• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
128
K.காதலின்💕M.முகவரி💕

💕முகவரி.. 3️⃣

“என்ன பண்ணப்போற கதிர்?” என்று முல்லை மிரட்சியாய் பார்க்க,


கதிர் கதவை சாத்தியப்படி அவளின் கன்னத்தை அவன் கரங்களில் ஏந்தி, “முல்லை ஐ லவ் யூ” என்று சொன்னவன் அவள் இதழ்களில் தன் இதழ் பதிக்க, முல்லையின் கால் விரல்கள் அனைத்தும் சுண்டி இழுக்க, அவள் கை விரல்கள் கதிரின் தேகத்தை இறுக்கி பிடித்தபடி, அவன் வசம் இருந்து திமிரி கொண்டு வெளியேற முயல, அவனின் கரங்கள் இவளை விடுவிக்க மறுக்க, சில நொடிகள் கடந்த நிலையில் கதிரின் இதழ்களில் சிக்கி இருந்த அவள் இதழ்களை இவன் விடுவித்தான்.
அவன் விழிகள் இவளை உள்வாங்கியபடி நின்றிருக்க, கண்களில் கண்ணீருடன் பார்த்தவள்,” என்ன பண்ற நீ? ஏன் என் வாயில முத்தம் தந்த?” என கேட்க,
“வேற என்ன பண்ண சொல்ற? நான் உன்னை காதலிக்கிறேன் முல்லை. உனக்கு நான் என்னை புரியவைக்க முயற்சி பண்ணி தோற்று போனது தான் மிச்சம்” என்றதும் அவள் அழ, “முல்லை ஏன் அழுவுற?” என்றான் அவன்.
“தெரியல ஆனா அழ வருது.”
“அழாத முல்லை.”
“நான் வீட்டுக்கு போறேன் நகரு.”
“முதல்ல கண்ணை துடை.”
“நான் துடைசிக்கிறேன். நீ போ அப்படி. என் கிட்ட வராத நீ போ.”
“முல்லை நான் சொல்றத கேளு.
“கையை விடு கதிர் நான் போறேன்.” முல்லை கதிரின் கைகளை உதறிவிட்டவள் கண்களில் கண்ணீருடன் வேகமாக பண்ணை வீட்டை விட்டு வெளியே செல்கையில், வாசல் வெளியே இருந்த பெரிய கல்லில் அவள் கால்கள் மோத, “அம்மா” என்று கத்தியபடி அதே இடத்தில் விழுந்தவளை பார்த்து கதிர் பதற்றமாக ஓடி வந்தான்.
“ஐயோ முல்லை என்னாச்சு?”
“பார்த்தா தெரியல. ஆ கால் வலிக்குது.”
“ஏய் ரத்தம் வர மாதிரி இருக்கு.” அவள் வலியில் இன்னும் அலற, “இரு இரு நான் பாக்குறேன்” என்ற கதிர் அடிபட்ட காலை தன் மடியின் மேல் வைத்தப்படி அவள் பாவாடையை முட்டி வரை ஒதுக்கியவன், அவன் கழுத்தில் இருந்த துண்டை கொண்டு ரத்தத்தை சுத்தம் செய்தான்.
முல்லை சட்டென்று அவன் மேல் இருந்து காலை எடுத்தவள் “நா.... நான் போறேன்.”
“இரு முல்லை. நானே உன்னை வீட்டுக்கு கூட்டி போறேன்.”
வேணாம். நான் இனிமே உன்ன பாக்க மாட்டேன். உன் கை என் மேல பட்டா எனக்கு ஒரு மாதிரி இருக்கு. நான் இனி உன் பக்கம் வரவே மாட்டேன் போ” என்று சொன்னபடி முல்லை கால்கள் தாங்கியபடி அவள் வீட்டுக்கு செல்ல, கதிர் மன கலக்கத்தில் இருந்தவன் அவன் நண்பனோடு அவன் வீட்டுக்கு சென்றான்.

அன்றைய தினம் கதிர் அவன் வீடு முழுவதும் முல்லையை தேட, அவள் எங்கும் இல்லா காரணத்தால் இவன் சமையல் அறைக்குள் வந்து முல்லையின் அப்பா கணேஷன் மட்டும் இருப்பதைப் பார்த்தான்.
“வாங்க சின்ன ஐயா. இன்னும் கொஞ்ச நேரத்துல இரவு உணவு தயாராகிடும். வேற எதாவது வேணுமா?”
“இல்ல இல்ல அதெல்லாம் வேணாம். ஆமா முல்லை எங்க?”
“என்னனு தெரியலங்க ஐயா. அவ மதியத்துல இருந்தே இங்க வரல. பண்ண வீட்ல இருந்து வீட்டுக்கு போயிட்டா போல. காலையில இருந்து சாப்புட கூட இல்ல. வீட்ல என்ன பண்ணுறான்னு தெரியல.” வருத்தமாக சொல்லி, “ஐயா நீங்க சாப்பிடுறிங்களா?”
“இல்ல வேணா நான் என் பிரண்டு கூட வெளிய போறேன். அப்பா எங்க”
“நாளைக்கு உங்களுக்கு நிச்சியம் நடக்க போகுது இல்லையா.. அதான் காலையில கோவில்ல பொங்க வைக்கும் போது நம்ம அம்மனுக்கு சாத்த வைர நகைங்கள எடுக்க உங்க அப்பாவும் உங்க பெரிய மாமா ராஜசேகரும். உங்க சின்ன மாமா தனசேகரன் ஐயா வீட்டுக்கு போய் இருக்காங்க.”
“சரி அப்பா வந்தா சொல்லிடுங்க.”
“ம் சரி ஐயா.”
“மணி.... மணி..” என்று கதிர் அழைக்க, என்னடா என்று வந்தான் கதிர்.
“என்ன பண்ணிட்டிருக்க?” என்ற கேள்வியில்,
“சவிக்கு சாவி போட கத்து தரேன் மச்சான்.”
“என்னது?”
“ம்... சூட்கேஸ் சாவி மச்சான்.”
“அவளுக்கு ஏற்கனவே ஒருத்தன் தங்க சாவி போட்டுட்டான். நீ கள்ள சாவி போட try பண்ணாத.”
“ம் கடைசி வர என்னை சாவி போடவும் விடாதீங்க. பூட்டு மாட்டவும் விடாதீங்க.”
“டேய் புலம்பாத சரி வா.”
“எங்க டா?”
“வா சொல்றேன்” என்று கதிரும் மணியும் இவர்களின் காரில் முல்லையின் வீட்டை நோக்கி செல்ல,
“டேய் நான் காரை இங்கேயே நிறுத்துறேன் நீ காரிலேயே இரு. அவ வீட்டாண்ட எல்லாம் நம்ம காருல போனா சரி வராது” என்றான் கதிர்.
“சரி நீ போ. ஆனா சீக்கிரம் வந்துடு.”
கதிர் முல்லை வீட்டிற்குள் நுழைய, முல்லைபூவின் வீட்டு வாசல் இரு புறமும் பட்டு ரோஜா பூக்கள் முளைத்து இருக்க, குடிசை வீட்டின் பனை ஓலை வாசத்தை நுகர்ந்தவாரு அவன் வீட்டின்னுள் நுழைய, வீட்டின் ஒரு மூலையில் பாயில் முல்லை படுத்து இருந்தாள்.
அவளை பார்த்ததும் பதறியடித்து கதிர் அவள் அருகில் சென்றவன், “முல்லை என்னாச்சி?”
“அப்பா.”
“முல்லை இங்க பாரு. நான் கதிர் வந்து இருக்கேன்.” அவளிடம் சத்தம் இல்லாது போக, “முல்லை இங்க பாரு. என்ன இது பீவர் இருக்கு போல. முல்லை” என்று அவளின் கன்னம் தட்ட,

அதில் விழித்தவள், “நீ... நீயென் இங்க வந்த? நீ போ” என்றாள்.
“முல்லை வா பக்கத்து ஊருல தான் ஹாஸ்பிட்டல் இருக்கு. வா அங்க போலாம்.”
“வேணா நான் எங்கேயும் வரல நீ போ.”
“ஐயோ உனக்கு fever இருக்குடி. சொல்றத கேளு வா டாக்டர்கிட்ட போலாம். என்னடி பேச மாட்டேன்ற. நான் சொல்றேன் இல்ல வா. உனக்கு ரொம்ப ஜுரமா இருக்கு பாரு.”
“உன்னால தான் எனக்கு ஜுரம் வந்துச்சு. நீ போ.”
“நானா? என்னாலையா? ஏய் நான் என்ன பண்ணேன்?”
“நீ என்னை...”
“என்ன நான் உன்னை rape பண்ணிட்டேனா?” என்றான் கடுப்பாகி,
“அப்டினா?”
“ஆமா இதுநாள் வர நான் சொன்னதை எல்லாம் புரிஞ்சிகிட்ட பாரு. இப்ப இத என்னனு கேக்குற.”
“என்ன கதிர் முனங்குற?”
“ஒன்னும் இல்ல.”
“சரி நீ போ.”
“நான் போ மாட்டேன் உன்னை பார்க்கத்தான் வந்தேன். இப்ப ஏன் என்னை போக சொல்லுற?”
“நான் தான் என்னை பாக்கக் கூடாதுன்னு சொன்னேன் இல்ல.”
“ஏன் பாக்கக்கூடாது?”
“நீ என் வாயில ஏன் முத்தம் கொடுத்த? இது வரைக்கும் யாரும் என்னய இந்த மாதிரி பண்ணதே இல்ல” என்று முகம் சுளித்தாள்.
“இனியும் என்னை தவிர வேற யாரும் உன்கிட்ட அப்படி பண்ண முடியாது. என்ன அப்படி பாக்குற?” முல்லை எழப்போக, “ஏய் இரு இரு எங்க போற?” என்று கையைப் பிடித்துத் தடுத்தான்.
“கையை விடு கதிர்.”
“இப்ப உனக்கு என்ன பிரச்சனை? உனக்கு நான் முத்தம் தந்தது பிடிக்கல அப்படி தானே. அப்ப நான் தந்ததை எனக்கு திருப்பி கொடுத்துடு. நான் போறேன்” என்றான்.
“அது எப்படி தரது?”
“அப்போ நானே எடுத்துக்கவா? சொல்லு முல்ல நானே எடுத்துக்கவா?”
“கையை விடு. நீ முதல்ல வீட்டுக்குப் போ.”
மு”ல்லை! என் முல்லைபூவே இங்க பாரு.”
“நீ போ கதிர். எனக்கு தலையெல்லாம் வலிக்குது.”
“தல வலிக்குதா? சரி வா நான் உன்ன மருத்துவச்சிக்கிட்ட கூட்டிட்டு போறேன்.”
“வேணாம்” என்று அங்கிருந்த நகர,
“நில்லு முல்லை” என்று கதிர் முல்லையின் கரங்களை தன் வசம் இழுத்ததும், முல்லை நிலை தடுமாறி கதிரின் மார்பில் ஒட்டிக்கொள்ள, கதிர் அவள் நெற்றியில் முத்தமுட்டவன், “தல வலி இனி உனக்கு இருக்காது” என்றான்.
“வி... விடு கதிர்.”
“இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கு ஜுரம் கூட சரியாகிடும். இது பேர் தான் கட்டி பிடி வைத்தியம். உன்னோட உடலின் மொத்த சூட்டையும் நான் எடுத்துக்குறேன்.”
“என்ன பண்ற நீ? கையை எடு. ஹ்ம்... விடு கதிர். எனக்கு கூசுது.”
கதிர் முல்லையின் முகம் முழுதும் முத்தமிட்டவன், அவளை தன் இதயத்தோடு இறுக்கி அணைக்க... அவன் தீண்டுதலில் தன் பெண்மையை முதல் முறை உணர்ந்த முல்லையின் மனது முல்லைபூவாக மலர்ந்தது.
“முல்லை can you marry me?”
“என்ன கதிர்?” என்றாள் புரியாது.
“என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? சொல்லுடி. விவரம் தெரிஞ்சதுல இருந்து கல்யாணம் பண்ணா உன்னை தான் கல்யாணம் முடிக்கணும்னு காத்துகிட்டு இருக்கேன். சொல்லு முல்லை நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?
“நீ ஏன் இப்படி எல்லாம் பேசுற? முதல்ல நீ வீட்டுக்கு போ. அப்பா வந்தா என்னை கொன்னுடும். நீ போ கதிர்.”
“போகமாட்டேன். நீ என்னை கட்டிக்கிறேன் சொல்லு நான் போறேன்.. இல்லையா நீ சொல்ற வரைக்கும் நான் உனக்கு முத்தம் தந்துகிட்டே தான் இருப்பேன்” என்று முத்தமிட,
“ஆ.... விடு கதிர்.”
கதிர் முல்லையை தன் வசம் மேலும் அணைக்க, முல்லை அவனிடம் இருந்து மீள முயல, அவள் குடிசை வீட்டின் கீற்றால் பின்னப்பட்ட கதவைத் திறந்துகொண்டு முல்லையின் அப்பா கணேசன் உள்ளே நுழைந்தவர் அதைக் கண்டு அதிர்ந்து, “சின்னய்யா என்ன காரியம் பண்றீங்க? என்ன இதெல்லாம்?” என்றார்.
 
Joined
Feb 6, 2025
Messages
128
முல்லை அவன் வசம் இருந்து விலக கதிர் கணேசன் அருகில் வந்தவன், “இங்க பாருங்க. நான் விவரம் தெரிந்ததில் இருந்து உங்க பொண்ண உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். எங்க காதல புரிஞ்சுக்கோங்க.”
“என்ன காதலா? என்னய்யா... என்ன பேச்சு பேசுறீங்க? முல்லை என்ன இதெல்லாம்?” என்று மகளிடம் பாய்ந்தார்.
“எனக்கு எதுவும் தெரியாதுப்பா.”
“இல்ல முல்லைக்கு இது எதுவும் தெரியாது. நானும் அவகிட்ட மறைமுகமாகவும் சரி நேரடியாகவும் சரி, என் காதலை தெரியப்படுத்திகிட்டு தான் இருக்கேன். ஆனா இன்ன வரைக்கும் அவ என்னையும் புரிஞ்சுக்கல. என் காதலையும் புரிஞ்சுக்கல.”
“ஐயா உங்களை கையெடுத்து கும்பிடுறேன். தயவுசெய்து நீங்க முதல்ல இந்த வீட்டை விட்டு கிளம்புங்க. உங்க மாமாங்களுக்கு மட்டும் நீங்க இங்க வந்தீங்கன்னு தெரிந்தாலே எங்க ஊரை எரித்துடுவாங்க. நாங்க எல்லாம் உங்க வீட்டு முன் வாசல் வழியாக கூட வரக்கூடாது. அப்படி இருக்கிறப்ப இதெல்லாம் சரிப்படாது” என்றார் கணேசன்.
“போதும் நிறுத்துங்க. எந்த காலத்துல இருக்கீங்க அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க எங்க காதலுக்கு சம்மதித்தால் மட்டும் போதும். நான் முல்லையை ராணி மாதிரி இல்ல மகா ராணி ஆகவே வாழ வைப்பேன்.”
“ராணியாக எல்லாம் அவ வாழ வேணாம் உயிரோட இருந்தாலே போதும்.”
“பிளீஸ் சொல்றதைக் கேளுங்க. நான் என் அப்பா கிட்ட பேசுறேன். என் அப்பா எனக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவாரு.”
“எனக்கு அதை பத்தி எல்லாம் கவல இல்ல. ஆனா என் மகளின் உயிர் எனக்கு முக்கியம். எங்களுடைய தராதரம் என்னன்னு எங்களுக்குத் தெரியும். தயவு செய்து இங்கே இருந்து நீங்க போயிடுங்க.”
“எங்க அப்பா எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்கன்னு நினைக்கிறீங்களா? அவர் ஒத்துக்கலனாலும் பரவாயில்ல நான், நீங்க, முல்லை மூணு பேரும் சென்னைக்கு போய்டுவோம் .அங்க எனக்கு ஒரு வீடு இருக்கு. அங்க நம்ம சந்தோஷமா வாழலாம்.”
“என்ன... உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ண சொல்றீங்களா? நான் உயிரோட இருக்கிற வரை அது நடக்காது. உங்க கால்ல வேணா விழுறேன். தயவுசெய்து என் வீட்டை விட்டு போயிடுங்க. என் பெண்ணையும் வாழ விடுங்க” என்று சொன்னபடி கணேசன் கதிரின் காலில் விழ,
“என்ன பண்றீங்க? ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க? நான் முல்லையை விரும்புறேன். என் காதலை உங்ககிட்ட சொல்றேன். அத புரிஞ்சுக்க மாட்டீங்களா?”
“எங்களுக்கு எதுவும் புரிய வேண்டாம். தயவு செய்து நீங்க வீட்டை விட்டு வெளிய போங்க. நாளைக்கு உங்களுக்கு நிச்சயம் நடக்கப்போகுது. உங்க மாமாங்களுக்கு தெரிஞ்சாலே எங்களை உயிரோடு கொளுத்திடு வாங்க. நீங்க கிளம்புங்க.”
“முல்லை நீ சொல்லு. என்ன விரும்புறியா? இல்லையா?” என்று அவளிடம் நேராக கேட்டான்.
“ஐயா என் மகளுக்கு நான் மாப்பிள்ளை பாத்துட்டேன். என் பொஞ்சாதியோட தம்பி தான் முல்லையை கட்டிக்க போறான். அடுத்த வாரம் என் பொண்ணுக்கு கல்யாணம்” என்றார்.
“என்ன சொல்றீங்க?”
“ஆமாய்யா.”
“இல்ல நீஙக பொய் சொல்றிங்க.”
“உங்ககிட்ட பொய் சொல்லனுமுன்னு எனக்கு அவசியம் இல்ல. அதுவும் இல்லாம நான் தான் உங்க வீட்ல வேலை செய்றேன். பொய் சொல்ல எனக்கு எந்த அவசியம் இல்ல. அதுவும் இல்லாம நான் தான் உங்க வீட்ல வேலை செய்றேன். என் மக இல்ல. விடிந்ததும் முதல் வேலையாக முல்லையை நான் அவ பாட்டி வீட்டுக்கு அழைச்சிட்டு போய்டுவேன். தயவு செய்து உங்க வாழ்க்கையை நீங்க பாருங்க.”
“இங்க பாரு முல்லை நாளைக்கு சாயங்காலம் 5 மணிக்கு எனக்கு நிச்சயதார்த்தம். உனக்காக நான் 5 மணிவரையும் காத்திருப்பேன். நீ எனக்காக வரணும். அப்படி நீ வரலைனா என் உயிர் என் உடம்புல இருக்காது.”
“என்ன நாங்க உயிரோடு இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா? இப்போவே சொல்லுங்க. நாங்க உங்க கண்ணெதிரிலேயே கொழுத்திகிட்டு செத்துடுரோம்.” கணேஷன் முல்லையின் தலையில் அருகில் இருந்த சிமெண்ணையை ஊற்றியவர், தானும் மேலே அதை ஊத்திக்கொள்ள போக,
அவரை தடுத்த கதிர் அவரை கையெடுத்து கும்பிட்டு, “என் காதல் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. முல்லை உனக்காகநான் காத்து இருப்பேன்” என்ற ஒற்றை சொல்லை உதிர விட்டவன், அந்த வீட்டை விட்டு வெளியேறினான்.
கணேஷன் தன் மகளை கட்டி பிடித்து அழுதவர், “அம்மாடி நீ போய் குளிச்சிட்டு கிளம்புமா. நான் ஐயன்னார் மாமாகிட்ட சொல்லி வண்டி கட்ட சொல்றேன். நீ பாட்டி வீட்டுல போய் இறங்கிடு ராசாத்தி. நான் கதிர்வேலன் ஐயாக்கு நாளைக்கு நிச்சியம் முடிந்ததும் உன்னை வந்து பாக்குறேன்.”
“அப்பா கதிரு...”
“கதிருக்கு என்னமா?”
“கதிரு பாவம்ப்பா. நான் இல்லைனா அவன் செத்துடுவேன்னு சொன்னானே...”
“அவரு சொன்னாரு தான்மா. ஆனா அவர் உன்னை விரும்புறது மட்டும் அவுங்க ஜாதி கார ஆளுங்களுக்கு தெரிந்தா இந்த கிராமமே சுடுகாடா மாறிடும்.”
“நான் இப்ப என்னப்பா பண்ணட்டும்?”
“நீ தலையில் தண்ணி ஊத்திகிட்டு கிளம்புமா. நான் மாட்டு வண்டி கட்ட சொல்றேன்” என்று சென்றார்.
முல்லை தலையில் நீரை ஊற்றியவள், கதிரின் காதலையும் தலை முழுகுவாளா....???
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top