• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 29, 2025
Messages
111
அத்தியாயம் 4.

காவல் நிலையத்தில் ,

"சார் அவன் எவ்வளவு அடிச்சும் உண்மையா சொல்ல மாட்டிங்கரான்.நாலு லத்தி உடஞ்சு போனதுதான் மிச்சம்."சலித்தபடி தன் கையில் உடைந்திருந்த நான்காவது லத்தியை தூர போட்டிருந்தான் கார்த்திகேயன்.

கார்த்திகேயன் கூறுவதை அமைதியாக கேட்டபடி அங்குள்ள நாற்காலியில் படு கூலாக அமர்ந்தான் இதழரசன்.

"கார்த்திகேயன் எதற்கு இப்படி அவன அடிச்சு அடிச்சு லத்தியை வேஸ்ட் பண்றிங்க?முதல்ல அவனுக்கு மட்டன் பிரியாணி வாங்கி கொடுங்க.அவன் முதல்ல சாப்பிடட்டும்."சாவுதானமாக இதழரசன் கூறவும்

"சார்.."என்று ராகமாக இழுத்தான் கார்த்திகேயன்.

இம்முறை இதழரசன் அவனிடம் பேசவில்லை.அதற்கு பதிலாக அவனின் விழிகள் அவனை தீர்க்கமாக பார்க்கவும் அவ்விழிகளின் அர்த்தத்தை புரிந்து கொண்டவனாக கார்த்திகேயன் அங்கு பணிபுரியும் கான்ஸ்டபிள் வேலிடம் "நீங்க மட்டன் பிரியாணி வாங்கிட்டு வாங்க."என்று கூறிவிட்டு அமைதியாக நின்றான்.

சிறிது நேரத்தில் பிரியாணி வாங்கி வரப்பட்டது.அதை குற்றவாளி ரங்கனிடம் கொடுக்கப்பட்டிருந்தது.

"ரங்கன் முதல்ல நீ ரொம்ப பசியோட இருப்ப.அதனால இந்த மட்டன் பிரியாணிய சாப்பிடு.நாம அப்புறமா பேசலாம்."என்று நிதானமாக கூறியபடி தான் அமர்ந்திருந்த நாற்காலியை விட்டு மேலே எழுந்து நின்றவன் கார்த்திகேயன் புறம் திரும்பி "கார்த்தி இவன் சாப்ட்டு முடிச்சதும் என்கிட்ட சொல்லுங்க."என்று சிறு குரலில் கூறிவிட்டு தனது கேபினை நோக்கி நடை போட்டிருந்தான் இதழரசன்.

அவன் தனது கேபின்க்குள் சென்று சுழல் நாற்காலியில் அமர்வதுற்கும் அவனின் கைபேசி சத்தத்தை எழுப்பவதுற்கும் சரியாக இருந்தது.

தன் கைப்பேசியை எடுத்து பார்க்க தொடு திரையில் மை ஓன் ப்ராபர்டி என்ற பெயர் மின்னிக்கொண்டிருப்பதை பார்த்ததும் அவனின் இதழ்களில் இவ்வளவு நேரம் மறைந்திருந்த புன்னகை வந்து ஒட்டிக்கொள்ள,

அதே புன்னகையுடன் அழைப்பை ஏற்று "சொல்லுடி."என்று வாய்வரை வந்த வார்த்தையை கடினப்பட்டு விழுங்கி மனதே இல்லாது "சொல்லுங்க இதழருவி."அவனுக்கு வராத மென்மை குரல் அவளுக்கு மட்டுமே சொந்தம்.

இங்கு இதழரசன் இல்லத்தில்,

நடுக்கூடத்தில் நீள்விருக்கையில் அமர்ந்திருந்தவள் கைபேசியை தன் வலது காதில் வைத்தபடி அவனிடம் அடுத்து என்ன பேசுவதென்று தெரியாது கழுத்தில் அணிந்திருந்த மெல்லிய தங்க செயினின் டாலரை வாயில் வைத்து மெலிதாக கடித்தபடியே ஜன்னல் ஓரத்தில் வந்து நின்றிருந்தாள் இதழருவி.

"ஓய்.. என்ன பேசரதுன்னு தெரியாம செயின் டாலர கடிச்சிட்டு இருக்கியா?"என்று கைபேசியில் அவளிடம் ஒருமையில் பேசிவிட்டு நினைவு வந்தவனாக தன் பெருவிரலால் நெற்றியை கீறிக்கொண்டான்.

அவளிடம் அப்பொழுதும் பதில் வரவில்லை.

"சாரி.. உங்ககிட்ட வாய்தவறி ஒருமையில பேசிட்டேன்."சற்று தயக்கமாக அவன் கூறவதை அப்பக்கம் அவளும்தான் கேட்டுக் கொண்டிருந்தாள் இதழருவி.

அவன் அவளிடம் ஒருமையில் பேசியது அவளுக்கு கோபத்தை வரவழைக்கவில்லை.அதற்கு மாறாக அவனின் ஒருமை பேச்சு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

"ஹலோ இதழருவி மேடம் இப்படி போன் பண்ணிட்டு மெளன விரதமா இருந்தா என்ன அர்த்தம்?"என்று அவன் சிரித்துபடி கேட்டிருக்க

"சாரி.எனக்கு என்ன பேசரதுன்னு தெரியல.அதுதான் நீங்க பேசரத கேட்டுட்டே ஜன்னல் வழியா வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்."திக்கி திணறி தான் சொல்ல வந்ததை அவனிடத்தில் எப்படியோ சொல்லி முடித்தாள்.

"ஓ.கே.என்று ராகமாக இழுத்தவன்
நீங்க டீவி போட்டு பாருங்க.ஹால்ல டெலி போன் பக்கத்துல தமிழ் ,இங்கிலிஷ் ல ஸ்டோரி புக்ஸ் இருக்கும்.

உங்களுக்கு பிடிச்ச புக்க ரீட் பண்ணிட்டிருங்க.நான் கொஞ்ச நேரம் கழிச்சு உங்களுக்கு போன் பண்றேன்."என்று அவன் தன்மையாக சொல்லவும்

இதழருவி மனதே இல்லாது "சரிங்க.நான் போன் வைக்கிறேன்."என்று உள்போன குரலில் கூறிவிட்டு அழைப்பை கட்செய்திருந்தாள்.

"என்ன கார்த்திகேயன் அவன் பிரியாணிய சாப்பிட்டானா?"தன் கம்பீர குரலில் கேட்டிருந்தான் இதழரசன்.

"யெஸ் சார்.அவன் சாப்பிட்டான்.அதுதான் உங்ககிட்ட சொல்ல வந்தேன்."என்று கார்த்திகேயன் மரியாதை நிமித்தமாக.

"ஓ.கே."என்றபடி தன் இருக்கையில் இருந்து எழுந்தவன் கார்த்திகேயனை தாண்டி முன்னே நடக்க ஆரம்பித்தான் இதழரசன்.இதழரசனின் பின்பு அமைதியாக சென்றான் கார்த்திகேயன்.

"ரங்கன் மட்டன் பிரியாணி எப்படி இருந்துச்சு?"தன் ஆளுமையான குரலில் கேட்டபடி விசாரனை அறைக்குள் வந்தவன் மிடுக்கான தோரணையில் நாற்காலியில் அமர்ந்து கால் மேல் கால் போட்டிருந்தான் இதழரசன்.

"ரொம்ப நல்லா இருந்துச்சு சார்."தெம்பாக பதில் அளித்தான் ரங்கன்.

"எதற்காக சிக்னல்ல வேனும்னே அந்த பொண்ண இடிச்ச?"என்று அழுத்தமாக கேட்டபடி அவனை தீர்க்கமாக பார்த்திருந்தான் இதழரசன்.

"சார் அந்த பொண்ணுகிட்ட லவ் ப்ரோபஸ் பண்ணேன்.ஆனா அந்த பொண்ணு நீயே ஒரு லாரி ட்ரைவர்.உனக்கு லவ் ஒரு கேடான்னு என்ன எல்லாரு முன்னாடியும் அசிங்கப்படுத்திடுச்சு.
அதுதான் அந்த கோபத்தல அவமேல லாரிய விட்டு ஏத்திட்டேன்."அசால்ட்டாக ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருந்தான் ரங்கன்.

அது இதழரசனுக்கு புரியாமல் இல்லை.அவனின் கண்களை வைத்தே அவன் பொய் சொல்ல ஆரபித்த நொடி அவன் கூறுவது பொய் என்று அறிந்திருந்தான்.

"ரங்கன் நீ சொல்ரது பொய்யன்னு உனக்கும் தெரியும்.எனக்கும் தெரியும்.இவங்கெல்லாம் லத்தியால உன்ன அடிச்சாங்க.

ஆனா நான் வேற மாறி.இப்ப நீ சாப்பிட்ட பிரியாணில விஷம் கலந்துதான் நான் எடுத்துட்டு வர சொன்னேன்.இன்னும் கொஞ்ச நேரத்தில நீ ரத்த வாந்தி எடுத்து செத்துபோவ.

நானும் ஏதோ ஒன்னு சொல்லி கேஸ ரொம்ப ஈசியா க்ளோஸ் பண்ணிடுவேன்."என்று இதழரசன் நிதானமாக சொல்ல சொல்ல ரங்கனின் முகத்தில் கலவரம் ஏற்பட்டது.

"சார்.. நான் உண்மைய சொல்லிர்ரேன்.எப்படியாவது என்ன காப்பாத்துங்க.ஃப்ளீஸ்."மரண பயத்தில் உடல் நடுங்கியபடி இதழரசனிடம் கெஞ்ச ஆரம்பித்திருந்தான் ரங்கன்.

"முதல்ல நீ உண்மைய சொல்லு.விஷத்த முறிக்கர நாட்டு மருந்து என்கிட்ட இருக்கு.நீ உண்மையை சொல்லி முடிச்சதும் அந்த நாட்டு மருந்த தர்ரேன்."என்று இதழரசன் தீர்க்கமாக சொல்ல

"சார் எனக்கு அந்நவுன் நம்பரல போன் பண்ணி அந்த பொண்ண கொல்லனும்னு ஆர்டர் வந்தது.அதனாலதான் நான் அந்த பொண்ண கொன்னேன்.

அவங்க யாருன்னு எனக்கு தெரியாது.பத்து லட்சம் தர்ரேன்னு சொல்லிருந்தாங்க.நானும் பணத்துக்காக ஆசபட்டு இப்படி செஞ்சுட்டேன்.

சார் நான் உங்ககிட்ட உண்மையான சொன்னது எப்படியாவது அவங்களுக்கு இந்நேரம் தெரிஞ்சிருக்கும்.சார் என்ன கொல்லனும்தான் அவங்க நினைப்பாங்க.எப்படியாவது அவங்க கிட்டிருந்து என்ன காப்பாத்துங்க சார்."என்று பயத்திலே அனைத்து உண்மையும் கூறி தன்ன காப்பத்திக்கொள்ள இதழரசனிடம் கெஞ்சிக் கேட்டிருந்தான்.

அவனுக்கு பதில் அளிக்காது இதழரசன் கார்த்திகேயன் புறம் திரும்பி தன் ஆளுமையான குரலில்"கார்த்தி இவன் மேல எப்ஐஆர் ஃபயில் பண்ணுங்க.லேட் பண்ணாம நாளைக்கே இவன பத்திரமா கோர்ட்ல கொண்டு போய் நிறுத்தனும்.அதற்கு என்ன ப்ரெசிஜரோ அத பாருங்க."என்றபடி நாற்காலியில் இருந்து மேலே எழுந்து நின்றவன்

ரங்கனை நோக்கி சந்தேகப் பார்வையை வீசிவிட்டு தன் கேபினை நோக்கி நடைபோட்டிருந்தான்.

" அதுதான் நான் உண்மையை சொல்லிட்டனே இப்பவாவது நாட்டு மருந்த கொடுக்கலாமே சார்."என்று ரங்கன் கார்த்திகேயனிடம் சொல்ல

"நீ சாப்பிட்ட பிரியாணில விஷம் ஒன்னும் கலக்கல.உன்கிட்ட உண்மைய வாங்கதான் எங்க சார் பொய் சொன்னாரு.ஆனா ஓவர் ஆக்டிங் நீ பண்ணி எங்ககிட்ட மாட்டிக்கிட்ட.இனிமேல் இருக்கது உனக்கு கச்சேரி."என்று கார்த்திகேயன் கூறியதில் அதிர்ந்து விழித்தான் ரங்கன்.

இப்ப நீ உண்மை என்னன்னு சொல்லிய ஆகனும்.எங்க சாரு பத்தி உனக்கு இன்னும் சரியா தெரியல.சாய்ந்தாரத்துக்குள்ள தெரிஞ்சுக்குவ."என்று நக்கலாக கூறியவன் கான்ஸ்டபிள் வேலை நோக்கி "வேல் நீங்க இவன தலைகீழா கட்டி தொங்கவிட்டு உங்க ஸ்டைல்ல ட்ரீட்மெண்ட் ஆரம்பிங்க.இன்னும் கொஞ்ச நேரத்தில நான் திரும்பி வர்ரேன்."எனக் கூறிவிட்டு தன் இருக்கையை நோக்கி நடைபோட்டிருந்தான் கார்த்திகேயன்.

ஆனந்தி இல்லம்,

"என்ன ஆனந்தி ஓரே டென்ஷனா இருக்க?"என்றபடி அவரின் அருகில் நீள்விருக்கையில் அமர்ந்தார் செந்தாமரை.

"சாகித்தியன் மதியம் சாப்பிட வர மாட்டானாம்.தாத்தா பாட்டி வீட்டுக்கு போரான்.எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல?"என்று புலம்பலாக கூறியவரை பார்த்து மனதிற்குள் சிரித்துக் கொண்டார்
செந்தாமரை.

"என்ன ஆனந்தி?அவன் தாத்தா பாட்டி வீட்டுக்குதான போரன்னு சொல்லியிருக்கான்.விடு போயிட்டு தான் வரட்டுமே.அதுக்கு எதுக்கு நீ டென்ஷனா இருக்க? எனக்கு ஒன்னும் புரியல?"என்று குழப்பத்துடன் கேட்டிருந்தார்.

"அவன் அங்க போன அவனுக்கு வசிய மருந்து வச்சு அவங்க மகளோடு பேத்திக்கு கல்யாணம் பண்ணி வெச்சருவாங்களோன்னு பயமா இருக்கு.

உங்களுக்கே தெரியும்.நம்ம சாந்திய பத்தி.எப்பப்டா இங்க வந்து டேரா போடலாம்னு எதிர்பார்த்துட்டு இருக்கிறா.உங்க கொழுந்தனாருக்கு குடும்பத்த பத்தி எந்த கவலையும் இல்லை.ஜாலியா யூ எஸ் ல இருக்காரு.

இங்க இருக்கிற பிஸ்னெஸ்ஸ நான் ஒத்த ஆளா பாத்துட்டு இருக்கேன்."என்று கடைசி வரியை அவர் கவலையாக சொல்ல

"இங்க பாரு ஆனந்தி.எம்.பி.ஏ படிச்ச பொண்ணா அதே நேரத்தில நம்ம தகுதிக்கு ஏத்த பொண்ணா பார்த்து சாகித்தியனுக்கு கட்டி வெச்சிடு.அப்புறம் உன் மருமக உன் பிஸ்னெஸ்ஸ பார்த்துக்கிட்டும்."என்று செந்தாமரை ஐடியா தரவும் அவர் கூறியதை யோசிக்க தொடங்கினார் ஆனந்தி.

"நீங்க சொல்ரது சரிதான் அக்கா.நாளைக்கே நம்ம தரகர் கிட்ட சொல்லி சாகித்தயனுக்கு பொண்ணு பார்க்க சொல்லலாம்.நாம நினைச்ச மாதிரி நல்ல வரனா அமையனும்."என்றபடி தன் கைபேசியில் தரகருக்கு அழைப்பு விடுத்திருந்தார் ஆனந்தி.

'நீ எப்படி உன் தம்பி மகள என் பையனுக்கு கட்டி வெச்சு வீட்டோட மாப்பிளயா அனுப்புனுயோ அதே மாறி வீட்டுக்கு வரபோற உன் மருமகள வெச்சே உன் மகன உன்கிட்டிருந்து பிரிக்கிரேன்.'என்று மனதில் வன்மையாக கருதியபடி தன் அறையை நோக்கி நடை போட்டிருந்தார் செந்தாமரை.

ராஜேந்திரன் இல்லம்,

"அம்மா நான் ஆபிஸ் போயிட்டு வரேன்.இன்னைக்கு ஆபிஸ்ல க்ளைன்ட் மீட்டிங் இருக்கு.நான் வர நைட் ஆயிடும்.சாய்ந்தாரம் வரமாட்டேன்.அப்பா கிட்ட சொல்லிடுங்க.

அப்புறம் நீங்க யார பத்தியும் நினைக்காம டைம்க்கு சாப்டுங்க.நான் வரேன்."என்று சாதனா தன் தாயிடம் கூறிவிட்டு கார் சாவியை ஆள்காட்டி விரலால் சுற்றியபடி வாயில் கதவை கடந்து போர்டிகோவிற்கு வந்தவள்
தனது சொகுசு மகிழுந்தில் ஏறி அமர்ந்து வாகனத்தை உயிர்பித்து செலுத்த ஆரம்பித்தாள்.

சாதனா வீட்டை விட்டு வெளியேறிய மறுநொடி ராஜேந்திரன் என் மகிழுந்தில் வீட்டிற்கு வந்திருந்தார்.

காரிலிருந்து அமைதியாக இறங்கி வீட்டிற்குள் வந்தவர் குரூர சிரிப்புடன் எப்பொழுதும் தான் அமரும் ஊஞ்சலில் அமர்ந்தார்.

அவரின் அந்த குரூர அமைதியான சிரிப்பை பார்த்த நாச்சியார்க்கு யாருக்கோ ஏதோ ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று தோன்றியது.

அமைதியாக தன் கணவரை கடந்து அவர் நடைபோடவும்

"ஏய்.."என்ற கம்பீர குரலில் திடுக்கிட்டு போனவராக ஒருவித நடுக்கத்துடன் தன் கணவரை திரும்பிப் பார்த்தார் நாச்சியார்.

"என்னடி என்ன திமிரா?நான் இங்க உட்கா
ர்ந்திருக்கேன்.என்ன கண்டுக்காம நீ பாட்டுக்கு போறா?"என்று ராஜேந்திரன் குரல் உயர்த்தி கேட்டிருந்தார்.

தொடரும்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top