• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 23, 2024
Messages
73
கதைப்போமா 20

“அவள் கூடச் சேர்ந்து உனக்குப் பைத்தியம் புடிச்சிருச்சா?? நான் உன்கிட்ட இருந்து இந்த வார்த்தையை எதிர்பார்க்கல. நான் தப்பு பண்ணல தியா. நான் எதுக்காக இறங்கி போகணும். அதுவும் இவ்வளவு கீழ்த்தரமா?” அவன் குரலே வேறு மாதிரி ஒலித்தது.

அவன் பொறுமையை இழுத்துப் பிடித்துப் பேசுவது அவன் முகத்திலேயே அப்பட்டமாகத் தெரிந்தது. கைகளை மடக்கியவன் ரௌத்திரத்தை கட்டுப்படுத்திக் கொள்வதும் புரிந்தது.

“அந்தப் பொண்ணுக்கு கவுன்சிலிங் தேவங்க. கொஞ்ச நாளைக்கு மட்டும் நம்ம டைவர்ஸ் வாங்கின மாதிரி நடிக்கலாம். அதுக்கப்புறம் அந்தப் பொண்ணுக்கு புரிய வைக்கலாம்” என்று எழுதி அவன் முன்னாள் நீட்டினாள்.

“அவளுக்கெல்லாம் புரிய வைக்கவே முடியாது. அதைத்தான் உனக்கு இவ்வளவு விளக்கமா சொல்லிட்டு இருந்தேன். ஆனா இப்ப என்னால உனக்கே புரிய வைக்க முடியாது போல?” என்றான் வருத்தமான குரலில்.

அவள் மீண்டும் எதையோ எழுதி அவன் முன்பு நீட்ட. அதை வாங்காமல் அவளை முறைத்து விட்டு. அந்த அறையிலிருந்து வெளியே சென்றான்.

தவிப்பாக இருந்தது அவளுக்கு. அவன் பின்னோடு சென்றாள். ஆனால் அவன் வேறொரு அறையினுள்ளே புகுந்து கதவைத் தாழிட்டுக்கொள்ள. செய்வதறியாது விழித்தவள். மகனுடன் வந்து அமர்ந்து கொண்டாள்.

மாலை வக்கீல் வந்திருப்பது தெரிந்ததும் தான் அவன் கீழே இறங்கி வந்தான். ஆனால் அவர் பெரிய குண்டாகத் தூக்கி போட்டார்.

“யூடுப் சேனல்லயும் இன்ஸ்டாலையும் தம்பிய பத்தின விஷயம் வர ஆரம்பிச்சிருச்சு. அப்படியே நாளைக்கு நியூஸ் சேனலையும் வந்துரும். இனிமேல் ரொம்ப கஷ்டம்” என்றார்.

“இப்ப என்ன பண்றது கேசவா?? அந்த அக்கவுண்ட் எல்லாத்தையும் மறைக்க முடியாதா?? எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை” என்று செந்தாமரை கேட்க.

“இது சென்சேஷனல் கேஸ் சார். நம்மளால முடக்க முடியாது. அப்படியே பண்ணாலும் எத்தனை பேர் அக்கவுண்ட்டை முடக்க முடியும்?? காலேஜ்ல இருக்க ஒவ்வொருத்தரும் அவங்க பங்குக்குப் போட ஆரம்பிச்சிடுவாங்க. பெத்தவங்க காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் போர் கொடி தூக்க ஆரம்பிச்சுடுவாங்க. அந்தப் பொண்ணா, அப்படி எல்லாம் ஒன்னும் இல்லன்னு சொன்னா மட்டும் தான் இது எல்லாம் மாறும். நான் அந்தப் பொண்ணு கிட்டயும் போய்ப் பேசி பார்த்தேன். இவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும் தான் அந்தப் பொண்ணு கேஸை வாபஸ் வாங்குவேன்னு சொல்லுது. அவங்க அப்பாவுக்கு இதுல சம்மதம் இல்ல, ஆனா அந்தப் பொண்ணு அதோட முடிவில் திடமா இருக்கு. இல்லனா மீண்டும் தற்கொலை முயற்சி பண்ணுமாம். செத்தாவது அபிமன்யுவை பழிவாங்குவாளாம்” என்று கூறிய நொடி.

அனைவருக்கும் ஐயோ என்று இருந்தது.

அபிமன்யுவின் உள்ளம் எரிமலை குழம்பாகக் கொதித்துக் கொண்டிருக்க. ஆராதியா செய்வதறியாது கையை பிசைந்துகொண்டிருந்தாள். அம்பிகா கதறி அழ ஆரம்பித்துவிட்டார்.

செந்தாமரை அடுத்து என்ன என்று வக்கிலிடம் பேசிக் கொண்டிருக்க.

ஆராத்யா முன்னாள் வந்தாள். “என் ஹஸ்பண்ட் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா இப்போதைக்கு டைவர்ஸ் அப்ளை பண்ணலாம். அதுக்கு ஒன் இயர் நீங்கக் கேளுங்க. அதுக்குள்ள அந்தப் பொண்ணுக்கு கவுன்சிலிங் கொடுக்கலாம்” என்று எழுதிக் கொண்டு வந்து நீட்டினாள்.

அவர் அதைப் படித்து முடிப்பதற்கு முன்பாகவே அவரிடமிருந்து பிடுங்கியவன். அதைப் படித்துவிட்டு அவள் முகத்திலேயே மீண்டும் விட்டெறிந்தான்..

“இருக்கிற பிரச்சினைல நீ வேற டென்ஷன் ஏத்தாத தியா. சரி என்னோட பிரச்சனையை நானே பார்த்துக்குறேன். நான் தப்பு பண்ணல பண்ணவும் மாட்டேன். தப்பு எப்பையும் ஜெயிக்க கூடாது. நான் என்ன ப்ரூப் பண்ணுவேன்” என்றான்.

அவ்வளவுதான் அவன் முடிவில் அவன் திடமாக இருக்க மற்றவர்களுக்கு அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியவில்லை. அவன் யாரிடமும் பேசவில்லை. மீண்டும் தனியாக முதலில் இருந்த அறைக்குள் சென்று புகுந்து கொண்டவன். லேப்டாப்பில் எதையோ உருட்டிக்கொண்டிருந்தான்.

மறுநாள் காலை அவர்கள் இறங்கி வரும்போது. நியூஸ் சேனலில் அதுதான் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

“பேராசிரியருக்குக் கல்லூரி மாணவியுடன் காதல். அவளை நன்றாக உபயோகித்து, அவளுடன் சல்லாபித்தவர். கேள்வி கேட்கக் கூடாது என்று ஒரு ஊமை பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய புகைப்படங்களை எல்லாம் அவர்கள் எங்கிருந்து எடுத்தார்கள் என்று தெரியவில்லை. சந்திரிகா, அபிமன்யு, ஆராத்யா என்று மூவரின் புகைப்படங்களும் செய்தி வாசித்துக் கொண்டிருக்கும்போது, ஓரமாகக் காட்டப்பட்டு கொண்டிருந்தது.

எது நடக்க கூடாது என்பதற்காகத் தன் வாழ்க்கையை பணயம் வைக்க நினைத்தாளோ அது நடந்தே விட்டிருந்தது.

அப்போதுதான் கீழே இறங்கி வந்த அபிமன்யு ஆத்திரத்தில் பூஜாடியை எடுத்து டிவியின் மீது தூக்கி போட்டு உடைத்தான்.

“அப்பா உங்க போட்டோவ டிவில காட்டுறாங்க” என்று மகன் கத்தி கொண்டு இருக்க.

“போதுமா உங்களுக்கெல்லாம்?? இப்ப காலங்காத்தால டிவி பாக்கலன்னு யார் கேட்டாங்க?? என்ன பண்ணனுமோ அதை நானே பண்ணிக்கிறேன். தயவு செஞ்சு நீங்க எல்லாம் அமைதியா இருந்தா போதும்” என்றான்.

ஓரிரு ஆசிரியர்கள் அவனுடைய தோழமைகள் வீட்டில் வந்து அவனை பார்த்துச் சென்றனர். ஆராதியாவும் வேலைக்குச் செல்லவில்லை.

இப்படியே ஒரு வாரம் சென்றது. அவன் வீட்டில் யாரிடமும் முகம் கொடுத்துப் பேசவில்லை. ஹெல்மட்டை மாட்டியவன், இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றான்.

சந்திரிகாவும் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எப்படியும் அவனுடைய மனைவி விவாகரத்து பத்திரத்தோடு வருவாள் என்று நினைத்திருக்க. அதற்குள் அவளுடைய தோழமைகள் அவளுக்கு நன்மை செய்வதாக நினைத்து அவள் எண்ணத்தில் அமிலத்தை ஊற்றி இருந்தனர்.

சந்திரிகாவின் பெற்றோரும் இதை எதிர்பார்க்கவில்லை. தவறு செய்தவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்களே தவிர, அதைப் பெரிதுபடுத்தி தன் மகளின் மானத்தை ஏலம் விட நினைக்கவில்லை. காவல் நிலையம் நீதிமன்றம் என்று சென்று அவனுக்குத் தண்டனை வாங்கி கொடுக்க நினைத்தார்கள். இப்பொழுது எல்லாம் தலைகீழாக மாறி இருந்தது. கேட்பவர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஓய்ந்து போனார்கள்.

அபிமன்யு மேனேஜ்மென்டிடம் பேசிப் பார்த்தான். அவர்கள் நிர்வாகமும் இதில் பெரிதாக மாட்டப்பட்டு இருக்க. தங்களால் உதவ முடியாதென்று கைவிரித்து விட்டனர். “எனக்காகப் பொய் சொல்ல வேண்டாம் உண்மையை மட்டும் தேவையானபோது சொன்னா போதும்” என்று அழுத்தமாகக் கூறிவிட்டு அங்கிருந்தும் அகன்று விட்டான்.


சட்டங்கள் எப்பொழுதும் பெண்களுக்குச் சாதகமாக தான் இருக்கிறது. அதில் பல பெண்கள் உபயோகப்பட்டாலும், சில ஆண்கள் தவறு செய்யாமல் சிலுவை சுமக்கிறார்கள்.

அபிமன்யுவும் விடாது தன்னை நிரூபிப்பதற்காக அலைந்து திரிந்து முயன்றுகொண்டிருந்தான். இதற்கு நடுவில் பொதுமக்களிடம் கேள்வி கேட்கிறேன் என்று, என்ன நடந்துது என்றே தெரியாமல், ஆளாளுக்கு தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள எல்லாமே அபிமன்யுவை தவறானவனாகச் சித்தரித்துக் கொண்டிருந்தது.

குழலிக் கவிச்சந்திரனை வம்பு இழுக்க. பொறுமையை இழந்து அவனும் அவள்மீது கையை நீட்டி விட. கோபித்துக் கொண்டு அவள் தாய் வீட்டிற்கு சென்று விட்டாள். விசாலாட்சிக்கு மகனைப் பார்ப்பதா மகளைப் பார்ப்பதா என்று தெரியவில்லை. மகனுடன் வந்து மகளை ஆறுதல் படுத்தி விட்டுச் சென்றார். அதற்குமே இந்த வழக்கில் எப்படி இறங்குவது என்று கவிச்சந்திரனுக்கும் புரியவில்லை. இன்னுமே தங்கை வைத்திருக்கும் நம்பிக்கை அவனுக்கு எழவில்லை. ஆனால் தங்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நினைத்தான்.

……


நீதிமன்றத்தில் அபிமன்யு ஒரு புறம் நின்று இருக்க. அவனுக்கு நேரெதிராகச் சந்திரிகா நின்றுகொண்டிருந்தாள்.

வாதி, பிரதிவாதி என்று இரு பக்கமும் வக்கீல்கள் வாதிட்டுக் கொண்டிருந்தனர்.

“இந்தப் பொண்ணு உங்க மேல சாட்டி இருக்கிற குற்றங்களை ஒத்துக்குறீங்களா?” என்று நீதிபதி அபிமன்யுவை பார்த்துக் கேட்க.

“நோ யுவர் ஆனர். இந்தப் பொண்ணுக்கும் எனக்குமான சம்பந்தம், ஆசிரியர் மாணவிக்குமான சம்பந்தம் மட்டும் தான். இந்தப் பொண்ணு சொல்றது எல்லாமே பொய். இந்தப் பொண்ணு காலேஜ்ல சேரும்போதே நான் கல்யாணமானவன் தான். இப்பயும் கல்யாணமானவன் தான். என் மனைவிய பிரசவத்துல நான் தவற விட்டுட்டேன். ஆனாலும் கண்ணியமா தான் இத்தனை வருஷம் வாழ்ந்திட்டு இருக்கேன். எனக்கு ஒரு துணை தேடிக் கிட்டேன் தான். ஆனா அது முழுக்க முழுக்க என்னோட பர்சனல். வார்த்தைக்காகக் கூட இந்தப் பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறத பத்தி பேசுறதே தவறுன்னு நினைக்கிறவன் நான். மாணவியை மனைவியாகிக்க நான் எப்போதும் நினைத்தது இல்லை. நினைக்கவும் மாட்டேன். இந்தப் பொண்ணு சொல்றது உண்மையா இருந்தா நான் மறு கல்யாணம் வேற பொண்ணை பண்ணிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் பொண்ணு என் பின்னாடி காலேஜ்ல சுத்துறது காலேஜ்ல இருக்க பசங்களுக்கு தெரியும். நான் கண்டிச்சதும் இவளோட ஃப்ரெண்ட்ஸ்ங்களுக்கு தெரியும். மேனேஜ்மென்ட்ல நான் இவள பத்தி கம்பளைண்ட் கூடப் பண்ணி இருக்கேன். அது சம்பந்தமான டாக்குமெண்ட்ஸ என்னோட வக்கீல் ஆஜர் படுத்தி இருக்காரு. அந்தப் பொண்ணும் நானும் பேசுற சிசிடிவி ஃபுட்டேஜையும் சப்மிட் பண்ணி இருக்கேன். அதுல என்னோட முகத்தைப் பாருங்க. நான் திட்டுறனா இல்ல கொஞ்சுறனான்னு தெரியும். எனக்கும் இந்தப் பொண்ணுக்கும் சம்பந்தம் இருக்குனா நான் கம்ப்ளைன்ட் பண்ணும் போதே இந்தப் பொண்ணு அதை மேனேஜ்மெண்ட் கிட்ட சொல்லி இருப்பாளே??. ஏன் சொல்லலனா, அப்படி ஒன்னு இல்லவே இல்ல?? இந்தப் பொண்ணு முழுக்க முழுக்க பொய் சொல்றாள்” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே.
 
Member
Joined
Dec 23, 2024
Messages
73
சந்திரிகா இடை புகுந்தாள். “ நான் என்னை மேரேஜ் பண்ணிக்க சொல்லிக் கேட்கும் போது தான் அவரு திட்டினார். சோ அதுதான் சிசிடிவி ஃபுட்டேஜ்ல பதிவாகி இருக்கும்” என்றாள் அவசரமாக.



“சார் எனக்கும் இவளுக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றதுக்கு ஒரு ஆதாரமும் இல்ல. வெரும் வாய் வார்த்தையாய் சொல்லிட்டு இருக்காள். அரெஸ்ட் பண்றதுக்கு எவிடன்ஸ் தேவையில்ல, ஆனா பனிஷ் பண்றதுக்கு எவிடன்ஸ் தேவை. என்னை நான் ப்ரூஃப் பண்றதுக்காக எனக்குத் தெரிஞ்ச ஆதாரங்களைச் சப்மிட் பண்ணி இருக்கேன். இதுக்கு மேல காலேஜ் மேனேஜ்மென்ட், ஸ்டுடென்ட்ஸ் ப்ரொபசர்ஸ் இந்த மாதிரி நிறைய ஆதாரங்கள் இருக்கு. அதை எல்லாம் விசாரிக்கச் சொல்லுங்க அப்பத்தான் நான் எந்தத் தப்பும் பண்ணலன்னு இந்த நீதிமன்றத்திற்கு தெரியவரும்” என்றான் அபிமன்யு.



அது படங்களில் வரும் நீதிமன்றம்போல எல்லாம் இல்லை. நீதிபதி மட்டுமே அமர்ந்திருந்தார்.



வக்கீல்களில் சிலர் அமர்ந்திருந்தார்கள். மத்தபடி கூண்டுகள் எல்லாம் இல்லை. வாதி பிரதிவாதி எல்லாம் அங்கே சாதாரணமாக நின்றபடி இருக்க. அவர்களுடைய வக்கீலும் அப்படியேதான் நின்றபடி பேசிக் கொண்டிருந்தனர். காவலர்களும் வழக்கு சம்பந்தப்பட்டவர்களும் சற்று பின்னால் நின்றிருந்தனர். அதில் ஒருத்தியாய் தவிப்பாய் நின்றுகொண்டிருந்தாள் ஆராதியா.



கண்ணீருடன் அம்பிகா அவள் அருகிலேயே நின்று இருக்க. செந்தாமரை மகனுக்கு அருகில் சற்று இடைவெளி விட்டு நின்று இருந்தார். கவிச்சந்திரனும் விசாலாட்சியும் சற்று ஒதுக்குப்புறமாக நின்று இருந்தனர்.



"அவன் சொல்ற ஆதாரங்களை எல்லாம் போலீஸ் தரப்புல விசாரிச்சு இருக்கீங்களா?” என்று நீதிபதி கேட்க.



“இல்லை” என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.



“ அவர் சொல்ற இடத்தில எல்லாம் விசாரிச்சு அடுத்த வாரத்துக்குள்ள கோர்ட்டுல சப்மிட் பண்ணுங்க. இந்த வழக்கு அடுத்த வாரம் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என்று கூறிவிட்டு அடுத்த வழக்கை அவர் பார்க்க ஆரம்பித்து விட.



சந்திரிகாவை முறைத்துக் கொண்டே அபிமன்யு வெளியில் சென்றான்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top