• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
128
💕K காதலின்.M. முகவரி💕

💕முகவரி... 8️⃣

“முல்லை ஏன் அழுவுற?” என்று வந்தான் கதிர்.
“எனக்கு அப்பாவ பாக்கணும்.”
“அழாத முல்லை. உன் அப்பா மரணத்துக்கு கண்டிப்பா ஒரு நியாயம் கிடைக்கும்.”
“நியாயம் கிடைச்சா என் அப்பா திரும்ப வருவாரா கதிர்?”
“நியாயம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போன உயிர் போனது தான். அந்த இழப்பை ஆயிரம் புது வரவு வந்தாலும் பூர்த்தி செய்ய முடியாது. ஆனா நம்ம இதை கடந்து தான் வாழ்ந்து ஆகணும்.”
“எனக்கு என் அப்பா தானே எல்லாமே. அம்மாவை நான் பார்த்தது கூட இல்லை. அப்பாவையும் எரிச்சிட்டாங்க. நான் அவரகிட்ட போய் பாக்கணும்ன்னு சொன்னதுக்கு கூட என்னை விடல.”
“சரி இப்படியே அழுதுட்டு இருந்தா என்ன ஆகறது. வா வந்து பிஸ்கட் எதாவது சாப்பிடு. ஜூஸ் குடிக்கிறியா?”
“வேணாம்.”
“சரி ஏன் கீழ உட்காந்து இருக்க? என்கூட வா நான் உனக்கு ஒன்னு காட்டுறேன்.”
“எங்க கதிர்?”
“நான் உன்ன எந்த அளவுக்கு காதலிக்கிறேன்னு வந்து பாரு” என்று ஒரு அறைக்கு அழைத்துச் செல்ல, “இந்த ரூம் யாருது?”
“இது தான் நம்ம பெட்ரூம்” என்றான்.
“படுக்குற அறையா?”
“ம் ஆமா. வா உள்ள.” முல்லையை கதிர் அறைக்குள் அழைத்து செல்ல, அவன் அறை முழுவதும் முல்லையின் புகைப்படம் ஒட்டி இருந்தது.
“என்ன கதிரு இது என்னோட படமா இருக்கு? இதெல்லாம் நீ எப்போ எடுத்த?”
“ஏன் எடுத்தனு கேளு.”
“ம்... சரி ஏன் எடுத்த?”
“நான் உன்ன பாத்துகிட்டே இருக்கணும். அதுக்காக தான் எடுத்தேன். நல்லா இருக்கா?”
“ம்...” என தலையசைத்தாள்.
“சரி எதாவது சாப்பிடுறியா?”
“வேணாம். ஆங் இந்த வேஷ்டி என் இடுப்பில நிற்கவே மாட்டுது.”
“குடு நான் கட்டி விடுறேன். ம்... முல்லை பேசாம நீ என்னுடைய பேன்ட் போட்டுக்கோ.”
“இல்ல பாவாடை தாவணி காஞ்சதும் நான் அதை மாத்திக்கிறேன். இப்ப இதோட இருக்கிறேன். ஏன் இது நல்லா இல்லையா?”
“யார் சொன்னது? நீ எல்லா டிரெஸ்லையும் அவ்ளோ அழகா இருக்க. ஏன்னா என்னைக்குமே நீ என் அழகி” என்று புகழ்ந்தான்.
“முல்லை தூங்கலாமா. ரொம்ப அசதியா இருக்கு.”
“ம்... கதிர்”
“வா வந்து படு” என்றதும் அவள் கீழே படுக்க, “ஏய் ஏன் கீழ படுக்குற?”
“வேற எங்க படுக்க கதிர்?” முழித்தாள் முல்லை.
“இங்க வா. வந்து என்கூட மெத்தையில படு.”
“ஹ்ம் வேணாம். நான் இங்கேயே படுத்துக்குறேன்.”
“முல்லை.” அவளின் ம்ம்..ல் “நான் சொன்னா கேப்ப இல்ல.”
“ஆமா கதிர்.”கதிர் : அப்போ வா..
“என்கிட்ட வந்து படு” என்றதும் அவன் அருகில் படுக்க, “ஹேய் விழ போற. நல்லா படு” என்றவன் அவள் கொஞ்சம் நெருங்கிப் படுத்ததும், “உன்கூட இப்படி ஒண்ணா படுக்க நான் எத்தனை நாள் ஏங்கி இருக்கேன் தெரியுமா?” என்றான்.
“ஹ்ம் தெரியாது.”
“சரி நான் உனக்கு யாருன்னு தெரிதா?”
“நீ கதிர்.”
“அது இல்ல. உனக்கு நான் யாருன்னு கேட்டேன்.”
“நீ தான் என் அப்பாக்கு பதிலா எனக்காக இருக்கன்னு சொன்னியே கதிர்.”
“அது உண்மை தான்.”
“பின்ன என்ன?”
“ம் சரி எனக்கு நீ என்னனு உனக்கு தெரியுதா?”
“ம் தெரியும்.”
“ஓ... என்ன தெரியும்” என்றவன் குரலில் ஆர்வம்.
“உனக்கு அம்மா இல்லல்ல. அப்போ நான் உனக்கு அம்மா மாதிரி.”
“உண்மை தான் என் அம்மா முகத்தை உன் மூலமா தான் நான் நிறைய முறை உணர்ந்தேன்.”
“கதிர் இனிமே அப்பா வர மாட்டாரா?”
“ஏன் உனக்கு என்கூட இருக்கிறது பிடிக்கலையா?”
“இல்ல அப்பாவை பாக்கனும் போல இருந்துச்சு. கண்ணை மூடுனா அப்பாவை அவங்க எரிச்சது தான் தெரியுது.”
“நீ கொஞ்சம் கொஞ்சமா அதையெல்லாம் மறக்க முயற்சி பண்ணு.”
“எப்படி மறக்குறது கண்ணை மூடுனாலே, யாரோ என் முடியை பிடிச்சி இழுக்குற மாதிரி இருக்கு. ரொம்ப பயமா இருக்கு.”
“நான் தான் உன்கூட இருக்கேன் இல்ல. பயப்படாத.”
“ம்...”
“முல்லை உனக்கு பயமா இருந்தா என்னை, என்னை வேணா கட்டிப் பிடிச்சிகிட்டு படுத்துக்கோ.”
“இல்ல வேணாம். இதோ தலையணை இருக்கு இல்ல நான் அதை கட்டிக்கிறேன்.”
கதிர் அதை தூக்கி தூரம் வீசினான்.
“ஏன் கதிர் அதை தூக்கி போட்ட?”
“உனக்கும் எனக்கும் நடுவுல ஒண்ணுமே இருக்க கூடாது புரியுதா?” என்றதும் அவள் தலையசைக்க, “என்னாச்சு. தலை மட்டும் அசையுது.”
“அப்போ இந்த போர்வை.” அவன் சிரிக்க, “ஏன் சிரிக்கிற?”
“அதுவும் வேணாம். அதையும் தூக்கி தூற வீசு.”
“ம்... போட்டுட்டேன்.”
“ம்... நல்ல பொண்ணு. சரி தூங்கு.”
“நீ நான் தூங்குனதும் எங்கேயும் போயிடாத.”
“போக மாட்டேன். நீ தூங்கு.” கதிர் முல்லை கரங்களை பற்றிக்கொண்டு கண்ணுறங்க, முல்லையும் அவள் வலிகளை மறைத்து கொண்டு கண்கள் மூடினாள்.
மாலை நேரம் இவர்கள் வீட்டு கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டு முல்லை தூக்கத்தில் இருந்து பயந்து போய் கண் விழித்து, “கதிர் கதிர் யாரோ வராங்க. எழுந்திரு” என்றாள்.
“ஏய் இரு இரு பயப்படாத. மணியா தான் இருப்பான். நீ இரு நான் பாக்குறேன்.” கதிர் வாசல் கதவை திறக்க, வாசலில் சவிதா மற்றும் அவளின் கணவன் பீட்டர் மற்றும் இவர்களின் நண்பன் மணி ஆகியோர் உள்ளே நுழைந்தனர்.
“ஹாய் கதிர். என்னாச்சு சவி என்னென்னமோ சொல்றா” என பீட்டர் கேட்க,
“ம் ஆமா பீட்டர் அவ சொன்னது உண்மை தான்.”
“முல்லை எங்க?”
கதிர், “முல்லை” என்றழைக்க, “ம் கதிர் இதோ வரேன்” என்றாள்.
“பீட்டர் இவங்க தான் முல்லைப்பூ. நம்ம கதிர் மனைவி. முல்லை இவரு தான் பீட்டர். என்னோட புருஷன்” என்று அறிமுகம் செய்தாள் சவீதா.
“உங்களுக்கு கல்யாணம் ஆச்சா?”
“ம் ஒருமுறை ஆச்சே” என்று சிரித்தாள்.
“அப்புறம் கதிர் மேற்கொண்டு என்ன ப்ளான்?”
“பர்ஸ்ட் அப் ஆல் முல்லைய வச்சு போலீஸ் ஸ்டேசன்ல ஒரு கம்ப்ளைன்ட் தர சொல்லனும். அண்ட் நம்மளே இந்த கேசை புரசீட் பண்ணுவோம்.”
“மச்சான் வேற எதாவது பிரச்சனை வர போகுது.
“என்ன வந்தாலும் சரி மணி. நம்ம இந்த கேசை நடத்தியே ஆகணும். இந்த வெறி பிடித்த மிருகங்களை பற்றி இந்த ஊர் உலகத்துக்கு சொல்லியே ஆகணும்.”
“சரி நீ முடிவு பண்ணிட்ட. என்னமோ பண்ணு.”
“மாமா இந்தா டின்னர்.”
“நீ பண்ணியா? என்றான் கதிர்.
“ம்க்கும் கிழிப்பா. இவள கட்டினதுல இருந்து பீட்டர் ஜான்தான் எல்லாமே பண்ணுறாரு போல. பாவம் பீட்டர் ஒரு ஜான் குறைந்து வேற போயிட்டாரு பாத்தியா.”
“டேய்! நீ அடேங்கவே மாட்டியா. சரி மாமா நீங்க சாப்பிடுங்க. இப்போதைக்கு நம்ம யாரும் வெளிய ரொம்ப போக வேணாம். பீட்டர் மட்டும் நமக்கு தேவையானதை பண்ணட்டும்.”

“அவன் உனக்கு மட்டும் தான் பண்ணுவான். எங்களுக்குமா பண்ணுவான்..
“டேய்! வீணா போனவனே நீ அடங்கவே மாட்டல்ல. சரி சவி நீ சொல்றதும் சரி தான். நம்ம ஒரு பத்து நாளைக்கு வெளிய ரொம்ப போக கூடாது” என்று கதிர் சொன்னான்.
அடுத்த பத்து நாட்களுக்கு இவர்கள் அடிக்கடி வெளியே போவதை தடுக்க, கதிர், முல்லை அப்பா மீது திருட்டு பழி போட்டு அவரைக் கொலை செய்த, அவனின் மாமன்கள் இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தேவையான ஆவணங்களை தயார் செய்தவன், அதை தபால் மூலம் அவனின் கிராமத்துக்கு அனுப்பி வைத்தான்.
 
Joined
Feb 6, 2025
Messages
128




இரண்டு வாரம் கடந்த நிலையில் முல்லை கொஞ்சம் இயல்பான மனநிலைக்கு மாறி இருந்தாள். கதிரிடம் சகஜமாக பேச ஆரம்பிக்க, அடிக்கடி மணியும், சவிதாவும் முல்லையுடன் பேசி பழக, அன்றைய தினம் இரவு நேரம் கதிர் ஆசையாக முல்லையிடம் நெருங்கி வந்தான்.
“முல்லை.”
“சொல்லு கதிர்?”
“தூங்கலாமா?” அவள் சம்மதம் சொல்ல, “சரி. நான் என்ன சொன்னாலும் நீ கேட்பியா?” என்று மெல்ல பேச்சை ஆரம்பித்தான்.
“ம்... கேட்பேன்.”
“இப்ப நமக்கு கல்யாணம் ஆச்சு இல்ல.”
“ம்... ஆமா இதோ நீ கட்டுன மஞ்ச கயிறு என் கழுத்துல இருக்கே
“ம் இருக்கட்டும்” என்றான்.
“ப்ச்... அதான் இருக்கே கதிர்.”
“ஆமா இருக்கு தான். அது மட்டும் போதாது இல்ல.”
“வேற என்ன வேணும்?”
“அது நமக்கு ஒரு பாப்பா பிறந்தா எப்படி இருக்கும் முல்லை?”
“என்ன பாப்பாவா!”
“ம்... ஆமா. உன்னை மாதிரி ஒரு பையன். என்னை மாதிரி ஒரு பொண்ணு.”
“ஒரு பாப்பா சொன்ன. இப்ப ரெண்டு பாப்பா சொல்ற.”
“நம்ம ராசிப்படி பாத்தா மூன்று பாப்பா பிறக்கணும்” என்றான் சிரிக்காது.
“நிஜமா மூன்று பாப்பா பிறக்குமா?”
“அது உன் கையில தான் இருக்கு.” என்றான் ஹஸ்கி வாய்ஸில்.
“என் கையில என்ன இருக்கு கதிர்? என்னாச்சு உன் குரலுக்கு. ஏன் இப்ப இவ்வளவு பொறுமையா பேசுற? என்றாள் புரியாது.
கதிர் அவன் சட்டையைக் கழட்டியப்படி அவள் பக்கம் நகர்ந்து படுக்க, “ஏன் சட்டைய கழட்டுற கதிர்? புழுக்கமா இருக்கா?”
“ம் ஆமா. ரொம்பப் புழுக்கமா இருக்கு.”
“அதோ அங்க காத்தாடி சுத்துதே. தள்ளிப் போய்ப் படு” என்றாள் குமரியில் இருந்து இன்னும் மாறாதிருக்கும் குமரிப்பெண்.
“அது சுத்தட்டும். நினைவு தெரிஞ்சதுல இருந்து நான் உன் பின்னாடி சுத்துறனே, அது உனக்கு தெரியலையா?” என்றவன் அவள் ஆடையில் கைவைக்க,
“கதிர் ஏன் நீ இப்ப என் ரவிக்கையை கழட்டுற? உன் சட்டைக்கு பதில் நீ என் ரவிக்கை போட்டுக்க போறியா?
“உஷ்...” என்று அவள் வாயில் கைவைக்க, கையைத் தள்ளிவிட்டு, “என்ன?” என்றாள்.
“முல்லை முல்லை...” என்றவன் குரல் இன்னும் மையலாய் வர,
“சொல்லு கதிர். என்ன வேணும்? ஏன் ஒரு மாதிரி பேசுற?”
“அடியே....கொஞ்சம் நேரம் சும்மா இருக்கியா?” கதிர் மெல்ல மெல்ல அவள் பக்கம் நகர்ந்தவன், அவளிடம் தன் ஆசையை வெளிப்படுத்த முயற்சி செய்ய, முல்லைக்கோ அதன் அர்த்தம் விளங்காமல் அவன் செயலுக்கு ஒத்துழைக்காமல் சிலையை போல அவன் அருகில் படுத்து இருக்க,கதிர் அவளை மேலும் நெருங்கினான்.
“கதிர்.”
“ம்... என்னடி” என்ற முனகல் சத்தம் காதில் விழ,
“என்னை என்ன பண்ற நீ?”
“உன்கிட்ட என்னை தர போறேன்டி.”
“கதிர் எனக்கு தூக்கம் வருது. உன்ன தான் கதிர். காது கேட்குதா? எனக்கு தூக்கம் வருது.”
“என்ன? தூக்கம் வருதா? என்னடி இப்படிச் சொல்லுற?”
“ஆமா ரொம்ப தூக்கம் வருது. நான் கீழ போய் படுத்துக்கவா?”
“ஏன் கீழ? இங்கேயே படு.”
“நான் இங்க படுத்தா நீ என்னை என்னமோ பண்ற. நான் கீழ போறேன் போ.”
“அடியே நான் உன் புருஷன்டி.”
“அதுக்கு?”
“இப்படியெல்லாம் பண்ணா தப்பு இல்ல முல்லை.” என்றதும் அவள் விழிக்க, “என்ன?”
“நான் தூங்கணும்.” அவளை வைத்து என்ன செய்வது புரியாது கதிர் விழிக்க,
“ஏன் அப்படி பாக்குற? நான் தூங்க கூடாதா?”
“சரி படு. ஆனா கீழ வேணா இந்த கட்டிலயே படு” என்றான் தன் உணர்வுகளை அடக்கி.
“நீ படுக்கல?”
“நீ முதல்ல தூங்கு.” முல்லை அமைதியாக கதிரை பார்த்தப்படி படுத்து இருந்தாள். கதிர் அவன் சட்டையை பட்டனை மீண்டும் அணிந்து கொண்டு இருந்தவனை பார்த்த முல்லை அவனிடம் இயல்பாக, “கதிர்” என்றழைத்தாள்.
“சொல்லுமா.” எனக் கேட்க,
“அன்னைக்கு நீ எனக்கு ஒரு முத்தம் தந்த இல்ல?”
“என்னைக்கு?”
“அதான் அன்னைக்குப் பண்ணை வீட்ல நீ கூட என் வாயில முத்தம் தந்தியே.”
“அப்படியா? நானா?”
“ஆமா நீ தான்.”
“எனக்கு சுத்தமா நினைவு இல்லயே” என்றான் நமட்டுச் சிரிப்புடன்.
“நிஜமா நினைவு இல்லையா.”
“இல்லையே முல்லை. சரி இப்ப ஏன் அத கேக்குற?
“எனக்கு இன்னொரு தடவ அதே மாதிரி முத்தம் தரியா? கதிர் சொல்லு தரியா?”
“ஹ்ம் மாட்..டேன்.”
“ஏன்?”
“நான் ஒரு தடவ தந்ததுக்கே உனக்கு ஜுரம் வந்துடுது. இப்ப மறுபடியும் தந்தா, ப்பா... வேணா வேணா நீ தூங்கு.”
“ஒண்ணே ஒன்னு தாயேன்.”
“இல்ல இல்ல அன்னைக்கே நான் தந்துட்டேன். இனி நீ தான் தரணும்.”
“என்ன நானா?”
“ஆமா நீ தான்” என்று அவன் அடம்பிடிக்க,
“இல்ல வேணாம். நான் தூங்குறேன்” என்றாள் அவள்.
“ஏய் முல்லை என்னாச்சு?”
“ஒண்ணுமில்ல.”
“எங்க போற? கோவிச்சுக்கிட்டயா?”
“இல்லையே. நான் கேட்டேன், நீ முடியாது சொன்ன. இதுல நான் ஏன் கோவப்படணும்?”
“சரி உனக்கு என்கூட இருக்க பிடிக்குதா?”
“ம் பிடிக்குது.”
“நாளைக்கு சவி பீட்டர் கூட ஊருக்கு போறா. மணி சூட்டிங் போயிடுவான். நான் கோர்டுக்கு போகனும். நீ எப்படி இங்க தனியா இருப்ப?”
“தெரியல. நீயே சொல்லு.”
“நீயும் என்கூட வரியா?”
“வேண்டாம்” என்றாள்.
“ஏன்மா?”
“எனக்குக் கூச்சமா இருக்குமே.
“என்ன கூச்சமா இருக்குமா. ஏன்?”
“நீ துரை மாதிரி பேன்ட் சொக்காய் எல்லாம் மாட்டிக்கிட்டு இருக்க. நான் நமக்கு கல்யாணம் ஆகியும் கூட பாவாடை தாவணி கட்டி இருக்கேன். யாராவது உன்ன கேலி பண்ணா பாவம் இல்ல நீ.”
“அடியே! நீ என் Wife ஓகேவா.”
“நான் உன் பொஞ்சாதின்னு சொல்றியா?”
“ஆமா. உன்ன யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. நீ என் செல்லம். நீ என் தேவதை. நீ என்னோட உசுரு.”
“தெரியும்.”
“எப்படி?”
“நீ எப்போவுமே சொல்லுவியே.”
“ஒ உனக்கு நினைவு இருக்கா?”
“ம் இருக்கு இருக்கு. சரி நீ தூங்கு.”
“என்ன தூங்கணுமா? ஏய் என்ன நீ முத்தம் கேட்ட?”
“நீ தான் நினைவு இல்லன்னு சொன்னியே.”
“நான் சும்மா சொன்னேன்.”
“அதனால் என்ன இருக்கட்டும்.”
“அப்போ முத்தம் வேணாமா?”
“வேணாம்.”
“ஏ..ன்?” என்றான் ஏக்கமாய்.
“அப்போ வேணும்ன்னு தோணுச்சு கேட்டேன். இப்ப வேணான்னு தோணுது.”
“அதெல்லாம் முடியாது. நான் உனக்கு முத்தம் தந்தே தீருவேன்.”
“நான் தான் வேணான்னு சொல்றேன் இல்ல. கையை விடு கதிர்.”
“முடியாது.” கதிர் அவளை தன் வசம் அணைத்தவன் அவள் இதழ்களை அவன் விரல் கொண்டு வருட, முல்லைபூவின் கைகள் அவன் தேகத்தை பற்றிக்கொள்ள, கதிர் அவன் இதழ்களை அவள் இதழ் அருகில் கொண்டு சென்றவன், அவள் காதோரத்தில், “ஓய்!” என்றான்.
“ம்...”
“ஐ லவ் யூ முல்லை. நான் சொல்லுறது கேட்குதா?”
“ம்... நல்லாவே கேக்குது.”
“அப்ப நீ சொல்ல மாட்டியா?” என்று காதில் செல்லக்கடி கடிக்க,
“என்ன சொல்ல?” என்றாள் காதை தோளில் தேய்த்து,
“ஐ லவ் யூ சொல்லு.”
“ஹ்ம் மாட்டேன் போ.”
“சரி. நீ எப்போ சொல்றியோ, நான் அப்போ உனக்கு முத்தம் தரேன்.”
“ஏன் இப்படி மாத்தி மாத்தி பேசுற கதிர்?”
“ஆமா நீ தான் என்னை நேசிக்கலன்னு சொல்றியே.”
“நான் எங்க அப்படி சொன்னேன்?” புரியாது அவள் விழிக்க,
“அப்போ I love you சொல்லு.”
“எனக்கு அதெல்லாம் சொல்ல வராதே.”
“மூனு வார்த்தை சொல்ல தெரியாதா?”
“ஹ்ம் தெரியாது. எனக்கு தெரிந்த, நான் அடிக்கடி சொல்லுற மூனு எழுத்து தான் சொல்ல தெரியும்.”
“என்ன லட்டுவா?” அவனின் கேலியில், “கதிர்” என்று அவள் சிணுங்க, “பின்ன என்னன்னு சொல்லு?” என்றான்.
“அதான் சொன்னேனே?”
“நீ என் பெயர தான் சொன்னியா?”
“ஆமா எனக்கு உன்னையும், என் அப்பாவையும் தவிர வேற எதுவும் தெரியாது தானே” என்றதும் அவன் சிரிக்க, “ஏன் சிரிக்கிற?” என்று சிணுங்கினாள்.
“உங்கிட்ட இருக்குற நல்லதும் சரி, கெட்டதும் சரி, உன் சின்னப் பிள்ளைதனமான பேச்சு தான்.”
“அப்போ நான் கெட்டவனு சொல்றியா?”
“நீ ரொம்ப ரொம்ப நல்லவள். சரி கிட்ட வந்து படு.”
“நீயும் படு” என்று அவள் சொன்னதும், கதிர் முல்லையை அணைத்தப்படி படுத்துக்கொள்ள, முல்லை அவன் அணைப்பில் பாதுக்கப்பாக கண்ணுறங்கினாள்.
மறுநாள் காலை பொழுது புதுப் பொலிவுடன் புலர, முல்லை அசந்து உறங்கி கொண்டு இருக்க, கதிர் தூக்கத்தில் இருந்து எழுந்தவன், தன் மார்பில் படுத்து இருந்த முல்லைபூவை அவன் இதயத்தோடு மேலும் இறுக்கி கட்டிகொண்டவன், “முல்லை” என்றான்.
தூக்கத்தில் ‘ம்...’ என முனக,
“ஐ லவ் யூ.”
“நானும் யூ.” கதிர் சிரித்தப்படி அவள் நெற்றியில் மீண்டும் தன் இதழ்களை பதித்து முத்தமிட்டவன், குளியல் அறைக்கு சென்ற அடுத்த அரைமணி நேரத்தில் குளித்து முடித்து வெளியே வர, முல்லை இன்னும் படுக்கையில் இருந்து எழாமல் இருக்க, அவள் அருகில் சென்று அவள் பக்கம் அமர்ந்தவன், “முல்லை எழுந்திருடி” என்று எழுப்பினான்.
“ம் என்ன கதிர். அதுக்குள்ள குளிச்சுட்டியா?”
“ம் சரி நீ போய்க் குளிச்சுட்டு வா. நான் காபி போட்டு வைக்கிறேன்.”
“நான் என்ன உடுத்திக்கணும் கதிர்.”
“அன்னைக்கு தான் சுடிதார் வாங்கி தந்தேனே. அதைப் போடு.”
“ம் சரி நான் போய் குளிக்கவா?”
“ம் பாத்து போ” என்றான்.
முல்லை குளியல் அறைக்கு செல்ல, கதிர் காபி போட்டு கொண்டு இருக்க, சற்று நிமிடத்தில் முல்லை கதிரின் பெயரை சொல்லி கத்தி அழைத்தாள். கதிர் முல்லையின் அலறல் சத்தம் கேட்டு பதட்டத்துடன் குளியல் அறை அருகில் சென்றவன், “முல்லை என்னடி ஆச்சு? ஏய் உன்ன தான் கதவைத்திற” என்று தட்ட, அவளிடம் இருந்து பதில் வரவில்லை.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top