Member
- Joined
- Mar 16, 2025
- Messages
- 57
- Thread Author
- #1
அத்தியாயம் - 30
“ஆதி ஏன்டா அப்பா யூடியூப் சேனல் வேணாம்னு சொன்னாரு? எனக்கு ஒன்னுமே புரியல? “
“நான் வீட்ல இருக்கும்போது டெய்லி மார்னிங் அன்டு ஈவ்னிங் ஜிம்முக்குப் போவேன் தெரியும்ல? “
“ஆமா சொல்லிருக்க “
“எதுக்கு போவேன்னு தெரியுமா? “
“அதெல்லாம் சொன்னாதான தெரியும். உங்களோட ஜிம்முனால நீ போறனு நெனச்சேன் “
“அதுவும் ஒரு காரணம்தான். ஆனா அதுமட்டுமே காரணம் இல்ல. நான் மூனு வருஷமா அப்பா கிட்ட பாக்ஸிங் கத்துகிட்டு இருந்தேன். நான் இந்தியாவுலயே பெரிய ஃபேமஸான பாக்ஸிங் சாம்பியன் ஆகனும்னுதா அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஆசை. என்னோட ஆசையும் அதுதான்”
“டேய் சூப்பர்டா. உனக்குள்ள இவ்ளோ டேலன்ட் இருக்கா? சொல்லவே இல்ல என்கிட்ட “
“எங்க சொல்றது? அதுக்குள்ளதான் இந்த பாழாப்போன லவ் வந்து உன் வாழ்க்கையையும் என் வாழ்க்கையையும் புரட்டி போட்ருச்சே “
“ம்ம்ம் நல்ல விஷயம்தான? “
“எது நல்ல விஷயம் யூடியூப் சேனல க்ளோஸ் பண்றதா? “
“ஆமா. என்னைய மறக்க முடியாமதான அத ஆரம்பிச்ச?. இப்போ நானே சொல்றேன் அத க்ளோஸ் பண்ணிட்டு ஒழுங்கா உருப்படுற வழியப்பாரு “
“என்ன யாமினி நீயும் அம்மா அப்பா மாதிரியே பேசுற?”
“வேற எப்படி பேசச் சொல்ற? அதுவா இதுவானு யோசிச்சீன உன் மூளைதான் குழம்பி போகும். உனக்கும் நல்ல பயங்கரமான டேலன்ட் இருக்கு உன்ன கை பிடிச்சு தூக்கி விட உங்கப்பா இருக்காரு அப்புறம் என்ன உனக்கு? “
“நான் அடுத்த வீடியோ போடுவேனு நம்பி பல ஆயிரம் பேர் காத்துட்டு இருப்பாங்க அவங்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்றது? “
“ஆஆஆ இனிமே வீடியோ வராதுனு போய் சொல்லு”
“யாமினி… ”
“பின்ன என்னடா ஏதோ மக்கள காப்பாத்துற ஹீரோ மாதிரி பேசிட்டு இருக்க. உன் வீடியோ இல்லனா அத விட இன்ட்ரெஸ்ங்கா வேற வீடியோ வந்ததும் இத மறந்துறப் போறாங்க. நீ அத நெனச்சு ஃபீல் பண்ணாம உன் எய்ம நோக்கி போனா உண்மையாவே ஹீரோவாகிறலாம்”
“அப்படியா?. நிஜமாவா சொல்ற? “
“ஆமாங்க பெரிய ராஜா. பெரிய சந்தோஷத்த அடையனும்னா இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷத்த இழந்துதா ஆகனும் “
“என்னோட டெயலாக் எனக்கேவா? “
“ஆமா உனக்கேதான். முடிவு எடுத்த பிறகும் அதவே யோசிக்காம கம்முனு படுத்து தூங்கு “
“வர வர நீ எனக்கு சப்போர்ட் பண்ணாம அம்மா அப்பாக்குதான் ரொம்ப சப்போர்ட் பண்ற. நான் அத கவனிச்சிட்டுதான் இருக்கேன்”
“ஆமா அவங்கதான எனக்கு சோறு போடுறாங்க நீயா போடுற?. நீ சம்பாதிச்சு எனக்கு சோறு போடு அப்புறம் உனக்கு சப்போர்ட் பண்றேன் “
“ஏன்டி கேவளம் சோத்துக்காக என் காதல விட்டுக்கொடுக்குற?”
“சும்மா கிடைக்குமா பாஸ். ஓவரா வாய் பேசாம போய் தூங்குங்க பெரிய ராஜா “
“ம்ம்ம் சரி குட் நைட் “
ஏற்றுக் கொள்ள மனம் இல்லாவிட்டாலும் வீட்டில் இருக்கும் அனைவரின் விருப்பமும் ஒன்றின் மீது உறுதியாக இருந்ததால், ஆதியும் தன் முடிவை மாற்றிக் கொண்டான். நாள் முழுவதும் இருந்த குழப்பம் அந்த நாள் முடியும்போது மறைந்ததால் கவலை களைந்து உறங்கினான் ஆதி.
ஒரு வழியாக தன் கையை மீறி அண்ணன் கைக்குப் போன யூடியூப் சேனல் இப்போது அதை விட அதிக சப்ஸ்கிரைபர்களோடு தன்னிடமே திரும்ப வரப் போகிறது என்கிற உற்சாகத்தில் சிபியும் உறங்கிப் போனான்.
இப்படி அந்த வீட்டைச் சேர்ந்த அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு வீட்டு உறங்க, யாமினிக்கு அன்று இரவு உறக்கம் இல்லை. அவள் நடு இரவில் கண் விழித்து கிடந்ததற்கு காரணம் அவளிடம் இருந்த அந்த நோட்டுதான். அந்தக் கதையில் வரும் அக்பரும் ஒரு பாக்ஸர்தான். இப்போது ஆதியைப் பாக்ஸராக்கும் கனவோடு அப்பா இருப்பதை வைத்து அவனுக்கு மொத்த கதையும் தெரிந்துவிட்டால் என்ன செய்வது என்று புரியாமல் யாமினி தவித்தாள்.
யாமினியைப் பொருத்தவரை ஆதிக்கு இந்த விஷயம் தெரிந்திடவே கூடாது. வாழ்க்கை முழுக்க தனக்குத் தெரிந்த இந்த உண்மையை ஒரு நாளும் ஆதிக்கு தெரியப்படுத்தக் கூடாது என்கிற சத்தியத்தை தூக்கி சுமக்கத் தயாரானாள்.
ஒரு மாதத்திற்கு முன்பு ஜோதியும் அவளது கணவனும் அறைக்குள் பேசியதை வெளியே நின்னு கேட்டதில் கால் வாசி உண்மை மட்டுமே தெரிந்தது. பின் ஜோதியின் ஒவ்வொரு அசைவையும் கவனித்த யாமினிக்கு முழு உண்மையும் தெரிந்தது.
பாதி கிழிந்த நோட்டைக் கொண்டு போய் எங்காவது எரித்துவிடு என்று ஆதியின் அப்பா, அம்மாவிடம் சொன்னார். ஆனால் ஜோதிக்கு அதை எரிக்க மனம் வரவில்லை. அவர்களுடைய காதலுக்கு அடையாளமாய் காதல் சின்னமாய் இருந்த அந்தக் காகிதக் கோட்டையை எரிக்க அவளுக்கு விருப்பமே இல்லை. அதை எப்படி வீட்டில் இருந்து அகற்றுவது என்று இரண்டு மூன்று நாட்கள் யோசித்துக் கொண்டே இருந்தாள்.
ஒரு நாள் அந்த வீட்டில் இருந்த குப்பைத் தொட்டையில் ஒரு மஞ்சள் நிறப் பையை எடுத்துக் கொண்டு வந்து போட்டு அதைத் தெரு முனையில் இருக்கும் குப்பை சேமிக்கும் பெட்டியில் கொட்டப் புறப்பட்டாள் ஜோதி.
ஜோதியின் முகத்தில் இருந்த கலக்கமும் கையில் இருந்த பையும் யாமினியின் சந்தேகத்தின் மீது கல்லெறிந்தது.
சந்தேகத்தைத் தீர்ப்பதற்காக யாமினி ஜோதியின் பின்னே சென்று கவனித்தாள். ஜோதி குப்பையைக் கொட்டும்போது தூரமாக மறைந்திருந்து பார்த்த யாமினி, ஜோதி வீட்டிற்குத் திரும்பிய பிறகு அந்தக் குப்பைத் தொட்டியை நெருங்கினாள்.
குப்பைத் தொட்டியில் ஜோதி கொட்டிச் சென்ற குப்பையோடு அந்த மஞ்சள் நிற பையும் கிடந்தது. அந்த இடத்திலேயே அதை எடுத்து எடுத்துப் பார்த்த யாமினி தனக்கிருந்த சந்தேகத்திற்கு பதில் கிடைத்து விட்டதாகத் துள்ளிக் குதித்தாள்.
அந்த பையை அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் கொண்டு வந்து அவளுடைய அறையில் ஒழித்து வைத்தாள்.
அந்த நாள் இரவு அதைத் திறந்து அதில் இருந்த முக்கியமான பொருளை வெளியே எடுத்தாள். அந்தப் பொருள் வேறொன்றும் இல்லை, இன்று ஆதியுடன் அவளும் தேடிய அதே பாதி நோட்டுதான். அதைத்தான் எரிக்க மனமில்லாமல் தூக்கி குப்பையோடு கொட்டியிருக்கிறாள் ஜோதி.
இவ்வளவு படபடப்பை ஏற்படுத்தும் அளவிற்கு அப்படி என்னதான் இருக்கிறது இந்த நோட்டில்? என்ற கேள்விக் குறியோடு அன்று இரவு அந்த நோட்டைப் புரட்டினாள் யாமினி. முதல் பக்கத்தை வாசிக்கும்போதே இது ஆதி சொல்லும் கதையின் தொடர்ச்சிதான் என்பதைப் புரிந்து கொண்ட யாமினி, அடுத்தடுத்து தொடர்ந்து வாசித்தாள்.
அவளுடைய வாசிப்பின் இறுதியில்தான் தெரிந்தது அது கதை இல்லை நிஜம் என்று. அந்த நோட்டில் அடுத்தடுத்து பக்கங்களை வாசித்த யாமினி சிரித்தாள், அழுதாள், யோசித்தாள், வியந்தாள் இதையெல்லாம் தாண்டி காதலுக்கு மிக மிக நெருக்கமானாள்.
அப்படிப்பட்ட உருக்கமான வரிகளைக் கொண்ட நோட்டை தன்னிடம் மறைத்து வைத்திருப்பது இந்த வீட்டில் யாருக்குமே தெரிந்துவிடக் கூடாது என்று சாமியை வேண்டிக் கொண்டு படுத்தாள்.
மறுநாள் விடுதிக்குத் திரும்பிய ஆதி யூடியூப் சேனல் பற்றிய ஆசையை அவன் கொண்டு வந்த அழுக்குத் துணிகளோடே விட்டு விட்டுச் சென்றான். அதன் பிறகு அவனுடைய முழு கவனமும் பாக்ஸிங் பயிற்சிக்காக உடலைத் தயார்படுத்துவதிலே இருந்தது.
அவ்வப்போது யூடியூப் சேனலின் நியாபகம் வந்தாள் உடைந்து உட்கார்ந்து விடுவான். ஒவ்வொரு முறை உடைந்து உட்காரும்போதும் நம்மைத் தேற்றி கைகொடுத்து எழுப்பிவிட அதைவிட பெரிய சக்தி எதாவது இருக்கும். இந்த முறை ஆதிக்கு பாக்ஸிங் சாம்பியன்ஸிப் என்கிற அசுரத்தனமான பிரமாண்ட சக்தி இருந்தது. அது அவனைத் துவண்டுபோக விடாமல் ஒவ்வொரு நாளையும் கடக்க வைத்தது.
உடல் உறுதியில் அவன் அதிக கவனம் செலுத்தி உடற்பயிற்சியில் ஈடுபட்டு தேறிக் கொண்டிருந்த நாட்களிலில் கூடவே கல்லூரி வாழ்க்கையும் கரைந்து ஓடியது.
சினிமாக்களில் காட்டப்படும் சிலாக்கி மிலக்கிகளைக் கொண்ட உல்லாச காலமாக ஆதியின் கல்லூரிக் காலம் இருக்கவில்லை. முதலில் யாமினி, யூடியூப், உடற்பயிற்சி இது மூன்றையும் சந்தித்து மோதியதிலே அவனுடைய கல்லூரி வாழ்க்கை உருண்டு ஓடி முற்று பெற்றது.
இவன் கல்லூரி வாழ்க்கை முடித்து விட்டு வீடு திரும்பும்போது, வெளியூர் வேலைக்காக யாமினி வீட்டிலிருந்து வெளியேறினாள். பிரபல தனியார் அழகு நிறுவனம் ஒன்றில் பியூட்டிஷன் வேலை கிடைத்ததும் சந்தோஷமாக வீட்டை விட்டுச் சென்றாள்.
நம் வாழ்க்கையைக் காப்பாற்றிய இவர்களுக்காக எதாவது செய்ய வேண்டும் என்கிற உயர்ந்த எண்ணத்தோடு சம்பாதிக்க புறப்பட்டாள். ஆரம்பத்தில் வெளியூர் வேலைக்கு வேண்டாம் என்று ஜோதி தடுக்க, நான் தனியாகப் போகவில்லை நாங்கள் ஐந்து பேர் குழுவாகத்தான் போகிறோம். இது நல்ல வாய்ப்பு. இதை பயன்படுத்தாவிட்டால் இவ்வளவு கஷ்டத்திலும் நீங்கள் என்னைப் படிக்க வைத்ததற்கு ஒரு அற்த்தம் இல்லாமல் போய்விடும் என்றெல்லாம் பக்கம் பக்கமாக வசனம் பேசி, கண்ணீர் விட்டு அழுது, அடம்பிடித்து பின் சம்மதம் வாங்கினாள்.
ஆதியும் யாமினியும் காதலித்தார்களே தவிர, காதலர்களாக ஒருநாளும் இருந்ததில்லை. ஆதியின் அம்மா அப்பாவின் வழிகாட்டுதலைப் பயன்படுத்தி அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் சிறப்பாக வரவேண்டும் என்கிற ஆசையை நிறைவேற்ற போராடிக் கொண்டிருந்தார்கள்.
வெளியூர் வேலைக்குச் சென்ற யாமினி, முன்பு ஆதி எப்படி ஞாயிற்றுக்கிழமை கிழமை விடுமுறைக்கு வீட்டுக்கு வருவனோ அதே போல யாமினியும் மாதம் ஒரு முறை சனி, ஞாயிறு விடுமுறைக்கு வீட்டிற்கு வருவாள். ஆதியின் அப்பாவிற்கு அடுத்தபடியாக அந்த வீட்டில் யாமினி சம்பாதிக்கத் தொடங்கினாள்.
கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு ஜிம்மிற்குத் திரும்பிய ஆதி முழு மூச்சாக பாக்ஸிங் பயிற்சியில் இறங்கினான்.
ஆதியின் அப்பா அவருடைய முழு நேரத்தையும் ஆதியைத் தயார்படுத்துவதற்காக செலவிட்டார். அவர் மட்டும் பயிற்சி கொடுத்தால் போதாது என்று தனக்குத் தெரிந்த, பாக்ஸிங் துறையில் மிகப் பெரிய உயரத்தை எட்டிய நண்பர்களை எல்லாம் விட்டு ஆதிக்கு பயிற்சி கொடுத்தார்.
தொடரும்...♡