• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jun 27, 2025
Messages
21
கண்டேன் காதலை விழிகள் நிறைந்தே - 11

நதியா வெளியில் இருந்து இவங்க வந்து நம்ம குடும்பத்தை பத்தி கேவலமா பேசுறாங்க என்னை போலீஸ்ல புடிச்சு கொடுப்பேன்னு சொல்றாங்க.

நீயோ? உனக்கு எனக்கு சம்பந்தம் இல்லாத மாதிரி வேடிக்கை பார்த்து நிற்கிறாய்?. எனக்காக வந்து இந்த இடத்தில் நிற்க மாட்டியா??நீயி நான் என்னமோ எனக்காக இந்த பாடு படுற மாதிரி நினைச்சுட்டியா?

உனக்கும் அண்ணனோட வளமான வாழ்வுக்குத் தான் நான் இந்த பாடுபடுகிறேன்.அதையும் கூட புரிஞ்சுக்காம இவங்க முன்னால நீ விட்டுக் கொடுத்துட்டு நிக்கிறயா சாமி? வேடிக்கை பாத்துட்டு என்று தன் மகளை திட்ட ஆரம்பித்தார் கலைவாணி.

அதற்குப் பிறகு நதியா பேச ஆரம்பித்தாள் ஏன்மா? நீ எங்க நன்மையை நல்ல வாழ்க்கை நினைச்சு நீ இதை ஏற்பாடு பண்ணி இருக்கிறாயா?

சத்தியமா மனசை தொட்டு சொல்லு இப்படி பேரம் பேசிட்டு நிக்கிறியே அதுக்கு முதல்ல அண்ணன் அந்த பொண்ண கல்யாணம் பண்ணுவானா? ஏலம் போடுறியேம்மா!!!நீ எங்களை விலை பேசுறியே அம்மா உன் பொண்ணுக்கும் பையனுக்கும் அவிங்க கிட்ட காசு கேக்குறியா?

நீ எங்களை விக்கிறியா?


நீ என்னடி இப்படி சொல்ற நான் உங்கள யாருகிட்ட விக்க போறேன்.

உங்களோட வளமான வாழ்வு தான் பேசிட்டு இருக்கேன். இப்போ என்ன நீ இவ்ளோ தான் புரிஞ்சிட்டியா?

இல்லம்மா நீ பேசுவது தப்பு இது பணத்துக்காக ஒரு இடத்துல விக்கிறதுக்கு சமம் நான் பேசறதிற்கு எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க எங்க அம்மா இவ்வளவு கேவலமா பேசுறத நான் இன்னைக்கு பார்க்கிறேன் ஏன்னா இத்தனை நாள் எங்கள கஷ்டப்பட்டு வளர்த்தாங்க நான் இல்லன்னு சொல்லல. ஆனா இவ்ளோ பேராசை மனதில் வச்சிட்டு இப்படி எங்களுக்கு நல்லது பண்ணனும்னு நினைக்கிறாங்கன்னா ?அது அவங்களோட அறியாமை என்று நான் சொல்லுவேன் .என்னைப் பொறுத்த வரைக்கும் இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பமே இல்லை. அதையே சொல்றது கூட எங்க அம்மா என்னை விடல. நான் இன்னும் படிக்கணும் நிறைய சாதிக்கணும்னு ஆசைப்படுறேன்.

அதே மாதிரி எங்க அண்ணனும் இந்த கல்யாணத்துல அவனுக்கு விருப்பம் இல்லை. அதைவிட இன்னும் சொல்றேன் கேட்டுக்கோங்க எங்க அண்ணன் ஒரு பொண்ண உயிருக்கு உயிரா காதலிச்சான் எங்க அண்ணன் வேலையில் சேரப்போன சமயத்துல எங்க அம்மா அந்த பொண்ணு மனச உடைச்சு எவ்வளவு கேவலமா பேச முடியுமோ? அந்த பொண்ண அப்படி பேசி இங்கிருந்தே போக வைத்துவிட்டார்கள். இப்ப அவர்கள் எங்க போயிட்டாங்கன்னு எங்களுக்கு தெரியாது.

அதுக்காக எங்க அம்மா சொல்ற பொண்ணு எங்க அண்ணன் திருமணம் செய்து கொள் என்று எங்க அம்மா நினைச்சுட்டு இருக்காங்க. அது மட்டும் நடக்காது நான் இப்போ கூட இதை சொல்லாமல் விடலாம்.

ஆனால் ஒருத்தரோட முழு அன்பும் இல்லாம காதல் இல்லாம ஒரு பொண்ணால புகுந்த வீட்ல வாழ முடியாது எங்க அண்ணன் உங்கள் பொண்ணைத் திருமணம் செய்ய ஒரு போதும் சம்மதிக்கமாட்டான்.

அது மாதிரி எனக்கும் இந்த கல்யாணத்துல விருப்பமில்லை மாப்பிளையோ அவருடைய உருவத்தையோ கேலி செய்யவில்லை. எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல இதுக்கு மேல நீங்க என்னை மீறி ஏற்பாடும் செய்தால் நான் வந்து வேறு விதமான முடிவு எடுக்க வேண்டி வரும் எங்க அம்மாவ மன்னிச்சு நீங்க விட்டுட்டு போயிருங்க.

அதெல்லாம் முடியாது பார்க்க வந்தாச்சு பொண்ண நாங்க கட்டி தீருவோம் என்று நினைத்தீங்கன்னா நீங்களும் சேந்தது அவமானப்பட்டு நிற்பீர்கள் .நான் இங்கு இருந்து கிளம்பி போயிட்டே இருப்பேன். நான் மேஜர் யாருக்கும் இனி பயந்துட்டு இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை .என்று நதியா பொல பொலவென பேச ஆரம்பித்து விட்டாள்.

உண்மையில் பரவால்லம்மா நீயாவது இப்போ உள்ளது சொன்னாயே அந்த அளவுக்கு சந்தோசம் நாங்களும் நம்ம பையன் வயசாயிருச்சு நல்ல குடும்பத்து பொண்ணா இருந்தா திருமணம் செஞ்சு வச்சர்லானுதான் வந்தோம் ஆனால் வந்த இடத்திலேயே உங்க அம்மா பேசறது வச்சு எனக்கு சில சந்தேகம் வந்தது மா அதனாலதான் மகளிரு போலீஸ் ஸ்டேஷன்ல புடிச்சு கொடுத்துட்டு அப்படின்னு எல்லாம் பேச வேண்டியதா போச்சு.

நீ எங்களை தப்பா நினைச்சுக்காதம்மா உங்க மனசுக்கு என்ன செய்து சரின்னு படுதோ அதையே நீ செய் உங்க அம்மாவ நம்பாதே நீ சொல்ற மாதிரி உங்க அம்மா பேசுவதை பார்த்தால் பொண்ணையையும் பையனையையும் விக்கிற மாதிரி இருக்குது .

உன்னோட மனசு என்ன பாடு படும்கிறது எனக்கு தெரியுது. உங்க அம்மா திருப்பி திருப்பி வரதட்சணைவே பேசிட்டு இருந்ததால் தான் நான் சந்தேகத்தில் உங்க அண்ணன ஃபோன் பண்ணச் சொல்லி அதாவது உங்க அம்மாவை உங்க அண்ணன் இப்பவே போன் பண்ண சொல்லி நின்னம்மா.

உலகத்துல வர வர நடக்கிறது பார்த்தால் பயமா இருக்குது பொண்ணுங்களே வாழாம ஒரு பொண்ணு அதுவா தற்கொலை பண்ணிக்குது. இன்னொரு பொண்ணு பொண்ணு மட்டும் எப்படி இறந்தாங்கன்னு தெரியலன்னு அட்டாக் அது மீது சொல்றாங்க எப்படித்தான் நம்புறது அதுதான் தெரியாது.

எனவே ஏழையா இருந்தாலும் அவனவன் சொந்தக்கார பையன் முன்னால பாக்குற பையன்களும் கொடுத்துட்டா துன்பமே இல்லை. பணம் சொத்து இது எல்லாம் பார்த்துட்டு இருந்தா பிள்ளைகளோட வாழ்க்கை வீணா போயிரும்.

பரம்பரையா பாரம்பரியமான குடும்பம் சொல்றவங்கள நடிசிட்டு நின்னுட்டு இருக்குது. இல்லாத வேலை பண்ணிட்டு இருக்காங்க அது பரவாயில்லை அம்மா நீ இந்த அளவுக்கு மனசு திறந்து ஓப்பனா பேசினதுக்கு ரொம்ப மகிழ்ச்சி மா ஆனா இந்த மாதிரி தங்கமான புள்ள எங்க பையனுக்கு கிடைக்கல என்பதற்காக தான் எனக்கு இப்ப வருத்தமா இருக்குது.

யாரோ ஒரு பையனுக்கு கொடுத்து வைத்திருக்கிறது. நல்லா வாழுமா உங்க குணத்துக்கு நல்லா இருப்பமா..சரிமா நாங்க வரோம் உங்க அம்மா ஏதாவது உன் வாழ்க்கைக்கு உங்க அண்ணன் வாழ்க்கைக்கு எதிரா இருந்தா எனக்கு ஒரு போன் பண்ணு நான் வந்து சேர்த்து வைக்கிற என்று அந்த பெண்மணி பேசிக்கொண்டு இப்போது அங்கிருந்து விடை பெற்றனர்.

அவர்கள் சென்றதும் கலைவாணி தலைதலையா அடிச்சுக்கிட்டு ஏன்டி வந்த சம்மந்தத்தை பணக்கார குடும்பம் நம்ம வீடு தேடி வர்றதே பெருசு அதையும் மூதேவி வாய் கொழுப்பு நால கெடுத்துட்டியேடி இப்ப பாரு ரெண்டு பேருக்குமே போச்சு இனி இது மாதிரி ஒரு சம்பந்தம் கிடைக்குமா ?

நான் என்னடி பண்ணுனேன் உங்க நல்லதுக்கு தாண்டி பேசினேன்.

அம்மா தயவுசெய்து இதுக்கு மேல எங்க நல்லதுன்னு சொல்லாதம்மா உனக்கு எப்படிம்மா தேவிகாவை பத்தி கேவலமா பேசியவங்களை வெளியில அனுப்பினே..நீ பேசினதெல்லாம் எனக்கு தெரியாது நினைச்சுட்டியா அவங்க மனசு எந்த அளவுக்கு வெந்துருந்தா ஒரே நாளில் வீட்டை காலி பண்ணிட்டு காலேஜ்ல இருந்து டிசி வாங்கிட்டு போயிருப்பா.

நீயும் ஒரு பொம்பள தானம்மா ஒரு மனசு பொம்பள மனசு எவ்வளவு வேதனைப்பட்டு இருக்கு எத்தன கேவலமா நீ பேசி இருப்ப எனக்கு ரொம்ப கவலையா இருக்குது.

உன்னை நினைச்சு ஆமாம்மா நீ இப்படியே இருந்த நீ தனியாத்தான் இருக்க போற கடைசி வரைக்கும் ..

நான் எனக்கான வேலையின் வாழ்க்கையை நான் தேடிக்குவேன் இனிமே என்ற கல்யாணத்தை பத்தியும் அண்ணன் கல்யாணத்து பத்தியோ பேசற தகுதி நீ இழந்துட்டம்மா..

இனி அண்ணன் இங்கு வருவானு என்று நினைக்கிறாயா? வரமாட்டான் என்ன அவன் தேவிகாவை அவன் தான் துரத்தி துரத்தி லவ் பண்ணான் அது தெரியுமா?

உனக்கு நீதாமா நல்ல ஒரு வாழ்க்கையை இழந்துட்டு நிக்கிற உன்ற பேராசையினால் அண்ணன அவனோட உயிரா நெனச்ச காதல் இழந்துட்டு நிக்கிறான்.

அவ எங்க எங்க போனானும் தெரியல அண்ணா போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கறாங்க. அவங்க போன் சுவிட்ச் ஆப்னே வருது அண்ணிக்கு மட்டும் ஏதாவது ஆச்சும்மா அண்ணன் காலத்துக்கு உன்னை வந்து பார்க்க மாட்டான்.

நீ என்னைக்குமே தனிமரமா தான் இருக்க போற நீ மட்டும் அண்ணனோட காதலை சேர்த்து வைத்திருந்தேனா எவ்வளவு நல்லா இருந்திருக்கு இப்போ அவங்க காதல நீயே கொன்னுட்டமா..உன்ற கை வெச்சும் உன்ற கண்ணையே நீ குத்திட்டு அம்மா நான் சொல்றது உனக்கு கண்டிப்பா இப்ப புரியாது.

நானும் என் வாழ்க்கையை தேடி போயிருவ அண்ணனும் வரமாட்டானுங்க அப்ப தனியா உக்காந்துட்டு நாலு சுகத்துக்குள்ள நீயே கத்திட்டு கிட அம்மா இப்ப இருக்குறவங்கள நாளைக்கு காணம் எந்த நேரத்துல என்ன வேண்டும் நடக்கலாம்.

அந்த கொஞ்ச நாள்லையாவது நிம்மதியா வாழணுமா மனசுக்கு பிடிச்சவங்களோட தான் வாழனும். மனசு திருப்தி இல்லாம பணம் காசு வச்சுட்டு என்னம்மா பண்றது இதெல்லாம் நீ எப்பமா புரிஞ்சுக்க போற மனசு பூரா வெந்துட்டு கார் பட்டு சேலை கட்டிட்டு போனா அதுல இல்லம்மா சந்தோசம் அந்த உலகத்தை விட்டு வெளியில் வா...

இப்ப எல்லாம் காலம் எப்படியோ போயிட்டு இருக்குது என்னமோ கண்ணுக்கு தெரியாதா விலை மதிப்பில்லாதை பெருசா நினைக்கிறாங்க உயிர் யாருக்குமே பெருசா தெரியல நகை பணம் சொத்து பத்து பாக்குறீங்கம்மா உடம்பு மனசோ முக்கியம் என்பது யாருக்குமே தெரியல பாரம்பரிய கட்டப்பஞ்சாயத்து கௌரவம் இதுதான் எல்லாத்துக்கும் முக்கியமா படுது.

ஒரு பொண்ணோட மனசு அவளும் சதையும் ரத்தம் உள்ள சாதாரண எல்லா போல இருக்கற மனசுதான்னு தெரியறது இல்ல ஒரு பொண்ணா இருந்துட்டு ஒரு பொண்ணு மனசு பத்தி உனக்கு தெரியல நீ எல்லாம் என்னம்மா பேசுற நீ பேசறது மாதிரியும் உங்க அம்மா எனக்கு இன்னைக்கு இந்த மாப்பிள்ளை பார்த்து எனக்கும் அவருக்கும் பார்த்தா அப்பா மகள் மாதிரி இருக்குது .

அந்த பணம்தான் உனக்கு கண்ணு தெரியுது என்ற வாழ்க்கை காலத்துக்குமா வாழறது நாங்கறது உனக்கு தெரியலம்மா பணம் சொத்து இதெல்லாம் வாழ்க்கையில நிம்மதி கிடைக்காது மா கணவன் மனைவி சந்தோசமா மகிழ்ச்சியா வாழ்ந்த பேர்தான் அதுக்கு வாழ்க்கை.

நீ சொன்னேன் நான் கல்யாணம் பண்ணிட்டு என்னத்தம்மா வாழ்ந்துருவேன். அவருக்கு இப்பவே வயசு 40 எனக்கு 20 எப்படிம்மா மேட்ச் ஆகுது 20 வருஷம் அவர் வாழ்ந்து முடிக்கிற கடைசியில் இருக்கிறார் .இன்னும் பத்து வருஷமா அவருக்கு 50 வயசா இருக்கும் 30 வயசில் நான் என்னோட வாழ்க்கையை இழந்தவள் ஆகி விடுவேன்.

உனக்கு அப்படி ஆசையா இருந்தா நீ கட்டிக்கோ நானும் அண்ணனும் உனக்கு தடையாக இருக்க மாட்டோம் .அதெல்லாம் வயசான பணக்கார ஆம்பள கிடைப்பான் தாராளமா போய் கட்டிக்கோ நானும் அண்ணனும் அனாதை நினைத்துக்கொள்கிறோம்.

ஏன் என்னடி பேசற ரொம்ப வாய் கொழுப்பா உனக்கு ....

நான் பேசவில்லை அம்மா நீ தான் பேச வைக்கிறாய்...


தொடரும்..
 
Last edited by a moderator:

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top