New member
- Joined
- Jun 27, 2025
- Messages
- 21
- Thread Author
- #1
அத்தியாயம்-2
நவநீத் தேவிகா இருவரும் பக்கத்து வீடு தான் ஆரம்பத்தில் விளையாட்டாக பழகியவர்கள்
இடையே காதல் மலர்ந்தது.
நவநீத் தங்கை தான் நதியா அவளும் தேவிகாவும் இருவரும் சிறுவயதில் இருந்தே தோழிகள்.
அவளைப் பார்க்க செல்லும் தேவிகா மேல் நவநீத் தான் முதலில் காதல் கொண்டது.
அவளின் பேசும் விழிகளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றும் அவனுக்கு அவனும் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் சமயம் தேவிகா
ஒரு நாள் அவளின் இருசக்கர வாகனத்தில் வரும் போது தெரு நாய்கள் துரத்தி வர பின்னால் திரும்பி நாய்களைப் பார்த்து பயந்து கொண்டே வந்தவள்.
நவநீத் வண்டியில் தான் இடித்துக் கீழே விழுந்து விட்டாள்.
கீழே விழுந்தவள் உதட்டைப் பிதுக்கி அழுகவும் அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல்.
ஏய் முட்டைக் கண்ணு என்ன பொடனியிலா வைத்து இருக்கிறாய்? நிசமாலுமே நாயைக் கண்டு பயந்து வந்தாயா?
இல்லை இந்த நாயகனைக் கண்டு கண்டதும் காதல் என்று எப்போதும் மோதலில் தான் காதல் வரும் என்பார்களே அப்படி நினைத்து இப்படித்தான் வண்டியை மோதி என் மேல் காதல் தீயை வளர்க்கிறாயா?
டேய் பனைமரம் முதலில் என் மேல் இருந்து எழுந்து கொள்டா எருமை மாதிரி கணக்கிறாய் என்று அவனை மரியாதை இல்லாமல் பேசவும்.
குட்டச்சி என்ன வாய் நீளுது கொஞ்சம் கண்ணைத் திறந்து பாரு யார் யார் மேலே படுத்து இருக்கிறாங்க என்று தெரியும் என்று அவன் கூறியதைக் கேட்டு இப்போது தன் விழிகளைத் திறந்து பார்த்தவள் அதிர்ந்தாள்.
தன் உடல் முழுவதும் அவன் மேல் தான் அவனுடைய முகம் மிக
அருகில் இருந்தது.
நவநீத் தனது ஒற்றை புருவத்தை உயர்த்தவும் தான் அவளுக்கு உண்மையில் வெட்கம் வந்து விட்டது.
எத்தனை நேரம் மீண்டும் அவனது முகத்தையே பார்த்து இருந்தாலோ தெரியவில்லை. பிறகு தன்னை சுதாரித்தவள் அச்சோ நடு சாலையில் இந்தப் பனைமரத்தின் மேல் படுத்துக் கொண்டு அவனையே பார்க்கும் தனது மனதை நினைத்து பதறியவள் எழுந்து விட்டாள். ஆனால் அவளின் பாதங்கால் கீழே ஊன்றவே முடியவில்லை.
தேவிகா தனது பாதங்கால் கீழே ஊன்ற முடியாமல் தவிப்பதைப் பார்த்த நவநீத் அச்சோ குட்டச்சிக்கு சதை பிரண்டு விட்டது போல் இருக்கிறது. என்று அவனும் மேலே எழுந்தவன் இப்போது தன்னுடைய சர்ட் பேண்ட்டில் இருக்கும் மண்ணைத் தட்டி விட்டவன்.
ஏய் சண்டிராணி வண்டியே ஒழுக்கமா ஓட்டத்தெரியாத உன் கையில் யார்? லைசென்ஸ் கொடுத்தது. கொஞ்சம் ஏமாந்து இருந்தால் என் சோலியவே முடித்து இருப்பாய்.
எனக்குத் தான் வண்டி ஓட்டத் தெரியாது. அது தான் நீ நெடுமரம் மாதிரி வளர்ந்து நிற்கிறாயே நான் ஓட்டி வரும் போது நீ விலகிப் போக வேண்டியது தானே.
ஆமாம் குட்டச்சி நான் விழகிப் போய் இருந்தா நீ எங்கே போய் விழுந்து இருப்பாய் கொஞ்சம் பின்னாடி திரும்பிப் பாருடி என்று அவளின் தாடையைத் திருப்பிப் காண்பித்தான்.
அந்த இடத்தைப் பார்த்தவள் உவ்வே என்று முகத்தை திருப்பினாள். ஆமாம் போய் சாக்கடையில் தான் விழுந்து இருப்பாள்.
என்னடி குட்டச்சி வாய் கோனிக்கிட்டது. இப்போது தெரிகிறதா? நான் உன்னை காக்க வந்த ஆபத்துபாந்தன் அதுக்கு நீ தான் என் காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும் என்று அவளின் முன் தனது பாதத்தை வைத்தான்.
நெடுமரம் உனக்கு அப்படி எல்லாம் ஒரு ஆசை இருக்கும் போது நான் நிறைவேற்றாமல் இருப்பேனா? என்று தன் நல்லா இருக்கும் காலால் அவன் பாதத்தை மிதித்தாள்.
ஏய் என்னடி சண்டிராணி கீழே விழுந்தும் உன் திமிர் அடங்கவில்லையா? என் பாதத்தில் உன் நன்றாக இருக்கும் கால் வைத்து அதையும் நொண்டி ஆக்கி விட்டு இரண்டு காலும் பஞ்சர் ஆனால் இங்கே இருந்து நீ எப்படி உன் டப்பா வண்டியை உருட்டிக் கொண்டு வீடு வந்து சேர்வாய். இப்பவே இருட்ட ஆரம்பித்து விட்டது.
அதுவும் மாலை மசங்கும் நேரத்தில் சுடுகாட்டில் இருந்து காத்து கருப்பு எல்லாம் இந்த ரோடு வழியாகத் தான் வந்து பார் அங்கே இருக்கும் புளியமரத்தில் தான் தூங்குமாம் உன்னைப் போல் தனியாக வருபவர்களை மேல் இறங்கிக் கொள்ளுமாம்.
சரி நீ இருந்து பேய் கூட உட்கார்ந்து பருப்பாம் பருப்பா பன்னிரெண்டு பருப்பா விளையாட்டு விளையாண்டு விட்டு வா சரியா பாப்பா சாரி பீப்பா என்று கூறிவிட்டு தனது வண்டியை நிமிர்த்தியவன். பாருடி என் சிங்கத்தை உன் டப்பா வண்டியைக் கொண்டு வந்து இடித்து கிரேச் செய்து விட்டாய் என்று சொல்லியவன்
இங்கே பாருடி இதுக்கு ஆகும் பணத்தை எனக்கு எப்படி கொடுப்பாயோ? தெரியாது சீக்கிரம் கொடுக்க வேண்டும் புரியுதா?
தேவிகா அந்தப் புளியமரத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள். பனை மரம் நீ சொல்வது நிஜமாவா? நீ பார்த்து இருக்கிறாயா? பேய் வந்ததை என்று அவள் பாட்டிற்கு பேசிக் கொண்டு இருந்தாள். பதில் வராததைக் கண்டு தன் முன்னால் பார்க்க நவநீத் வண்டியை காணம். அவ்வளவு தான் தேவிகாவிற்கு அல்லுவிட்டது.
நாம் கொஞ்சம் ஓவராகத் தான் பேசிவிட்டோமோ? இப்போது எப்படி நான் வீட்டிற்குப் போவேன் என்று நினைத்து செய்வது அறியாது நின்று இருக்க வேகமாக வானம் இருட்டிக் கொண்டு வந்தது. அவளுக்கு பயத்தில் என்ன செய்வது என்று கூடத் தெரியவில்லை.
அம்மா காலையிலேயே சொல்லி அனுப்பியது. இன்றைக்கு அமாவாசை அதனால் சீக்கிரம் வந்து விடு கோவிலுக்குப் போக வேண்டும் என்று ஆனால் இப்போது மழை வேறு வந்து விடும் போல் இருக்க அவளுக்கு அழுகை வந்தது. அவளுக்கு தனக்கு ஒரு அண்ணா இருந்து இருந்தால் கூடப் பரவாயில்லை இந்த சூழலில் அவனுக்காவது அழைத்துப் பேசி இருப்பாள்.
அழுகை யாக வேறு வந்தது. அப்போது தன் அருகில் யாரோ நின்று கொண்டு தன்னையே உறுத்து விழிப்பதை உணர்ந்து பயத்தில் அவள் உடல் நடுங்கியது. தனது விழியைத் திறந்தாள் தேவிகா தன் முன்னால் நின்ற நவநீத் தான் என்று தெரிந்தவள் அவனைத் தாவி அனைத்து இருந்தாள்.
ரொம்ப பயந்து விட்டாள் என்று அவளின் நடுங்கும் உடலைக் கண்டவன். அவள் நடுக்கத்தை
குறைக்கும் பொருட்டு அவளது முதுகை நீவி விட்டு எதுக்குடி இப்படி பயந்து சாகுகிறாய்? அது தான் நான் இருக்கிறேன் தானே உன்னை தனியாக விட்டு போய் விடுவேனா?
நவநீத் அனைப்பிலிருந்து விலகியவள் இப்போது அவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தாள். ஏண்டா வளர்ந்து கெட்டவனே அது தான் நான் கீழே விழுந்ததில் என் கால் பிசிகி விட்டது. என தெரிந்தும் என்னைப் பயப்படுத்தி விட்டு நீ மட்டும் சென்று விட்டாய்? அவனின் கன்னத்தில் இரண்டு அடிகளைக் கொடுத்தும் அவளின் ஆத்திரம் அடிங்காதவள்.
இதே இடத்தில் உன் நதியா இருந்தா அவளையும் இப்படித்தான் அம்போ என்று விட்டு சென்று இருப்பாயா?
நான் உனக்கு யாரோ தானே அது தான் அநாதையா விட்டு சென்றாயா? என்று அவள் சொல்லி வாய் மூடவில்லை அவளின் கன்னத்தைப் பதம் பார்த்தது அவனின் கை.. ஏய் தொலைத்து விடுவேன் டி என்ன வாய் நீளுது நான் உன்னை விட்டு போனதை நீ பார்த்தாயா?
அதில் திகைத்தவள் அப்போது தான் அவனின் வண்டி அங்கேயே நிற்பதைப் பார்த்தாள்.
இது தாண்டி பொம்பளைப் புத்தி என்று சொல்வது என்ன ஏது என்று தெரியாமலே வாய்க்கு வந்ததைப் பேசுவது சொல்டி நீ என்னைத் தவறாகத் தான் நினைத்தாயா? நான் உன்னை என் உயிராய் நினைக்கிறேன்டி அப்படி இருக்கையில் நீ எப்படியோ? போ என்று நான் விட்டு விட்டு செல்வேன் என்று நீ எப்படிடி என்னைத் தவறாக நினைக்கலாம். நான் உன் பார்வையில் தவறானவனாகத் தான் பதிந்து இருக்கிறாய்.
தேவிகா நவநீத் அடித்ததில் வீங்கிய கன்னத்தின் எரிச்சலில் வாயைத் திறக்க முடியாமல் ஸ்ஸ் ஆ.. என்றவாறே நான் ஒன்றும் உங்களைத் தவறாக நினைக்கவில்லை. நீங்க தானே மாமா என்று அவளே அறியாமல் பேய் வரும் என்று சொன்னீங்க. அதை நினைத்துப் பயந்து தான் உங்களைப் பார்த்ததும் அடித்து விட்டேன் என்று பாவமாக கூறியவளை இழுத்து தன் நெஞ்சோடு அனைத்தான்.
தேவிகா அவளையும் அறியாமல் 'மாமா' என்று கூறிவிட்டாளே அப்போதே அவனின் கோபம் எல்லாம் மறைந்து விட்டது.
தன்னவளை தன் நெஞ்சோடு எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு இறுக அனைத்தவன். தூரத்தில் வண்டி சத்தம் கேட்பதை உணர்ந்து அவளை தன்னிடமிருந்து விலக்கியவனைப் பார்த்து புரியாமல் தவித்தவளை வண்டியை சரி பண்ண மெக்கானிக் வந்து இருக்கிறார்கள்.
வந்தவர்களிடம் இதை சரிசெய்து செட்டுக்கு எடுத்துப் போங்கள் அங்கே சென்று மீதி வேலைகளை முடித்து விடுங்கள். நாளைக்கு இந்த முகவரியில் கொண்டு வந்து விடுங்கள் என்று கூறியதும் தான் தேவிகா இப்போது தான் தனது வண்டியை பார்த்தாள்.
நிறைய அடி வாங்கி இருந்தது. அண்ணா இப்போதே சரி செய்ய முடியாதா? நிறையச் செலவாகுமா? என்று அவள் பதட்டமாகக் கேட்கவும் தான் இப்போது அவளின் பதட்டத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் இதே நாளைக்கு கூட ரெடியாகாது மேடம் ரொம்ப பழைய வண்டி போல் இருக்கிறது. நீங்களே பாருங்கள் உங்கள் வண்டியை வண்டி மாதிரியா இருக்கிறது. ஏதோ கயலான் கடையில் பார்ட் பார்ட்டாக வாங்கி ஒட்டவைத்தது போல் இருக்கிறது.
அதில் தேவிகாவிற்குத் தான் மூக்குவிடைத்துக் கொண்டு கோபம் வந்தது. அடியே உன் செல்லத்தை உன் முன்னாலேயே கயலான் கடையில் வாங்கி ஒட்டவைத்தது போல் இருக்கிறது என்று கலாய்க்கிறான் இவனைச் சும்மா விட்டு போகலாமா?
அந்த மெக்கானிக்கை திட்டுவதிற்கு வாயைத் திறந்த தேவிகாவின் வாயைத் தன் கையில் பொத்திய நவநீத் அண்ணா சீக்கிரம் ஆட்டோவை வைத்து இதை அள்ளிப் போட்டுக் கொண்டு போங்கள். இல்லாட்டி வண்டியைப் போல் தான் உங்களையும் சில்லு சில்லாக உடைத்து விடுவாள்.
பாஸ் உங்கள் நிலைமை நினைத்தால் ரொம்ப பாவமாக இருக்கிறது என்று அவனிடம் பரிதாபம் பேசியவர்கள் அவள் வண்டியை உருட்டிக் கொண்டு கூட செல்ல முடியாத நிலையில் ஆட்டோவை கொண்டு வந்து அள்ளிச் சென்ற பிறகு தான் நவநீத் அவளைத் தன் வண்டி அருகில் அழைத்துச் சென்று சென்டர் ஸ்டேன்ட் போட்டு நிறுத்தி இருந்த வண்டியில் தேவிகாவை இருபக்கமும் கால் போட்டு அமர வைத்தான்.
தொடரும்...