• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 20, 2025
Messages
42
அபி காட்டுனா திசைல சுஜி அம்மா,அப்பா நின்னுட்டு இருந்தாங்க.

சூர்யா :சூர்யா அவங்களை பார்த்து முறைச்சிட்டு நின்னான்.

அபி : ஷாலினி தோல்ல சாஞ்சு படுத்திருந்தான்.

ஷாலினி :( mv) இவங்க சுஜி அக்காவோட அம்மா, அப்பா தான இவங்களை பார்த்து அபி ஏன் பயப்படுறான், சீனியர் வேற கோவமா இருக்காரு.

சுஜி அம்மா, அப்பா : அவங்க கிட்ட வந்தாங்க.

சூர்யா : என்ன வேணும் உங்களுக்கு அதான் அபிய உங்க கூட அனுப்ப முடியாதுன்னு சொல்லிட்டேன்ல அப்பறம் ஏன் திரும்ப திரும்ப வரீங்க.

சுஜி அப்பா : நாங்க அபிய கூட்டிட்டு போய்ட்டா நீ வேற கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்வன்னு தான் பா நாங்க அடிக்கடி அபியை கேட்டு உன்கிட்ட வந்தோம்.

சுஜி அம்மா : இப்போ உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு அந்த பொன்னும் அபிய தன்னோட குழந்தை மாதிரி பார்த்திருக்கிறா இதுக்கு மேல எங்களுக்கு என்ன வேணும்.நீங்க கோவில் உள்ளே நுழைந்ததுல இருந்து பார்த்து கிட்டு தான் இருக்கோம் சுஜி இருந்தா எப்படி பார்த்துப்போளோ அப்படி தான் இந்த பொன்னும் அபிய பார்த்துக்கிறா.

சுஜி அப்பா : இனிமேல் நாங்க அபிய கேட்டு வரமாட்டோம் மாப்பிள்ளை நீங்க மூனு பேரும் சந்தோஷமா இருங்க நாங்க வரோம் ( போக போனாங்க ).

ஷாலினி : அப்பா ஒரு நிமிஷம்.

சுஜி அப்பா : என்ன மா.

ஷாலினி : அப்பா எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க அபியை தூக்கிட்டு சூர்யா கைய பிடிச்சு இழுத்து அவங்க காலுல விழுந்து ஆசீர்வாதம் வாங்குனா.

சுஜி அப்பா, அம்மா :நல்லா இரு மா, நல்லா இரு பா, எங்க பேர குழந்தையை நல்லா பார்த்துக்கங்க ( அவங்க போய்ட்டாங்க ).

சூர்யா : கண்ணுல கண்ணீரோட அவங்களை பார்த்துகிட்டு இருந்தான்.

ஷாலினி : (அவன் தோள் மேல கை வச்சா) சீனியர்.

சூர்யா : கண்ணை துடைச்சிட்டு அவளை பார்த்தான்.

ஷாலினி : வாங்க போகலாம்.

சூர்யா : ம்ம்ம்ம்ம்ம்.

மூனு பேரும் வீட்டுக்கு போனாங்க.

அப்பறம் மதியம் சாப்பாடு சமைத்து எல்லாரும் ஒண்ணா உக்கார்ந்து சாப்பிட்டாங்க.

நைட் எல்லாரும் சூர்யா ஊருக்கு கிளம்பினாங்க. ஒரு நினைவின் அறைஞ்சு பண்ணி அதுல சூர்யா அப்பா,அம்மா , ஷாலினி அப்பா, அம்மா கதிரேசன், பார்வதி,சூர்யா, ஷாலினி, அபிமன்யு, வினய் எல்லாரும் போனாங்க.

நைட் முழுக்க டிராவல் காலையில் தான் சூர்யா ஊருக்கு போய் சேர்ந்தாங்க.

வினய் : வாவ் மாமா உங்க வீடு சூப்பரா இருக்கு.

சூர்யா : வாங்க உள்ள போகலாம்.

வேனுக்கு செட்டில் பண்ணிட்டு எல்லாரும் கேட் திறந்து உள்ள போனாங்க. அப்போ ஒரு பெரிய நாய் அவங்களை நோக்கி ஓடி வந்தது.

வினய் : இது வர்ற ஸ்பீடு பாத்தா உடம்புல ஒரு எலும்பு கூட மிஞ்சாது போலயே (சூர்யா பின்னாடி ஒழிஞ்சுகிட்டான்).

அந்த நாய் ஓடி வந்து சூர்யா மேல தாவி அவனை நக்குச்சு.

சூர்யா : ஹாய் டோபி(டூப்பி) நல்லா இருக்கியா( அது முடிய கோதி விட்டு கிட்டே கேட்டான்).

டோபி : அவனுக்கு பதில் சொல்கிற மாதிரி எல்லோரும் லொள் லொள் என்று குறைத்தது.

வினய்: ஹாய் டோபி ( சூர்யா பின்னாடி இருந்து எட்டிப் பார்த்தான் ).

டோபி: அவனைப் பார்த்து குறைச்சுக்கிட்டே கடிக்கிற மாதிரி வந்தது.

வினய்: ஐயோ அம்மா (ஓடினான்).

டோபி: அதுவும் அவனை துரத்தி கொண்டே போச்சு.

வினய்: மாமா காப்பாத்து ( ஓடிக்கிட்டே சொன்னான் ).

எல்லாரும் அவனைப் பார்த்து சிரிச்சாங்க.

வினய்: அடப்பாவிங்களா ஒருத்தன் உயிருக்கு பயந்து ஓடிக்கிட்டே இருக்கான். அவனை காப்பாத்தாமா சிரிச்சுக்கிட்டே நிக்கிறீங்களே .

அபி : டோபி நில்லு (வினய் முன்னாடி வந்து நின்னான்).

டோபி: அப்படியே நின்னுடுச்சு.

வினய்: இந்த வாண்டுக்கு எல்லாம் பயப்படுது ஆனா என்னை பார்த்தால் துரத்திகிட்டு வருது ச்சீ காலக்கொடுமை.

டோபி: அபி மேல தாவுச்சு.

அபி: வெயிட் தாங்காம கீழே விழுந்தான்.

டோபி: அவன் மேல விழுந்து அவன் முகம் எல்லாம் நக்குச்சு.

வினய்:அடேய் அபி எங்கடா இருக்க ஆளையே காணோம்.

அபி : டோபிக்கு கீழ இருக்கேன் தூக்கு மாமா.

வினய்: ஏய் டோபி தள்ளி போ அவன் எனக்கு இருக்கிற ஒரே மருமகன்.

டோபி : எழுந்து பார்த்து வினய்ய பார்த்து ஊர் ஊர்ன்னு சவுண்ட் விட்டது.

வினய்: அபியை தூக்கி கிட்டான்.

சூர்யா : டோபி ( விசில் அடிச்சு கூப்பிட்டான் ).

டோபி : அவன் பக்கத்துல போய் உக்கார்ந்து வால் ஆட்டிக்கிட்டு இருந்தது.

அப்பறம் எல்லாரும் உள்ள போனாங்க. சூர்யா அம்மா முன்னாடியே உள்ள போய் ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வந்தாங்க.

சூர்யா அம்மா : சூர்யா, ஷாலினிய ஒன்னா நிக்க வச்சு ஆரத்தி எடுத்தாங்க.

ஷாலினி : அபியையும் தூக்கிகிட்டா.

சூர்யா அம்மா : ஆரத்தி எடுத்து அவங்கள உள்ள போக சொல்லிட்டு வெளியில் போய் ஆரத்தி கொட்டிட்டு வந்தாங்க.

சூர்யா அப்பா: அவர் தான் அந்த ஊர் தலைவர், அந்த ஊரிலேயே அவங்க வீடுதான் ரொம்ப பெரிய வீடு.

சூர்யா அம்மா: எல்லாரையும் ஒரு ரூமுக்கு போகச் சொல்லி பிரஷ் ஆகிவிட்டு வர சொன்னாங்க.

வினய்: மாமா உங்க வீடு ரொம்ப பெருசா அழகா இருக்கு மாமா.

சூர்யா: லைட்டா ஸ்மைல் பண்றான்.

லட்சுமி: இவ்ளோ பெரிய வீட்ல இருந்துட்டு எப்படி டா அங்க வந்து அந்தச் சின்ன வீட்ல இருக்க முடிஞ்சது உன்னால.

சூர்யா: இதுல என்னமா இருக்கு அந்த வீட்ட விட உங்க மனசு ரொம்ப பெருசாச்சே, யாருன்னே தெரியாத எங்களை உங்க பிள்ளையாகவும் அபிய உங்க பேரனாகவும். நினைச்சி நல்லா பார்த்துகிட்டிங்களே அதுவே பெரிய விஷயம் தான்.

கதிரேசன் :எங்க புள்ளையும் எங்க புள்ளையும் இல்லாத குறைய தீர்க்க வந்தா உங்களை எப்படி பார்க்காம விட்டுடுவோம்.

சூர்யா அம்மா : ரொம்ப நன்றிங்க எங்க பிள்ளைகளை பத்திரமா பார்த்து கிட்டதுக்கு.

லட்சுமி : விடுங்க ஏன் அதை பத்தி பேசிக்கிட்டு.

வினய்: மாமா எனக்கு உங்க வீட்டை சுத்தி காட்டுங்க.

சூர்யா: வா டா போகலாம்.

சூர்யா அம்மா: ஷாலினி நீயும் போ மா.

ஷாலினி: சரிங்க அத்தை.

அவங்க கூட அபியும் போனான். வீட்டை ஃபுல்லா சுத்தி பாத்துட்டு லாஸ்ட்டா மாடிக்கு போனாங்க.

ஷாலினி :(மேல இருந்து கீழ தோட்டத்தை பார்த்தா ) தோட்டம் ரொம்ப அழகா இருக்கு. அது என்ன கோவிலா.

அபி: அம்மா அது சுஜி அம்மாவோட சமாதி.

ஷாலினி அதை ஆச்சரியமா பார்த்தா ஏன்னா அதை யாருமே சமாதி என்று சொல்ல மாட்டாங்க. சுஜி சமாதிய சுற்றி சுவர் எழுப்பி மேல கோபுரம் மாதிரி கட்டி இருந்தாங்க. அதை சுற்றி ரோஜா பூ செடிகள் பூ அழகாக பூத்திருந்தது.

ஷாலினி : அங்க போகலாமா.

நாலு பேரும் கீழே போனாங்க.

ஷாலினி : சுஜி சமாதி முன்னாடி மண்டி போட்டு உட்கர்ந்தா அவளுக்கு சுஜி கூட இருந்த கல்லூரி கால நினைவுகள் கண் முன்னாடி வந்து போச்சு.

சூர்யா : அவனும் கண்ணுல கண்ணீரோட தான் இருந்தான்.

அப்புறம் கொஞ்ச நேரம் அங்கு இருந்து வீட்டுக்கு போனாங்க.


தொடரும்....
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top