Member
- Joined
- Dec 23, 2024
- Messages
- 73
- Thread Author
- #1
கதைப்போமா 23
“நீங்க வேலைய விட்டு இருக்க வேண்டாம்” என்று ஆராதியா டைப் செய்து அவனிடம் காட்டினாள்.
“வேற ஆப்ஷன் இல்ல தியா” என்றான் அபிமன்யு.
“உங்களோட இன்னோசன்ஸ் வெளியாயிடுச்சுல்ல. உண்மையை எப்பயும் திரையிட்டு மறைக்க முடியாது” என்று அவள் காட்டினாள்.
அவள் பக்கம் திரும்பி அமர்ந்தவன். அவளை பார்த்துப் புன்னகைத்தான். “நான் என்ன ப்ரூப் பண்ணிட்டேன்றதை விட, என்ன ப்ரூப் பண்றதுக்காக நிறைய பேர் பாடுபட்டு இருக்கீங்க. சம்பந்தம் இல்லாதவங்க கூட ஆஜராகி இருக்காங்க. ஆனா என்னோட ஆசை, என் வாழ்க்கையை, என் எதிர்காலத்தைக் கலைக்குதுனா. என்னால் அதைக் குறைச்சுக்க முடியும். இப்பயும் நான் ஓய்ந்து போகலையே?? ஆன்லைன் கிளாஸ் எடுத்துட்டுதானே இருக்கேன்?” என்றான்.
“ஆனா நேர்ல சொல்லிக் கொடுக்குற மாதிரி வராதுல்ல. டியூஷன் சென்டர் கூட வைக்கலாம். ஆனா அதுவும் வேணாம்னு சொல்லிட்டீங்க” என்று வாய்ஸ் கன்வெர்ட்டரில் அவள் கூறி இருக்க.
“இல்ல தியா எதுவுமே சரி வராது. என்ன கேட்டா, ஆண்கள் ஆசிரியராவே இருக்க கூடாது போல. ஒரு சில ஆண் ஆசிரியர்களால் பல ஆண் ஆசிரியர்கள் பாதிக்கப்படுறாங்க. சந்தேகக் கண்ணூடவே பார்க்க ஆரம்பிக்கிறாங்க. அதுக்காக எல்லாரும் நல்லவங்க, எல்லாரும் கெட்டவங்கன்னு சொல்ல வரல. ஆனா சொசைட்டி இப்ப அப்படித்தான் மாறிட்டு இருக்கு. ஒன்னு ஸ்டுடென்ட்ஸ் தப்பு பண்றாங்க. இல்ல ஆசிரியர்கள் தப்பு பண்றாங்க. ஆனா உன்னதமான இந்த ஆசிரியர் தொழில் பாதிக்கப்படக் கூடாது. என்கிட்ட படிச்சவங்கள்ள நிறைய பேர் எங்கெங்கோ நல்லபடியா இருக்காங்க. அவங்கள சிலர் முன்னாடி எனக்கு மெயில் அனுப்பி இருக்காங்க. இப்போ சிலர் அனுப்புறாங்க. அதுவும் இந்தக் கேஸ பத்தி. என்னோட ஆசைக்குக் கிட்டத்தட்ட எட்டு வருஷம் நான் பேராசிரியரா இருந்துட்டேன். போதும். ஒன்ஸ் இந்தப் பேரு வந்துட்டா எல்லாரும் என்ன பாக்குற கண்ணோட்டம் மாறிடும். அஃப்கோர்ஸ் என்ன நான் நிரூபிச்சிட்டேன். எனக்காக நிறைய பேர் நிரூபிக்கப் போராடி இருக்காங்க. பழைய வேண்டாத வீடியோஸ் எல்லாம் டெலீட் ஆயிடுச்சு. ஆனாலும் யாராவது என்னை உத்து பார்த்தா கூட எனக்குத் தப்பா தான் தோணுது” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே, இருவர் அவனைப் பார்த்துக் கொண்டே செல்வதை அவன் கவனித்தான்.
“அதோ பாரு, அவங்க என்ன மைண்ட் செட்டில் என்ன பார்க்கிறாங்கன்னு எனக்குத் தெரியாது. ஆனா எனக்குத் தப்பா பாக்குற மாதிரி தான் தோணுது. அதுதான் கொஞ்ச நாள் ஃபாரின்ல போயி ஒர்க் பண்ணலாம்னு டிசைட் பண்ணிட்டேன். அப்பா கிட்ட உன்னோட ட்ரீட்மென்ட்காகன்னு சொல்லிட்டேன். என்னோட பிரண்டு எனக்கான ஜாப் ரெடி பண்ணிட்டான். பைவ் ஆர் டேன் இயர்ஸ் அங்க இருந்துட்டு வரலாம். அதுக்கப்புறம் எல்லாம் ஓரளவுக்கு கண்ட்ரோலுக்கு வந்துரும்னு நினைக்கிறேன்” என்றான்.
“ஆனா அத்தையும் மாமாவும் இங்க தனியா இருப்பாங்களே?? நம்மள விட்டா அவங்களுக்கு யார் இருக்காங்க?” என்று அவள் டைப் செய்து இருக்க.
“நீ சொல்றது சரிதான். ஆனா நான் எல்லாத்தையும் மறக்கணும். இங்கே இருந்தா, இவங்க எல்லாம் பாக்குற பார்வையில. எதையுமே என்னால மறக்க முடியல தியா. நாம வெக்கேஷனுக்கு வந்துட்டு போலாம் அவங்க நம்ம கூட வந்து இருக்குற மாதிரியும் ஏற்பாடு பண்ணலாம். ஆனா என்னால இந்தியால இருக்க முடியாதுன்னு தோணுது. என்கிட்ட பணம் இருக்கிறதனால, இது சாத்தியமாகுது இதுவும் இல்லாதவங்க என்ன பண்ணுவாங்கன்னு சொல்லு??. அப்பாவும் அம்மாவும் என்னோட சிட்டுவேஷன புரிஞ்சுகிட்டாங்க” என்றான். அதற்குள் செவிலியர் அவர்களை உள்ளே அழைக்க.
அவர்கள் இருவரும் மருத்துவர் இருந்த அறைக்குள் சென்றார்கள். அவளுக்கான பல பரிசோதனைகள் நடந்தது.
“இவங்களுக்கு குரல் வருவதற்கான வாய்ப்பு 40% தான் இருக்கு. சில நேரங்கள்ல அது அவங்களை இன்னும் வீகாக்கிடலாம். முதலையே நான் இந்த ஆபரேஷனுக்காகக் கேட்டேன். பட் இவங்க அம்மா வேணான்னு சொல்லிட்டாங்க. இப்ப ஆப்பரேஷனுக்கு ரெடி பண்ணவா?” என்று மருத்துவர் கேட்க.
“இல்ல டாக்டர், நாங்க இன்னும் 15 டேஸ்ல ட்ராவல் பண்ண இருக்கோம். எனக்கு இவளோட ஹெல்த் கண்டிஷன் இப்ப எப்படி இருக்குன்னு தெரியனும். அதுக்காகத் தான் எல்லா செக்கப்பும் பண்ணேன்” என்றான்.
அப்போதே அவருக்குப் புரிந்து விட்டது. அவன் இந்த மருத்துவத்தை வெளிநாட்டில் பார்க்கப் போகிறான் என்று. அதற்கு மேல் அவர் ஒன்றும் சொல்லவில்லை
இருவரும் காரில் ஏறிப் புறப்பட்டார்கள். “போறதுக்கு முன்னாடி அம்மா அப்பாவைப் பார்த்துட்டு போகலாமா?” என்று அவள் கேட்டிருக்க. திரும்பி அவளை முறைத்துப் பார்த்தான்.
“அவங்க எனக்காக வந்து சாட்சி சொன்னாங்க. உண்மையிலேயே அதை நானும் எதிர்பார்க்கலை தான். அதுக்காக அவங்க கிட்ட நன்றி சொல்லியாச்சு. நீயும் அவங்க கிட்ட பேசிட்டு இருக்க. ஐ நோத்தட். பட் எதுக்காக அவங்க வீட்டுக்கு போய்ப் பார்க்கணும்னு நினைக்குற? “ என்று கேட்டான்.
“நீங்க உங்க மனைவியை இழந்து இருக்க மாதிரி, அவங்க அவங்களுடைய மகளை இழந்து இருக்காங்க. அவங்களுக்குன்னு இருக்கிறது அவங்களோட பேரன் மட்டும் தானே. என்கிட்டயும் ரொம்ப அன்பா பழகுறாங்க. என்ன அவங்க மகளா நினைக்கிறதா சொன்னாங்க. ஊருக்குப் போனா அதுக்கப்புறம் எப்ப வருவோம்னு தெரியாது. நம்ம பேரண்ட்ஸ் கிட்ட நாம பேசிகிட்டு தான் இருப்போம். போகறதுக்கு முன்னாடி நேர்ல போயி அவங்களுக்கு நன்றி சொல்லிட்டு வந்தா அவங்களுக்கும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும். அவங்கள நேர்ல பார்த்த மாதிரி இருக்கும். அதுதான் மரியாதைன்னு தோணுது” என்று அவள் பெரிதாக டைப் செய்து இருக்க.
அவன் வாகனம் ஓட்டிக் கொண்டே அதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவள் சொல்வதில் தவறில்லை என்று தோன்றியது. சரி, என்று தலையசைத்தான். ‘உனக்காக’ என்றான்.
………
குழந்தை உறங்கி விட்டிருந்தான் அவனுக்கு அவ்வளவு சந்தோஷம் வெளிநாடு செல்லப் போகிறான் என்று தெரிந்து.துணிகளை அடுக்கி விட்டு குழந்தையைப் பார்த்தாள் ஆராதியா.
“ பெரியவங்க புரிஞ்சுக்கலாம் சின்னப் பசங்க மனசுல தவறான விதை விழுந்துச்சுன்னா ஒண்ணுமே பண்ண முடியாது தியா. ஆத்ரேஷ் கிட்ட யாராவது ஏதாவது தவறாகச் சொல்லிட்டாலும் அது அவன் மனசுல வடுவா பதிஞ்சுடும். ஒரு 10 இயர்ஸ் கழிச்சு நாம வரும்போது அவன் வளர்ந்து இருப்பான். அப்போ அவன் புரியற பக்குவத்துல இருப்பான். இந்தப் பேச்சுக்கள் எல்லாம் அடங்கி இருக்கும். ஏன்னா என் மேல தவறு இல்லை. எனக்கு இது சரின்னு படுது. உன்கிட்ட கேட்டுட்டு தான் எல்லாம் பண்ணேன். இப்ப திரும்பவும் ஏன் இப்படி கேட்குற?? “ என்று கேட்ட கணவனின் ஞாபகம் வந்து. திரும்பிப் பார்த்தாள்.
அவன் பால்கனியில் கைகளைக் கட்டிக்கொண்டு நின்று இருந்தான்
அவனை நோக்கிச் சென்றாள். அவளுடைய கொலுசொலி அவள் வருகிறாள் என்று அவனுக்கு உணர்த்தினாலும், இருள் சூழ்ந்த அந்த வானத்தைப் பார்ப்பது அவனுக்குப் பிடித்திருந்தது. யாரோ ஒரு பெண்ணின் தவறுக்காக அவன் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இடத்தை விட்டுச் செல்கிறான். அது அவனுக்கும் வருத்தத்தைக் கொடுத்திருந்தது.
ஆனால் அவன் எதிர்பார்க்காத ஒன்றை அவள் செய்திருந்தாள். பின்னால் இருந்து அவனைக் கட்டி அணைத்து இருந்தாள். அபிமன்யுவிற்கு இன்பமான அதிர்ச்சி தான்.
தன் நெஞ்சில் இருந்த அவளுடைய கரத்தை எடுத்து அதில் மெல்ல முத்தம் பதித்தான். அதில் அவள் உடல் சிலிர்த்து அடங்கியது. அவனுக்குள்ளும் புது இரத்த ஓட்டம் பாய்ந்தது. அவளும் அவன் முதுகில் முத்தம் பதித்திருக்க. அவன் உடலிலும் மின்சாரம் பாய்ந்தது
ஒரு கையை அழுத்தமாகப் பற்றியபடி அவளை இழுத்துக் கொண்டே, அவனும் திரும்பித் தன் அணைப்பிற்குள் அவளைக் கொண்டு வந்திருந்தான்.
அவளும் வாகாக அவனைக் கட்டிக் கொண்டிருக்க. உச்சம் தலையில் முத்தம் பதித்தான். தன்னவன் என்ற உரிமையோடு அவளும் அவன் நெஞ்சினில் தலை சாய்த்து அங்கேயும் தன் அச்சாரத்தை நிறுவியிருக்க. அதற்கு மேல் அவர்கள் இருவருக்கும் தடைகள் இருந்திருக்கவில்லை தடுப்பதற்கு.
குழந்தை உறங்குகிறானா? என்று கவனித்து விட்டு அவளைத் தூக்கிக்கொண்டு பக்கத்து அறைக்குச் சென்று இருந்தான் அபிமன்யு.
குழந்தை இருக்கும் தம்பதியினருக்கு இதுவும் அத்தியாவசியமாகிறது.
இருவரும் தங்கள் உலகில் திளைத்திருக்க. அப்படியே உறங்கிப் போனார்கள். விடியலில் அவள் அருகில் இல்லாததை உணர்ந்து எழுந்து அமர்ந்தவன். அவளைத் தேடிக்கொண்டு தங்கள் அறைக்குள் வந்தான். மகனைப் பிடித்தபடி உறங்கிக் கொண்டிருந்தவளை பார்த்தான். மனம் நெகிழ்வாக இருந்தது.
மகன் தன்னைத் தேடுவான் என்று அவனைத் தேடி வந்திருக்கும் தன் மனையாளை பார்த்தான். அவள் தனக்காகப் பாடுபட்டது எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அவன் நினைவுகளில் வந்தது. கணவன் மனைவிக்குள் நம்பிக்கை என்பது மிக முக்கியம். அதைக் காப்பாற்றுவதும் இருவரின் கடமையாகும். அவள் நம்பிக்கை வைத்தாள் என்றால், அந்த நம்பிக்கையை அவனும் காப்பாற்றி இருந்தான் அல்லவா??. எல்லாம் சொற்ப நாட்களில் நடந்தாலும், அது அவர்களின் பிணைப்பை அதிகமாக இணைத்திருந்தது. காதலையும் அவர்களுக்குள் அதிகமாகவே விதைத்திருந்தது.
“எல்லாம் அவங்களுக்குன்னு ஒரு குழந்தை பிறக்கிற வரைக்கும் தான். இப்படி ரொம்ப அன்பா பார்த்துப்பாங்க. அப்புறம் எப்படி இருப்பாங்கன்னு சொல்ல முடியாது? உங்களுக்குன்னு ஒரு குழந்தைங்க வேணாம்” என்றான் தோழன் ஒருவன்.
அவன் அப்போது சொன்னது. இவனுக்கு அந்த நிமிடத்தில் ஞாபகம் வந்தது. ஆனால், ‘ அவனுடைய தியா அப்படி செய்யமாட்டாள்’ என்று அவள்மீது நம்பிக்கை இருந்தது.
இதோ, அதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு. இவ்வளவு நேரம் தன்னோடு இசைந்திருந்தவள். மகன் தனியாக இருப்பான் என்று வந்திருக்கிறாளே?. அவனும் அவர்களை நோக்கிச் சென்று மனைவியை அணைத்தார் போலப் படுத்துக் கொண்டான். உறக்கத்தில் இருந்தாலும் அது அவளுக்குப் புரிந்தது. மகனின் மீது வலது கையை வைத்துப் பிடித்திருந்தவள். இடது கையைக் கணவனின் கரம்மீது வைத்தாள்.
குடும்பமாக அவர்கள் மன நிறைவுடன் உறங்குவதை, ஜன்னல் வழியாக வெண்ணிலவு பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது. சுபத்தமான காற்று அவர்களைத் தாலாட்ட, இன்னும் ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச் சென்றது.
…..