• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 23, 2024
Messages
73
கதைப்போமா 9

ஐயர் மந்திரங்களை ஓதிக் கொண்டிருக்க. அவர் சொன்னபடி செய்து கொண்டிருந்தவனுக்கு முதல் திருமணமும், அவனுடைய முன்னாள் மனைவியும் நினைவலைகளில் வந்து சென்றார்கள்.
என்னதான் அந்தத் திருமணத்தில் கசடுகள் அதிகமாக இருந்தாலும், அவனுடைய மனைவி ப்ரீத்தியின் காதலில் ஒரு துளி அப்பழுக்கையும் பார்க்க முடியாது.

அவனும் அவளுக்கு நிகரான காதலை வைத்து இருந்தான் என்பதில் ஐயமில்லை. அவள் செய்த ஒரே தவறு, கணவனிடம் அவள் உடல் நலத்தை பற்றி மறைத்தது. ஆனால் அவனுடைய உயிரான அபிலேஷை அவள் தானே கொடுத்துவிட்டு சென்று இருக்கிறாள்.

கண்களை மூடித் தன்னை கட்டுப்படுத்தியவன். தன் சிந்தனையை நிகழ்காலத்திற்கு கொண்டு வர முயற்சித்தான். இரண்டு உதடுகளையும் மடித்து கடித்து தன் உணர்வுகளை அப்படியே அடக்கியவன். அந்தத் திருமணத்தில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தான்.

எல்லோரும் திருமணம் செய்யும்போது இந்தத் திருமணம் நிலைக்க வேண்டும் நீடூழி வாழ வேண்டும். காதலோடு இல்லறத்தில் சிறக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதில் எங்கே பிசகு நடக்கிறதோ??. இருவரில் ஒருவர் தவறினாலும் வாழ்க்கை நிலையற்று போய் விடுகிறது.
இந்தத் ‘தவறினால்’ என்பதில் இரு பொருள் இருக்கிறது. ஒன்று இந்த உலகத்தை விட்டுத் தவறுவது. இன்னொன்று வாழ்க்கை நெறிகளிலிருந்து தவறுவது. இரண்டில் எதிலிருந்து தவறினாலும், அடுத்தவர் மீண்டு வருவதற்கு ஆயுட்காலமே முடிந்து விடும்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று வாக்கியங்கள் இருக்கிறது. கணவன் அமைவதெல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியம் என்று நாம் ஏட்டில் தான் எழுதி வைக்க வேண்டும். எல்லா பெண்களுக்கும் நல்ல கணவன் அமைவதில்லை, அதே போல எல்லா ஆண்களுக்கும் துணையாக நிற்கும் மனைவி அமைவதில்லை. அப்படி அமைந்து விட்டால் அவர்கள் பாக்கியம் செய்தவர்கள் தான்.

“பெண்ணை அழைச்சிட்டு வாங்கோ” என்ற குரலுக்கு. பதுமை போல அன்னநடையுடன் நடந்து வந்தாள் ஆராத்யா.
யார் பார்த்த வேலையோ?? சரியாக அந்நேரத்தில் சத்திரம் முழுவதும் பாடல் ஒழி எழும்பி அபிமன்யுவின் இதழ்களிலும் நீங்காத புன்னகையை மிளிர வைத்தது.

‘ஆராத்யா என் ஆராத்யா
என்னிதய துணைவியே ஆராத்யா…
ஆராத்யா என் ஆராத்யா
கலவியின் தலைவியே ஆராத்யா’......

அங்கிருந்த அனைவரும் கைகளைத் தட்டி ஆர்ப்பரிக்க. அந்தப் பாடலில் உள்ள பொருளை அவன் அறிந்தே வைத்திருந்தான். நல்ல வேலை அங்கு இருப்பவர்களுக்கு அதன் பொருள் புரியவில்லை போல, என்று நினைத்தபடியே தன் வருங்கால மனையாளை பார்க்க. அவள் முகத்திலும் புன்னகை. நல்ல வேலை அவளுக்கும் அந்தப் பாடலில் பொருள் புரியவில்லை போல. பாடல் முழுதுமாக எதிரொலித்துக் கொண்டிருந்தது.

நாணத்துடன் அபிமன்யுவின் அருகில் அமர்ந்தவளுக்கு. உடம்பெல்லாம் படபட என்று அடித்துக் கொண்டது. சுற்றி நடக்கும் எதுவும் அவள் சிந்தையை எட்டி இருக்கவில்லை. சற்றொன்று மகனின் ஞாபகமும் வந்தது.
அவன் எங்கே??, அருகில் இருப்பது போல் தெரியவில்லையே??, என்று சிந்தித்தபடியே பார்வையை மெல்ல உயர்த்தினாள். எல்லோரின் பார்வையும் அவர்களையே மொய்த்துக் கொண்டிருப்பது தெரிய. மீண்டும் பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.

அதற்குள் திருமண மந்திரங்களை ஓதி முடித்தவர். “தாலியை எடுத்துக்கட்டுங்க” என்று கூறி இருக்க. அது அவள் செவிகளை வந்து சேர்ந்தது.
அவன் தாலியை எடுத்துப் பிடித்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருக்க. “என்ன இன்னும் தன் கழுத்தில் தாலி ஏறவில்லையே?’ என்று சிந்தித்தவள். அவன் புறம் லேசாகத் தலையைச் சாய்த்து விழி உயர்த்தி பார்க்க.

‘அவன் பார்வையாலேயே தாலியை கட்டட்டுமா? என்று கேட்டான். அதில் அவள் முகத்தில் மென்னகை படர, தலையை இருபக்கமும் ஆட்டிச் சம்மதம் தெரிவித்தால் பாவையவள். கண்களை மூடி மூன்று முடிச்சுகளையும் போடும் தருவாயில், இவளுடனான இந்த வாழ்க்கை சிறக்க வேண்டும் கடவுளே, தன் மகனுக்கு நல்ல தாயாக இவள் இருக்க வேண்டும். இவளுக்கு நல்ல துணையாக நான் இருக்க வேண்டும்’ என்று வேண்டுதல் வைத்தபடியே அவன் கட்டி முடித்தான்.
இப்பொழுது மகன் எங்கே?? என்று உரிமையாக ஆராதியா அபிலேஷை தேட, அவன் அவளுடைய அண்ணன் மகளைப் பார்த்துக் கைகளை நீட்டியபடி சிரித்துக் கொண்டிருக்க. அவளும் கோணலாக அவன் தருவதை வாங்கியபடி சிரித்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்ததும் ஆராத்தியாவின் முகம் பெரிதாக விகாசிக்க.
அவள் பார்வை போன திக்கையும் அதில் மிளிர்ந்த புன்னகையையும் பார்த்த அபிமன்யுவின், பார்வையும் அவர்களைப் பார்த்ததும் விகாசித்தது.. இருவரும் ஒரே நேரத்தில் தங்களுக்குள் பார்வையை பரிமாறிக் கொண்டார்கள். பெரியவர்கள் முகம் திருப்பிக் கொண்டு சென்றாலும் சிறியவர்கள் எந்த விகற்பமும் இல்லாமல் கைகோர்த்து விட்டார்கள் தோழமையோடு. அவர்கள் உலகம் சிறியதுதான் அழகானதும் கூட. போட்டி பொறாமை கபடம் நச்சுத்தன்மை என்று எதுவும் இருக்காது . அதை நாமாகத்தான் அவர்களுக்குள் செலுத்துகிறோம் அதைச் செலுத்தாமல் இருந்தாலே அவர்கள் குழந்தைகளாகவே இருப்பார்கள் சந்தோஷமாக.

சுற்றி இருந்த ஒவ்வொருவரின் முகத்திலும் பல விதமான கலவையான உணர்வுகள். அபிமன்யுவின் பின்புலம் தெரிந்ததனால் அவனுக்குப் பெண் கொடுக்க நினைத்தவர்கள் ஒரு புறம் கவலையாக இருக்க. இவனுக்கு இந்தப் பெண்ணா என்று பலரின் முகத்திலும் அதிருப்தி இருக்க.

“இந்த ஊமச்சிக்கு வந்த வாழ்க்கையை பார்த்தியா?? வசதியான வீட்டு மருமக ப்ரொபஷரோட மனைவி” என்று அவள் சொந்தத்தில் புறம் பேசிக் கொண்டிருக்க.

“ஊமச்சிக்கு இரண்டாம் தாரம்தான் கிடைச்சது போல” இப்படி பல கலவையான பேச்சுக்கள். மொத்தத்தில் சந்தோஷப்பட்ட உள்ளங்கள் வெகு அரிதாகத் தான் இருந்தது. பொறாமையும் புறம் பேசுதலும் தான் அங்கு அதிகமாக இருந்தது. நல்ல வேலையாக இது எதுவும் மணமக்களின் காதுகளில் விழவில்லை அவர்களின் பெற்றவர்களின் காதிலும் விழவில்லை ஏனென்றால் அவர்கள் திருமணத்தில் லயித்து இருந்தனர்.

எத்தனை பேர் கண்கள் பட்டு இருந்தாலும் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்திருந்தது. ஒரு பக்கம் மனைவியின் கரத்தைப் பிடித்துக் கொண்டவன் மறுபக்கம் மகனையும் பிடித்துக்கொண்டான் அபிமன்யு. அந்த ஸ்பரிசமும் அழுத்தமும் தொடுகையும், உங்கள் இருவருக்கும் நான் துணையாக நிற்பேன். இருவரையும் சமமாக நடத்துவேன் என்று சொல்லாமல் சொன்னது. சிறியவனால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், பெரியவளாள் அதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
அபிமன்யுவுடன் வேலை செய்பவர்கள் மட்டுமல்லாமல் ஆராதியாவுடன் வேலை செய்பவர்களும் வந்திருந்தார்கள். மலர்ந்தமுகமாக எல்லோருமே புகைப்படங்களுக்குப் போஸ் கொடுத்துக் கொண்டு இருக்க.
ராதிகாவும் தன் கணவனோடு வந்திருந்தாள்.. “எங்க ஆராத்யா ரொம்ப அமைதி. அவளை நல்லபடியா பார்த்துக்கோங்க” என்று கூறினாள் ராதிகா. பரிசை அவர்கள் இருவருக்கும் கொடுத்து விட்டு, அவளுடைய கணவன் பேசினான். “எப்பையும் உங்கள பத்தி தாங்கப் பேசிகிட்டு இருப்பாள். இதுவரைக்கும் உங்க அளவுக்கு என் மாமியார் மாமனாரைப் பத்தி கூடப் பேசினது இல்ல” என்று ஆராதியாவிடம் கிண்டல் அடித்து விட்டுச் சென்றான்.

எல்லாம் நல்லபடியாக முடிந்திருக்க. அம்பிகா மட்டும் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு தான் நின்றார். அது ஆராதியாவின் குடும்பத்திற்கும் நன்றாகத் தெரிந்தது.

“என்னைப் போலவே, இவள பிடிக்காம அங்க ஒருத்தவங்க இருக்காங்க போல” என்று குழலி மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

“என்னம்மா திருமணமே முடிஞ்ச பிறகும், இவங்க முகத்தை இப்படி வச்சுட்டு இருக்காங்க” என்று கவிச்சந்திரன் குறை படிக்க.

“அவங்களை விடுடா, நம்ம மாப்பிள்ளை அவள நல்லா பாத்துப் பாரு அவளும் பொறுமையா இருந்துப்பாள்” என்று மகனைச் சமாதானப்படுத்தினாரோ, அல்லது அவரையே அவர் சமாதானப்படுத்தினாரோ அது அவர் மட்டுமே அறிந்த ஒன்று.

அம்பிகாவைப் போலச் செந்தாமரை ஒன்றும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இல்லை. நன்றாகவே பழகினார் பேசினார். அனைவரையும் உபசரித்தார். பெண் வீட்டாரிடமும் முகம் கோணாமல் பேசினார். அவர்களும் திருமணத்தில் ஒரு குறையும் வைக்கவில்லை சீரும் சிறப்புமாகவே நடத்தி இருந்தனர். அபிமன்யு தமக்கையும் தமக்கை கணவனும் குழந்தையும் கூட மற்றவர்களிடம் நன்றாகவே பழகினார்கள்.
திருமணம் முடிந்து விட்டது. மண்டபத்திற்கான எல்லா செட்டில்மெண்டுகளையும் முடித்துக் கொண்டு ஆராதியாவின் வீட்டிற்கு தான் முதலில் வந்தார்கள். அவர்கள் பெண் வீட்டார் வழக்கப்படி முதலிரவு மணமகனின் வீட்டில் தான் நடக்கும். கவிச்சந்திரன் இதைப் பற்றி முதலில் கேட்க. சரி என்றே கூறியிருந்தான் அபிமன்யு. மகனும் இருக்க அவனை விட்டு விட்டு மனைவியின் வீட்டிற்கு செல்ல முடியாது. அதே சமயத்தில் அவர்கள் வீட்டில் முதலிரவு அறைக்கு மகனை அழைத்துச் செல்லவும் முடியாது. அவனையும் அழைத்துக் கொண்டு மனைவியின் வீட்டிற்கு சென்றால் அங்கே வசதி பத்தாது. அதைவிட முக்கியமாகக் கவிச்சந்திரனின் மனைவியை நினைத்தும் தயங்கினான். அதனால் முதலில் மறுவீடு போலப் பெண்ணின் வீட்டிற்கு வந்து விட்டு அதன் பிறகு மாப்பிள்ளையின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்.
 
Member
Joined
Dec 23, 2024
Messages
73
கவிச்சந்திரனும் குழலியும் தான் அவர்களுடன் மாப்பிள்ளையின் வீட்டிற்கு சென்றார்கள்.

கவிச்சந்திரன் முதலிலேயே அபிமன்யுவின் வீட்டைப் பார்த்து விட்டான் விசாரிக்கும் போதே அது எல்லாமே அவனுக்குத் தெரிந்து தான் இருந்தது. ஆனால் குழலி இதுதான் முதல் முறை வருகிறாள் வீட்டைப் பார்த்ததும் மலைத்துப் போய்விட்டாள்.. ‘இந்த ஊமைப் பெண்ணிற்கு இப்படியொரு ஜாக்பாட்டா என்று??.

ஆசிரியர் தானே பெரிதாக என்ன வாங்கி விடப் போகிறான்? என்று நினைத்து விட்டாள் போலும். அவனின் பின்புலம் என்ன என்று அவளுக்குத் தெரியாது. கவிச்சந்திரன் அதைப் பற்றிக் கூறியிருக்கவில்லை. இப்பொழுது வீட்டைப் பார்க்கும்போது வயிறு எரிந்தது.

தன் கணவனின் காதைக் கடித்தாள். “இவ்வளவு வசதின்னு சொல்லவே இல்லையே?” என்று.

“அவங்க அப்பா காலம் காலமா பிசினஸ் பண்றாரு. அவரும் நல்ல வேலையில இருக்காரு. இது எல்லாம் உனக்குத் தெரிஞ்சு தானே இருக்கு” என்றான் கவிச்சந்திரன்.

"அவங்க அப்பா இரும்பு கடை வச்சு இருக்கிறதா தானே சொன்னீங்க?" என்று கேட்டாள்.

"நல்லா யோசிச்சு பாரு நீயா ஒன்னு நெனச்சுக்கிட்டா நான் ஒன்னும் பண்ண முடியாது. அயன் அண்ட் ஸ்டீல் இண்டஸ்ட்ரி வச்சிருக்காருனு தான் சொன்னேன். எவ்வளவு பெருசுன்னு எல்லாம் எனக்கும் தெரியாது. மாப்பிள்ளையோட தாத்தா காலத்துல இருந்து வச்சிருக்காங்க அவ்வளவுதான் தெரியும். மத்தத பத்தி தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என் தங்கச்சி வாழப் போற வீடு, மாப்பிள்ளை அதை மட்டும் தான் நான் தெரிஞ்சுகிட்டேன்" என்று கூறினான்.

“என்ன கவி??, குழலி தங்கச்சிக்கு என்ன வேணுமாம்?“ என்று அபிமன்யு கேட்க.

அவள் முப்பத்தி ரெண்டு பற்களையும் காட்டி சிரித்து வைத்தாள்.

“ஐயோ ஒன்னும் இல்ல அண்ணா. வீடு நல்லா இருக்குன்னு தான் சொன்னேன் அவ்வளவுதான். என் நாத்தனார் இவ்வளவு பெரிய வீட்டுல வாழ்றது எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்று அவள் நீட்டி முழக்கி சொன்னதிலேயே பொறாமை அப்பட்டமாகத் தெரிந்தது. பெண்ணை அழைத்துக் கொண்டு அவர்கள் இருவரும் தான் வந்திருந்தனர். தாய் வரவில்லை. அதனால் அவருக்கு இது எல்லாம் தெரிய வாய்ப்பில்லை. அவர் அவருடைய வீட்டில் தெய்வ சன்னதியில் அமர்ந்து கணவனையும் தெய்வத்தையும் மனமாற வேண்டிக்கொண்டிருந்தார். தன் மகளின் நல்வாழ்விற்காக.

மாப்பிள்ளையின் வீட்டிற்கு வந்தவர்களை விருந்தோம்ப யாரும் தயக்கம் காட்டவில்லை நன்றாகவே விருந்தோம்பினார்கள். வீட்டில் இன்னும் சிலர் இருந்தனர். உற்றார் உறவினர்கள் என்று ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருந்தனர். நிறைய பேரைப் பார்த்ததும் ஆராத்யாவிற்கு பதட்டமாக இருந்தது. மண்டபத்தில் எல்லோரையும் பார்ப்பது வேறு, அருகருகே பார்ப்பது என்பது வேறு. ஏதாவது கேள்வி கேட்டு விட்டால் என்ன ஆவது?? என்ற தயக்கம் அவளுக்கு அதிகமாகவே இருக்க. அவளின் தயக்கத்தை உணர்ந்து கொண்ட அபிமன்யு தன் தமக்கையிடம் அவளைத் தனியாக அழைத்துக் கொண்டு செல்லச் சொன்னான்.

“அபி உன் ரூம்ல டெகரேட் பண்ணி இருக்காங்க. இதுக்குள்ள கூட்டிட்டு போக முடியாது” என்றாள் அபிமன்யுவின் தமக்கை.

“அப்போ உன் ரூமுக்கு கூட்டிட்டு போய் வச்சுக்கோ. இங்க யாரும் அவளை எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது. அது அவளைச் சங்கடப்படுத்தும், அதுல ரொம்ப கவனமா இருக்கணும்” என்றான்..

“அங்க உங்க மாமா ஓய்வு எடுக்குறாருடா” என்று தயக்கமாகக் கூறினாள்.

“அப்பக் கெஸ்ட் ரூமுக்காவது கூட்டிட்டு போ” என்றான் அவன்.

“அங்குச் சொந்தக்காரங்க எல்லாம் இருக்காங்க” என்று அதற்கும் அவள் ஏதோ கூற.

அபிமன்யுவிற்கு கோபம் தான் வந்தது. “ஆத்ரேஷ்“ என்று சத்தமாக அழைத்தான். மகன் ஓடி வந்தான்.

“அம்மாவ கூட்டிட்டு நம்ப ரூமுக்கு போ” என்று அழுத்தமாகத் தமக்கையை பார்த்துக் கொண்டே உச்சரிக்க. அவர்களைப் போல அவன் பதில் பேசிக் கொண்டிருக்கவில்லை. தாயின் கையைப் பற்றிக் கொண்டான். தந்தையின் வாக்கை நிறைவேற்றுவதற்காக.

அவனுக்கு அவ்வளவு சந்தோஷம். தாய், தன் வீட்டிற்கு வந்துவிட்டார் இனி தன்னோடு எப்போதும் இருக்கப் போகிறார். அது மட்டுமே அவனுக்குப் போதுமானதாக இருந்தது. எப்பொழுது தாய் தன்னுடன் பேசுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, இப்பொழுது தந்தை சொன்னது அவ்வளவு நிம்மதியை கொடுத்திருந்தது. தாயுடன் தனிமையில் பேசலாம் அதுவும் தங்கள் அறைக்கு அழைத்துச் சென்று என்று தாயின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு செல்ல அபிமன்யுவின் தமக்கை ஏதேதோ கூறிக் கொண்டிருந்தார். ஆனால் அபிமன்யு எதையும் கேட்கவில்லை.

ஆராத்யாவிற்கு சங்கடமாகத் தான் இருந்தது. சிறியவன் பின்னால் போவது. ஆனால் கணவனை எதிர்க்கவும் முடியாது. அதற்காக அனைவரின் எதிரில் கொலு பொம்மைபோல அமரவும் முடியாது.

வெளியில் வந்தவர்கள் மாடி படியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். அதைக் கவனித்து விட்டு அம்பிகா குரல் கொடுத்தார். “எங்க போறீங்க?” என்று.

இவர் எப்படியும் இதைச் செய்வார் என்று உணர்ந்த அபிமன்யு, வேகமாக வந்து “என்னோட அறைக்குப் போறாங்க. அவளுக்கு ஓய்வு தேவை ஓய்வெடுக்கட்டும் அவளை என் பையன் பார்த்துப்பான்” என்று அழுத்தமாகக் கூறினான். அதற்கு மேல் அம்பிகாவாலும் பேச முடியவில்லை.

அங்கு இருந்த பெண்கள் எல்லாம் தங்களுக்கு பேசுவதற்கு ஒரு விடயம் கிடைத்தது என்று வம்பு பேச ஆரம்பித்து விட்டார்கள்.

அம்பிகா இன்னுமே அவமானமாக உணர்ந்தார்.

‘உன் பையன் இப்பவே இவளுக்கு இவ்வளவு பேசுறான்னா, இன்னும் முதல் ராத்திரி முடிஞ்சிருச்சுன்னா? அவனைக் கைல புடிக்க முடியாது” என்ற ரீதியில் அவரை உசுப்பேத்திக் கொண்டிருந்தனர். அவரும் மனதிற்குள் குமைந்து கொண்டு தான் இருந்தார்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top