Member
- Joined
- Mar 16, 2025
- Messages
- 57
- Thread Author
- #1
அத்தியாயம் - 28
அப்படிப்பட்ட ஒருவருக்கு இப்படி ஒரு தீங்கு செய்ய அவர்களுக்கு எப்படித்தான் மனது சம்மதித்ததோ தெரியவில்லை… என்று தனக்குள்ளே புழுங்கிக் கொண்டிருந்த ஜோதா தன் அம்மாவிற்கு அழைத்து அவள் மனதில் இருந்த அத்தனை ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்துவிட்டு இனிமேல் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னுடன் பேசவும் வேண்டாம் என் முகத்தில் முழிக்கவும் வேண்டாம். நீங்கள் என் கண்ணில் படாத வரை உங்களுக்கு நல்ல நேரம் என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள். அவளைச் சமாளிக்க அவளுடைய அம்மா ஏதேதோ பேசிப் பார்த்தாள். ஆனால் இவ்வளவு நடந்ததிற்குப் பிறகும் அவள் அம்மாவின் பேச்சை நம்புவதற்கு ஜோதா ஒன்றும் முட்டாள் இல்லையே.
அக்பர் ஜோதாவிடம் சண்டையில் இருந்தாலும் கூட, தான் உண்ண அதே பிரசாதத்தை அவளும்தானே உண்ணிருப்பாள். அவளுக்கும் வயிற்றினுள் மருந்து முளைத்திருக்குமே என்று அவளையும் அவர் சென்ற அதே இடத்திற்கு கூட்டிச் சென்றார். இதில் அதிசயம் என்னவென்றால், அவளுக்கு அக்பருக்கு இருந்தது போல் இல்லை. அந்த மாந்திரீகம் எடுப்பவர் ஜோதாவைப் பார்த்தவுடனே உனக்கு ஒன்றும் இல்லை என்று சொன்னது மட்டும் இல்லாமல், அக்பரை நம்பவைக்க அதைச் செய்து காட்டியும் நிரூபித்தார்.
இந்த நிகழ்விற்குப் பிறகு அக்பரின் குடும்பம் ஆரம்பத்தில் எப்படி எதற்கும் குறையில்லாமல் இருந்ததோ அதே போல் மாறியது. ஆனால் அந்த சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. கடலில் எழும் அலைபோல அடுத்தடுத்து பிரச்சனைகள் எழுந்தது.
அந்த பிரச்சனைகளுக்கு காரணம் என்ன? அந்த பிரச்சனையை நாயகனும் நாயகியும் சேர்ந்து எப்படி எதிர்கொண்டார்கள்? அதன் பிறகு இவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது? என்பதைப் பற்றியெல்லாம் அடுத்தடுத்து வரும் வீடியோவில் பார்க்கலாம் என்று ஆதி தனது முப்பதாவது வீடியோவில் பேசி முடித்தான்.
யூடியூப் வாசிகளுக்கு இந்தக் கதையின் ஒவ்வொரு அத்தியாயமும் மனதில் காதலின் கால்தடமாகப் பதிய அடுத்த வீடியோ எப்போது வரும்? என்று ஆதியை நச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொரு வீடியோ முடிவிலும் இருக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள் மக்களை அந்தக் கதையில் இருந்து விலகவிடவில்லை.
மக்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய கடமையில் இருந்த ஆதி முப்பதாவது வீடியேவிற்குப் பிறகு இரண்டு நாட்கள் வீடியோவே போடவில்லை. காரணம் அதற்கடுத்து கதையின் நகர்வு எப்படி இருந்தது என்று அவனுக்கே தெரியாது. அம்மாவின் அலமாரியில் இருந்து எடுத்து வந்த அந்த அற்புதமான நோட்டில் அவனுடைய அம்மா ஜோதியின் அச்சடித்த கையெழுத்தில் எழுதியிருந்த, அனைவரின் வரவேற்பையும் அன்பையும் பெற்ற அந்தக் கதையின் கடைசி பக்கத்தைத்தான் முப்பதாவது வீடியோவாகப் பதிவேற்றினான்.
அந்த நோட்டின் கிழிந்த மீதிப் பகுதி வீட்டில் தனக்கு மட்டும் அடையாளம் தெரியும்படி எடுத்து வைத்திருப்பதாக நினைத்து இரண்டு நாள் கழித்து ஞாயிறு விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தான். வீட்டிற்கு வந்த ஆதியின் முகமெல்லாம் பல் ஜொலிக்கும்படி சிரிப்பு, காரணம் வீடு இடையில் கொஞ்ச நாள் கலையிழந்து காணப்பட்டது. ஆனால் இப்போது அந்த குறை குறைந்து வீடும் வீட்டில் இருப்பவர்களும் கலையானவர்களாகவும் சந்தோஷமானவர்களாகவும் மாறியிருந்தார்கள்.
அப்பா முன்பை விட அதிகமாக வீட்டிற்கு நேரம் ஒதுக்குகிறார். சிபி கொஞ்சம் வளர்ந்து சேட்டைகளைக் குறைத்துக் கொண்டு அம்மாவிற்கு குறைந்தபட்ச ஓய்வைக் கொடுத்துவிட்டான். யாமினியும் அவள் விருப்பப்படி பியூட்டிஷன் வகுப்பிற்கு போய்க்கொண்டிருந்தாள். எல்லோருக்கும் எல்லாவும் சிறப்பாக ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் ஆதியின் மனதும் சந்தோஷத்தில் நிறைந்தது.
வீட்டிற்குப் போன கொஞ்ச நேரத்தில் கிழிந்த பாதி நோட்டைத் தேடி அம்மாவின் அலமாரியைக் கிளரிக் கொண்டிருந்தான். ரொம்ப நேரமாகத் தேடியும் அங்கு அவன் தேடியது கிடைக்காததால் எரிச்சலில் அங்கிருந்த பொருட்களை எல்லாம் டம்மு டும்மென்று கீழே போட்டுக் கொண்டிருந்தான். அவன் சத்தத்தைக் கேட்டு அந்த அறைக்குள் நுழைந்த யாமினி “என்னடா உனக்கு பிரச்சன?. வீட்ல இருக்குறதா இல்ல வெளிய போறதா எல்லாரும்?” என்று கேட்டார்.
“நீ உன் வேலையப் பாக்குறியா யாமினி. நானே கடுப்புல இருக்கேன் “
“உனக்கு மட்டும் எங்கிருந்துதான் வருமோ இந்த கடுப்பு. சரி என்ன தேடுறனு சொல்லு நானும் தேடுறேன் “ என்று கேட்டாள். அந்த அறையில் இருந்து வெளியே சென்றவன் தன் பையில் இருந்து பாதி கிழந்த நோட்டை எடுத்து வந்து “இங்க பாரு யாமினி. இதோட மீதி நோட்டத்தான் நான் தேடுறேன். அது கிடச்சாதான் அடுத்த வீடியோ போட முடியும். இதே மாதிரி இருக்க நோட்ட தேடு “ என்றான்.
“ஓஓஓ அதுனாலதான் நீ ரெண்டு நாளா வீடியோ போடலையா? “
“ஆமா. எல்லாம் பக்காவா கொண்டு வந்துட்டு கடைசியில சொதப்பிருவனோனு பயமா இருக்கு. இப்போதைக்கு மைன்டுல இதுதான் ஓடிட்டு இருக்கு. வேற எந்த சிந்தனையும் இல்ல. டென்ஷனா இருக்கு “
“சரி விடு டென்ஷன் ஆகாத நானும் தேடுறேன். ரெண்டு பேரும் சேர்ந்து தேடுனா சீக்கிரம் கிடைக்க வாய்ப்பிருக்குல”
“ம்ம் சரி. நான் தடம் பாத்துதான் வச்சேன். ஆனா இப்போ பாத்தா கணோம் “
“இங்கதான் இருக்கும். நீ ஒழுங்கா பாக்காம விட்டிருப்ப ஆதி. கொஞ்சம் இப்படி வா நான் பாக்குறேன் “ என்று சொல்லி ஆதியையை ஓரமாக நிற்க வைத்துவிட்டு யாமினி தேடிக் கொண்டிருந்தாள். இல்லை இல்லை தேடுவது போல நடித்துக் கொண்டிருந்தாள். ஆதி விட்டுச் சென்ற அந்த நோட்டின் மீதி பகுதி அங்கு சுத்தி இங்கு சுத்தி கடைசியில் யாமினியின் கையை வந்து சேர்ந்தது. ஆதியும் யாமினியும் தேடிக்கொண்டிருந்த அந்த பொருள் யாமினியின் பொறுப்பில் பத்திரமாக அவள் பொருள்களுக்கு நடுவே ஒழிந்திருந்தது.
அங்கு இல்லாத பொருளை அறை நாள் முழுக்க தேடித் தேடி களைத்துப் போனார்கள். அது அங்கு இல்லை எனத் தெரிந்தும் யாமினி தேடியதற்கு பல காரணங்கள் அவள் மனதிற்குள் புதைந்திருந்தது.
அந்த நோட்டைக் காணவில்லை என்கிற கோபமும் படபடப்பும் தலைக்கு மேல் ஏறிய ஆதி அதைத் தன் அம்மாவிடம் கொட்டினான். “அம்மா… இங்க வா ஒரு நிமிஷம் “ என்று தொண்டை கிழிய ஓயாமல் கத்திக் கொண்டிருந்தான். மதிய சமயலைக் கவனித்துக் கொண்டிருந்தவள் கரண்டியோடு வெளியே வந்து நின்றாள்.
“ஏன்டா கத்திக் கத்தி வீட்ட ரெண்டாக்கிட்டு இருக்க?”
“உன்னோட நோட்டு ஒன்னக் காணோம் நீ எடுத்தியா? “
“உன்னோட நோட்டு காணோம்னா ஏன்டா என்கிட்ட கேக்குற? நான் என்ன எந்நேரமும் உன் நோட்ட வச்சு எழுதிகிட்டா இருக்கேன். காணோம்னா போய் தேடுடா எனக்கு நிறையா வேல இருக்கு “
“படபடனு ஆடாம கொஞ்சம் பொறுமையா நான் பேசுறத கேட்டுட்டு அப்புறம் பதில் பேசுறியா?. நான் என்னோட நோட்ட கேக்கல. உன்னோட நோட்ட காணோம் பாத்தியானுதான் கேட்டேன் “
“நான் எந்த நோட்டு வச்சிருந்தேன்? ”
“அதான் அந்த அலமாரி முழுக்க நோட்டும் பேப்பருமா கிடக்கே அதுல ஒரு நோட்டக் காணோம் “
“அதான் அலமாரி முழுக்க இருக்குனு நீயே சொல்றியே வேற எதாவது நல்ல நோட்டா பாத்து எடுத்துக்கோடா “
“ம்மா புத்திசாலித்தனமா பேசாதமா நான் டென்ஷன் ஆகிருவேன். ஆல் ரெடி நான் பயங்கர கோபத்துல இருக்கேன் “
“சும்மா எதாவது கேட்டு நீ என்ன டென்ஷன் பண்ணாத நான் பத்திரகாளியா மாறிடுவேன்.அந்த அலமாரி பக்கம் போயே பல வருஷம் ஆகிருச்சு.நீதான் ஏதோ யூடியூப் வீடியோவுக்கு கத வேணும்னு பழச போட்டுக் கிளறிட்டு இருந்த. இப்போ என்கிட்ட கேட்டா என்னடா அர்த்தம் “
“அப்போ நீ எடுக்கலையா? உனக்குத் தெரியாதா? நீ பாக்கலையா ?
“சத்தியம் எதுவும் பண்ணனுமாடா?”
“இல்ல இல்ல வேணாம். நீ போய் உன் வேலைப் பாரு. நோட்ட தேடித் தேடி பசியே எடுத்துருச்சு”
“ம்ம்ம் அவ்வளோதான் பத்து நிமிஷத்துல சாப்பாடு ரெடி ஆகிரும்”
இந்த சூழலில் குடும்பத்தில் ஏற்படும் நெருக்கடிகளையும் சிக்கல்களையும் எப்படி சிரித்தாலும், செல்லமாய் கோபப்படும், லேசாக அதட்டியும் சமாளிக்க வேண்டும் என்று ஜோதியிடம் இருந்து யாமினி கற்றுக்கொண்டாள். காரணம் அந்த பாதி கிழிந்த நோட்டு ஜோதியின் கையில் இருந்துதான் யாமினியின் கைக்கே மாறியது. இந்த விஷயம் தனக்கும் தன் கணவனுக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்று நினைத்த ஜோதிக்குத் தெரியாது அந்த நோட்டு இப்போது யாமினிடம்தான் இருக்கிறது என்று.
எந்த உண்மையும் தெரியாத வரைக்கும்தான் சந்தோஷம். பிறரிடம் பகிர முடியாத உண்மையை சுமப்பது எல்லாம் மிகப் பெரிய வலி. அந்த உண்மை ஜோதியின் முதுகில் இருந்து தாவி யாமினியின் முதுகில் வேதாளம் போல் தோற்றுக் கொண்டது. பிடியில் சிக்கிய யாமினி வேர்த்து விறுவிறுத்தாள். பிடியில் இருந்து விலகிய ஜோதி சந்தோஷமாக அந்த வீட்டில் சுற்றித் திரிந்தாள்.
உண்மை இதுதான் யாமினிக்குத் தெரிந்த பிறகு ஆதியின் அம்மாவும் அப்பாவும் அவளுக்கு வாழும் கடவுளானார்கள். முன்பு இருந்ததை விட அதிகமாக, வார்த்தைகளால் அடக்கி விட முடியாத உயரத்தில் சென்று அமர்ந்து கொண்டார்கள் அவர்கள் இருவரும்.
நாளுக்கு நாள் ஆதியின் அப்பா அம்மா மீது யாமினிக்கு அன்பும் மரியாதையும் கூடிக்கொண்டே இருந்தது. இந்தக் குடும்பம் இன்று இருப்பது போல என்றும் சிறு கீரல் கூட விழாமல் இருக்க வேண்டும் என்றும் யாமினி கடவுளை வணங்காத நாளே இல்லை.
எப்படியும் மீதிக் கதையைத் தேடி ஆதி வீட்டிற்கு உலாவான் என்பது அவளுக்குத் தெரியும். அப்பா அம்மாவிற்கும் தெரியும். யாமினி எக்காரணம் கொண்டும் உண்மை தன் மீளியமாக ஆதிக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.
இந்த விஷயத்தைப் பற்றி ஆதி வீட்டில் குரலைத் திறந்தாள் அதை அப்படியே அடைத்து அவனை திசை திருப்ப, அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தார் ஆதியின் அப்பா.
தொடரும்...♡