New member
- Joined
- Jun 27, 2025
- Messages
- 21
- Thread Author
- #1
கண்டேன் காதலை விழிகள் நிறைந்தே - 15
தேவிகா வீட்டுக்குள் வரும்போது முகத்தில் மலர்ச்சியோடு வந்தாள்.
அவளின் முகம் மலர்ச்சியை பார்த்து யசோதாவிற்கு நிறைவாக இருந்தது .
அவரும் இங்கே வந்த இரண்டு மாதங்களில் யசோதா தேவிகாவை கண்காணித்துக் கொண்டுதான் இருந்தார்.
அங்கிருந்து வந்ததிலிருந்து எதையோ தொலைத்தது போன்று வெளியே சிரித்தாலும் மனதிற்குள் வைத்து புளுங்குவது நன்றாக தெரிந்தது.
தாய் அறியாத ஒன்று உண்டோ? தேவிகா நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
நாம் மனதில் சுமந்து கொண்டிருக்கும் காதலை தனது அம்மாவுக்கு தெரியாமலே மறைத்து விட்டோம், என்று அவள் அறியாத ஒன்று யசோதாவுக்கு தெரிகிறது .
ஆனால் மகள் சொல்லாமல் எப்படி அதைப்பற்றி கேட்பது ஒருவேளை சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தால் அவளாகவே சொல்லி இருப்பாள்.
அவளே எனக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டு இருக்கும் போது அது எனக்கு தெரியும் என்று அவ மனதை காயப்படுத்த வேண்டாம் என்றுதான் அமைதியாக இருந்தார்.
சரி இன்னைக்கு அவளுக்கு இருக்கிற சந்தோஷத்தை நாமளும் கண்டும் காணாமல் இருக்கலாம் .
அவளாக சொல்கிறான்னு பார்க்கலாம் என்று கல்லூரியில் இருந்து வந்த தேவிகாவுக்கு மாலை சிற்றுண்டி கொடுத்தார்.
தேவிகா நாலு நாள் லீவு வருதுல்ல எங்கயாச்சும் போயிட்டு வரலாமா? வெளியில..
இல்லம்மா காலேஜ்ல எனக்கு பிரண்ட்ஸ் மூணு பேர் இருக்காங்க அவங்க நம்ம வீட்டுக்கு வரேன்னு சொன்னாங்க நாளைக்கு.
அப்படியா சந்தோசம் சாப்பிட வராங்களா ஏதாவது ஸ்பெஷலா செய்யணுமா?
இல்லமா அவங்க வந்துட்டு என்னை கூப்பிட்டு ஷாப்பிங் போலாம் அப்படின்னு சொன்னாங்க .நான் போயிட்டு வரட்டுமா ?நான் எங்க அம்மா கிட்ட கேட்டு சொல்லுவேன். சொன்னேன்...என்னடி இன்னும் நீ அம்மா புள்ளையவே இருக்கிறாயா ?உன்னை ரொம்ப மாத்தணும் போல இருக்குது. அப்படின்னு சொன்னாங்கமா!!!
எல்லாரும் எப்படி ஜாலியா இருக்காங்க அம்மா அவங்க கூட அவ்ளோ ஜாலியா இருக்குதுமா நான் நீ மட்டும் தான் இருக்கிறோம், இதே நம்ம வீட்ல இன்னும் நிறைய பேர் இருந்தா ரொம்ப ஜாலியா இருக்க முடியும்ல..எப்படி கலகலன்னு பேசிட்டு ஒன்னு கொன்னு அம்மா அதிலேயே சங்கரி ஒருத்தி இருக்கிற அம்மா சாப்பாட்டுப்பிரியை நீ எதை கொடுத்தாலும் பழி சொல்லாம வாய் நிறைய போட்டுக்குவா.
அப்படியா அம்மா காலையிலேயே டிபன் செஞ்சுட்டா நீ கேட்டு சொல்றியா?
சரிம்மா நான் கேட்டு சொல்றேன் நீ வருகிறாயாமா அவங்களோட பழகி பாருமா சூப்பரா இருக்கும்.
இல்லம்மா நீ போயிட்டு வா நாளைக்கு வீட்ல நிறைய வேலை இருக்குது .நைட்டுக்கு டிபன் என்ன செய்லாம். உனக்கு புடிச்சது சொல்லு நான் செஞ்ச தாரேன் .
அம்மா சிம்பிளா ஏதாவது பண்ணுமா இப்பதானுமா நீ சுண்டலும் காஃபியும் கொடுத்த அதனால லைட்டா சாப்பிட்டுக்கொள்ளலாம் .
சரிமா நான் போயி என் பிரண்டு கிட்ட கேட்டு வர போன் பண்ணி நாளைக்கு காலையில எங்க வீட்ல சாப்பிட வரீங்களா அப்படின்னு என்று கூறிவிட்டு தனது அறைக்கு சென்றாள்.
உமாவுக்கு தான் முதலில் அழைத்தாள் என்னடி வீட்டுக்கு போன இப்பதான் அதுக்குள்ள மறுபடியும் எங்களுக்கு போன் பண்றே எங்களை எல்லாம் விட்டுட்டு இருக்க முடியலையா?
அப்படி இல்ல நாளைக்கு எங்க வீட்டுக்கு வரேன்னு சொன்னீங்க இல்ல அதுதான் அம்மாட்ட சொன்னேன் அம்மா சொன்னாங்க சாப்பிட வராங்களான்னு கேளு காலையில எல்லாத்துக்கும் சேர்த்து டிபன் செய்யறதுக்கு அப்படின்னு சொன்னாங்க டி அதுதான் போன் பண்ணினேன்.
அப்படியா உங்க அம்மா என்ன ஸ்பெஷலா செய்வார்களோ அதை செஞ்சு வைக்க சொல்லிறிடி அதுதான் நம்ம கூட்டத்துல சாப்பிடுறதுக்குனே ஒருத்தி பொறந்தவள் அது மாதிரி ஒருத்தி இருக்கிறாளாச்சு நீ உங்க அம்மா மண்ணவே அவுச்சி கட்டி வச்சாலும் தின்றுவிடுவாளேடி.
ஏய் என்னடி என்னைப் பத்தி பேசிட்டு இருக்கீங்க ஆமாண்டி உன்னோட சாப்பாட்டு வீரதீர செயலை பத்தி சொல்லிட்டு இருந்தேன் .
நீங்க எல்லாம் வீட்டுக்கு போகலையா?
வீட்டுக்குப் போயாச்சு ஆனாலும் எங்க வீடெல்லாம் பக்கம் பக்கமா தான் இருக்குது. அதனால எப்பவுமே சங்கரி வீட்ல உக்காந்து தான் அரட்டை அடிக்குவோம்.
ஏ செம ஜாலி இல்லையா? பரவால்ல நீயும் இங்கு கூட்டத்தில் ஐக்கியம் ஆயிட்டீங்களநீ வீட்டில் இருந்தாலும் ஃபோன்லையே நாமெல்லாம் கலாய்ச்சிக்கலாம்.
ஏய் மச்சி நாளைக்கு எல்லாம் ஒரே மாற டிரஸ் போட்டு போலாமா?
என்ன செக்யூரிட்டி வேலைக்கு போற யூனிபார்ம் போட்டு போறேன்னு நினைக்கிறாயா?
ஆமா நாலு நாள் லீவ் இருக்குதில்ல எங்கயாச்சும் காவல் காக்குற வேலைக்கு போலாமா?
பெரிய ஹோட்டல் உன்னை காவல் காக்க கூப்பிடுவார்கள் போறியா?
எதுக்குடி ஒரே நாள்ல அந்த ஓட்டல் முதலாளி நடுத்தெருவில் வருவதற்கா என்று சிரித்துக் கொண்டே சங்கவி கேட்கவும்.
அவளை பார்த்த சங்கரி என்னை டேமேஜ் பண்றவளை உன்னை பக்கத்துல வச்சுட்டு நான் பேசறேன் பாத்தியா ?எனக்கு எதிரி வெளியில இல்லடி என் பக்கத்திலேயே தான் சுத்திட்டு இருக்குது ஏழரை.
என்னடி என்னை போய் ஏழரை என்றுட்ட சரி விடு எட்டு என்று வைத்துக்கொள் .
எட்டா அதுக்கு நீ என் மண்டையில் ஒரு கொட்டே கொட்டி இருக்கலாம் .
பஞ்ச் மழை பெய்யுது.
பஞ்ச் ஆமாமா சைக்கிள் பஞ்சர் கடைக்கு போகணும் .
யாருக்கு காது கேட்க மாட்டேங்குது ...அதெல்லாம் நல்லாத்தான் கேக்குது அப்புறம் பஞ்சுக்கும் பஞ்சரக்குமே வித்தியாசம் தெரியல உனக்கு.
உலகம் பஞ்சு மெத்தையில் தான் படுத்து தூங்குற நைட்டுக்கு.
இது யாருடா அது கிராஸ் கால் ஒன்னு உள்ள வந்துட்டே இருக்குது .
திரும்பி பாருங்கடி குமரிகளா காலைல தாண்டி எல்லாம் சேர்ந்து காலேஜ் போறீங்க அவ அவ வீட்டுக்கு போகாம உக்காந்துட்டு இங்க என்னடி கதை அளந்துட்டு இருக்கீங்க.
கொஞ்சமாவது படிக்கும் அக்கறை இருக்குதா? இல்லையா?
காலேஜ்க்கு உங்க அப்பன் கட்டுற
பணம் என்ற சுருக்குப்பை நிறைய இருந்தது தான்.
கொஞ்சமாவது படிக்கும் எண்ணம் இருக்குதா ?வீட்லயும் இந்த போடு போடுறீங்களே? நீங்க காலேஜ் குள்ள போன சும்மா இருப்பீங்களா டி ?என்று சங்கவியின் பாட்டி சத்தம் போடவும் .
ஏன் அப்பத்தா உங்களுடைய இம்சை தாங்க முடியாம தான் அப்புறம் சீக்கிரமாகவே அப்பாரு மண்டை போட்டுருச்சு.
ஏன்டி இப்படி சொல்ற நான் என்ன அப்படியா? பேசுற!!!
பின்ன எப்படி பேசுற எப்ப தான் எப்ப பார்த்தாலும் மவுன சாமியாராட்டவே இருக்கும்னு நினைச்சா முடியுமா?
பொண்ணுங்கனா கலகலன்னு பேசிட்டு சும்மா சலசலன்னு தண்ணி மாற தெளிவா இருக்கணும் .
வீட்டிலிருக்கிற வேலை செஞ்சு பழகலாம் இல்ல பழகி என்ன பண்றது?
பழகி என்ன பண்றதா? நாளைக்கு படித்து முடித்தீங்கன்னா உங்களை கண்ணால கட்டி குடுக்கணும்.
இல்ல அப்புறம் அங்க போயி ஒரு வேலையும் செய்யத் தெரியாம உங்க மாமியா கிட்ட கொட்டு வாங்க போறீங்க இல்லடி..
உங்களுக்கு ஒண்ணுமே தெரியல அப்பத்தா இத்தனை நாளா பொண்ணுங்க சமைச்சுட்டு இருந்தா இனிமேல் எல்லாம் அப்படியே ஆப்போசிட்டா நடக்க போகுது பையங்கதான் சமைக்கணும். நாங்க வேலைக்கு போவோம் நெசமாத்தான் அப்பத்தான் எங்களுக்கெல்லாம் இந்த வருஷ கடைசியில காலேஜிலேயே கேம்பஸ் வரும் நாங்க அதுல செலக்ட் ஆன எல்லாரும் வேலைக்கு போயிருவோம் .
வேலைக்கு வெளியில் விட்டா மறுபடி மறு எவனாச்சும் கட்டிட்டு வந்துறாதீங்கடி வீட்டில் பார்க்கிற பையன் தான் கண்ணாலம் கட்ட வேண்டும்.
சொல்ல முடியாது அப்பத்தா எனக்கு ஏதாவது வாட்ச்ச அடிமை கிடைச்சதுனா கல்யாணம் பண்ணிக்குவேன்.
என்னடி இத்தனை ஈசியா சொல்ற இரு உங்க அப்பாகிட்ட சொல்றேன்.
என்ன சொல்லுத அப்பத்தா ..
இவ வேலைக்கு போறதே கண்ணால கட்டிக்கிட்டு போறாளமாடானு சொல்லி வைக்கிற அப்புறம் விடுவானுங்கப்ப வெளியில்.
ஐயோ அப்பத்தா நான் சும்மா சொன்னேன் அப்பத்தா உனக்கு புடிச்ச பையன தான் நான் கட்டிக்குவேன் .
சரியா அப்படி எல்லாம் பயந்துட்டு இருக்காதீங்க ..பொண்ணுக்கு வந்து வேலைக்கு போகணும்..அவங்க செலவு அவிங்களே பாத்துக்கணும்..
கட்டின புருஷனா இருந்தாலும் அவன்கிட்ட கை நீட்டி வாங்கும்போது நம்ம தன்மான பாதிக்கப்படுது அவங்களுக்கு கொடுக்கறதுக்கு சங்கடமா இருக்கும்.
நம்ம கையில காசு இருக்கிற மாதிரி இருக்குமா!!பாரு இப்போ நானே உனக்கு எதாவது ஒரு சுங்கடிச்சேலை எடுத்துக் கொடுக்கும் நினைச்சா என்கிட்ட கையில காசு இருந்தா தான் உனக்கு எடுத்து தர முடியும் அதுக்காகவே நான் வேலைக்கு போகணும் அப்பதா.
ஏண்டி நானும் உனக்கு எப்படி சுங்குடுச்சேல வேணும்னு கேட்டேன் .
எனக்காக தான் நீ வேலைக்கு போற அப்போ அந்த காசு பூராம் என்ற கிட்டவே கொடுத்துடுவியாக்கு நீ அதை வச்சுட்டு ஒன்னும் பண்ண மாட்டியா?
அப்பத்தா நீ என்ன அடிமடியிலேயே கை வைக்கிறே சொல்றது தான் ஒரு பேச்சுக்கு அதை உடனே நீ நடைமுறைப்படுத்தணும்னு பார்க்கிறே.
ஆமா லீவு விட்டா என்ன பண்ணுவீங்க துணி கடைக்கு போவீங்க போய் துணிகளை அந்த குழாய்கள் எடுத்துட்டு வந்து காலைல செக்கு வச்சிட்டு போவீங்க நல்லாவா இருக்குது.
சேலே கட்டுனா எத்தனை அழகா இருக்குது.
அப்புறம் அவை எல்லாம் யார் அப்பத்தா போடுவா... வார வாரம் கடைக்கு போறேன்னு சொல்றியே அதனால எத்தனை பேரு அவங்க வருமான ஈட்டுறாங்க...
அவந்த கண்ணாடி போட்டு பெரிய மாளிகையாட்ட கட்டி வச்சிருக்காங்க கடையை நீங்க அதுக்குள்ள போய் சோக் பண்ணிட்டு எடுத்துட்டு வர்றீங்க.
அப்பத்தா நீங்க அப்படி நினைக்கிறங்க நான் எத்தனை பேருக்கு வேலை கொடுத்துட்டு இருக்கேன்
அவன் நினைப்புதான் இதுவே நாம் செய்கிற ஒரு சேவை தான்.
ஆமாண்டி உங்க அம்மா சேவை செய்யறதுக்கு மாவு வாங்கிட்டு வர சொன்ன போய் வாங்கிட்டு வாடி போ அப்புறம் போய் நீ சமூக சேவை செய்வியா?
என்னை கடைக்கு தொரத்துவது எங்க அம்மாவுக்கு எப்படி இருக்குமோ?
ஏண்டி பின்னால இருக்கிற கடைக்கு போயிட்டு வர உனக்கு ஒரு நேரமாகுமோ ஓடிப்போ..வாங்கிட்டு வா அப்படியே தக்காளி ஒரு கிலோ வாங்கிட்டு வா .
வாங்கடி போய் வாங்கிட்டு வரலாம் இந்த மகளிர் பட்டாளம் எங்க போனாலும் ஒட்டுக்காவே போகுது என்று அப்பத்தா திட்டிக் கொண்டிருந்தார்.
ஏன்னு அத்தை திட்டிட்டு இருக்கீங்க பிள்ளைகள் கல்யாணமாக வரைக்கும் தான் சந்தோஷமா இருக்குங்க கல்யாணம் ஆயிட்டா அப்புறம் நாங்க எல்லாம் எப்படி இருக்கிறோம் அது மாதிரி இருக்க போகுது அதுவரைக்கும் சந்தோஷமா இருந்துட்டு போதுங்க .
அட நான் சும்மா பேசிட்டு இருந்தேன் அவங்களோட நான் திட்டவில்லை. நான் திட்டிட்டு அப்படியே அவிங்க பயந்துட்டு யாரும் வராமையா இருந்துட்டு போறாங்க அதெல்லாம் இங்க வராம போறாங்க நீ வேற சேவை செய்கிறேன் என்று சொல்லிட்டியா ?தேங்காய் பால் ஊத்தி சாப்பிட்டு போட்டு போவாங்க பாரு..
சாப்பிட்டு சாப்பிட்டு நல்லா புள்ளைங்க ஒன்னுக்கொன்னு ஒத்துமையா இருக்கிறது நல்லது.
பின்ன உலகத்துல எல்லாம் நடக்கிறது பார்த்த பயமாத்தான இருக்குது.
எங்க போனாலும் தனியா போகாம சேர்ந்து போறாங்க பாரு அதனால ஒரு திக்கு திக்குனு நாம பயந்துட்டு இருக்க வேண்டியதில்லை .
அது என்னமோ உண்மைதானுங்கம்மா..
தொடரும்..