Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 46
- Thread Author
- #1
கானல் - 7
ஒரு சிறு பெண்ணிற்கு அவசர முதலுதவி தேவை என்றும், சிகிச்சை அளிக்குமாறும் சொன்னதை வைத்து, அனைத்தையும் தயாராக வைத்திருந்த தீபிகாவிற்கு,
ஆடைகள் கிழிப்பட்ட நிலையில், கையிலேந்தி வரப்பட்ட சிறு பெண்ணை கண்டு அதிர்ச்சி ஆனது..
மகளுடன் வேகமாக வந்த சீனிவாசன், "ப்ளீஸ் மா!.. என் பொண்ணை காப்பாத்துங்க!!.." என்று மன்றாடவும், என்னவென்று விளங்காமல் விழித்த அவள், திரும்பி அவனை பார்த்தாள்..
"அக்கா ப்ளீஸ்!.. இப்போ விளக்க நேரமில்லை.. அந்த பொண்ணை அப்யூஸ் பண்ணி இருக்காங்க.. சீக்கிரம் ட்ரீட்மெண்ட் பாருங்க!.." என்றான் அவன்..
அவளது நிலையை கண்டு தீபிகாவின் மனமும் கலங்க, உடனே உள்ளே அவளை அனுமதித்து அவளை சுத்தப்படுத்தி சிகிச்சை தொடங்கினாள்..
அவளது மயக்கம் தெளிவிக்க மருந்தையும், உடலில் ஏற்பட்ட காயங்களை சுத்தப்படுத்தி மருந்திட்டும் வெளியில் வந்த தீபிகா,
அவளது தந்தையிடம் சென்று, "சார் இப்போதைக்கு ஃபர்ஸ்ட் எய்ட் மட்டும் தான் பண்ணி இருக்கேன்.."
"ஆனா போலீஸ் ல இன்ஃபர்ம் பண்ணினா தான் அவங்க ஜி.ஹெச் கூட்டிட்டு போய் வேற டாக்டர் யூட்ரஸ் க்ளீன் பண்ணுவாங்க அப்றம் கேஸ் ஃபைல் பண்ணி அந்த கல்ப்ரிட்ஸை பிடிக்க முடியும்!.." என்று எடுத்துரைக்க..
"பெருமாளே!!!.." என்று சத்தமிட்டு அழுத அவர், "போலீஸ் எல்லாம் வேணாம் மா!.. நீங்களே அதை பண்ணிடுங்கோ!.. ப்ளீஸ்!.." என்று அவளிடம் கெஞ்ச..
"அப்படி எல்லாம் நானா பண்ண முடியாது சார்!.. போலீஸ் க்கு சொல்லனும் இல்லனா அப்றம் அது பிரச்சனை ஆகிடும்.." தயக்கத்துடன் அவள் பதிலளித்தாள்..
"வேணாம் மா!.. போலீஸ் வேணாம்..அவங்க கிட்ட விசயம் போன மட்டும் என்ன ஆகப் போகுது.. என் பொண்ணை காட்சிப்பொருளா மீடியா ல காட்டி அவளை உயிரோட கொன்னுடுவாங்க.." என்று மறுத்துவிட்டு,
"அந்த துஷ்டர்களை பிடிக்கிறதுக்குள்ள இவளண்ட கேள்வியா கேட்டு அதையே நினைச்சு மறுக வைப்பாங்க!.. அப்படியே பிடிச்சாலும் அவனுகளுக்கு என்ன பெருசா தண்டனை இருக்கப் போகுது.."
"ஆனா தப்பே செய்யாத என் பொண்ணு ஊர் வாய்ல விழுந்து காலம் பூரா தன்னை எண்ணி கழிவிரக்கத்தோட வாழனும்!.. வேணாம் மா!.."
"அதுக்கு நீங்களே அவளை சுத்தப்படுத்திடுங்கோ!.. ப்ளீஸ்!.." என்று அவளிடம் கை கூப்பி வேண்டிட,"என்ன சார் இது!!!.." பதறிய தீபிகா,அவனை பார்க்க.. அவனும் எதுவும் சொல்லாமல் வெளியேறி விட..
"புரியாம பேசாதீங்க சார்!.. நான் இதை முழுசா பண்ண முடியாது.. கைனகாலஜிஸ்ட் தான் ப்ராப்பரா செய்வாங்க.. அதுவுமில்லாம இந்த விசயம் வெளிய தெரிஞ்சா என் கெரியரே முடிஞ்சுடும்!.."
"போலீஸ் ல இன்ஃபர்ம் பண்ணுங்க.. அவங்க லீகலா எல்லாம் செய்வாங்க!.." என்று அவள் இறுதியாய் உரைக்க, அவர் அவளது கால்களில் விழ தயாராகி,
"வேணாம் மா!.. ப்ளீஸ்!.. இதை நான் யார்கிட்டவும் சொல்ல மாட்டேன்.. ப்ளீஸ்!.. நீங்களே அவளை சுத்தப்படுத்தி விடுங்கோ!.. ப்ளீஸ்!.." என்று மன்றாடினார்..
வேறு வழியின்றி, அவளும் சம்மதித்து, அதனை செய்வதற்காக அறையினுள் சென்றுவிட, இது அனைத்தையும் இரு விழிகள் கண்டு,
அவளுக்காக கண்ணீரோடும், அவளது இந்த நிலைக்கு காரணமான கயவர்கள் மீது அதீத கோபமும் கொண்டு இருந்தது..
மகளது நிலையை எண்ணி கலங்கி நின்றிருந்த சீனிவாசனின் கைப்பேசிக்கு அலமேலுவிடம் இருந்து அழைப்பு வர, என்ன சொல்வது என தெரியாமல் பதறினார் அவர்..
பின்பு தன்னை சற்று நிலைப்படுத்திக் கொண்டு அதை ஏற்க, "என்ன ணா ஆச்சு?!.. எங்க இருக்கேள்?!.. பொண்ணை பாத்துட்டேளா?!.. இல்லையா!?.. எப்ப வரேள்?.." என்று கேள்விகளை அடுக்கி,
பரபரப்பாக கேட்ட அலமேலுவிற்கு பதில் அளிக்க முடியாமல் அழுகை பொங்கிக் கொண்டு வர, அதை கட்டுப்படுத்திக் கொண்டு பதில் அளிக்க அவர் தயார் ஆவதற்குள் மூன்று முறை அழைத்து விட்டார்..
"ஒன்னும் இல்லடி அலமு!.. பொண்ணுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல.. அதான் டாக்டர் கிட்ட காட்டிண்டு அப்பறமா ஆத்துக்கு கூட்டிண்டு வரேன்!.." என்று ஒருவாறு உரைக்க..
"என்னது!!.. என்ன ஆச்சு அவளுக்கு?!.. விளக்கமா சொல்லுங்கோ ணா!!.. ஏன் இப்படி பேசுறேள்!?.. உங்க குரல் ஏன் ஒரு மாதிரி இருக்கு?!.. என்ன நடந்துச்சு?!.." என்று பதட்டமாய் பேசிய அலமேலுவிடம் தாங்கள் இருக்கும் இடத்தை கூறி,
"நம்ம ஆட்டோ டிரைவர் குமார் இருக்கான் ல அவன் அண்ட சொல்லி ஆட்டோ எடுத்துண்டு நீ வரியா?!.. பாப்பாவ வண்டில கூட்டிண்டு வர முடியாது!.." என்று கலங்கும் குரலில் அவர் கூற..
"என்ன ஆச்சு ணா?!.. அவளுக்கு ரொம்ப முடியலையா?.. என்ன பண்ணுது ணா?!.." மனம் பதற அலமேலு கேட்க,
"நீ ஆட்டோ எடுத்துண்டு வாடி!!.." என்று மட்டும் கூறி, அழைப்பை துண்டித்தார் சீனிவாசன்..
அவர் அழைப்பை துண்டிக்கவும் டாக்டர் வெளியே வரவும் சரியாக இருந்தது.. அறையில் இருந்து வெளியே வந்த தீபிகா,
"என்னால முடிஞ்ச அளவுக்கு நான் செய்திருக்கேன் சார்!.. ஆனால் நீங்க எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் ஒரு கைனகாலஜிஸ்ட் பார்க்கிறது தான் நல்லது!.." என்று விட்டு கிளம்பிட
சற்று நேரத்தில் ஆட்டோவுடன் வந்த அலமேலு அந்த கிளினிக்கில் வேகமாக உள்ளே ஓடி வந்து, "என்ன ஆச்சு ணா?!.. எங்க இருக்கா என் பொண்ணு!??.." என்று பதறியபடி கேட்டார்..
அலமேலுவிடம் எதுவும் விவரமாக கூறாமல், சற்று மயக்கம் தெளிந்து இருந்த வித்யாவை கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு ஆட்டோவில் ஏற்றி அமர வைத்துவிட்டு,
தனக்கு உதவி செய்த அவனிடம் கை கூப்பி, கண்ணீர் மல்க நன்றி சொல்லி விட்டு அங்கிருந்து மூவரும் கிளம்பினார்..
வரும் வழியில் அவரது வண்டியை எடுத்துக்கொண்டு அவர் வர, தாயும் மகளும் ஆட்டோவில் வீட்டை அடைந்தனர்..மயக்கத்தில் இருக்கும் பெண்ணை கண்டு மனம் முழுவதும் பீதி அடைந்தது அலமேலுவிற்கு..
ஆட்டோவில் வந்திறங்கிய இருவரையும் கண்ட அக்கம் பக்கத்தினர் என்னவென்று விசாரிக்க..
'மகளுக்கு அந்த ஊர் சீதோஷணம் ஏற்றுக்கொள்ளாமல் உடல்நலம் சரியில்லை' எனக் கூறிவிட்டு வீட்டில் நுழைந்தனர்..
வீட்டுக்குள் வந்து அவளது அறையில் அவளை படுக்க வைத்தபின் அலமேலு சீனிவாசனிடம் விசாரிக்க, "என்னதான் நடந்தது!!?.. விளக்கமாக சொல்லுங்கோ ணா!.. மனசெல்லாம் பதறுது!!!.." என்று பீதியுடன் கேட்க..
சீனிவாசன் பெரும் அழுகையுடன் நடந்ததை விவரிக்க, அதை கேட்டு அலமேலு தலையில் இடி விழுந்தது போலாக, மொத்தமாய் இடிந்து அமர்ந்தார்..
"நான் அப்பவே தலைப்பாடா அடிச்சுண்டேனே!. கேட்டேளா!!.. பகவானே!!.. ஏன் இப்படி எங்களை சோதிக்கிறாய்!.. நோக்கு கண்ணில்லையா?!.."
"பூ மாதிரி இருந்த பொண்ணை இப்படி கிழிஞ்ச நாரா கூட்டிண்டு வந்து இருக்கேளே!!.. நீங்க ஒழுங்கா அவா வந்தவுடனே கூப்பிட போயிருக்கலாமே!!.." என்று சீனிவாசனை குற்றம் சாட்டிய அலமேலு..
"என் பொண்ணு என்ன பாடுபட்டாளோ?!.. எப்படி கதறி இருப்பா!!?.. சின்ன பொண்ணு ணா அவ.. அவளை இப்படி பண்ண அந்த க்ராதகாளுக்கு எப்படி தான் மனசு வந்ததோ?!!.." என்று, அதன் பின்னான அலமேலுவின் ஓலங்கள் விடியும் வரை தொடர்ந்தது..
மெலிதாக முணங்கிக் கொண்டே விடியலில் சுய நினைவிற்கு வந்த வித்யாவிற்கு தான் எங்கு இருக்கிறோம் என்றே முதலில் விளங்கவில்லை..
மகளது முணங்கலில் அப்போது தான் கண்ணயர்ந்த அலமேலு, வேகமாக அவளை நெருங்கி வர, 'அம்மா' என்று வலி நிறைந்த குரலில், கண்ணீர் மல்க அழைத்த மகளை கண்டு இதயத்தை கசக்கி பிழிந்தது போன்று வலித்தது..
"என்ன டி பொன்னே!.. அம்மா இங்க தான் இருக்கேன்!.. சொல்லு டா அம்மு!.." என்று பரிவுடன் கேட்கவும்,
"அம்மா!.. எனக்கு அங்க ரொம்ப வலிக்குது ம்மா!.. ஏன் மா அவா எப்படி பண்ணுனா?!!.. எனக்கு வலிக்குது ம்மா!.." என்ற மகளது வலி நிறைந்த அழுகுரலில் அலமேலு சத்தமாக அழுதிட..
அதன் சத்தத்தில்," என்னாச்சு அலமு?!!.." என்று பதறி உள்ளே நுழைந்த சீனிவாசன், "செல்லம்மா!.. கண் விழிச்சுட்டியா டா அம்மு!?!.." எனக் கேட்டுக் கொண்டே அவளது கன்னத்தை வருட வர..
கால்களை குறுக்கிக் கொண்டு வேகமாக சுருண்டு, கட்டிலின் உள்நோக்கி நகர்ந்த மகளை அதிர்வுடன் பார்த்தார் தந்தை..

மகளது பேச்சில் மனம் விட்டு சிரித்த ரூபிணியின் சிரிப்பு சத்தத்தில் ஆதுரத்துடன் கண் கலங்க அந்த பக்கம் இருந்த அவளது தமக்கை புன்னகைத்தாள்.. பின்பு..
"உன் மகள பேசவிட்டு, என்ன அசிங்கப்படுத்தி, நீ சிரிக்கிறியா!!??.." என்று போலி கோபம் காட்டிய அவளிடம்,.
"நான் என்ன கா பண்ணினேன்?!.. கேட்டது நீ!.. பதில் சொன்னது அவ!.. இதுல என்னோட தப்பு என்ன இருக்கு?!!.." என்று அப்பாவியாய் சிரிப்புடனே வினவினாள் ரூபிணி..
"அது சரி.. ரெண்டு பேரும் கைல மட்டும் சிக்கினீங்க.. அவ்வளவுதான்!.." என்று அவளை மிரட்டி கொண்டு இருக்க,
"பெய்ம்மா!.. அம்மாவை தித்தாதீங்க!!.."என்று கண்களை உருட்டி எச்சரித்தது சின்ன மொட்டு..
"என்ன டி ஆழாக்கு!?.. நீ பெரிய ரௌடியோ!.. உங்கம்மாவை திட்டுனா என்ன டி பண்ணுவ எலிக்குட்டி!!?.." மகளிடம் வம்பிழுத்தாள் பெரியன்னை..
சிறிது யோசித்து பின்னர், " நா உங்க கித்த பேச மாத்தே!.." என்று மிரட்டியது குட்டி..
"அச்சச்சோ சின்ன குட்டி பேச மாட்டீங்களா?!.. அப்போ உனக்காக ஐஸ்கிரீம் வாங்கி தரலாம் னு நினைச்சேன்!.. சரி விடு அதை நானே சாப்பிட்டுக்கிறேன்!.." என்று சலிப்புடன் அவள் கூறவும்..
"ஐ!!!.. ஐத்தீம்!!.." என ஆசையாய் குழந்தை கண்ணை விரித்து கூறினாலும் உடனே, "நீங்க தா அங்க இருக்கீங்கே!.. அப்தம் எப்பி எக்கு தர முய்யும்??!.." என்று லாஜிக் கேள்வி கேட்டாள் சின்னவள்..
"நீ உங்கம்மாவை கூட்டிட்டு இங்க வா.. நாம போய் வாங்கி சாப்பிடலாம்!.. ஓகேயா!!.." என்றிட சின்ன வண்டும் சம்மதிக்க, இருவரும் உடன்படிக்கை செய்தனர்..
" நீ எப்போ ஊருக்கு வர்ற டா?!.." என்று ரூபிணியிடம், சகோதரி கேட்க,
"இங்க வந்தே ரெண்டு மூணு மாசம் தானே கா ஆகுது!.. ஸ்கூல் ல க்வார்டெலி லீவு வரட்டும், அப்போ வர பார்க்கிறேன்!.." என பதிலளித்தாள் அவள்..
அரைகுறை மனதோடு சகோதரியும் அதை ஏற்றுக்கொள்ள, அதன்பின் சற்று உரையாடி விட்டு, அன்றைய பொழுது இருவருக்கும் இனிதே கழிந்தது..
மறுநாள் பள்ளியில் அந்த பி.டி வாத்தியை கண்டு, விசாரணையை போட வேண்டும் என்றெண்ணி வந்த அமுதாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது..
மாணவர்களுடன் விளையாட்டுப் போட்டிகளுக்காக கார்த்திக் வெளியே சென்று விட, அவனிடம் பேச இயலாது போனது..
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்துக் கொண்டிருக்க, மாணவர்களின் காலாண்டு தேர்வுக்கான ஆயத்தங்களில் இருந்ததால், அதன்பின் அமுதாவும் அவனை தேடவில்லை.
கார்த்திக்கும் அந்நாளுக்கு பிறகு ரூபிணியிடம் எதுவும் கேள்விகள் கேட்டு குடையாததால் அவளும் சற்று ஆசுவாசமாக உணர்ந்தாள்.