• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
5

“நேர்ல பார்த்து போட்டோ எடுத்த நான் லூஸா? நல்லா பாரு அது உன் அண்ணன்தான். சிகரெட்டும் கையுமா? உவ்வே! இதோ பாரு மயிலு எதுவாயிருந்தாலும் இப்பவே நிறுத்திக்கச் சொல்லு. நான் நிறுத்தறதா இருந்தா உன் அண்ணன் அவ்வளவுதான்” என்றாள் கறாராக.

“ஏய்! நிஜமாவே அண்ணனுக்கு அந்த பழக்கம் இல்லை” என்றாள்.

“யார் போன்ல?” என இடையிட்டான் அரிச்சந்திரன்.

“ஃப்ரண்ட் அண்ணா.”

“என்னைப்பற்றி ஏதோ...” என இழுக்க...

“ஐயோ! இல்லண்ணா. அவளோட அண்ணன் சிகரெட் பிடிக்கிறாங்க சொன்னா. நான் இல்ல சொன்னேன்.”

“தங்கச்சியே அப்படி சொல்லும்போது நீ மட்டும் ஏன் மறுக்கிற?”

“எனக்கு அண்ணனைத் தெரியும். சும்மா கிண்டலுக்காகச் சொல்றா.”

“ஏய்! இங்க எந்த அண்ணன்டி இருக்கிறார். பேசாம உன் அண்...”

“ஐயையோ!” என உணர்ச்சிவசப்பட்டு கத்தினாள்.

“மின்னல்” என்று அதட்டிய சகுந்தலா, “உள்ள போய் பேசு” என்றார்.

“சரிம்மா. சாரிம்மா” என்று அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

“ஏன்டி அலறி என் மானத்தை வாங்குற?”

“ஓய்! உன் மானத்தையா? போனது என்னோட மானம் ஆத்தா.”

“உன்னை யார்டி உணர்ச்சிவசப்படச் சொன்னது? சொல்றதையாவது முழுசா கேட்டிருக்கணும். பேசாம உன் அண்ணனை சீக்கிரமா என்னோட சேர்த்து வச்சிருன்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ள...”

“ஷப்பா! லூசே அதை ஒழுங்கா சொல்றதில்லையா? பக்குன்னு ஆகிருச்சி” என்றாள் நெஞ்சைப் பிடித்தபடி.

“ஏய்! வருங்கால அண்ணியை லூசு சொல்ற. மரியாதை தரல, எதாவது ஒரு ரௌடிப்பயலா பார்த்து உனக்குக் கட்டிவச்சிருவேன்” என்றாள் மிரட்டலாக.

“ஏன்டி சொல்லமாட்ட. எனக்கு முடிச்சிட்டுதான் அண்ணனுக்கு முடிக்கணும்னு முடிவு செய்திருந்தவங்களை, கரையா கரைச்சு முதல்ல அண்ணனுக்கு முடிக்கச் சொல்லி, அதிலும் உன்னையே பொண்ணா செலக்ட் பண்ணவச்சி, என்னோட கல்யாணத்தைத் தியாகம் செய்திருக்கேன். ஆனா நீ...” என்று மூச்சுவிடாமல் பேச,

“நான்,..” என்றாள் சிரிப்புடன்.

“நீ.., அச்சோ பேசிட்டிருந்தது மறந்திருச்சிடி. என்ன சொல்லிட்டிருந்தேன்?”

“மிகச்சிறப்பு நாத்தனாரே! ஹேய் நேத்து போகிக்கு வீடு க்ளீன் பண்ணினப்ப உள்ள போட்டோவை அனுப்பியிருந்தியே, செம கலக்கல்தான் போ.”

“எது அந்த பெர்முடாஸ் போட்டுக்கிட்டு, கையில்லாத பனியனோட, தலையில் டவல் கட்டிட்டு சித்தாள்போல் இருந்தானே அதுவா?”

“யா...யா... அதே அதே” என்றாள் தலையசைத்து.

அவளின் தலையாட்டலை உணர்ந்தாளோ மின்னல், “என்ன ரசனைடி உனக்கு? என்னாலயே அந்த மூஞ்சியை சில நிமிஷத்துக்கு மேல சகிச்சிக்க முடியலை. நீ என்னடான்னா...”

“உன்னை யார்டி சகிச்சிக்கச் சொன்னா. நான் இருக்கேன் என்னோட சந்துரு குட்டிக்கு” என்றாள் விஷமத்தனமாய்.

“என்னது குட்டியா? ஆண்டவா ஏர்வாடி கேஸெல்லாம் என் தலையிலையா ஃப்ரண்டா விழணும்” என்று தலையில் கைவைத்தாள்.

“வேற அப்ஷன் இல்லைடி செல்லம் உனக்கு.”

“விதி யாரை விட்டது. நீதான் என் அண்ணின்றதை மாத்தவா முடியும்.”

“கொடி உன் அண்ணன் என்ன சொன்னாங்க? என் போட்டோ பார்த்தாங்களா?”

தோழியின் ஆர்வமும் தவிப்பும் சற்று கவலையைக் கொடுத்தது. அண்ணன் அவளை மறுத்ததோடு புகைப்படம் கூட பார்க்காததை எந்தக் கணக்கில் எடுப்பதென்று தெரியவில்லை. அவன் சொன்ன முஸ்லிம் பொண்ணு உண்மையாக இருந்தால், நினைக்கையிலேயே மனம் சற்று கலங்கித்தான் போனது பெண்ணிற்கு.

“கொடி என்ன பதிலையே காணோம்? எ...என்னை வே...ண்டாம்னு...” குரல் கரகரத்து வர அடுத்து பேசு முன், “ஏய் நீயா எதாவது கற்பனை பண்ணிக்காத. உன் போட்டோ பார்த்தா கண்டிப்பா அண்ணனுக்குப் பிடிக்கும்” என்றாள்.

“அப்பப் பிடிக்கலைன்னு சொல்லிட்டாங்களா? ஏன்டி என்னைப் பிடிக்கலை?” என்றாள் அழுகுரலில்.

“ஏய் நட்டுமா! உன்னைப் பிடிக்கலை சொன்னா அவன் குருடன். அண்ணன் கல்யாணத்தைப் பற்றி இதுவரை யோசிக்கலை. அதான் எனக்கு பார்க்கச் சொன்னான். அதுக்கான பேச்சு வார்த்தைகள்தான் நடக்குது” என்றாள் தோழியின் வருத்தத்தைப் போக்க.

“சட்டுன்னு பயந்துட்டேன் மயிலு. வேற எதுவும் இல்லையே?”

“எதுவும் கிடையாது. நாளைக்கு குடும்பத்தோட மகாபலிபுரம் போறோம். நீ வர்றியா?”

“உங்களோடவா?”

“இல்லடி தனியாவே வா. அதுக்குள்ள அண்ணன் உன் போட்டோ பார்த்துட்டா நேர்லயே மீட் பண்ண வைக்கிறேன்.”

“அம்மா விடமாட்டாங்களே கொடி.” அவள் குரலில் வருத்தமும் அதே அளவு ஆசையும் இருந்ததோ!

“நான் யசோம்மாகிட்ட பேசுறேன். நீ சஞ்சய் அண்ணாவையும், ஆர்த்தி அண்ணியையும் கூட்டிட்டு வா.”

“ம்... அம்மா சம்மதிச்சா என் சந்துருவைப் பார்க்க கண்டிப்பா வர்றேன்” என்றாள் உற்சாகமாய்.

தோழியின் உற்சாகம் அவளுள் ஏதோ செய்ய “அப்புறம் நதிமா?” என இழுக்க,

“சொல்லுடா?” அன்பாய் வந்தன அவளின் வார்த்தைகள்.

“இல்ல. சப்போஸ் நெகடிவா பதில் வந்தாலும் ஹர்ட் ஆகிடாதடா” என்றாள் தவிப்புடன்.

“கொ...கொடி நிஜமா வீட்ல என்ன நடந்ததுன்னு சொல்லு? உன் அண்ணன் என்னை வேண்டாம் சொல்லிட்டாங்களா?”

“ஏய்! இல்லடா. இப்பவே கல்யாணம் செய்யணுமான்னு யோசிக்கிறான்.”

“எனக்காக பொய் சொல்லலையே?” தன் சந்தேகத்தைக் கேட்டாள்.

“இல்லடா. எனக்கு அண்ணின்னு வந்தா அது நீ... நீ மட்டும்தான்.” தோழியிடம் அழுத்தமாகச் சொல்லி தனக்குத்தானே முடிவெடுத்தும் கொண்டாள்.

“கொடி மகாபலிபுரம் வந்தாச்சு. நீங்க எங்கயிருக்கீங்க?”

“யாரெல்லாம் வந்திருக்கீங்க நதி?”

“சஞ்சய் அத்தான் ஆர்த்தி கூடதான் வந்திருக்கேன்.”

“சஞ்சித் அண்ணா வரலையா?”

“ஹெல்த் ப்ராப்ளம்னால அதிக ட்ராவல் வேண்டாம்னு விட்டுட்டேன்.”

“அதெப்படிடி லவ் பேர்ட்ஸ்கு நடுவுல கரடியா வந்த?” என்று போனிலேயே தன் சீண்டலை ஆரம்பித்தாள்.

“எனக்குதான் அவங்க கரடி. நான்தான் அவங்களைக் கூட்டிட்டு வந்தேன்” என்று முறுக்கிக்கொள்ள...

“நீ வார்த்தையை எப்படித் திருப்பினாலும் ஒரே அர்த்தம்தான் செல்லம்.”

“ம்க்கும். முதல்ல எங்கயிருக்க சொல்லு?”

“இது டிபன் டைம் நதி. அப்படியே இந்த ரெஸ்டாரண்ட் வா” என்று பெயர் சொல்ல... சில நிமிடங்களுக்கெல்லாம் அங்கு வந்து மின்னல் இருக்கும் இடத்திலிருந்து இரண்டு டேபிள் தள்ளி.. தான் மட்டுமாக அரிச்சந்திரனைப் பார்ப்பதுபோல் அமர்ந்து சஞ்சய் ஆர்த்தியை தனக்கெதிரே உட்காரவைத்து தோழிக்கு மெசேஜைத் தட்டிவிட்டாள்.

மெசேஜ் படித்ததும் திரும்பி இரண்டு டேபிள் தாண்டிப் பார்த்தவள் மூன்றாவது டேபிளில் அவளைக் கண்டு புன்னகைத்து தலையசைத்தாள் மின்னல் கொடி.

“அப்புறம்.. மாமன் மகளே இங்க ஏன் கூட்டிட்டு வந்தன்ற காரணத்தைத் தெரிஞ்சிக்கலாமா?”

“கல்யாணத்துக்குப் பிறகு ஹனிமூன் ஸ்பாட்டா இதைத் தேர்ந்தெடுக்க ட்ரையல் பார்க்க வந்திருப்பாளா இருக்கும்ங்க” என்று ஆர்த்தி அவளை கலாய்க்க.

“சேச்சே.. அதுக்கு சம்பந்தப்பட்ட பையனும் இருக்கணுமே. இது வேற எதோ” என்றான் சஞ்சய்.

‘ஹய்யோ! ஒருவேளை அவங்க இங்க இருக்கிறதைப் பார்த்துட்டுதான் கலாய்க்கிறாங்களோ!’ மனம் அடித்துக்கொள்ள முகத்தை அப்பாவியாய் வைத்துக்கொண்டு “என்ன அத்தான் நான்தான் லீவ் செலப்ரேட் பண்றதுக்குன்னு சொன்னேன்ல. திரும்பவும் என்ன சந்தேகம்?”

“அதுதான் சந்தேகமே? அத்தை வேற திடீர்னு போன் பண்ணி நதி மகாபலிபுரம் போகணும்னு ஆசைப்படுறா. நாளைக்கு மூணுபேரும் போயிட்டு வாங்கன்னு சொல்றாங்க. கார்ல ஏறுனதிலிருந்து மேடம்கு முகம் பளிச்சின்னு இருக்கு. லீவ் செலப்ரேட்லாம் சும்மா. உண்மையைச் சொல்லு நதிமா?” என்றான்.

“நிஜம்தான் அத்தான். அதோட ஆறே மாதமான கல்யாண தம்பதிகள் நீங்க. ஆர்த்தி கூட நீங்க டைம் ஸ்பெண்ட் பண்ணின மாதிரியும் இருக்குமே. அந்த நல்லெண்ணம்தான்.”

“இல்லையே எங்கேயோ இடிக்குதே. பக்கத்து இலைக்குப் பாயசம் தேடுற மாதிரில்ல தெரியுது” என்றாள் ஆர்த்தி.

“ஒண்ணும் இடிக்கலை. முதல்ல சாப்பிடுங்க” என்று ஆர்டர் செய்த டிபன் வந்ததும் சாப்பிட ஆரம்பிக்க சஞ்சய் ஆர்த்தி இருவரும் தங்களுக்குள் எதையோ பேசி சிரித்தபடி உண்ண... அரிச்சந்திரனின் மேல் வைத்த பார்வையை மாற்றாது உணவருந்தினாள் நட்சத்திரா.

தன்னை ஊடுருவும் பார்வையின் வீரியத்தில் சுற்றிலும் பார்த்த அரிச்சந்திரனின் பார்வை வியப்பில் விரிந்து அழகாய் அவளிடம் தஞ்சமடைந்ததோ!

அவனின் பார்வை சுழற்சியில் சட்டென்று தலைகுனிந்து உணவினை ஆராய.. அவன் பார்வைதனில் பாவையவளின் இதயத்துடிப்பும் அதிகரித்தது.

‘ஹ்ம் என்ன பார்த்து என்ன புண்ணியம்? அதான் பக்கம் பக்கமா வசனம் பேசி எல்லாத்தையும் ஊத்தி மூடிட்டாங்களே!’ அருகிலிருந்த பாட்டியை கொலைவெறியாய் பார்க்கத் தவறவில்லை அர்ஸ். ‘நல்ல வேளை உன்கிட்ட பழகி உன் மனசைக் கெடுக்கலை. இல்ல அந்த பாவம் வேற என்னைச் சேர்ந்திருக்கும்.|

எங்கிருந்தாலும் வாழ்க


உன் இதயம் அமைதியில் வாழ்க

மஞ்சள் வளத்துடன் வாழ்க

உன் மங்கள குங்குமம் வாழ்க

வாழ்க வாழ்க


மனம் வருத்தத்தில் பாட்டுப்பாடி அவளை வாழ்த்தியது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
961
அண்ணனின் பார்வை சென்ற இடம் பார்த்து இன்பமாய் அதிர்ந்த மின்னல் அவனின் திடீர் வருத்த முகம் பார்த்து குழம்பி, “அண்ணா! நீ பொண்ணு போட்டோ பார்த்துட்டியா?” எனக் கேட்டாள். அவளுக்குள் ஒருவேளை தோழியின் புகைப்படம் பார்த்ததால் அவளைப் பார்த்திருப்பானோ என்ற சந்தேகத்தாலேயே கேட்டாள்.

“மின்னல்மா எல்லாத்தையும் மறந்து ஒருநாள் முழுக்க நாம ஜாலியா இருக்கணும்னுதான் வந்திருக்கோம். இப்ப எதைப்பற்றியும் பேசக்கூடாது. முதல்ல சாப்பிடு” என்றவன் நட்சத்திராவின் புறம் தன் பார்வையை செலுத்தி திரும்பியவன் அதன்பின் அவளிடம் திரும்பவே இல்லை.

மின்னலின் செல்லிற்கு வந்த மெசேஜ் சத்தத்தில் எடுத்துப் பார்த்தவள் “உன் அண்ணன் என்னைப் பார்த்தாங்க. அப்படின்னா போட்டோ பார்த்துட்டாங்களா? ஏன் சொல்லலை? அவங்க பார்த்ததை என்னால உணர முடிஞ்சது கொடி. இப்ப இந்த நிமிஷம் ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன்டி.”

அவளின் அந்த சந்தோஷம் ஒருவித குற்றவுணர்வைக் கொடுக்க, “நீ சாப்பிடு நதி. அப்புறம் பேசிக்கலாம்.” பதில் மெசேஜ் அனுப்பினாள்.

“என்னைப்பற்றி எதாவது சொன்னாங்களா? அப்படிச் சொல்லியிருந்தா என்ன சொன்னாங்க?” திரும்பவும் கேள்வி நதியிடம் இருந்து.

“சொன்னா கேளுடா நதிமா. அப்புறமா கால் பண்றேன். சாப்பிடும்போது போன் நோண்டாதன்னு திட்டுறாங்க.” பதில் மின்னலிடம் இருந்து சென்றது.

“ஓ...ஓகேமா. பை” என்று பர்ஸில் போனை வைத்து அரிச்சந்திரனைக் காண, திரும்பவேயில்லை அவன். ஏனோ மனம் சின்னதாக ஏமாற்றமடைந்தது. ‘ஒருவேளை அவங்களுக்கு என்னைப் பிடிக்கலையா? இல்ல குடும்பத்தோட இருக்குறதால கண்டுக்கலையா?’ குழப்பம் மட்டுமே அவளிடம்.

“என்னாச்சி நதி? என்ன திடீர்னு டல்லாகிட்ட?” என்ற ஆர்த்தியிடம், “ஒண்ணுமில்லபா. ஏதோ நினைவு” என்றவள் அவர்களின் பார்வையை உணரவில்லை.

கடற்கரைக் கோவில், மலைக்கோவில் என்று பல்லவ சிற்பங்களை எல்லாம் சுற்றிப்பார்த்து முடிக்க மணி நான்கைத் தொட்டது. வெயில் அதிகம் இல்லாததால் அரிச்சந்திரன் குடும்பம் கடற்கரைக் காற்று வாங்கியபடி அமர்ந்தார்கள்.

அவர்களை விட்டு முப்பது அடிபோல் தள்ளி அமர்ந்திருந்தார்கள் நதியும், சஞ்சய், ஆர்த்தியும். அவர்களைக் கண்டதும் மின்னல் “தெரிஞ்சவங்க வந்திருக்காங்க பார்த்துட்டு வர்றேன்மா.” தாயிடம் அனுமதி பெற்றுத் தோழியிடம் சென்றமர்ந்தாள்.

“என்னடி உன் அண்ணன் கண்டுக்கவே மாட்டேன்றாங்க? இப்படியே போனா கல்யாணத்துக்கு முன்னயே உன் அண்ணனை டைவர்ஸ் பண்ணிருவேன்” என்றாள் நட்சத்திரா.

“பண்ணிக்கோ!” என்ற பதில் மின்னலிடம் இருந்து.

“ஏய்! என்னடி இப்படி சொல்லிட்ட? நான் உன் அண்ணின்றதை அப்பப்ப மறந்துட்டுப் பேசுற” என்று கோவமாக முகத்தை வைத்தாள்.

‘அந்த லூசுக்குத் தெரியலையேடா நதிமா. என்ன பண்ணச் சொல்ற என்னை?’ நினைத்தவை யாவும் மனதிலேயே தங்க, “இன்னும் அண்ணன் போட்டோ பார்க்கல நதி. பொங்கல் முடியட்டும் நிதானமா பேசுவோம்;.”

“ஏன்டி? நான் உன் ஃப்ரண்டுன்றதால வேண்டாம்ன்றாங்களா?”

“ப்ச்,.. இல்லடா. நீ என் ஃப்ரண்ட்னு என் வீட்ல அம்மா தவிர யாருக்கும் தெரியாது. நானே உன் விஷயத்தை எப்படி வீட்ல சொல்றதுன்னு தவிச்சிட்டிருந்தேன். சஞ்சித் அண்ணா தரகர் மூலமா உன் போட்டோவை எங்க வீட்டுக்கு அனுப்பிடலாம்னு சொன்னாங்க. எங்க வீட்ல உள்ளவங்களைப் பற்றி என்கிட்ட பெரிய இன்டர்வியூவே பண்ணிட்டாங்கன்னா பாரேன். உன் ஜாதகம் தரகர் மூலமா வந்தாலும் பேரைப் பார்த்ததும் அம்மாவுக்கு சந்தேகம் வந்து உன் ஃப்ரண்டான்னு என்கிட்ட கேட்டாங்க. நானும் ஆமாம் சொல்லிட்டேன்.”

‘சஞ்சித் அத்தான்!’ என்ன சொல்வது அவனைப்பற்றி... என் பார்வையிலிருந்த சின்ன மாற்றத்தை வைத்தே என் பிடித்தத்தை அறிந்து, அரிச்சந்திரனையும் உளவறிந்து, நேராக சென்றால் கேள்வி வந்துவிடுமென்று தரகர் மூலம் சேருமிடத்தில் சேர்த்துவிட்ட பின்பே தன்னிடமும் தன் வீட்டினரிடமும் தகவல் தெரிவித்த நல்லவன். நல்லவன்தான் அனைவரையும் விட நல்லவன். என்றுமே அவன் நன்றாக நலமுடன் இருக்கவேண்டுமென்று மனம் பிரார்த்தித்தது.

“அத்தை என்ன சொன்னாங்க கொடி?”

“வீட்ல எல்லாருக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு நதிமா. இல்லன்னாலும் உன் ஆசையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு என்னோடது.”

“கொடி அதுக்காக ரொம்பலாம் கம்பல் பண்ணாத. பிடிச்சி முடிக்கிறது வேற. கட்டாயத்துனால முடிக்கிறது வேற.”

நட்சத்திராவின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்து, “உன்னைத் தவிர அவனை யாராலும் நல்லா பார்த்துக்க முடியாதுடா” என்றாள் மனதார.

“இல்ல கொடி. இப்படி யோசி. அவங்களைத் தவிர என்னை யாராலும் பார்த்துக்க முடியாது. இதான் சரியாயிருக்கும்” என்று சிரித்தாள்.

“போடி லூசுப் பொண்ணே!”

“என் கதை தெரிஞ்சா?” கேள்வியாய் நிறுத்தினாள் நட்சத்திரா.

“தனக்குன்னு ஆன பிறகு யாருக்காகவும் உன்னை விட்டுக்கொடுக்க மாட்டான் என் அண்ணன். நடுவுல எவன் வந்தாலும் காலிதான். எவ்வளவுக்கு எவ்வளவு ஜாலியோ, அவ்வளவுக்கு அவ்வளவு பொறுப்பானவன். எல்லாத்தையும் அவன் பார்த்துப்பான். நீ கவலைப்படாதே” என்றாள் சற்று கர்வமாகவே!

“தேங்க்ஸ்டி. பட் எல்லாத்தையும் மீறி எதோ ஒரு பயம் எனக்குள்ள இருந்துட்டேயிருக்கு.”

“வா உன் பயத்தைப் போக்குறேன்” என்று கடல் அலைக்கு இழுத்துச் சென்றாள்.

“ஹேய்! அதுக்கு முன்ன ஒரு செல்பி எடுத்துக்கலாம்” என்று தன் கைபேசியை எடுத்து புகைப்படத்திற்கு இருவரும் போஸ் கொடுக்க, அப்படியே சூம் செய்து சற்றுத் தொலைவில் அமர்ந்திருந்த அவளவனையும் தன்னையும் மட்டும் ஒரு போட்டோ க்ளிக்கினாள்.

“அடிப்பாவி! இதுக்குதான் அக்கறையா என்னை நிற்க வச்சியா? பல்ப் குடுத்துட்டியேடி பக்கி” என திட்டி, “சரி வா” என்றாள்.

“ஏய்! செல் கையில இருக்குடி. இரு ஆர்த்தியும் அத்தானும் வர்றாங்களா பார்க்கிறேன்” என எட்டிப்பார்த்தவள் கண்ணில் தாயுடன் பேசியபடி அமர்ந்திருந்த அரிச்சந்திரன் பட்டான்.

“ஏய் நாத்தனாரே! உன்னைப் பார்க்கிறதுக்காகவாவது உன் அண்ணன் திரும்பலாம்ல. எதாவது சாமியார் மடத்தில் சேர ஹெவியா ப்ராக்டீஸ் பண்றாங்களா என்ன?”

“இருக்கலாம் விடு. நீ அங்க பார்க்கிறதை விட்டுட்டு என்னோட என்ஜாய் பண்ணு” எனும்போது அரிச்சந்திரன் தாய் தகப்பனிடமிருந்து எழுந்து சற்றுத் தள்ளி நின்று எதோ செய்தான்.

அவனையே பார்த்திருந்த நட்சத்திரா கண்ணில் மின்னலடிக்க “மாட்டுனியா மச்சான்!” என்று தோழியைத் திருப்பி அவள் அண்ணன் புறம் காண்பிக்க, நம்ப முடியாமல் பார்த்திருந்தாள் மின்னல் பெண்!

‘தன் அண்ணன் சிகரெட் ஸ்மோக்கரா? இதுவரை அப்படி எந்த ஸ்மெல்லும் அவனிடம் வந்ததில்லையே. வர வர அவன் செய்வது ஒன்றும் சரியாகப்படவில்லை’ என்ற எண்ணம் எழுந்தது அவளிடம்.

“ஆனா ஒண்ணு கவனிச்சியா மயிலு? உன் அண்ணன் சிகரெட் பிடிச்சா மட்டும் புகையே வரலை” என்றாள்.

“ம்... நீ வேணும்னா போயி பத்த வச்சிட்டு வா” என்றாள் எரிச்சலுடன்.

அதற்குள் அவனும் பாட்டியின் அருகில் வந்தமர, சஞ்சய் ஆர்த்தி வந்ததும் அவர்களிடம் இருந்து விடைபெற்று குடும்பத்தினரிடம் வந்திருந்தாள் மின்னல்.

“எங்க போயிட்ட?”

“ஃப்ரண்ட் வந்திருந்தாள்ணா. பார்த்துட்டு பேசாமல் போக முடியாதுல்ல. அதான் அம்மாகிட்ட சொல்லிட்டுப் போனேன்.”

“சரி கிளம்பலாமா?”

“இன்னும் கொஞ்ச நேரம்ணா” என்றவள், “அண்ணா அப்படியே திரும்பிப் பாரேன் ஒரு பொண்ணு பார்க்க செம அழகாயிருக்கா” என்றாள்.

“ஏய் அண்ணனையே சைட்டடிக்கச் சொல்றியா?”

“ரொம்ப பிகு பண்ணாம பாருண்ணா. அந்த மாதிரி ஒருத்தி அண்ணியா வந்தா எப்படியிருக்கும்? இமேஜினே செமையா இருக்கும்ணா” என்றாள் ரசனையாக.

“வர வர நீ சரியில்ல. இதுக்குதான் உனக்கு முதல்ல முடிக்கச் சொன்னேன்.”

“இங்க பாருண்ணா. இஷ்டமிருந்தா பாரு இல்ல விடு. அதுக்கு ஏன் என்னை இழுக்கிற? எனக்க முடிக்கணும் தோணுறப்ப அம்மாகிட்ட சொல்றேன்” என்றாள் முறைப்போடு.

“அண்ணன் தங்கை ரெண்டுபேரும் என்ன ரகசியம் பேசிட்டிருக்கீங்க?” என்றபடி அவர்கள் அருகில் வந்தார் பாக்கியவதி.

“ஒண்ணுமில்ல க்ரேன்மா” சும்மாதான்.

“மின்னல்மா அதோ அந்தப் பொண்ணுதான நம்ம அரிக்குப் பார்த்தது?” என்று நட்சத்திரா இருக்குமிடம் கைநீட்டினார்.

சட்டென்று திரும்பிய அரிச்சந்திரன் பார்த்த இடத்தில் நட்சத்திரா இருக்க ஒரு ஆச்சர்ய பார்வையை அவளிடம் வீசி என்ன நினைத்தானோ அவளைத் தாண்டி தனியாக அமர்ந்திருந்த ப்ளாக் கலர் ஜீன்ஸ் டி-ஷர்ட் போட்டிருந்த பெண்ணைப் பார்த்தான். ‘அந்தப் பெண்தானா?’ அவளைத் தாண்டியும் சில பெண்கள் இருக்கிறார்களே!

‘அந்த ப்ளாக் கலர்தான் பொண்ணுன்னா கொஞ்சம் அழகுதான்! அதுக்காக அவளை திருமணம் செய்ய முடியுமா தன்னால்?’ திரும்பவும் தன்னவள் மேல் அவன் பார்வை படர ஒருவித ஏமாற்றம் உள்ளுக்குள் பரவி இதயத்தைப் பிழிவதை உணர முடிந்தது அவனால். அவளிடம் செல்லத்துடித்த கால்களையும் சரணடைந்த மனதையும் அடக்கி மாலைக்காற்றிலும் மூச்சு முட்டுவதுபோல் தோன்ற எழுந்து“இதோ வந்திடுறேன்மா” என்று கால்போனபோக்கில் நடக்க ஆரம்பித்தான்.

“அவங்க மாதிரிதான் க்ரேன்மா தெரியுது. ஃபேமிலியோட வந்திருப்பாங்க போல.” உள்ளுக்குள் ஏதோ ஒருவித பதற்றம் அவளுள்.

சகுந்தலா என்று தாயை அழைத்த பாட்டியிடம்...“க்ரேன்மா இப்ப எதுக்கு? வேண்டாம்.”‘அவள்தான் முக்காடிட்டிருக்கிறாளே அப்புறம் எப்படி அடையாளம் கண்டுபிடித்தார் இந்த க்ரேன்மா. சரியான கேடி கிழவி.’ மனதினுள் திட்டினாலும் அவரைத் தடுக்க...

“அட சும்மாயிருமா” என பேத்தியை அடக்கி “சகுந்தலா அதோ பாரு நம்ம பையனுக்கு பார்த்த பொண்ணு” என்றார்.

“அட.. ஆமா அத்தை. என்னங்க இதோ வந்திடுறேன்” என்றதும் அவருமே தடுக்க முயற்சிக்க அதற்குள் நட்சத்திராவை அடைந்திருக்க... ‘அவள் ஏன் முக்காடிட்டிருக்கிறாள்?’ என்ற கேள்வி எழுந்தவுடன் அடங்கியது.

அவர்களைப் பொறுத்தவரை குளிர் காற்றுக்காக அவள் துப்பட்டாவை காதை மறைத்துப் போட்டிருப்பதாகவே எண்ணினார்கள். ஆதலால் அதைப்பற்றி எதுவும் கேட்கவில்லை. அதன் ரகசியம் அறிந்தால்..!?

“என்னைத் தெரியுதா நட்சத்திரா?”

தன் முன் நின்றிருந்தவரைப் பார்த்து “அத்தை” என்று வேகமாக எழுந்தாள்.

‘அத்தையா!’ அதிர்வுதான் அவரிடத்தில். ‘முடிவு சொல்வதற்கு முன்னே எப்படி?’அத்தை என்ற வார்த்தையில் சிறிதும் திணறலில்லாத ஒரு தெளிவு இருக்கிறது. மகளிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருப்பதாய் தோன்றியது அவருக்கு.

வாய் கேட்காததை அவரின் கூர்மையான பார்வை கேட்பதை உணர்ந்து.. என்ன பதிலளிப்பது என்று தெரியாமல் மலங்க விழித்து நின்றிருந்தாள் நட்சத்திரப் பெண்ணவள்!

“அப்பா அம்மா வந்திருக்காங்களா? எங்கயிருக்காங்க?”

“இல்லை அ..அத்தை. நான்...” அவரைப் பார்த்ததும் சஞ்சயும் ஆர்த்தியும் எழுந்து நிற்க... “இவங்க சஞ்சய் அத்தான். அத்தை பையன்! இது ஆர்த்தி அத்தானோட ஒய்ஃப் அன்ட் என்னோட ஃப்ரண்ட்” என இருவரையும் அவருக்கு அறிமுகப்படுத்த... இருவரும் அவருக்கு வணக்கம் வைக்க.. அதன்பின் நால்வரும் சற்று நேரம் குடும்பம் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களிடம் விடைபெற்று மகளிடம் வந்தமர்ந்து“நீதான் வரச்சொன்னியா?” என்று மகளின் காதைக் கடித்தார்.

“இல்லமா. தற்செயலாதான்...”

மகளின் இழுவையிலேயே அனைத்தும் விளங்கிட “என்னதான் உன் ஃப்ரண்ட்னாலும் உன் அண்ணன் இன்னும் முடிவைச் சொல்லலை. அதுக்கு முன்ன இது தப்பு மின்னல். நல்ல அமைதியான பொண்ணாயிருக்கா! உன் அண்ணன் நோ சொன்னா அவள் மனசு கஷ்டப்படாதா?”

“சாரிமா நான்...”

“ப்ச்.. விடு. அண்ணன் அந்தப் பொண்ணைப் பார்த்தானா?”

“இல்லமா.”

“அப்ப சரி. அவன் போட்டோ பார்த்து சம்மதிச்சதும் மத்ததை பேசிக்கலாம். சும்மா ஒரு பொண்ணு மனசுல ஆசையை விதைக்கக்கூடாது” என்றார் கறாராக.

“சரிமா” என்று அமைதியானாலும் ‘ஆசையை விதைக்கக்கூடாதா? அந்த ஆசை அவளுக்குள்ள விருட்சமா வளர்ந்திருக்குன்றது தெரிஞ்சா என்ன சொல்வீங்கம்மா!’ மனம் மறுகியது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top