Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 128
- Thread Author
- #1
முகவரி.
கதிர் பெயரைச் சொல்லி முல்லை கத்தி அழைக்க, “முல்லை ஏன் இப்படிக் கத்துற? என்னாச்சி?” என்றான் கதிர்.
“இங்க பாரு இதுல கையே இல்லையே. நான் எப்படி இதை போடுறது?” என்று ஆடையைக் காண்பிக்க,
“ப்பூ... இதுக்கா இப்படி கத்தின. நான் என்னவோன்னு பயந்துட்டேன்.” என்றான்.
“ஆமா. கையெல்லாம் தெரிஞ்சா அசிங்கமா இருக்காதா?”
“அதெல்லாம் அசிங்கமா இருக்காது. இதுதான் இங்கே மாடல்.”
“எனக்கு இதெல்லாம் வேணாம். எனக்கு கை வேணும் கதிர்.”
“ம் சரி. இன்னைக்கு ஒருநாள் இதை போட்டுக்கிட்டு கிளம்பு. நான் ஈவ்னிங் உன்னையே அழைச்சுட்டுப் போய், உனக்கு என்ன வேணுமோ வாங்கிக் கொடுக்கிறேன்.”
“ம்... சரி இத கொஞ்சம் போட்டு விடு.”
“என்னது இது?”
“தெரியல இது கூட தான் இதுவும் இருந்துச்சு” என்று அதைக் காண்பித்தாள்.
“ம்... இது இடுப்புல கட்டுறது முல்லை.”
“இந்த டிரஸ்சுக்கு கூடவா இடுப்பில் கட்டுவாங்க. பேன்ட்கு தானே இதை கட்டுவாங்க?” என்றாள் சந்தேகமாய்.
“இதுக்கும் போடலாம்.”
“எனக்கு இது வேண்டாம் கதிர்.”
“உனக்கு வேணாம்னா தூக்கிப் போட்டுரு.”
“ம்... சரி எங்க போக போறோம்?”
“இங்க இருந்து முதல்ல நம்ம கோர்ட்டுக்கு போயிட்டு, அதுக்கு அப்புறமா மணி ஷூட்டிங் எடுக்கிற இடத்துக்கு போறோம்.”
“அங்க எதுக்கு போகணும்? நீ படம் நடிக்க போறியா?”
“நான் படம் எல்லாம் நடிக்கல. அட்வர்டைஸ்மெண்ட் தான் நடிச்சுக்கிட்டு இருக்கேன். அதுல இன்னைக்கு ஒரு சீன் இருக்கு. அதை முடித்துட்டு அதுக்கப்புறம் நம்ம பீச்சுக்கு, சினிமாக்கு எல்லாம் போயிட்டு வரலாமா?”
“ம் சரி போலாம்.”
“என்ன தலையில துணி கட்டி இருக்க. போ போய் முடியை உலரவிடு.”
“இல்ல முடி கம்மியா தானே இருக்கு. அது தானாவே காய்ந்துவிடும்” என்றாள்.
“சரி என்ன இது நெத்தில குங்குமம் வைக்கலையா? நான் வச்சிவிடவா?”
“வச்சு விடு. நீதானே என் புருஷன். நீதான் வச்சிவிடனும். என்ன கேள்வி கேட்கிற நீ?”
“ஹ்ம் நல்லா பேசுற. ஆனா, கிட்ட வந்தா மட்டும் தூக்கம் வருதுன்னு சொல்ற” என்று சலித்தான்.
“என்ன கதிர் புலம்புற?”
“ஒண்ணுமில்ல முல்லை” என்ற கதிர் தன் கரங்களால் அவள் நெற்றியில் திலகமிட்டு, “முல்லை என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?
“எத்தனை தடவ இதையே கேட்ப. உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதனாலதான் நான் உன்கூடவே இருக்கேன். இல்லனா நானும் அப்பா போன அப்பவே...”
“ஏய் நோ நோ போதும்.. சரி வா சாப்பிட்டுட்டு கிளம்பலாம்.”
“கதிர் நான் வேணும்னா சாப்பாடு செய்யவா?
“உனக்கு சாப்பாடு செய்ய தெரியுமா?”
“அவ்வளவா தெரியாது. ஏதோ கொஞ்சம் கொஞ்சம் செய்வேன்” என்றதும் கதிர் அவளை தன்னுடன் அணைத்தவன், அவள் கழுதோரத்தில் தன் இதழ்கள் பதித்து, “உனக்கு எல்லாத்தையும் நானே கற்றுத்தறேன்” என்றான்.
“கூசுது கதிர்.”
“எனக்கு ஒரு கிஸ் தான்னு எத்தனை நாளா கேக்குறேன். ஏன் இப்படி என்னை கெஞ்ச விடுற?”
“கிஸ்ஸுனா முத்தமா?”
“ம்...”
அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “போதுமா?” எனக் கேட்டாள்.
“என்னடி இது?” என்றான் கன்னம் தொட்டு.
“நீ தானே முத்தம் கேட்ட?”
“போடி. கொசு உக்காந்த மாதிரி இருக்கு. முத்தம்னா எப்படி இருக்கணும் தெரியுமா?”
“எப்படி இருக்கனும்?”
“சும்மா இப்படி கன்னத்தை பிடிச்சு இந்த மாதிரி...” என்று முத்தமிட, அவளோ அலற, அவனோ பதறி என்னவென கேட்டான்.
“என் உதட்டை கடிக்கிற கதிர் நீ.
“அடியே இது முத்தமடி.”
“இது ஒன்னும் முத்தம் இல்ல. நீ என்கிட்ட பொய் சொல்ற.”
“உன்கிட்ட குடும்பம் நடத்தி, நான் எப்படி மூனு பிள்ளைய பெக்க போறேன்னு தெரியல.” என்னவென அவள் விழிக்க, “ஒண்ணுமில்ல வா கிளம்பலாம்.”
கதிரும் முல்லையும் முதலில் நீதிமன்றம் சென்றவர்கள் பிறகு அங்கே வேலைகளை முடித்துவுடன், மணி அட்வர்டைஸ்மென்ட் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு செல்ல,
“அடேய்! வளர்ந்து கெட்டவனே. எத்தனை மணிக்கு வரச்சொன்னா எத்தனை மணிக்கு வர? என்ன காலையிலேயே பாப்பாகிட்ட கடலை போட்டியா?
“மனுஷன கடுப்பக் கிளப்பாத மச்சான். அவகிட்டப் போனாலே அவளுக்கு எந்த ஒரு உணர்வுமே இல்ல. இதுல வேற கடலை வருத்தியா கடலை மிட்டாய் சாப்பிட்டியானு டென்சன் படுத்துற.”
“என்ன மச்சான் சொல்ற? அப்போ உங்களுக்குள்ள ஒன்னுமே நடக்கல்லையா?”
“எங்க நடக்க. நான் எப்ப அவகிட்டப் போனாலும், தூக்கம் வருதுன்னு சொல்றாளே தவிர, வேற எதுவும் அவளுக்கு தோணல போலடா.”
“மச்சான் சிஸ்டர் வராங்க” என்று அலார்ட் செய்ய,
“என்ன அண்ணா நீங்க தான் படம் எடுப்பீங்களா?” என்றாள் மணியிடம்.
“ஆமாம்மா. நீ வந்து இப்படி உட்காரு. ஆங் கதிருக்கு ஒரு சின்ன வேலை இருக்கு அதை முடித்துட்டு வருவான்.” என்க,
“கதிர் எங்க போற என்னை விட்டுட்டு? எங்கேயும் போகாத. என்னோடவே இரு” என்றாள் முல்லை.
“இங்க பாருமா கதிர் எதிர் ரூம் இருக்கு பாரு அந்த இடத்தில்தான் இருப்பான். உன் கண்ணெதிரே தான் இருப்பான். வா நீ இங்க உட்காரு” என்று அழைத்தான் மணி.
“முல்லை இங்க இரு நான் வரேன்.” என்று கதிரும் சொல்ல, சரியென்று அமர்ந்தாள்.
கதிர் முதலில் அவன் ஆடை மாற்றும் அறைக்கு போக, “அண்ணா இங்கே என்ன நடக்கப்போகுது?” என்று மணியிடம் கேட்டாள்.
“ஒரு சின்ன ஷூட்டிங் தான். கதிர் ஒரே ஒரு டான்ஸ் ஆடிட்டு அவனுடைய காதலை அந்த பொண்ணுகிட்ட வெளிப்படுத்துவான். அது சீக்கிரம் முடிஞ்சிடும். அப்புறம் நீங்க கிளம்பலாம் ஓகே வா.”
“எந்தப் பொண்ணுகிட்ட?”
“அதோ ஒரு பொண்ணு நிக்கிறா பாரு அவகிட்ட தான்.”
“அவகிட்ட இவன் ஏன் காதலை வெளிப்படுத்தனும்?”
“இது ஒரு ஷூட்டிங்மா.”
“இருந்தாலும் இன்னொரு பொண்ணுகிட்ட எப்படி கதிர் காதலை சொல்லலாம்.”
“ஏன் சொல்லக் கூடாதா?”
“ஹ்ம் ஹ்ம் சொல்லக்கூடாது. கதிர் என்னதான் காதலிக்கிறேன்னு சொன்னாரு. அப்புறம் எப்படி?”
“அது உண்மையா சொன்னான். இது பொய்.”
“பொய்யா இருந்தா கூட எப்படி சொல்லலாம். இல்ல இல்ல கதிரை கூப்பிடுங்க. இந்த சூட்டிங் இதெல்லாம் வேண்டாம் நாங்க வீட்டுக்கு போறோம்.”
“அம்மா தாயே இது அட்வர்டைஸ்மென்ட் ஷூட்டிங். இதை முடிக்கலைனா எனக்கு அடுத்தவேளை சோறு கிடைக்காது. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோமா முல்லை.”
“சரி நான் இங்கே உட்காந்துட்டு இருக்கேன். நீங்க சீக்கிரம் கதிர என்கிட்ட அனுப்புங்க.”
“நீ இங்க உட்காந்து அங்க என்ன நடக்குதுன்னு கண் கொத்திபாம்பா பாத்துக்கிட்டே இரு” என்று சொன்ன மணி கதிரை நோக்கிச் செல்ல,
“என்ன மச்சான் ஷேவிங் க்ரீம் விளம்பரம் தானே?” எனக் கேட்டான் கதிர்.
“இல்லடா இன்னைக்கு உனக்கு வேற ஒரு ஆட்.”
“புரியல. வேறனா?”
“அதான் மச்சான் வரும்முன் தடுப்போம்.”
“என்னடா விளையாடுறியா? அதுக்கெல்லாம் நான் ஒத்துக்கமாட்டேன்” என்று மறுக்க,
“மச்சான் நீ இப்ப இப்படி நடிச்சாதான் உனக்கு உன் முல்லைப்பூவின் காதல் கிடைக்கும்” என்று இரகசியம் பேசினான்.
“புரியலையே?”
“என்ன புரியல. இப்போ இங்கே ஷூட்டிங் நடக்கபோறது இல்ல. ஆனா ஷூட்டிங் நடக்கிற மாதிரி நம்ப ஒரு சீன் கிரியேட் பண்ணி, உன் முல்லைப்பூக்கு உன்மேல அடி மனசுல புதைந்து இருக்குற காதல்ல கல்லைப் போட்டு, கல்லைப் போட்டு மேலே எடுத்துட்டு வர போறோம்.”
“டேய் நீ கல்லை போட்டு என் மேல உள்ள காதலை முல்லைக்கு புரிய வைக்கிறேன் சொல்லி, என் வாழ்க்கையில ஒரே அடியா கல்லை போட்டுட போறடா.”
“அதெல்லாம் இல்ல மச்சான். என்னை நம்பினோர் கைவிடப்படார் ஓகேவா.”
“இப்ப என்ன பண்ணனும்?”
“நீ என்ன பண்ற நான் நம்ப ஸ்கிரிப்ட் ரைட்டர் ஜோதிமணியை உன்கூட நடிக்கிறதுக்கு அனுப்பி வைக்கிறேன். நீங்க ரெண்டு பேரும் அதோ அந்த கட்டில் இருக்கு பாரு ,அங்க எசக்குபிசகா இருக்கிற மாதிரி நடிங்க. அதை பார்த்து உன் முல்லைப்பூ காண்டாகி உன் கன்னத்துல நாலு விடுவா...”
“டேய் என்னடா சொல்ற?”
“முதல்ல மோதல் மச்சான். அப்புறம் தான் காதல் மலரும்.”
“டேய் உண்மையாவா சொல்ற?”
“மச்சான் நீ என்னை நம்பமாட்டியா?”
“அது வந்து...”
“நம்பு மச்சான் நம்பிக்கைதானே வாழ்க்கை. ஆனா மச்சான் இது கதை.. அது மட்டும் மனசுல இருக்கணும். உண்மைன்னு நினைத்து ஓவர் பெர்பார்மன்ஸ் பண்ணா, அப்புறம் உன் முல்லைப்பூ மனசுல நீ இடமே பிடிக்க முடியாது.”
“ம்... சரிடா.”
“அப்போ அந்த பொண்ண நான் அனுப்பி வைக்கிறேன்.” என்று சொன்ன மணி, வேண்டுமென்றே இன்று வருமுன் காப்போம் சமாச்சாரத்திற்கு ஷூட்டிங் நடக்கப்போவதாக முல்லையை நம்பவைத்து, கதிரையும் இன்னொரு பெண்ணையும் கட்டிலில் நெருக்கமாக நடிக்க வைத்துக் கொண்டிருந்த சமயம், முல்லைக்கு கோபம் தலைக்கேற, சற்றும் தாமதிக்காமல் முல்லை கதிரை நோக்கி வந்தவள், கோபமாக இடுப்பில் கை வைத்தபடி, “கதிர் என்ன பண்ற நீ?” என்றாள்.
“கட் கட் கட் என்னமா நீ ஷூட்டிங் தானே நடக்குது. நீ ஏன் இங்க வந்து கத்துற?” என்று மணி சத்தம் போட,
“அண்ணா அங்க பாருங்க அந்த பொண்ணு மேல கதிர் அப்படியே படுத்து தூங்கிட்டு இருக்காரு. இந்தாடி மாங்கொட்டை எந்திரி நீ” என்றாள் அப்பெண்ணைப் பார்த்து.
“என்ன முல்லை நீ. இவங்கள அப்படி எல்லாம் திட்டக்கூடாது. இவங்க என் கோ ஆர்டிஸ்ட்.”
“வாட் ஹேப்பேன்ட் கதி?” என்றாள் ஜோதிமணி.
“ஏய் இங்க பாரு ஓங்கி ஒரு அரை விட்டேன் மூஞ்சு கோனிக்கும் சொல்லிட்டேன்.”
“கதிர் இதுதான். நீ நடிக்கிற லட்சணமா?”
“அம்மாடி நடிப்புல இதெல்லாம் சகஜம். அதெல்லாம் கண்டுக்கக்கூடாது அந்த இடத்தில இவ இல்ல, ஒரு கழுதைக் குட்டியை வச்சாலும் அவன் கட்டிப்பிடிச்சி நடிச்சி தான் ஆகணும்.”
“ஓ இப்படி இரண்டு பேரையும் கட்டிப்பிடித்து உருள வைத்துதான் உன் பொழப்ப ஓடிக்கிட்டு இருக்கியா?” என்றாள் மரியாதை இல்லாமல்.
“பாப்பா நான் உனக்கு அண்ணன்மா.”
“டேய் இங்க பாரு அடுத்த தடவை நீ என் வீட்டு பக்கம் வந்த காபியில எலி பாசானத்தை வைத்து கொடுத்திடுவேன் சொல்லிட்டேன். அண்ணனாம் அண்ணன்.”
“என்னமா அண்ணனை இப்படி பேசுற?”
“பின்ன எப்படி பேச சொல்ற?” கதிர் நீ இந்த நடிப்பு தான் இத்தனை வருஷமா நடிச்சுக்கிட்டு இருக்கியா?”
“முல்லை இது ஒரு நடிப்பு. சும்மா அதையே சொல்லிக்கிட்டு இருக்காத.”