Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 64
- Thread Author
- #1
கானல் - 62
மூவர் கூட்டணி போட்ட திட்டப்படி அனைத்தும் சரியாகத் தான் சென்று கொண்டிருந்தது.. 'குறுக்கே இந்த கௌசிக் வந்தா!?' என்கிற மாதிரி வந்த ஆதிகேசவனால் சிறிது மாற்றம் ஏற்பட்டு விட்டது..
மணமகள் அலங்காரம் முடித்த பிறகு, தனது தோழி கைப்பேசியில் அழைப்பதாகவும், சிக்னல் கிடைக்காத மாதிரியும் நடித்து வெளியே வந்த மயூரவல்லி,
அவர்கள் திட்டப்படி அந்த மண்டபத்திலேயே ஒரு அறையை கணக்கிட்டு வைத்திருக்க, அவள் அங்கே உள்ளே சென்றதும், கதவை பூட்டிய கார்த்திக், இயல்பாக சென்று வித்யாவுடன் அமர்ந்து கொண்டான்..
சிறிது நேரத்தில் அனைத்து களேபரங்களும் முடிந்து பாலா மதுமதியின் கழுத்தில் தாலி கட்டியதும், அவளை திறந்துவிட சென்றவன், கதவில் பூட்டு இல்லாமல் இருப்பதைக் கண்டு அதிர்ந்தான்..
வேகமாக மணவறை இருந்த இடத்திற்கு அவன் வரவும், அங்கே கழுத்தில் தாலியுடன் யாரோ ஒருவனோடு நின்றிருந்த மயூரவல்லியை கண்டு கார்த்திக்கும் மதுவும் அவன் யாரென புரியாமல் ஒருவரையொருவர் பார்த்தனர்..
ஆதிகேசவன் பேசிய பிறகு, கருணாகரனுக்கு மகளது பிரச்சனை தெரியும் முன் அவனிடம் ஆணவமாக அவர் பேசிய தருணம் நினைவிலாடியது..
மகளது இந்த நிலையிலும் கீழ்ஜாதிக்கார பெண்ணின் மகன் என்று எண்ணியே மகளை அவனுக்கு மணம் முடிப்பது பற்றி யோசிக்காமல் இருந்தார்..
அவர் கையறு நிலையில் வெளிப்படையாக எதுவும் பேச இயலாமல் இருக்க, மகளிடம் 'அந்த தாலியை கழட்டி எறிந்து விட்டு வா!' என்று சொல்ல அவர் மனம் முரண்டினாலும்,
பாலாவிற்கும் மணம் முடிந்து விட்டது, வேறு யாருக்கும் மகளை மணம் முடிக்க இயலாத இந்நிலையில் மகளது கதியை எண்ணி அமைதி காத்தார்..
"அப்றம்.. இந்தா மாமா!.. நீ போட்ட நகைகள்!.. என் பொண்டாட்டிக்கு நான் வாங்கிப் போட்டுக்கறேன்!.." என்று கூறி அவரிடம் ஒரு துணிமுடிப்பைக் கொடுத்தவன்,
"ஸாரி மணமக்களே!.. நீங்க உங்க சடங்குகளை கன்டிநியூ பண்ணுங்க!.. நாங்க கிளம்புறோம்!.." என்று அவளது தோளில் கை போட்டுக் கொண்டு அங்கிருந்து அவன் கிளம்பினான்..
அங்கிருந்து கிளம்பி ஆதிகேசவனின் வீடு வந்து சேரும் வரை, எதுவும பேசாமல் எங்கேயோ வெறித்துக் கொண்டு சிந்தனையில் வந்த மயூரவல்லிக்கு நடந்து முடிந்த நிகழ்வுகள் கண் முன்னே ஓடியது..
அவள் அறைக்குள் சென்றதும் கார்த்திக் வந்து அவளை கவனமாக இருக்கும் படி சொல்லிவிட்டு அறையை பூட்டிச் சென்றான்..
அவன் பூட்டிச் சென்ற சிறிது நேரத்தில் கதவை திறக்கும் சத்தம் கேட்கவும், 'அதற்குள் திருமணம் முடிந்து விட்டதா?!' என்று அவள் யோசிக்க, உள்ளே வந்த தன் மாமாவை கண்டு அதிர்ந்தாள்..
கார்த்திக்கிடம் இருந்து சாவியை நைஸாக எடுத்து வந்த ஆதி கதவை திறக்க, "ஆதி மாமா!!!.. நீங்க எப்படி இங்க?!!.." என்று அதிர்ந்த மயூ குழப்பமாக கேட்டாள்..
"அதெல்லாம் சொல்றதுக்கு இப்ப நேரமில்ல மயிலு!.. உங்கப்பாரு இங்க தான் வந்துட்டு இருக்கார்.. அதான் உன்னை இங்க இருந்து கூட்டிட்டு போக வந்தேன்!.." என்றான் பரபரப்பாக..
"உங்களுக்கு எப்படி!!?!.." என்று 'அவனுக்கு எப்படி இவர்களது திட்டம் தெரியுமென' அவள் குழப்பத்துடன் ஒன்றும் புரியாமல் வினவினாள்..
"எனக்கு எல்லாம் தெரியும் மயிலு!..கார்த்திக் சொல்லி தான் வர்றேன்!..நாம வேற இடத்துக்கு போகனும்!.. கிளம்பு மா!.. இப்ப விளக்கம் சொல்ல நேரமில்ல!.. சீக்கிரம்!.. சீக்கிரம்!.." என்று அவளை அவசரப்படுத்த, அவளும் பரபரப்பானாள்..
அவளது நகைகளை கழட்டச் செய்து, ஆடை மீது பெரிய கவுன் போன்ற உடையை போட்டு மண்டபத்தின் பின்வழியாக வெளியே அழைத்துச் சென்றவன்,
ஓரிடத்தில் வண்டியை நிறுத்தியவன், " நம்ம பேச்சி ஆத்தாளை கும்பிட்டுட்டு போகலாம் மயிலு!.." என்றிட, ஏனென்று தெரியவில்லை எனினும் அவன் சொன்னதற்காக செய்தாள்..
சாமி கும்பிடும் முன், "உனக்கு என்னை பிடிக்குமா மயிலு!?.."என அவன் கேட்க, "என்ன மாமா நீங்க!?..உங்களை தான் எனக்கு சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்குமே!.." என பட்டென்று அவள் பதிலளித்தாள்..
அதில் அவன் மனம் நிம்மதி அடைய, "அப்படினா மாமா சொல்றதை கேட்ப தானே!?.." என்றிட அவளும், "நீங்க என்ன சொன்னாலும் கேட்பேனே மாமா!.. உங்களுக்கே அது தெரியுமே!.." எனக் கூறி ஆமோதித்தாள்..பிறகு,
"இன்னும் கொஞ்ச நேரத்துக்கு நீ எதுவும் பேசக் கூடாது!.." என்று விட்டு அவன் சாமியை வேண்ட, புரியாமல் பார்த்தவளும் கண் மூடி நிற்க, அவளது கழுத்தில் தாலியை கட்டினான் அவன்..
பட்டென்று கண் விழித்த மயூரவல்லி, அதிர்ந்து அவனைப் பார்க்க, அவளது நெற்றிவகிட்டில் குங்குமம் வைத்தவன் அவளை அழைத்துக் கொண்டு மீண்டும் மண்டபத்திற்கு திரும்பினான்..
"இறங்கு மயிலு!!.. வீடு வந்தாச்சு!.." என்று அவன் சொன்னதும், தன் நினைவுகளில் இருந்து வெளி வந்தவள், சுற்றும் முற்றும் பார்க்க, வாசலில் ஆலம் சுற்ற ஒரு வயதான பாட்டி தயாராக நின்றிருந்தார்..
ஆலம் சுற்றி வீட்டினுள் அவளை அழைத்துச் சென்றவன், நேராக தனது பெற்றோரின் புகைப்படங்களுக்கு முன் அவளோடு சேர்ந்து நின்று வணங்கினான்..
பெற்றோரை வணங்கி விட்டு திரும்பியவன், "இப்போ பேசு மயிலு!.." என்றிட, "ஏன் மாமா இப்படி பண்ணீங்க?!.." என கண் கலங்க அவள் கேட்டாள்..
"நான் உன்னை எவ்ளோ விரும்பறேன் னு உனக்கு தெரியுமா மயிலு?!.. அதான் உன்னை கட்டிக்க கேட்டேன்!.. என்னோட ஆசை என் அம்மா உசுரையே எடுக்கும்னு தெரியாம போயிடுச்சு!.." என்று தன் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டான்..
"எனக்கு அப்பா பேசுனது எதுவும் தெரியாது மாமா!.. ஆனா.. இப்ப அப்பாவை பழி வாங்குறேன் னு உங்க வாழ்க்கையை வீணாக்கிட்டீங்களே!.." என்று அவள் கூறவும், அவனுக்கு என்னவென்று புரியவில்லை..
அவனது பார்வையை உணர்ந்த மயூரவல்லி, தனது குறைபாட்டைக் கூறவும், "எனக்கு அது எப்பவோ தெரியும் டா மயிலு!.." என்ற அவனது பதிலில் அவள் திகைத்தாள்..
"என்ன மாமா சொல்றீங்க?!.. உங்களுக்கு எப்படி தெரியும்?!.. தெரிஞ்சும் அப்றம் ஏன் இப்படி பண்ணுனீங்க?!.." என்று மயூரவல்லி பரிதவிப்போடு கேட்க,
"ரெண்டு மூணு வருசம் முன்னாடி ரொம்ப வயித்துவலினு நீ துடிச்சப்ப ஆஸ்பத்திரி சேர்த்தாங்க ல அப்பவே டாக்டர் பேசுனதை கேட்டுட்டேன்!.." என்று அவன் கூற, அவள் திகைத்து நின்றாள்..
"அப்ப கூட உங்கொப்பனுக்கு உன்னை எனக்கு கொடுக்கனும் னு தோணலை பாரேன்!.. அவ்ளோஓஓ ஜாதி பைத்தியம் பிடிச்சு இருக்கு!.. ம்ஹூம்!!.." என வெறுப்புடன் சொன்னவன்,
"இதைப் போய் ஒரு பெரிய்ய விசயம் னு பினாத்திட்டு இருக்க நீ?!.. நான் உங்கூட சந்தோஷமா வாழ தான் ஆசைப்பட்டேன்!.. குழந்தையை பெத்துக்கனும் னு இல்ல!.."
"குழந்தை இல்லாதவங்க எல்லாம் என்ன செத்தா போயிட்டாங்க!.. அப்படி உனக்கு குழந்தை தான் முக்கியம் னா அதுக்கு ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாமே!.." என்று
அவன் அந்த விசயத்தை சுலபமாக எடுத்துக் கொண்டு பேசவும், 'உன்னை உனக்காகவே விரும்பி வர்றவங்க அப்படி நினைக்க மாட்டாங்க!' என அன்று ஈஸ்வரி சொன்னது தான் மயூரவல்லிக்கு நினைவிலாடியது..
"அதுவும் வேண்டாம் னா இப்ப தான் ஏதோ வாடகை தாய் அது இது ன்னு என்னமோ சொல்றாங்களே.. அதை முயற்சி பண்ணுவோம்!.. என்னோட வாழ்க்கை முழுக்க உன்னோட சந்தோஷமா வாழனும்!.. அவ்ளோ தான்!.."
"யாரோ குறை சொல்லுவாங்க ங்கறதுக்காக உனக்கான வாழ்க்கையை ஏன் வேண்டாம்ங்கற மயிலு!!.." என்று அவளது முக உணர்வை கவனியாமல் அவன் பாட்டிற்கு பேசிக் கொண்டிருந்தான்..
அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவனை நெருங்கியவள், அவனை அணைத்து,"உங்களுக்கு எம்மேல அவ்ளோ அன்பா மாமா?!.." என்று பிரமிப்புடன் அவனை பார்த்துக் கேட்டாள்..
அவளது செயலில் மனம் நிறைந்தவன், ஆமாம் என்று கண்களில் காதல் மின்ன தலையசைக்க, அவளது கரங்களின் இறுக்கம் கூடியது..
அவனது கரங்களும் உயர்ந்து அவளை ஆரத் தழுவிட, அது இனி எந்த ஒரு சூழ்நிலையிலும் உன்னை இழக்க மாட்டேன் என்ற உறுதியை உணர்த்தியது..
***************
ஆதியின் செயலில் அதிருப்தி இருந்தாலும் மகளது திருமணம் முடிந்ததில் அவரது ஜாதி கர்வம் கொந்தளித்தாலும், அவரது தந்தை மனம் நிம்மதியானது என்னவோ உண்மை..
அதனால் அவர் தங்கை வீட்டினரிடம் எதுவும் பேச இயலாமல் நிற்க, சிந்தாமணிக்கு மகளது மணம் மகிழ்ச்சி அளிக்க, அங்கிருந்து தன் மனைவியுடன் அவர் வெளியேறினார்..
பாலமித்ரன் மற்றும் மதுமதி தம்பதியின் திருமணம் மற்றவரை பொறுத்தவரை திடுமென நடந்தாலும், அனைத்து சடங்குகளும் முடித்து அவனது வீட்டிற்கு வந்தார்கள்..
வீட்டிற்கு வந்த அவர்களிடம், "சரிடா மில்க்!.. நாங்க கிளம்புறோம்!.." என்றனர் கார்த்திக்கும் ரூபேஷும்.. "என்ன அண்ணா அதுக்குள்ள கிளம்புறீங்க?!.. இன்னும் ரெண்டு நாள் இருக்கலாம் ல.."என்று பாலா கேட்டான்..
"இல்லடா பாலா அம்மு தனியா இருப்பா.. அதான் சீக்கிரமே கிளம்பிடலாம் னு இருந்தேன்.. அதுக்குள்ள எல்லாம் மாறுனதால கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.." என்று ரூபேஷ் பதிலளிக்க..
"அவங்களையும் கூட்டிட்டு வந்து இருக்கலாமே டா!.."என்றதற்கு, "இல்ல..... அது வந்து.."என சிறு புன்னகையுடன் இழுத்தவன், "அம்மு கன்சிவ்ஆ இருக்கா டா!.. ட்ராவல் பண்ண கூடாது!.." என்றான்..
அதைக் கேட்ட கார்த்திக், " ஹேய்!!.. அமுல் பேபிக்கு ஒரு பேபி வரப் போகுதா!!!..சொல்லவே இல்ல டா.. சூப்பர் டா அமுல்!.. கன்க்ராட்ஸ்!.." என்று ஆச்சர்யமாகி ஆனந்தமாய் வாழ்த்திட, பாலாவும் மதுவும் கூட வாழ்த்தினர்..
"இல்ல சீனியர்.. நேத்து தான் கன்பார்ம் ஆச்சு.. அதான் ட்ராவல் வேண்டாம் னு டாக்டர் சொன்னதால அம்மு வர்றதை மட்டும் கேன்சல் பண்ணிட்டோம்!.."என்று மகிழ்வுடன் சொன்னான் ரூபேஷ்..
" அதுசரி டா.. எங்க கிட்ட தான் சொல்லல.. ஆனா அதெப்படி உயிர் டோலிக்கு கூட சொல்லாம இருக்கீங்க!.." என்று கார்த்திக் கேட்டதற்கு,
"அதெல்லாம் எனக்குத் தெரியும்.. ஈஷூ நேத்தே சொல்லிட்டா.. கொஞ்ச நாள் வெளியே சொல்ல வேண்டாம் னு சொன்னாங்க.. அதுக்குள்ள இந்த அண்ணா உளறியாச்சு!.." என்று கூறி சிரித்தாள் வித்யா..
"சரி நீங்களாவது இருங்களேன் அண்ணா!.." என்று பாலா கார்த்திக்கிடம் கேட்டதற்கு,
"அதில்ல டா.. மதுவுக்கு இப்படி திடீர்னு கல்யாணம் நடக்கும்னு மேடம் க்கு தெரியாது ல.. இந்த லீவுல தான் ஸ்கூல் பசங்களுக்கு ட்ரிப் அரேன்ஜ் பண்ணி இருக்காங்க!.. வித்யா கண்டிப்பா போகனும்.."
"அம்மாவும் குட்டிமா வும் பார்த்துக்க வேணும் ல.. அதனால தான்.. அதான் அங்கேயும் ஒரு ரிசப்ஷன் வச்சுக்கலாம் னு மேடம் முடிவு பண்ணி இருக்காங்களே.. நீங்களே ரெண்டு நாள்ல அங்க வந்துடுவீங்க ல அப்றம் என்ன!!?.." என்றவன்,
பாலாவிற்கு மட்டும் கேட்கும்படி, "என்னடா மில்க்.. மது கிட்ட மாவுகட்டு போட்ற அளவுக்கு அடி விழும் னு துணைக்கு ஆள் சேர்க்குறியா?!.." என்று ரகசியமாக கேட்டுச் சிரித்தான் கார்த்திக்..
"நாங்க கிளம்புறோம் மது!.. நீ எல்லா பரபரப்பும் முடிஞ்ச பிறகு ஸ்கூலுக்கு வா!..வர்றோம் மேம் ..நீங்க ட்ரிப் பற்றி கவலைப்படாதீங்க!.. டீச்சர்ஸ் நாங்க பார்த்துக்கறோம்!.." என்று வித்யா மதுவிடமும் அவளது அன்னையிடமும் கூற, அவர்களும் விடைப்பெற்றனர்.
கார்த்திக்கின் கேள்வியில் மிரண்ட பாலா, மதுவை திரும்பிப் பார்க்க, அவளோ யாரும் அறியாதவாறு உதட்டில் புன்னகையுடன் கண்களில் கனலுடன் அவனை முறைத்திருந்தாள்.