து சலித்த பெரியோர்களின் வாழ்த்துக்களோடும் ஆசிர்வாதங்களோடும் ஜோதாவிற்கும் அக்பருக்கும் திருமணம் நடந்தது. அதிக எண்ணிக்கையில் மக்களை அழைக்க முடியாத சூழலால், வந்திருந்த குறைந்த நபர்களுக்கு மட்டும் அவர்களுடைய வீட்டிலே தடபுடலாக விருந்து வைக்கப்பட்டது.
திருமண வயதை எட்டிய உடனே எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஆசை ஜோதாவிற்கு மட்டும் இருக்காதா என்ன?. அவளுக்கும் அவளுடைய திருமணம் பற்றிய வண்ண வண்ண கனவுகள் இருந்தது. ஆனால் அந்த கனவுகளை சிதைத்து முற்றிலும் அவள் எதிர்பார்க்காதபடி அவளுடைய திருமணம் நடந்து முடிந்தது.
ஜோதாவின் அப்பா அம்மாவிடம் சமாதானம் பேச கிளம்புவது பற்றி அக்பர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ஜோதாவிற்கு அப்பா அக்பருக்கு அழைத்து வீட்டு விலாசத்தைக் கேட்டுக்கொண்டு நாளை அங்கு வந்து மகளையும் மருமகனையும் சந்திக்க விரும்புகிறோம் என்று சொன்னார்.
நடப்பது கனவா? நினைவா? என்று புரியாமல் அக்பர் தலைகால் புரியாத சந்தோஷத்தில் விஷயத்தை ஜோதாவிடம் சென்று கொட்டித் தீர்த்தார். தன் உணர்வை வார்த்தைகளாக கோர்க்கத் தெரியாத ஜோதா சிரித்த முகத்தில் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டு மகிழ்வை வெளிப்படுத்தினாள்.
சொன்னது போலவே ஜோதாவின் அம்மா அப்பா திருச்சூரில் இருக்கும் ஜோதாவின் வீட்டிற்கு வந்தார்கள். வீட்டையும் அங்கிருந்த மக்களையும் பார்த்ததில் திருப்தியடைந்த ஜோதாவின் பெற்றோர், “என் மகள் இங்கு சந்தோஷமாக வாழ்வாள் என்கிற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது. ஊர் பேருக்கு பயந்து நாங்க எடுத்த முடிவுதான் என் புள்ளைய தப்பான முடிவு எடுக்க வச்சிருச்சு. மத்தபடி அவளோட சந்தோஷத்தக் கெடுக்கனும்றது எங்களோட நோக்கம் இல்ல. இப்போதைக்கு நீங்க ஊர் சைடு வர வேணாம் எதுவா இருந்தாலும் நாங்களே வந்து பாத்துட்டு போறோம். நீங்க அங்க வந்தா தேவையில்லாத பிரச்சனதான் வரும். நாங்களே இப்போ யாருக்கும் தெரியாமதான் இங்க வந்திருக்கோம் “ என்று கண்ணைக் கசக்கியபடி பேசினார்கள்.
அவர்கள் பேசுவதை தலைகுனிந்து கேட்டு ஜோதாவும் அக்பரும் , “நீங்க எப்போ வேணாலும் இங்க வரலாம்” என்று சொன்னார்கள். வீட்டிற்கு வந்து ஒரு வாய் தண்ணீர் கூட குடிக்காமல் வந்த வேகத்தில் பேச வேண்டியதைப் பேசிவிட்டுத் திரும்பினார்கள். வீட்டை விட்டு வெளியே கடப்பதற்கு முன்பு ஜோதாவின் அம்மா ஒரு பொட்டலத்தைக் கையில் கொடுத்து, “இது உனக்காகவும் மாப்பிள்ளைக்காகவும் நம்ம மாரியம்மன் கோயில்ல பூஜ பண்ணி கொண்டு வந்த பிரசாதம் “ என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்கள்.
தாய் தகப்பனின் மனமும் ஒத்துப்போய் ஆசைப்பட்ட வாழ்க்கை அமைந்த உற்சாகத்தில் ஜோதா திகைத்தாள். எந்த விதத்திலும் ஒத்துப் போகாத ஒரு குடும்பத்தில் பெண்ணைக் கொடுத்து விட்டுத் தவிக்கும் பெற்றோரின் மனநிலையைப் புரிந்திருந்த அக்பரும் அவருடைய அம்மாவும் ஜோதாவை அவள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சந்தோஷமாக வைத்திருந்தார்கள்.
பழகாத ஊர், தெரியாத பாஷை, புரியாத பழக்க வழக்கங்கள் என எல்லாவற்றையும் கொஞ்ச நாட்களிலே பழகிக் கொண்டாள் ஜோதா. அவளுக்கு அங்கிருந்த வாழ்க்கை சூழல் ரொம்ப பிடித்துப் போய்விட்டது.
எந்தக் குறையும் இல்லாமல் சென்று கொண்டிருந்த ஜோதாவின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் விதமாக ஒரு சம்பவம் நடந்தது. கனவில்கூட நினைத்துப் பார்க்காதபடி ஒரே மாதத்தில் அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தது.
அக்பருக்கு பைக் விபத்து ஏற்பட்டு குதிங்கால் எழும்பு உடைந்து ப்ளேட் வைக்கும் அளவிற்கு அதிக வலியையும் செலவையும் உண்டாக்கியது. அக்பரின் உடல்நிலை தேறி வரும்வரை வருமானத்திற்கும் வழியில்லாமல் போனது. சிகிச்சை செலவிற்காகவும் மற்ற செலவிற்காகவும் வெளியில் வட்டிக்கு கடன் வாங்கினார்கள். அதன் பிறகு அக்பர் ஒரு வருடமாக வேலைக்கே போகவில்லை.
வாங்கிய கடனுக்கு வட்டி கூடிக் கொண்டே போக கஷ்டத்தைப் பொருட்படுத்தாமல் அக்பர் பழையபடி வேலைக்குப் போனார்.
அக்பருடைய காலில் ப்ளேட் இருந்ததால் உறுத்தலும் வலியும் அதிகமாக இருந்தது.
முன்பைப்போல் அவரால் பாக்ஸிங்கில் கவனம் செலத்த முடியவில்லை. அதனால் அங்கு வருபவர்களுக்கு ட்ரைனிங் மட்டும் செய்தார்.
விபத்தில் இருந்து மீண்டு ஒரு புது வாழ்க்கையில் நுழைந்த சில மாதங்களிலே அக்பருக்கு பயங்கரமான வயிறு வலி ஏற்பட்டது. குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனையாகவே இருப்பதால் அக்பரின் அம்மாவிற்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதைத் தீர்ப்பதற்காக அக்பருக்கு விருப்பமே இல்லாவிட்டாலும், அவரை அழைத்துக் கொண்டு சிக்கல்கள் எடுக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றாள்.
அந்த இடத்தில் நம்மீது ஏதாவது காத்து கருப்பு உரசி இருந்தாலோ, ஏவல் இருந்தாலோ அல்லது எவ்வளவு பெரிய சிக்கலான மாந்திரீகம் இருந்தாலோ அதை முற்றிலுமாக அகற்றி விடுவார்கள். இதில் எல்லாம் அக்பருக்கு கொஞ்சம்கூட நம்பிக்கயே இல்லை. அவருக்கு இம்மாதிரியான ஆட்களை பிடிக்கவும் பிடிக்காது. அம்மாவின் வர்ப்புறுத்தல் காரணமாகத்தான் அங்கு சென்றார்.
அவர் முகத்தைப் பார்த்ததும் நடந்த அத்தனை விபத்துக்களையும் பிரச்சனைகளையும் புட்டுப்புட்டு வைத்தார் அங்கிருந்த தாடி சாமியார். இது போன்ற பிரச்சனைகள் இருக்கும் மக்கள்தான் இங்கு வருவார்கள் என்கிற யூகத்தில்தான் பேசுகிறார் என்று அக்பர் அதற்கு ஆச்சர்யப்படவில்லை. ஆனால் அக்பரின் அம்மாவிற்கு வியப்பாக இருந்தது.
“என் புள்ளைய தூசு துரும்பு படாம வளத்துனே சாமி. எவ்வளவுக்கு எவ்வளவு என் புள்ளைய பொத்திப் பொத்தி வளத்தனோ அந்த அளவுக்கு இப்போ என் புள்ள படாத கஷ்டம் படுறான் சாமி. நீங்கதா அவனுக்கு இருக்க கஷ்டத்த எல்லாம் போக்கி ஒரு நல்ல வலி காட்டனும் “ என்று கைகூப்பிக் கண்ணீர் விட்டு அழுத அம்மாவைப் பார்த்து முறைத்துக் கையைத் தட்டிவிட்டார் அக்பர்.
அக்பர் தன்னை அலட்சியப்படுத்துவது தெரிந்தும் சாந்தமாக இருந்த அந்த தாடிச்சாமியார் அவரை வேறொரு அறைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த மரப் பலகையில் சட்டையைக் கழற்றி விட்டுப் படுக்கச் சொன்னார். அவர் சொல்வதைக் காதில் கூட வாங்காத அக்பர் “எதுக்கு இதுல படுக்கனும்?. எதாவது கயிறு இருந்தா கொடுங்க நாங்க கிளம்புறோம். வேலை நிறையா இருக்கு” என்று சொன்னார்.
அக்பர் எவ்வளவு தட்டிக் கழித்துப் பேசினாலும் அந்த சாமியாரின் கை அந்தப் பலகையை நோக்கியே இருந்தது. சரி இவ்வளவு உறுதியாக இருந்து அப்படி என்ன அதிசயத்தை நிகழ்த்துகிறார் என்று பார்கலாம் என நினைத்தபடியே சட்டையைக் கழற்றிவிட்டு, அவர் சொன்ன அந்தப் பலகையில் படுத்தார்.
அந்த அறையை விட்டு வெளியேறிய தாடிச் சாமியார் இரண்டு நிமிடங்கள் கழித்து கையில் ஒரு நீளமான குழலோடு உள்ளே வந்தார். புகை போட்டுப் பொட்டு வைத்து அந்த குழலுக்கு பூஜை செய்தவர் பின் அங்கிருந்த அக்பரின் அருகே வந்து நின்றார்.
“இவ்வளவு நேரம் நீங்கள் என்னை அலட்சியமாக நினைத்ததற்கு வெட்கப்படப் போகும் நேரம் நெருங்கிவிட்டது. உங்களுடைய வயிற்றில் மருந்துகள் இருக்கிறது. அதனுடைய சக்திதான் உங்களுடைய வாழ்க்கையைப் பந்தாடுகிறது. ஒரு ஐந்து நிமிடம் மட்டும் எந்த கேள்வியும் கேட்காமல் சொல்வதை மட்டும் செய்தால், எல்லோருக்கும் நல்லது “ என்று சொல்லி அவருடைய வாயில் குழலின் ஒரு பகுதியை வைத்துக்கொண்டு அக்பருடைய வாயில் இன்னொரு பகுதியை வைத்தார். அக்பரின் அடி வயிற்றை அழுத்திய படியே, நான்கு முறை உறிஞ்சினார். அக்பருக்கு வயிற்றில் இருந்து ஆரம்பித்து தொண்டை வரை வலி எடுக்க ஆரம்பித்து பொறை ஏறி கக்கவும் செய்தார்.
இதே போல் நான்கைந்து முறை செய்யும் போதும் கொஞ்சம் கூட அளவு குறையாமல் அதே அளவு உருண்டைகளைக் கக்கினார். இருமலும் கண்ணீரும் அவரை விடாபிடியாகப் பிடித்திருந்தது.
கால் மணி நேரமாக கண் பார்வை தெரியாமல் பலத்த இருமலில் லொக்கு லொக்கென்று தொண்டை வறண்டு வாடினார். இருமல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த பிறகு தொண்டையை நீவி சிறிதளவு தண்ணீர் குடித்து நிதானமாகினார். அதன் பிறகுதான் அவருக்கு பார்வை ஒரளவிற்குத் தெரிந்தது.
பழைய நிலைக்கு திரும்பிய அக்பரை அழைத்து “நீங்கள் உயிர் போகிற அளவுக்கு வலியை அனுபவித்துக் கக்கியதை வந்து பாருங்கள் “ என்று அவர் காட்டினார்.
வெள்ளை நிற உருண்டையின் மேல் பகுதியில் முடி முளைத்தது போல சடை சடையாய் இருந்தது. மொத்தம் எட்டு உருண்டைகள் இருந்தது. அதைப் பார்த்ததும் தலை சுற்றி நின்ற அக்பரைப் பார்த்து “இத பாத்து நீங்க ஒன்னும் பயப்படத் தேவையில்ல. உங்களப் பிடிச்ச எல்லா கிரகமும் ஒழிஞ்சதுனு நெனச்சு சந்தோஷமா போங்க “ என்றார் அவர்.
தொடரும்...♡