• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 23, 2024
Messages
73
கதைப்போமா எபிளாக்

ஐந்து வருடம் கடந்திருந்தது. சொன்னது போல அபிமன்யு தன் குடும்பத்தாருடன் செட்டில் ஆவதற்காக இந்தியாவிற்கே திரும்பி வந்துகொண்டிருந்தான். பொருட்களை எல்லாம் பேக்கேஜர்ஸ் மூலம் அனுப்பி வைத்துவிட்டான். அவனுக்காகத்தான் விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தனர்.

“அப்பா ஆத்ரேஷும் நம்ம கூடவே இனிமே இந்த ஊரிலேயே இருந்து விடுவானா?” என்று கவிச்சந்திரனின் தவப்புதல்வி கேட்டுக் கொண்டிருக்க.

“ஆமாமா இனி இங்கே இருந்திடுவாங்க. நாம நினைக்கும் போதெல்லாம் அத்தையையும் அவனையும் பார்க்க முடியும்” என்றான் கவிச்சந்திரன்.

தங்கை திரும்பி ஊருக்கு வருவது அவனுக்கு அவ்வளவு சந்தோஷம். அது மட்டுமா அவளால் பேச முடிந்திருந்தது பழையது போல இல்லையென்றாலும் கீச்சு குரலில் மெல்லமாக பேசிக்கொண்டிருந்தாள். ஊமையாக இருப்பதற்கு இது தேவலாம். தன் மனதில் நினைப்பதை வெளிப்படுத்த முடிகிறது என்று அவளுடைய சொந்தங்கள் சந்தோஷப்பட்டு கொண்டுதான் இருந்தனர்.

“இன்னும் பிளைட் வந்து சேர எவ்வளவு நேரம் இருக்கு?” என்று அம்பிகா செந்தாமரையிடம் கேட்டுக் கொண்டிருக்க.

அவர் கைகடிகாரத்தை பார்த்துவிட்டு “வந்துடுமா” என்று கூறும் போதே, அந்த விமானம் வந்ததற்கான அறிவிப்பு வாசிக்கப்பட்டது.

சற்று நேரத்தில் மகனைக் கையில் பிடித்தபடி ஆராதியா நடந்து வர. மூன்று வயது பெண் குழந்தையைத் தூக்கிப்பிடித்தபடி நடந்து வந்தான் அபிமன்யு.

குடும்பமாக அவர்களைப் பார்ப்பதற்கு பெற்றவர்களுக்கும் சகோதரனுக்கும் அவ்வளவு மன நிறைவாக இருந்தது.

அபிமன்யு சொன்னது போல, வழக்கு நடக்கும் வரை அபிமன்யுவை தரம் தாழ்த்தி பேசிக் கொண்டிருந்த சமூக ஊடகங்கள் எல்லாம், வழக்கு முடிவடைந்த பிறகு, அந்தப் பெண்ணைத் தரம் தாழ்த்தி பேசிக் கொண்டிருந்தது. அதைப் பொறுக்க முடியாமல் மனம் உடைந்து உண்மையில் தற்கொலை முயற்சி செய்ய நினைத்தவளை காப்பாற்றி வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்ததாகத் தான் கேள்விப்பட்டான் கவிச்சந்திரன். அதைத் தன் தங்கை கணவனிடமும் கூறினான். அவனுக்கு எதைப் பற்றிய நாட்டமும் இல்லை.

வினை விதைத்தவன் வினை அறுப்பான். அவனைப் பொறுத்தவரை தவறு செய்யவில்லை, ஆனாலும் தண்டனையை அனுபவித்து விட்டான். கடந்த காலத்தைத் திரும்பி பார்க்கக் கூட அவன் நினைக்கவில்லை.

அவர்களை நெருங்கும் போதே அம்பிகா தன் பாதத்தை முன்னெடுத்துச் சென்று அபிமன்யுவின் கையில் இருந்த குழந்தையைத் தன் கைக்கு மாற்றி உச்சி முகர்ந்து முத்தம் கொடுத்தார். அவள் குழந்தை பெற்று இருக்கும்போது இவரும் சென்று பார்த்துக்கொண்டார் தான். ஆனாலும் வளர்ந்துவிட்ட தன் பேத்தியைப் பார்க்க அவ்வளவு சந்தோஷமாக இருந்தது அவருக்கு. மகன் மருமகள் என்று இருவரின் கலவையாக இருந்தாள் அபிநயா.

ஆதிரேஷோ கவி சந்திரனின் மகளை நெருங்கி “ஹேய் பவி எப்படி இருக்க?“ என்று கேட்டபடியே அவள் கையைப் பற்றிக் கொள்ள.

விசாலாட்சியோ தூக்க முடியாமல் பேரனைத் தூக்கிக் கொண்டார்.

தன் மகனின் செயலைப் பார்வையால் தன் மனைவியிடம் சுட்டிக்காட்டினான் அபிமன்யு. அவள் பார்வையால் கணவனை அடக்கினாள்.

“வாத்தியா நம்ம ஊருக்கே போகலாம். இவங்களுக்கு எல்லாம் பேரனும் பேத்தியும் தான் முக்கியம் போல, நம்மள யாரும் கண்டுக்கல” என்று மனைவியின் கரத்தைப் பிடித்துப் பிளைட்டுக்கே திரும்பிச் செல்வது போலப் பாவனை செய்தான்.

“மாப்பிள்ளை, மாமா, அபி” என்று பல குரல்களும் அவர்களைத் தடுத்து நிறுத்த. செந்தாமரை ஒரு அடி முன்னாள் சென்று அவன் கரத்தையும் பிடித்திருந்தார்.

“என்ன விளையாட்டு அபி இது?? உங்க அம்மா நீங்க எப்ப வருவீங்கன்னு நொடிக்கு ஒரு தரம் என்னை கேட்டுக் கேட்டு என் கழுத்தை அறுத்துட்டாள். உன்னோட மாமியார் நொடிக்கு ஒரு தடவை அந்தப் போர்டையே பார்த்துட்டு இருந்தாங்க. நான் உனக்கு மெசேஜ் தட்டிக்கிட்டே இருந்தேன். கவிச்சந்திரன் இங்க இருக்க எல்லார்கிட்டயும் இந்தப் பிளைட் எப்ப வரும்னு கேட்டுக்கிட்டே இருந்தான். இப்படி எல்லாருமே உங்க நாலு பேருக்காகத் தான் காத்துகிட்டு இருக்கோம்” என்று பொதுப்படையாகக் கூற. அவன் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது.

அவன் கையில் இருந்த தன் கையை உருவிக்கொண்டு வந்து மாமனார் மாமியாரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய ஆராதியா, பிறகு தாயை கட்டிக்கொண்டு தமையனின் கையில் இருந்த குழந்தையை வாங்கிக் கொஞ்சினாள்.

“ரொம்ப நன்றி மாப்பிள்ளை. நாங்களும் எவ்வளவோ முயற்சி பண்ணோம். ஆனா நீங்க அவள் குரலையே சரி பண்ணி கூட்டிட்டு வந்துட்டீங்க. உண்மையிலேயே அதுக்காகவே நாங்க உங்களுக்குக் கடமைப்பட்டு இருக்கோம்” என்று நெகிழ்வாக விசாலாட்சி பேசிக் கொண்டிருக்க.

“இப்பயும் முழுசா சரியாகல அத்தை. லேசா தான் குரல் வந்து இருக்கு. அப்புறம், இதை நான் சரி பண்ணல டாக்டர்ஸ் தான் சரி பண்ணாங்க” என்று மனைவியை மையலாகப் பார்த்துக் கொண்டு கூறினான் அபிமன்யு.

அதில் அவளுக்கு வெட்கம் ஏற்பட தலையைத் தாழ்த்திக் கொண்டவள். “ஆத்ரேஷ், பாட்டிக்குக் கைவலிக்கும். இறங்கி அம்மா கிட்ட வா” என்று ஆத்ரேஷை தன் கையில் வாங்கிக் கொண்டவள். மகளைத் திரும்பிப் பார்க்க.

அதை உணர்ந்து கொண்ட அம்பிகா.

“எனக்கு ஒன்னும் கை வலிக்கலடியம்மா. எவ்வளவு தக்கையாட்டம் இருக்கா பாரு. உன்ன மாதிரியே பெத்து போட்டு வச்சிருக்க. வீட்டுக்கு வந்துட்டீங்கள்ள, இனிமே உங்க ரெண்டு பேரோட உடம்பையும் எப்படி தேத்துறேன்னு பாரு” என்று அம்பிகா கூற. அதில் ஆராதியாவின் இதழ்கள் நன்றாக விரிந்து கொண்டது.

நலம் விசாரிப்புக்குப் பிறகு எல்லோருமே வீட்டிற்கு கிளம்பினார்கள். கவிச்சந்திரனின் குடும்பமும் கூட ஆராத்யாவின் வீட்டிற்கு வந்து அவர்களை விட்டு விட்டு அதன் பிறகு தான் தன் வீட்டிற்கு சென்றான்.

“என்ன உங்க தங்கச்சியும், உங்க தங்கச்சி புருஷனும் வந்துட்டாங்களா??” வீட்டிற்குள் அவர்கள் நுழைந்ததும் நுழையாததுமாகக் குழலியின் குரல் கேட்க.

கவிச்சந்திரன் வேண்டுமென்றே கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தான். “எகத்தாளத்தை பாரு? ரூமுக்கு வருவெல்ல அப்ப வச்சுக்கிறேன்” என்று கணவனை பார்த்துப் பொறுமியவள். முகவாயை தோளில் இடித்துக் கொண்டு தன்னறைக்கு சென்று விட்டாள்.

‘சில ஜென்மங்களை எல்லாம் எந்தக் காலத்திலும் திருத்த முடியாது’ என்று தன் விதியை நொந்து கொண்டு தன் மனைவியின் பின்னோடு அவன் அறைக்குள் செல்ல. தன் பேத்திகளை அழைத்துக் கொண்டு விசாலாட்சி தன்னறைக்கு வந்து விட்டார். கவிச்சந்திரனுக்கு இரண்டாவதும் மகளாகப் பிறக்க மூன்றாவது ஆண் குழந்தை தனக்கு வேண்டும் என்று அடம்பிடித்து இப்பொழுது ஆறு மாதத்திற்கு முன்னால் ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள். அடுத்தடுத்த குழந்தைகளில் அவள் சோர்ந்தாளோ என்னவோ?? அவன் சோர்ந்து விட்டான். மூன்று குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள முடியாமல் போய்விட, கைக்குழந்தையான ஆண் குழந்தையை வைத்துக்கொண்டு முதல் இரண்டு பெண் குழந்தைகளையும் மாமியாரின் பொறுப்பில் விட்டு விட்டாள் குழலி. எட்டு வயது பேத்தியையும் ஐந்து வயது பேத்தியையும் தன்னோடு தன்னறையிலேயே படுக்க வைத்துக் கொள்வார். அதில் அவருக்கு அவ்வளவு சந்தோஷம். மகள் சென்றபிறகு தனிமையில் வாடியவர், பேத்திகளின் வரவால் நிம்மதியாக உணர்ந்தார் எனலாம். என்னதான் குழலி கத்தி கொண்டு இருந்தாலும். பேத்திகளையும் பேரணையும் பார்த்த நொடி அவரின் கவலை எல்லாம் பஞ்சாகப் பறந்து விடும்.

…….

“உன் பையன் என்ன பண்றான்னு பாத்தியா? எனக்கென்னமோ எதுவும் சரியா படல தியா?” என்று அபிமன்யு தன் மனைவியைத் தன்னுள் சாய்த்து கொண்டு கூறிக் கொண்டிருக்க.

“அவன் உங்க அக்கா பொண்ணு கிட்ட எப்படி பேசரானோ அப்படித்தான் பவிகிட்டயும் பேசுறான். நீங்க ஏன் தப்பா எடுத்துக்கிறீங்க?” என்று மெல்லிய குரலில் கூறினாள் ஆராதியா.

சரியாகக் குரல் வந்துவிட்டது என்று சொல்ல முடியாது கீச்சு கீச்சு குரலில் தான் பேசுவாள். நிசப்தமாக இருந்தால் நன்றாகக் கேட்கும். பொது இடங்களில் அவள் குரல் அருகில் இருப்பவர்களுக்கே சரியாகக் கேட்காது என்பதுதான் உண்மை. ஆனால் இந்தளவாவது பேச வருகிறதே என்று அவளுக்கும் சந்தோஷம்தான். தன் குழந்தைகளிடம் தன் கணவன் தன் குடும்பத்தாரிடம் தன்னால் மனதில் நினைத்ததை பேச முடிகிறது அது போதும் அவளுக்குப் பொது இடங்களில் கத்தி பேச வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லவே இல்லை பேசும் குணமும் அவளுக்கு இல்லை.

“நீ என்ன வேணா சொல்லு உன் பையன் பெருசாயிட்டு கண்டிப்பா உன் கிட்ட தான் வந்து நிப்பான். அப்பத் தெரியும் நான் இப்ப சொன்னது உண்மையா இல்லையான்னு?” என்று அபிமன்யு கூற வருவதின் சாரம்சம் அவளுக்குப் புரியாமல் ஒன்றுமில்லை.

ஆத்ரேஷின் உடல் மொழியும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் குழந்தைகள் தானே இப்பொழுது எதையும் கணிக்க முடியாது. ரிதன்யாவின் மகள் ஆத்ரேஷைவிடவும் நான்கு வயது பெரியவள். அக்கா என்னும் பொறுப்பில் தான் எப்போதும் பேசுவாள், நடந்து கொள்வாள். ஆதரேஷுக்கு அவள்மீதும் தனிப்பட்ட பாசம் இருந்தது. ரிதன்யாவிற்கு அடுத்து ஒரு மகனும் பிறந்து விட. ரித்திகா இரண்டு பேரையும் தன் தம்பிகளாகப் பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

ஆத்ரேஷ் வீடியோ காலில் ரித்திகாவுடன் எப்படி பேசுவானோ அதே போல அடுத்து பவியிடமும் பேச ஆரம்பித்து விடுவான்.

“ஏங்க மகள் அழுவுற மாதிரிக் குரல் கேட்கல?? “ என்று ஆராதியா கேட்க.

“ஒன்னும் இல்ல உன் மகன் அவன் தங்கச்சியை பார்த்துப்பான். அவன் எவ்வளவு பொறுப்பா பாத்துக்கறான்னு நான் சொல்லி உனக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை” என்று கூறியவன். தன் கைவளைவிலிருந்து மனைவியை அகல நிறுத்தி இருக்கவே இல்லை. ஆம், அபிநயா பிறந்த நொடியில் இருந்தே தன் தங்கை என்று ஒவ்வொரு நொடியிலும் தன் செயலிலும் பேச்சிலும் உணர்விலும் காட்டிக் கொண்டிருப்பவன் அவளைத் தாயும் மாணவனாகத் தான் பார்த்துக் கொண்டான். அதை இப்பொழுது நினைக்கும் போதும் ஆராதியாவிற்கு நெகிழ்வாக இருந்தது.

அவர்களுடைய அறையில் மகனும் மகளும் உறங்கிக் கொண்டிருக்க. அதற்கு அடுத்த அறையில் தான் அவர்கள் தனிமையை போக்கிக் கொண்டிருந்தனர். விடியல் வரை அப்படியே பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டிருக்க. நேரம் கழித்து தான் உறங்கினார்கள். எப்பொழுது போல விடியலின் போது மனைவி அவன் அருகில் இல்லை. எங்குச் சென்று இருப்பாள்? என்று தெரிந்த போதும் அமைதியாக அங்கேயே உறங்கி விட்டான் அபிமன்யு

………
 
Member
Joined
Dec 23, 2024
Messages
73
“கண்டிப்பா அங்க போகணுமா?” என்று தன் காரை ஓட்டிக்கொண்டே கேட்டான் அபிமன்யு.


“ஆமா, கண்டிப்பா போகணும், ஊருக்கு வந்தபிறகு நம்ம அபிநயாவை கூட்டிட்டு வந்து காட்டுறேன்னு சொல்லி இருக்கேன். என்றாள் ஆராதியா.


“என்னவோ போ” என்று கூறியபடி அவன் ஒரு பெரிய பங்களா வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருக்க. அந்தக் காவலாளி அவனுக்குச் சல்யூட் அடித்து விட்டு கேட்டைத் திறந்தார். அவர்கள் வாகனம் உள்ளே நுழையும் போதே, வாசலுக்கே வந்து வரவேற்றனர் ப்ரீத்தியின் பெற்றோர்கள்.


எப்பொழுதும் போல ஆராதியா அவர்களை அருகில் சென்று அவர்கள் காலைப் பணிந்து வணங்கினாள். ப்ரீத்தியின் தாய் அவளைக் கட்டிக் கொண்டார்.


“வாங்க மாப்பிள்ளை” என்று அந்த வீட்டு பெரிய மனிதர் அழைக்கும்போது அவனால் தன்னை அப்படி கூப்பிட வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை.


ப்ரீத்தியின் பெற்றோர்கள் இருவரும் தங்களின் இரு குழந்தைகளைத் தூக்கிக் கொள்ள. இவர்கள் இருவரும் கைகளைக் கோர்த்தபடி அந்த வீட்டினுள் பிரவேசிக்கும்போது அந்த வரவேற்பறையை மறைத்தபடி பெரிய நிழல் படமாக ப்ரீத்தியின் புகைப்படம் மாலையுடன் தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அவனுக்குள்ளும் சங்கடம் அதிகமாக. பற்றி இருந்தவளின் கையைவிட போக. அவள் அவன் கரத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். தன் மனைவியை திரும்பிப் பார்த்தான் அபிமன்யு.



“அக்கா இதைத் தான் விரும்புவாங்க” என்று பிணைந்திருந்த தங்கள் கரத்தைக் காட்டினாள் கணவனுக்கு.


“ஏங்க, இந்தப் பிரசவத்துல எனக்கு எது ஆனாலும் நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும் ப்ளீஸ்“ என்று ப்ரீத்தி என்றோ சொன்னது. அவன் காதுகளில் அந்த நொடி விழுந்தது.


“முட்டாள்தனமா பேசாதே, உனக்கு எதுவும் ஆகாது. உனக்கு எதுவுமாக நானும் விடமாட்டேன்” என்று அவன் பேசிய வீர வசனங்கள் எல்லாம் காற்றில் கரைந்து போயிருந்தது. அவள் தன் நிலையைத் தெரிந்தே தான் கேட்டிருக்கிறாள் என்று பின் நாட்களில் தான் தெரிந்தது. ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவன். ப்ரீத்தியின் புகைப்படத்தையே ஆழ்ந்து பார்க்க.


அவன் கரத்தைப் பற்றிய படி, அந்தப் புகைப்படத்தின் அருகில் சென்றவள், அங்குத் தட்டில் வைத்திருக்கும் மலர்களை எடுத்து அவளும் போட்டு, கணவனின் கையால் அவன் முதல் மனைவிக்குப் போடச் செய்தாள் ஆராத்யா.


இரண்டு பிள்ளைகளையும் இருவரும் தூக்கிக் கொஞ்சி கொண்டு இருக்க. வேலையாட்கள் அவர்களுக்குத் தேவையானவற்றை எடுத்து வரும்போது பிள்ளைகளை விட்டுவிட்டு இவர்கள் இருவரையும் உபசரிக்க மறக்கவில்லை அவர்கள்.


அவர்களைப் பார்த்தாலும் பாவமாகத்தான் இருந்தது. ஒரே பெண் அவளையும் இழந்து விட்டுத் தவிக்கிறார்கள். அவர்களுக்கு இன்று இருக்கும் ஒரே ரத்த வழி சொந்தம் என்றால் அது ஆத்ரேஷ் மட்டும்தான். இத்தனை நாள் இவர்களிடமிருந்து தன் மகனைப் பிரித்திருக்க வேண்டாமோ என்று முதல் முறையாக எண்ண தோன்றியது. அந்த எண்ணத்தைத் தோற்றுவித்ததும் ஆராதியா தான் என்பதில் ஐயமில்லை. அவள் அடிக்கடி அலைபேசியில் பேசும்போது மகனையும் அவர்களுடன் பேச வைத்தாள். அவனும் அதைக் கண்டு கொள்ளவில்லை. இதோ இப்பொழுது இங்கேயும் அழைத்து வந்துவிட்டாள். இது இனிமேல் தொடரும் என்று மனதிற்குள் நினைத்துச் சிரித்துக்கொண்டான். ஆனால் அவர்களுக்குத் தெரியாத ஒன்றும் இருந்தது. அதுபின் நாட்களில் தான் அபிமன்யுவிற்கு தெரியவரும். ப்ரீத்தியின் பெற்றோர்கள் தங்களின் சொத்தை ஆத்ரேஷ் மற்றும் அபிநயா இரண்டு பேருக்கும் சரிசமமாகப் பிரித்து எழுதி வைத்திருப்பது. அதை அறியும்போது அபிமன்யுவின் நிலை என்னவாக இருக்கும் என்று நம்மால் கணிக்க முடியாது.


இரண்டு நாள் ஓய்வெடுத்துக் கொண்டவன். தனியாக அவன் கம்பெனி தொடங்குவதற்காக அவர் தந்தை வாங்கி வைத்திருந்த இடத்தில் இவன் அனுப்பி வைத்த பணத்தை வைத்துக் கட்டி இருந்த கம்பெனியைச் சென்று பார்த்தவன். அதைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளில் மூழ்கிப் போனான்.


……..


“ஹாய் டார்லிங் சந்திரிகா” என்று 40 வயது மதிக்கத் தக்க ஒருவன் அவளைக் கை வளைவிற்குள் அழைத்துச் செல்ல. அவளும் அவனோடு இசைந்து நடந்து கொண்டிருந்தாள்.


வெளிநாட்டுக்கு சென்றவள். சிறிது நாட்கள் சோகமாகச் சுற்றிக் கொண்டிருந்தாள். ஒரு பீச்சில் தான் இவனைச் சந்தித்தால் திருமணமானவன் தான். அவனாக வந்து இந்திய பெண் என்ற ரீதியில் ப்ரப்போஸ் செய்ய. முதலில் சந்திரிகா ஒத்துக்கொள்ளவில்லை பிறகு ஒத்துக் கொண்டாள். ஏனோ அவளுக்குக் கல்யாணமானவர்களை தான் பிடிக்கிறது போல. அவனும் விவாகரத்து வாங்கிக் கொண்டு வந்து இவளுடன் செட்டில் ஆகிவிட்டான். பெரிய பணக்காரன் தான். பெற்றவர்களுக்கு இவருடைய செயல் பிடிக்கவில்லை. அவளிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார்கள். இவள் இங்கு ஒருவனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவனுடன் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.


……..


ஒரு செயலைச் செய்வதற்கு முன்னால் சிந்தித்து செயல்பட வேண்டும். அது நம் வாழ்க்கையை மட்டுமல்ல, அடுத்தவர்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டு விடும். அபிமன்யுவின் வாழ்க்கையை அவன் சரி செய்து கொண்டான். ஆனால் இவள் வாழ்க்கை சரியானதா அல்லது தவறான வழியில் போய்க் கொண்டிருக்கிறதா என்று அவளுக்கே அவ்வப்போது சந்தேகம் வரும். ஆனாலும் அதைச் சிந்திக்காமல் ஓரம் நிறுத்திவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறாள் சந்திரிகா. அவளுடைய ஒரு தவறான முடிவு அவள் வாழ்க்கையையும் புரட்டித் தான் போட்டுவிட்டது. பெற்றவர்கள் தோழமைகள் இல்லாமல் தனியாக ஏதோ ஒரு இடத்தில் இரண்டாவது மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவ்வப்போது அபிமன்யுவை நினைக்காமலில்லை. ஆனால் அவன் எப்படி இருக்கிறான் என்று அறிந்து கொள்ள அவளால் முடியவில்லை. அவன் எந்தச் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இல்லை. தன் வேலையுண்டு தன் குடும்பம் வாழ்க்கை உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

எந்த ஒரு செயலைச் செய்வதற்கு முன்னாள் அதைப்பற்றிச் சிந்தித்து செயல்படுவோம்.
 
Active member
Joined
May 9, 2025
Messages
110
Quick ending. Good thing, you united his first family ( though happened because of her),it’s nice to. Some people will not change whatever or however it happened, all VIDHI,Chandrikka is the example.
Please start the next story soon.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top