Member
- Joined
- Dec 23, 2024
- Messages
- 73
- Thread Author
- #1
கதைப்போமா 8
திருமண ஏற்பாடுகள் எல்லாம் மின்னல் வேகத்தில் தான் நடந்து கொண்டிருந்தது. இங்குக் கவிச்சந்திரன் எல்லாவற்றையும் தனியாகக் கையாண்டாலும், திறனாகவே கையாண்டான் என்று கூறலாம். தனக்கு ஏதாவது சந்தேகம் என்றால் உடனே அபிமன்யுவிற்கு அழைத்துக் கேட்டு தெளிவு பெற்று கொள்வான். வீட்டில் ஒவ்வொன்றையும் தாயை கேட்டுத் தான் செய்தான்.
“நான் உங்களை எப்படி கூப்பிடுறது?” திடீரென்று ஒரு நாள் சந்தேகம் கேட்டான் கவிச்சந்திரன். அன்று சமையல்காரருக்கு முன்பணம் செலுத்த இருவருமே சென்றிருந்தனர்.
“ஏன் இப்ப எப்படி கூப்பிடுறியோ, அதே மாதிரி கூப்பிடு” என்று அபிமன்யு பதிலளிக்க.
“நான் உங்களைக் கூப்பிடவே இல்லையே?” என்றான் கவிச்சந்திரன்.
வசீகரமான புன்னகையை வெளிப்படுத்தியவன். “நியாயமா நான் உன் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கப் போறேன். சோ உனக்கு மாப்பிள்ளை தான் ஆவேன். ஆனா நான் உன்னைவிட வயசுல பெரியவன். அதனால மாமான்னு கூப்பிடலாம். பட் நான் அவ்வளவு மரியாதை எதிர்பார்க்கல. நீ என் பேரை சொல்லிக் கூப்பிட்டாலும் சரி, இல்ல மாமான்னு கூப்பிட்டாலும் சரி, இல்ல இப்ப போலக் கூப்பிடவே இல்லனாலும் சரி, எனக்குப் பிரச்சனை இல்லை. புரிதல் மனசுக்கும் உறவுக்கும் தான் இருக்கணுமே தவிர பேருக்கு இல்ல” என்றான் அபிமன்யு.
“உங்கள பேச்சுல வெல்ல முடியாது போல. நீங்க வாத்தியார் வேலைக்குப் பதிலா வக்கீல் வேலைக்குப் போயிருந்தா எல்லா கேசையும் ஜெயிச்சிருப்பீங்க” என்று அதே புன்னகையுடன் கூறினான் கவிச்சந்திரன்.
“ஆனா, எனக்கு வாத்தியார் வேலை தான் புடிச்சிருக்கு. அப்பா ஆரம்பிச்ச ஐயன் அண்ட் ஸ்டீல் இண்டஸ்ட்ரி நல்லாவே போகுது. அது அவர் ஆரம்பிச்சது. கடைசி வரைக்கும் அது அவர்தான் பார்த்துக்கணும். எனக்குன்னு ஒரு தனித்தன்மையை உருவாக்கிக்கணும்னு நினைச்சேன். படிக்கிறதுக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால அதிகமா படிச்சேன். பாடம் சொல்லிக் கொடுக்கிறது எனக்குப் பிடிச்சிருக்கு அதனால இந்த வாத்தியார் தொழிலைத் தேர்ந்தெடுத்தேன். இதைத் தொழிலா இல்ல, சேவையா பாக்குறேன். கண்டிப்பா இதுக்கான சம்பாத்தியத்தை வாங்குறேன் தான். பட் எந்த நேரத்துல யார் சந்தேகம் கேட்டாலும் அவங்களுக்கு சொல்லிக் கொடுக்க நான் தயங்குவதில்லை. எதுவும் பிரீயா கிடைச்சா அதோட மதிப்பு இருக்காதுன்னு சொல்லுவாங்க. அது போலத் தான் இந்த வாத்தியார் தொழிலும் இதைச் சேவை மனப்பான்மையோடு செஞ்சா மட்டும்தான் பசங்களுக்கு உண்மையா சொல்லிக் கொடுக்க முடியும். அப்பதான் அவங்களுக்கு நாம சொல்லிக் கொடுக்கிறதும் புரியும்” என்றான்.
“ஊர்ல இருக்க பசங்களுக்கு எல்லாம் சொல்லிக் கொடுக்குறதுக்கு நீங்க இருக்கும்போது. உங்க பையனுக்குச் சொல்லிக் கொடுக்கிறதுக்கு ஆராதியாவால் முடியாதுன்னு சொன்னாங்க பாருங்க. என்ன சொல்றது” என்றபடி சிரித்தான் கவிச்சந்திரன்.
“அவங்க சார்பா நான் மன்னிப்பு கேட்டுட்டேன் கவி. அந்தக் காலத்து மனுஷங்களை மாத்த முடியாது. எங்க அம்மா ரொம்ப அழுத்தமானவங்க. அவங்க நினைக்கிறது தான் நடக்கணும்னு நினைப்பாங்க. என்கிட்ட அந்த வேலை நடக்காது அதனால எங்க அப்பாவையே உருட்டி மெரட்டுவாங்க. என் கல்யாண விஷயத்திலும் அவங்க பொறுப்பெடுத்துக்கணும்னு நினைக்கிறது எல்லா தாய்மார்களும் நினைக்கிற ஒரு நிகழ்வு தான். என்னோட முதல் திருமணத்தில் நடந்த பிரச்சனைனால அவங்களும் ரொம்பவே பாதிக்கப்பட்டு இருந்தாங்க. நம்மள நம்பி ஒரு பொறுப்பு ஒப்படைச்சான் ஆனா அதுல நாம போட்ட விட்டுட்டோம்னு. அதையும் சேர்த்து வச்சு பேசிட்டாங்க. அதுக்காக அவங்க பேசுனதை சரின்னு சொல்ல வரல, ஒரு பொண்ணா இன்னொரு பொண்ணோட மனசு புரிஞ்சுகிட்டு இருந்திருக்கணும். ஆனா எல்லார்கிட்டயும் அதை நாம எதிர்பார்க்க முடியாது கவி” என்று முடித்தான் அபிமன்யு.
“நான் சாதாரணமா தான் மாமா சொன்னேன் உங்கள ஹர்ட் பண்ணனுன்றதுக்காகச் சொல்லல. வயசுல பெரியவரான உங்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடுறது உங்களுக்கு மரியாதையா இருக்காது. ஊருக்கே வாத்தியாரா இருக்கீங்க. உங்களுக்கு மரியாதை கொடுக்கிறது என்னோட கடமையும் கூட. என் தங்கச்சி கூட ஏத்துப்பாள். ஆனா எங்க அம்மா என் காதைப் புடிச்சு திரிகிடுவாங்க” என்று கவிச்சந்திரன் சிரித்துக்கொண்டே கூறினான்.
அவன் மாமா என்று அழைத்ததில் புன்னகை மாறாமல் நின்றவன். “யாரு??, உங்கம்மா திருகுவாங்களா?? எங்க அம்மானு சொன்னாலும் நம்பற மாதிரி இருக்கும்” என்று கூறிவிட்டு சிரித்தான் அபிமன்யு. அவன் புன்னகையையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் கவிச்சந்திரன்.
“என்ன கவி அப்படி பாக்குற?” என்று சிறு வெட்கத்தோடு அபிமன்யு கேட்க.
“நீங்க அழகு தான் மாமா, உங்க போட்டோவ பார்க்கும்போதே தெரிஞ்சது. சிரிச்சா இன்னுமே அழகா இருக்கீங்க. அதான் என் தங்கச்சி கவுந்துட்டா போல” என்று லகுவாகக் கூறினான் கவிச்சந்திரன்.
சிறிது நாட்களுக்கு முன்பு இவனுடன் இப்படி இலகுவாகப் பேச முடியும் என்று யாராவது சொல்லி இருந்தால் கூட நம்பி இருக்க மாட்டான் ஆனால் இன்று எல்லாமே சாத்தியமாகி இருந்தது. முக்கியமாக அது அபிமன்யுவின் குணத்தால் தான் சாத்தியமானது என்று கூறலாம். அபிமன்யுவின் தாயின் மீது அவ்வளவு கோபம் இருந்தது கவிச்சந்திரனுக்கு. ஆனால் எதிலும் அவரை உள்ளே இழுக்காமல் அவனும் அவனுடைய தந்தையுமே திருமண ஏற்பாடுகளில் முன் நின்று செய்ய. கவிக்கும் அது வசதியாகி போனது.
………
திருமண நாளும் நெருங்கி இருந்தது. ஆராத்யாவுக்கு குறையாத பதட்டம், அபிமன்யுவிற்குமே இருந்தது. ஏற்கனவே இதுபோல ஒரு மேடை ஏறியவன் தான் அவன். சிம்பிளாகத் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று தான் முதலில் நினைத்தான். ஆனால் அதற்குக் கவிச்சந்திரன் ஒத்துக் கொள்ளவில்லை. அபிமன்யுவிற்காக, ஆராதியாவும் பேசினாள். ஆனால் தன் தாய் தந்தையின் ஆசை அதைத் தன்னால் தவிர்க்க முடியாது என்று கூறி விட்டான். அபிமன்யுவாலும் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை. ஆனால் இரண்டாவது முறையாக மேடை ஏறுவது அவனுக்கும் அதிகமான சங்கடத்தைக் கொடுத்திருந்தது. நாம் நினைப்பதை எல்லா இடத்திலும் செயல்படுத்த முடியாதே, சில இடங்களில் அவர்கள் இறங்கிப் போனால் சில இடங்களில் நாமும் இறங்கி போக வேண்டியது இருக்கும் அதுதானே வாழ்க்கை. அவனுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் ஆராதியாவிற்காகக் கவிச்சந்திரனுக்காக அவர்கள் பெற்றோருக்காக அதை ஏற்று கொண்டான்.
தூரத்திலிருந்து வரும் உறவினர்கள் எல்லாம் அபிமன்யுவின் வீட்டை முற்றுகையிட்டிருக்க. பெரும்பாலும் அதில் புறம் தான் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் பேசியது கூட அவனுக்குப் பிரச்சனை இல்லை. அவர்களோடு சேர்த்து அவனுடைய தாயும் பேசியதுதான் அபிமன்யுவிற்கு கடுப்பை ஏற்றிக் கொண்டிருந்தது.
ஆம் அவர் ஆராத்யாவின் குறைகளைத் தான் நீட்டி முளக்கி பேசிக்கொண்டிருந்தார்.
“நான் எவ்வளவோ சொன்னேன். இந்தப் பொண்ணு வேணாம், இதைவிட அழகான நல்ல பொண்ணா கட்டி வைக்கிறேனு. என் பையன் எங்க கேட்டான்??. ஊமச்சி அவனுக்கு என்ன சொக்கு பொடி போட்டாளோ, கட்டுனா இவளை மட்டும் தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நிக்கிறான் என்னத்த பண்றது?“, என்று தாடையில் கையை வைத்தபடி சலித்துக் கொண்டார் அம்பிகா.
“நான் சென்னையிலிருந்து ஒரு வரன் சொல்லி இருந்தேனே அந்த வரனை முடித்து இருக்கலாம். அந்தப் பொண்ணுக்கும் இது முதல் திருமணம். இவங்களைவிடவும் சொத்து பத்து அதிகம்.. நம்ப அபிமன்யு இருக்கிற அழகுக்கு ஒரு ஊமச்சிக்கு போய்க் கல்யாணம் பண்ணி வைக்கிறீங்களே?”, என்று சொந்தங்களில் ஒருவர், எரிகின்ற தீயில் எண்ணெயை ஊற்றிக்கொண்டிருந்தார்.
அதற்கு அம்பிகாவும் ஏதோ பேச ஆரம்பித்து விட.
“பாட்டி அவங்க எங்க அம்மா” என்று ஆத்ரேஷ் சினங்கினான்.
அதற்கும் சிறியவனை கண்டித்து அவன் காதைத் திருகினார் அம்பிகா.
“ஆத்ரேஷ்” என்று அபிமன்யு அழைக்க. சிணுங்கிக்கொண்டே சிறியவன் தந்தையிடம் ஓடினான். அவனும் ஒவ்வொன்றையும் அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறான். அனைவரின் முன்பும் தாயை கண்டிக்கக் கூடாது என்று பொறுமையாக இருக்கிறான். ஆனால் அம்பிகா அவன் பொறுமையை கடைந்தெடுத்துக் கொண்டிருந்தார். இது தொடர்ந்தாள் அவள் வேறு முயற்சி தான் செய்தாக வேண்டும். ஆனால் எதுவாகினும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தான். அவர்களுக்கும் அவனை விட்டால் வேறு யாரும் இல்லை. தமக்கை திருமணம் செய்து மாமியார் வீட்டோடு செட்டிலாகி விட. இவர் இங்கு மாமியார் கெத்து காட்டிக் கொண்டிருந்தார்.