Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 46
- Thread Author
- #1
கானல் - 44
கார்த்திக் தன் திட்டத்தை சொன்னதும், பாலாவும் அதை ஆமோதித்தான். பின்னர் தனக்கு நேரமாவதை உணர்ந்து "ஓகேண்ணா. நானும் கிளம்பறேன்." என்ற பாலாவிடம்,
"எங்க ஓடுற? இருந்து நைட் சாப்பிட்டுட்டு தான் போகனும்." என்று அவனை தேக்கினான் கார்த்திக்.
இரவு உணவின் போது "நீ உன்னோட மாமா பொண்ணு மயூரவல்லியையே கட்டிக்கற ஐடியாவா என்ன?" என்ற கார்த்திக்கின் கேள்வியில் பாலா பதில் தெரியாது முழித்தான்.
"என்ன பண்ணறதுனு தெரியலண்ணா!?" ஒரு மாதிரி விட்டேற்றியாக பதிலளித்த பாலாவை, கண்களை சுருக்கி முறைத்தவன்,
"ஏன்டா அவனவன் லவ் பண்ற பொண்ணுக்காக என்னவெல்லாம் பண்றானுக. உன்னால இந்த பிரச்சினையை சமாளிக்க முடியலையா?"எனக் கேட்டான்.
"அதாண்ணா யோசிக்கிறேன். ஆனா ஒரு வழியும் தெரிய மாட்டீங்குதே." என்று ஆயாசமாக சொன்ன பாலாவிடம்,
"சரி விடு. இத்தனை நாள் சரிகட்டி சமாளிச்சுட்டு இருந்த ல, இன்னும் ஒன்னு ரெண்டு மாசம் சமாளி. நானும் லீவுல ஊருக்கு வருவேன்."
"அப்பா கிட்ட பேசி புரிய வைக்க முடியுமா னு பார்ப்போம். இல்லனா அப்பறம் என்ன பண்ணலாம்னு யோசிச்சு வைக்கிறேன்." என்று அவனுக்கு நம்பிக்கை அளிக்க, பாலாவும் சற்று தெளிவானான்.
இரவு உணவை முடித்துவிட்டு மறுநாள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதால் பாலா, தனது அறைக்கு சென்றுவிட விரும்பவும், அவனை அனுப்பி வைத்தான் கார்த்திக்.
தனது தங்கி இருந்த அறைக்கு வந்த பாலாவிற்கு, இன்று நடந்த நிகழ்வுகள் ஏதோ கனவு போல் இருந்தது.
மதுமதியை எண்ணி தனக்குள் சிரித்துக் கொண்டவன், அவள் தன் வாழ்வு முழுமைக்கும் தன்னோடு இருந்தால் வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கும் என்று தோன்றிய அதே நேரம்,
அதற்கு தடையாக இருக்கும் தன் தந்தையின் சத்தியம் அவனது அந்த எண்ணத்தை துணி கொண்டு துடைத்ததும் மனம் சோர்ந்தான்.
மாமன் மகள் மீது தனக்கு நாட்டம் துளி கூட இல்லை என்பதை எப்படி தான் அவருக்கு புரிய வைப்பது?.
விரைவிலேயே இதற்கு ஒரு தீர்வை யோசிக்க வேண்டும் என தீர்மானமாக முடிவெடுத்தவன், சிந்தனை வலையில் சிக்கி அப்படியே உறங்கியும் போனான்.
மறுநாள் கிளம்பி பெங்களூருவிற்கு சென்றவன், தனது பணிகளில் மூழ்கிப் போனான் பாலா.
************
அதன் பின் நாட்கள் தன் போக்கில் நகர, திருமணத்திற்காக எடுத்த விடுப்பு முடிந்து ஈஸ்வரியும் பணிக்கு திரும்பி விட்டாள்.
"என்னமா புது பொண்ணு? அதுக்குள்ள கல்யாண ஜோர் முடிஞ்சதா?" என்று அவளை கிண்டலடித்த சக ஆசிரியைகளிடம் அசட்டுச் சிரிப்பை உதிர்த்து சமாளித்தாள் ஈஸ்வரி.
சில நாட்களுக்கு பின் கண்ட தோழியிடம் வித்யா, அவளது நலனை விசாரித்து விட்டு, ரூபேஷ் ஊருக்கு சென்றதை பற்றியும் கேட்டாள்.
"ஆமா தியா. அவருக்கு எப்படியும் ட்ரான்ஸ்பர் ஆக இன்னும் ஒன் மன்த் ஆகும்..அதனால நான் அங்க வர வேண்டாம்னுட்டார்."
"அதான் சும்மா இருக்குறதுக்கு வேலைக்காவது போறேன் னு சொன்னேன். எல்லாருக்கும் டபுள் ஓகே! அதான் ரீஎன்ட்ரி கொடுத்துட்டேன்." என்று சொல்லிச் சிரித்தாள் ஈஸ்வரி.
ஈஸ்வரியிடம் பேச நினைத்த வித்யா, "எனக்கே தெரியாம என் வாழ்க்கையில நிறைய விசயம் நடந்திருக்கு ஈஷு. நீயும் கல்யாண பிஸி ல இருந்தியா அதான் உங்கிட்ட எதுவும் பேச முடியல." என்ற
வித்யாவின் முகத்தை பார்த்த ஈஸ்வரி ஏதோ தீவிரமான விசயம் என்பதை யூகித்து,"லன்ச்ல பேசுவோம்டா தியா. மதியம் வரை கன்ட்ந்யூ வா க்ளாஸ் இருக்கே." என்றிட, வித்யாவும் சரியென்று உரைத்தாள்.
மதிய உணவு இடைவேளையில் வித்யா ஈஸ்வரியிடம், கார்த்திக் அவளை முன்பிருந்தே விரும்பியதை கூறிட, அதைக் கேட்டு ஈஸ்வரி ஆச்சர்யமானாள்.
"என்னடி சொல்ற?! அப்ப இருந்தே லவ் பண்றாரா? அதான் மனுசன் உன்னை இங்க பார்த்துல இருந்து ஒரு தினுசா பிகேவ் பண்ணினாரா?" என்றாள் அதே ஆச்சர்யத்தோடு.
பவிஷ்யா அவனது அக்காவின் மகள் என்றும், அன்று நடந்த விபத்தையும், அதனால் அவனது தாயிற்கு ஏற்பட்ட நிலையையும் கூறிட, கார்த்திக்கின் நிலையை எண்ணி ஈஸ்வரி வருந்தினாள்.
வித்யா அனைத்தையும் கூறிவிட்டு, "அவர் கிட்ட அம்மாவை பார்க்க போகலாம்னு சொல்லி இருக்கேன் ஈஷு. சரி னு சொல்லி இருக்கார்." என்று சொல்லவும்,
"பாவம் கார்த்திக். லைஃப்ல இத்தனையும் தாங்கிட்டு இந்தளவு வந்ததே பெரிய விசயம் தான்டா தியா." என்ற ஈஸ்வரி பின்னர்,
"நீங்க ரெண்டு பேருமே லைஃப்ல ரொம்பவே கஷ்டப்பட்டுடீங்க. இனிமேலாவது ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க." என மனதார வாழ்த்தினாள்.
வித்யாவும் ஈஸ்வரி சொன்னதை யோசித்துக் கொண்டு இருக்க, வகுப்பிற்க்கான மணியடிக்கவே அவரவர் வகுப்புகளுக்கு சென்றனர்.
தனக்கான ஐந்தாம் வகுப்பிற்கு சென்று, வித்யா பாடங்களை நடத்தி முடித்த பின்னர், வகுப்பை விட்டு வெளியேறும் போது அவளை அழைத்தாள் அனுபிரியா என்ற மாணவி.
"என்னமா!?" என்ற வித்யாவிடம், அருகே இருந்த மாணவனை காட்டி, "இந்த அரவிந்த் என்னை ரொம்ப டார்ச்சர் பண்றான் மிஸ். நானும் எவ்வளவோ எடுத்து சொல்லிட்டேன்."
"ஆனா புரிஞ்சுக்க மாட்டீன்றான். திட்டி கூட பார்த்துட்டேன் ஆனாலும் முட்டாள் மாதிரி உளறிட்டு இருக்கான். நீங்களே இவன் கிட்ட சொல்லுங்க மிஸ்."
மடை திறந்த வெள்ளமென அவள் பேச, ஒன்றும் புரியாமல் விழித்தாள் வித்யா. அனுபிரியா படபடவென பொரிய, அவனோ திருதிருவென முழித்துக் கொண்டு நின்றான்.
"முதல்ல என்ன விசயம்னு சொல்லு அனு. என்ன பிரச்சனை? என்னடா அர்விந்த் என்ன பண்ணுன அவளை?" வித்யா இவளிடம் ஆரம்பித்து, அவனிடம் கேள்வியை முடிக்க, அவன் ஒன்றுமில்லை என்று தலையாட்டினான்.
"இல்ல மிஸ்! இவன் ரொம்ப நாளா என்னை லவ் பண்றேன்னு லூசு மாதிரி பேசிட்டு சுத்துறான். நான் அதெல்லாம் தப்புனு சொன்னா அவன் அம்மா கொடுத்த காசை கோபத்துல கிழிச்சு எறியறான் மிஸ்." என்றாள் அவள்.
அதை கேட்ட வித்யா திகைத்தாள். 'எங்கே செல்கிறது இளைய சமுதாயம். இந்த வயதில் செய்ய கூடிய செயலா இது? வாழ்க்கையின் முக்கியத்துவம் உணராமல், காதல். இதன் பெயர் காதலா?'
'ஏன் உடன் படிக்கும் பெண்ணை நட்பாக எண்ண மனம் வர மாட்டேன் என்கிறது இவர்களுக்கு?' என்று எங்கெங்கோ அவள் எண்ணம் சுழல, "மிஸ்!" என அவளது சிந்தனையை கலைத்தாள் அனுபிரியா.
அர்விந்தின் தம்பி பள்ளியில் நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவன், எதிர்பாராத ஒரு நிகழ்வில் அவன் இறந்து விட,
இவனையாவது படிக்க வைக்க எண்ணி, ஏற்கனவே தோல்வியடைந்த இவனை அவனது பெற்றோர் மீண்டும் பள்ளியில் சேர்த்தனர்.
இவனோ தன் குடும்ப சூழலை உணராமல், இவ்வாறு செய்து கொண்டிருக்கிறானே! என்று மனம் நொந்தவள், அவனை ஆசிரியர்கள் அறைக்கு வருமாறு பணித்தாள்.
மேலும் அவனது செயலை வகுப்பில் அனைவரின் முன்பு சொல்லாமல் தனியாக தைரியமாக சொல்லி, அவனை நல்வழிப்படுத்த சொன்ன அனுபிரியாவின் செயலை பாராட்டி விட்டு சென்றாள்.
ஆசிரியர் அறைக்கு வந்த அர்விந்திடம், அவன் ஏன் அவ்வாறு சொன்னான் என்பதை கேட்டவள், அவன் சொன்ன பதிலில் அவனது மனநிலையை அறிந்து கொண்டாள்.
அவளிடம் இயல்பான நட்புடன் பழகியவனை உடன் இருக்கும் நண்பர்களின் தவறான சித்தரிப்புகளால் இவ்வாறு எண்ணிக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்த வித்யா,
அதை அவனுக்கு உணர்த்தி, அவனது குடும்பம் அவன் மீது கொண்ட நம்பிக்கையையும், அவன் தம்பியின் இழப்பால் வாடும் அவனது பெற்றோருக்கு உற்ற துணையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தாள்.
இந்த வயதில் இதெல்லாம் தேவையில்லாத ஒன்று, என அறிவுறுத்தி,அவளிடம் இயல்பாக பழகினாலே இந்த மாதிரி எண்ணங்கள் தோன்றாது என்று கூறி அனுப்பி வைத்தாள்.
நாட்களும் நகர, அதன் பின்னர் அர்விந்த் அவளிடம் பழகும் விதம் பற்றி அனுவிடம் அவ்வப்போது கேட்ட வித்யாவிற்கு,
'இப்போது அவன் அதுபோல எதுவும் செய்வதில்லை' என்ற அவளது பதிலில், தான் உரைத்ததை சரியாக புரிந்து கொண்டு மனம் மாறிய அவனை அழைத்து பாராட்டவும் செய்தாள்.
முழு ஆண்டு தேர்வுகள் நெருங்குவதால், வகுப்புகள் ஒரு தீவிரத்துடன் சென்று கொண்டிருக்க, ஆசிரியர்களும் மாணவர்களை தேர்வுகளுக்கு தயார் செய்வதில் பிஸியாகி இருந்தனர்.
வித்யாவின் வேலை பளுவினால் வீட்டில் அவளுக்கு உதவியாக அனைத்தையும் கார்த்திக் பார்த்துக் கொண்டான்.
இதற்கிடையே குழந்தையை மழலையர் பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து முடித்தனர்.
முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறையும் தொடங்கி விட, கார்த்திக்கிடம் பேச வந்த வித்யா, "கார்த்திக்!" என்று அழைக்க, குழந்தையுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டு இருந்தவன் என்னவென்று கேட்டு திரும்பினான்.
"இல்ல, அம்மாவை பார்க்க கூட்டிட்டு போறேன் னு சொன்னீங்க. அப்றம் அதைப் பற்றி எதுவுமே சொல்லல? நீங்க மட்டும் தான் போயிட்டு வர்றீங்க." தயக்கத்துடன் கேட்ட வித்யாவிடம்,
"ஓஓஓ, மாமியாரை பார்க்கனும்னு ஞாபகம் இருக்கா மேடம்க்கு!?" என்று அவன் கேலியுடன் கேட்க, அவனை முறைத்தாள் வித்யா.
"அதெல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு. கூட்டிட்டு போறேன் னு சொன்ன உங்களுக்கு தான் நினைவில்லை." என்றவள்,
"நீங்க மட்டும் திடீர் திடீர்னு காணாம போய், பார்த்துட்டு வர்றீங்கனு நினைக்கிறேன்." என அவனை கூர்மையாக பார்த்துக் கொண்டே கூறினாள்.
"நீ எக்ஸாம் பிஸியில இருந்தடா விதுமா. அதான் நானும் உன்னை ஃபோர்ஸ் பண்ணல. இனி லீவு தானே..ட்ரெயின்ல டிக்கெட் புக் பண்ணிட்டு,ரெண்டு நாள்ல கிளம்பலாம் ஓகே." என்றதும், அவள் சரியென திரும்ப,
"ட்ரெஸ் மட்டும் நிறைய பேக் பண்ணிக்கோம்மா. அங்க கொஞ்ச நாள் தங்கிட்டு தான் வருவோம்." என்ற கார்த்திக் குழந்தையிடம்,
"குட்டிமா! நாம பாட்டியை பார்க்க போகலாமா?!" என்று கண்களை விரித்து தலையாட்டி கேட்டவனிடம்,
"ஓஓ..போலாமே. ஐய்யா! தாலி. தாலி..பங்கதம் பாத்தியை பாக்க போதோமே?" என்று குதூகளத்துடன் சின்னவள் குதிக்க, இவன் முழித்தான்.
அவனை கண்ட வித்யாவிற்கு சிரிப்பு வர, அதை அடக்கிக் கொண்டு, "அவ பங்கஜம் மாமியை சொல்றா. தாரிணி அக்காவோட அம்மா." என்று அவனுக்கு புரிய வைத்தாள்.
"அவங்க இல்லடா குட்டிமா. இவங்க வேற பாட்டி. நீங்க இன்னும் இவங்கள பார்த்தது இல்ல." என்று அவன் சொன்னதும்,
"அப்பியா காத்திப்பா! ஓகே. போலாமே. ஆனா அவங்க ஏ என்னை பாக்க வதவே இல்ல?" என்ற குழந்தையின் பேச்சில் மனம் கனக்க, உடனே தன்னை சரி செய்து கொண்டவன்.
"அதான் பாரேன்டா செல்லம்! நாம போய் அவங்க கிட்ட சண்டை போடலாம் 'ஏன் குட்டிமா வை பார்க்க வரலைனு' சரியா?" என்றவனிடம்,
"வேணாம் காத்திப்பா! சண்தை எல்லா போத கூதாதுனு அம்மா சொல்லி இக்காங்க. அவங்கக்கு எதா வேலை இந்து இக்கும். அதான் வதல." என்று தானாக காரணம் கண்டறிந்த பிள்ளையை அள்ளி அணைத்து முத்தமிட்டான் அவன்.
அதன் பின்னர் டிக்கெட் புக் செய்து விட்டு, தம்பதியினர் குழந்தையுடன் கார்த்திக்கின் தாயை காண பயணப்பட்டனர். சில பல திருப்பங்களுடன் கூடிய பயணம் தொடங்கியது இனிதாக.