• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jun 27, 2025
Messages
21
கண்டேன் காதலை விழிகள் நிறைந்தே! - 10

நதியாவைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டினர் வந்தனர். அங்கே அவர்களிடம் கலைவாணி வருங்கால மருமகளுக்கு எத்தனை சவரன் போடுவீர்கள் என்று பேரம் பேச ஆரம்பித்தார்.

அதற்கு அங்கே வந்திருந்த பெண்மணி என்னம்மா பொண்ணு பாக்க வந்தது நாங்க நீங்க உங்க பொண்ணுக்கு எவ்வளவு பவுன் போடுவீங்கன்னு நாங்க கேட்கணும் .ஆனா, அதுக்கு நேர்மாறா உங்க பையனுக்கு எங்க பொண்ணு கட்டி கொடுக்கறதுக்கு நாங்க எவ்வளவு போடுறோம்னு நீங்க கேக்குறீங்க .

அதோட மட்டும் நிறுத்து னீங்களா உங்க பையனுக்கு பிசினஸ் பண்ணி கொடுக்க நாங்க பணம் கொடுக்கணும்னு சொல்றீங்க.

அதை கூட ஒரு வகையில் ஏத்திட்டாலோ? எங்க பையன் உங்க பொண்ணு குடுக்குறீங்க அதே அளவு சீரு நாங்க எதிர்பார்க்கலாம் தானே!! ஆனால் அதுக்கு மட்டும் வெரும் 20 பவுன் என்று சொல்றீங்க சரி அதே போதும் கூட மனசுல ஏத்துட்டாளு மேற்கொண்டு எனக்கு பொண்ணுக்கு கொடுக்கிற சொத்துல உங்க பிள்ளைக்கு சீர் செய்றேன்னு சொல்றியேமா?

நீ உனக்கு ஏத்த இடத்தை பார்த்துக்க வேண்டியது தானே என் வசதியான பையன் வேணும் வசதியான பொண்ணு வேணும் கல்யாணத்துக்கு முன்னாலேயே பையனுக்கு பிசினஸ் பண்ணி கொடுக்கணும் கார் வாங்கி கொடுக்கணும்னு சொல்றாய்.

இப்ப எல்லாம் வரதட்சணை கேட்டாலே கேஸ் ஆகுது தெரியுமா? நீ இப்பவே இந்த போடு போடுறவன் எங்க பொண்ணு கொஞ்சம் கருப்பா இருக்குது. ஆனா பார்க்க மாப்பிள்ளை பார்க்க வந்தால் மாப்பிள்ளை வீட்டில் இல்லை நீ என்னவோ பொண்ணா ரொம்ப புடிச்சி போச்சுன்னு பையன் சொல்லிட்டான் தாலி கட்ட நேரத்துக்கு வந்துக்கிறேன் சொன்னான்னு சொல்ற ஒருவேளை வராமல் விட்டான்னா?

உன்னை நம்பி எல்லாம் ஏற்படும் செஞ்சு என்ன பண்றது சரி இப்பவே உன் பையனுக்கு போன் பண்ணி குடு நாங்க உன் பையன் வாயாலேயே கேட்டுக்குறோம். அவனுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்குதான் அது தெரியாம நீ சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிட்டு போறதுக்கு நாங்க ஒன்னும் முட்டாள் இல்லை.

என்னங்க சம்பந்தி அம்மா இப்படி பேசுறீங்க என்னை நம்பாமல்...என்று கலைவாணி சொல்லவும்..

யாரம்மா இந்த காலத்தில் நம்புறது ஒன்னும் இல்லாத பையனுக்கு 300 பவுனமும் வால்வோ காரும் வாங்கி கொடுத்து ரெண்டரை கோடி கொடுத்து கல்யாணம் பண்ணி வச்சவங்க நிலைமை அந்த பொண்ண கட்டிட்டு போய் அத்தனை கொடுமை பண்ணுனாங்க அது தாங்க மாட்டாம அந்தப் புள்ள பெத்தவங்க வீட்டுக்கு வந்தா சொல்லி பழிச்சொல்லு வரும்னு கோவிலுக்கு போறேன்னு சொல்லி குரலை வாட்ஸ் அப்ல பதிவு பண்ணி போட்டு தற்கொலை பண்ணி செத்துப் போச்சு ..

அது தான் இப்போது செய்தியில் ஓடிட்டு இருக்கிறது. பெத்தவங்களுக்குத் தான் பொண்ணு போச்சு..

அதனால பவுனும் வரதட்சனை கேட்கிறவங்கள உங்களுக்கு பொன்னே கொடுக்க கூடாதுன்னு நாங்க முடிவு எடுத்துட்டோம் நீ கல்யாணத்துக்கு முன்னாலேயே இந்த போடு போடுற கல்யாணத்துக்கு பின்னால என்ன ? என் புள்ளைய இங்க வாழ விடுவியா? நீ சோறு கூட போட மாட்டாயோ?

என்னவோ எதுக்கு உன்னை பத்தி பக்கத்துல எல்லாம் விசாரிக்காமல் உங்க வீட்டுக்கு வந்துட்டோம் வந்தது வந்தோம் புள்ளைய வேணா கட்டிக்கிறோம்.

ஆனால் உன் பையனுக்கு பொண்ணு குடுக்கறதுக்கு நாங்க விருப்ப படல ஆனாலும் உன் பையன இப்ப போன் பண்ணி எங்க முன்னால பேசு பார்க்கலாம்.

நீ அந்த பையன் விருப்பப்படுற நானு முதல் தெரிஞ்சுக்கேன் சரி நீ போன் பண்ணு.

கலைவாணிக்கு இப்போது அள்ளு விட்டது எப்படி அவ வேற கோவிச்சுட்டு போயிட்ட இவங்க வேற போன் பண்ண சொல்றாங்க நான் போன் பண்ணா அவனை எடுக்க மாட்டான்.

எங்க கை விட்டு இந்த சம்பந்தம் போயிருமோ? நம்ம புள்ள பையன் மூலியமா நாமளும் பங்களா கார் என்று ஆசைப்பட்டோமே .இப்ப எல்லாம் சேர்ந்து ஆப்பு வந்திரும் போல இருக்கு..என்ன பண்ணுவது என்று திருட்டு முழி முழித்துக் கொண்டு இருந்தார் .

என்னம்மா இப்படி பேய் அறைந்த மாதிரி நிக்கிற நான் என்னவோ உன்னோட எதிரி கிட்ட பேச சொன்ன மாதிரி நினைக்கிற நீ உன் பையன் கிட்ட போன் பண்ணி பேசுவதற்கு இந்த தயங்குதையும் நான் எப்படியும் உன்னை நம்பி கல்யாணத்த எடுத்து செய்யறது எல்லாம் காலங்கெட்டு கெடக்குது எது வந்தாலும் கல்யாணத்துக்கு முன்னாலேயே உங்க எல்லா பத்தி தீவிரமா விசாரிக்காம வேற வந்துட்டோம் ஏதோ பொண்ணு நல்லா அழகா இருக்குது தேவதையாட்ட நம்ம இருந்தாலுமே வசதி இல்லாட்டியும் பரவாயில்லை என்று வந்தோம் ப்ரோக்கர் சொன்னாங்கன்னு ஆனா ப்ரோக்கர் சொன்னதுக்குன்னு உனக்குமே நீ பேசறதுக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லம்மா.

நீ என்ன கல்யாணம் பொண்ணு பாக்க வந்துட்டு நாங்க எதாவது சொல்லுன்னு அதை விட்டுட்டு நீ பொண்ணுக்கு உங்க பொண்ணுக்கு எத்தனை வரதட்சனை கொடுப்பீங்க அதைவே கேட்டுட்டு இருக்குற திருப்பி திருப்பி சரி அப்படித்தான் பையன் கூட பேசிட்டு முடிவு பண்ணலானா போன் பேச சொன்னா போன் பேச மாட்டேங்குற இல்ல எனக்கு என்னமோ சந்தேகமா இருக்குது.

நீ ஏதாவது மோசடி பொம்பளையோ? என்னவோ பையன்னு சொல்லிக் காமிச்சிட்டு புள்ளை கல்யாணம் பண்ணிட்டு ஏதாவது கொலை செய்து விட்டு போட்டு என்ன பண்றது எங்களுக்கு சந்தேகமா இருக்குது .

எதுக்கு பக்கத்துல இருக்குற போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்றனில் இன்னும் எத்தனை பேருக்கு இப்படி ஏமாற்றலாம்னு நினைச்சுட்டு இருக்கீங்க..

ஒருவேளை ஏற்கனவே உன் பையனுக்கு கல்யாணம் ஆயிருச்சு நீ மருமகளை கொடுமை படுத்தி இருக்க முடியாம அவன விட்டுபுட்டு போயிட்டானோ? அப்படியே பையனையும் மிரட்டி கிரட்டி நீ கல்யாணம் பண்ணி வைத்துவிடலாம். என்று பிளான் பண்ணிட்டு இப்பவும் புள்ளையும் எதுவுமே பேசாமல் நின்னுட்டு இருக்குது. எல்லாம் ரெண்டையும் மிரட்டி நடந்துக்கிறியா ?போலீஸ் மகளிர் இப்பவே போய் உன் மேல கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன். அங்கே இருந்து ஒரு விவரமான பெண்மணி பேசவும் கலைவாணிக்கு பயத்தில் வியர்க்க ஆரம்பித்தது.

ஐயோ நீங்க நினைக்கிற மாதிரி இல்லைங்கோ நீங்க இது என்ன பக்கத்துல விசாரிச்சு பாருங்க நாங்க அந்த மாதிரி குடும்பம் எல்லாம் இல்லைங்க .ஏதோ உங்க புள்ளே கட்டிக் கொடுக்குறீங்க உங்க புள்ள நல்லா இத்தனை நாளா சொகுசா இருந்த புள்ள எங்க வீட்ல இருக்குற வசதிக்கு தகுந்த மாதிரி வாழ முடியாட்டி என்ன பண்ணறது அப்படிங்கிற ஒரு ஆதங்கத்தில் தானுங்க நான்
கேட்டேன்.

நீங்க உங்க புள்ளைக்கு செய்வதற்கு இத்தனை பேரம் பேசுறீங்க ? உங்க பையனும் ஒன்னும் மன்மதன் மாதிரி அழகா இல்ல ஏதோ பணக்காரரா இருக்கிறார்களே!!சொத்து பத்து இருக்குது பொண்ணு நல்லா வச்சுக்குவாங்க அப்படின்னு தான் சொட்டை தலையா இருந்தாலும் பரவாயில்லை. என்று என் புள்ள கிளியாட்டம் இருக்குது உங்க பையனுக்கு கொடுக்கிறதுக்கு சம்மதித்தேன்.

ஆனால் எப்போ நீங்க போலீசு அப்படினு பேச ஆரம்பிச்சிட்டீங்களோ இனிமேலு உங்களுக்கு நான் பையன் ஒன்னும் கொடுக்க மாட்டேன். உங்க பொண்ணையும் எங்க பையனும் கட்ட மாட்டான் நீங்க இல்லாட்டி போங்க என் பையனுக்கு என்ன பொண்ணா கிடைக்காது.

முதலான்னாலும் கூட வேலை இல்ல இப்ப அருமையா வேலையில் சேர்ந்தாச்சு என் பொண்ணும் இனி என்ன வேலையில சேர்ந்து வா உங்கள விட்டா வேற மாப்பிள்ளை இல்லையா கிளம்பி போயிட்டே இருங்கோ? என்னமோ ஊர்ல இல்லாத நான் கேட்ட மாதிரி என்னென்னமோ சொல்றீங்க என்னமோ நெனச்சிட்டு இருக்கீங்க இப்ப நீங்க நின்னு பேசிட்டு இருக்கிறது என்னோட வீடு. இதே நீங்க பிசினஸ் இருக்குன்னு வெளிநாட்டிலேன்னு சொல்றீங்க அது நிஜமா பொய்யான்னு எனக்கு எப்படி தெரியும் நான் ஏதாவது உங்களை கேட்டனா நான் தான் என் புள்ளையை கட்டிக் கொடுக்கிற உங்களுக்கு உங்க பொண்ணு என் பையனுக்கு கட்டிக் கொடுக்குறதுக்கு உங்க பொண்ணுக்கு சீர் செய்ய இருக்கு என்னென்னமோ பேசுறீங்க ஏதோ அவசெத்து போனான்னா அதுக்கு எல்லா மாப்பிள்ளையும் அப்படியே பண்ணுவாங்கன்னு நினைச்சிட்டீங்களா?

நாங்க ஒன்னும் நீங்க பக்கத்துல வேணா விசாரிச்சு பாருங்க நாங்க ஒன்னும் ஏமாத்து குடும்பம் இல்லை.

என்ன வேணா வாயில் வந்தா பேசிட்டு இருக்கு அந்த அம்மா நீங்க பார்த்துட்டு சும்மா இருக்கீங்களா சம்பந்திமா இது உங்களுக்கே நியாயமா இருக்குதா நானும் உங்களை பத்தி ஏதாவது தரக்குறைவா பேசுனா பொண்ணுக்கு எவ்வளவு சீர் தருவீங்க அதையே முன்னாலே தாங்கனு தான் அப்படின்னு தான கேட்டேன்.

என்னமோ நாங்க தான் வெச்சு பொழைச்சுக்க கேட்ட மாதிரி நினைக்கிறீங்க உங்க பொண்ணுக்கு நீங்க செய்யறீங்க உங்க பொண்ணு பிசினஸ் பண்ணி ஜெயிச்சா உங்களுக்கு தான் நல்லது உங்க மாப்பிள்ளை இவ்வளவு நல்ல பிசினஸ் பண்றாருன்னு நாலு பக்கம் போற பக்கம் வார பக்கம் சொல்றதில்ல உங்களுக்கு சந்தோஷமோ தவிர எனக்கு என்ன இப்போது என்னமோ நான் தான் உங்க புள்ளையோட நகையும் பணத்தையும் வாங்கி வச்சுட்டு கொடுமை பண்ற மாதிரி எல்லாம் பேசுறீங்க.

பொண்ணு மாப்பிள்ளை பேசிக்கல இத்தனை இருக்குது அதுக்குள்ள மகளிர் புடிச்சு குடுத்துடுவேன்னு சொல்றீங்க உங்களுக்கு மட்டும்தான் பேசுவாங்களா தெரிஞ்சவங்க இருக்காங்களா ?அதெல்லாம் எங்களுக்கும் அரசியல் செல்வாக்கு இருக்குது .

நாங்கள் உனக்கு சொன்னதுமே இப்படி போலீஸ்ன்னு சொன்னதுமே நீ இந்த போடு போடுறியே நீ பேசுனது இல்ல பூர நான் ரெக்கார்ட் பண்ணி இருக்கிறேன். நீ வரதட்சனை தவிர வேற ஏதாவது பேசுனியா இல்லையா என்ற அந்த பெண்மணி மறுபடியும் கலைவாணி இடம் சண்டையிட...

நதியா ஒரு ஓரமாக நின்று கொண்டு இதை வேடிக்கை தான் பார்த்தால் தனது அம்மாவுக்கு சப்போர்ட் செய்ய வில்லை.

ஆனால் கலைவாணி நதியாவை பார்த்து ஏண்டி அவங்க வெளியிலிருந்து வந்துட்டு என்ன இத்தனை கேவலமா பேசுறாங்க நீ வாய் திறந்து சொல்ல வேண்டியதுதான நாங்க அது மாதிரி குடும்பம் இல்ல நல்லவங்க அப்படின்னு ஓரமா எனக்கும் எதுக்கு சம்பந்தம் இல்லை அப்படிங்கிற மாதிரி போய் நின்னுட்டு இருக்க என்று இப்போது தனது மகளை திட்ட ஆரம்பித்து விட்டார்.




தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top