• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 29, 2025
Messages
111
அத்தியாயம் 7.

"ஹலோ.."என்று சாதனா பேச முற்படும் பொழுது,

"அமைதியா இருடி.இது பொது இடம்."என்று நிவேதா தன் தோழியின் வலக்கரத்தை அழுத்தி சன்ன குரலில் சொல்லவும் தான் இருந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அப்போதைக்கு தன் கோபத்தை கட்டுப்படுத்தினாள் சாதனா.

நால்வருக்கான ஆர்டர் செய்யப்பட்ட உணவு வந்தது.

சாகித்தியன், கதிர் உணவில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.
சாதனா வெறுப்புடன் உணவை சாப்பிட ஆரம்பித்தாள்.

முதலில் சாப்பிட்டு முடித்தது நிவேதா சாதனாவும்தான்.
"நிவேதா நீ முன்னாடி போய் காருல உட்காரு.நான் ஃபில் பே பண்ணிட்டு வந்துரேன்."எனக் கூறிவிட்டு ஃபில் கவுண்டருக்கு வந்தவள் தான் நின்ற இடத்திலிருந்து சாகித்தியனை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு

'இருடா உனக்கு ஆப்பு வெக்கிரேன்.'என்று மனதில் வன்மையாக கருவியவள் பணம் கொடுக்கும் நபரிடம் தாங்கள் சாப்பிடதுக்கான ஃபில்லை கொடுத்துவிட்டு அவரிடம் சாகித்தியனை காண்பித்தவள்

"சார் அவர்தான் என்னோட ஹஸ்பெண்ட்.இப்ப நான் கொடுத்த ஃபில்க்கான பணத்த அவர்கிட்ட வாங்கிக்கோங்க."என்று நமட்டு சிரிப்புடன் கூறிவிட்டு அவிடத்தை விட்டு வெளியேறியிருந்தாள் சாதனா.

சிறிது நேரம் கழித்து சாகித்தியன் கதிரும் ஃபில் கவுண்ட்ரை அடைந்தார்கள்.தாங்கள் சாப்டதக்கான ஃபில்லுடன் பணத்தை வைத்து குடுத்தான் சாகித்தியன்.

ஃபில் கவுண்டரில் பணம் வாங்கும் நபர் அவன் கொடுத்த பணத்தை வாங்கி கல்லா பெட்டில் போட்டுவிட்டு "சார் நிமிடம்."என்று சாதனா கொடுத்த ஃபில்லை அவன் புறம் நீட்டி "சார் உங்க மனைவி சாப்பிடக்கான பணத்தையும் கொடுத்துடங்க."என்று அவர் கூறியதில் குழப்பமாக அவர் நீட்டிய ஃபில்லை வாங்கி பார்த்ததுமே அவனுக்கு அனைத்தும் புரிந்து போனது.

'இது அவளோட வேலைதான்.இருக்கடி உனக்கு.'என்று மனதில் கருதியவன் கால்சட்டையிலிருந்து ஃபர்ஸை எடுத்து அதிலிருந்து சில தாள்களை பணம் கொடுக்கும் நபரிடம் கொடுத்துவிட்டு அமைதியாக அவ்விடத்தை விட்டு வெளியேறியிருந்தான் சாகித்தியன்.

"எப்படா உனக்கு கல்யாணம் ஆச்சு!"என்று அதிர்வு அகலாத குரலில் தன் நண்பனிடம் ஆச்சரியமாக கேட்டிருந்தான் கதிர்.

"டே..அர லுசு உனக்கு சொல்லாம நான் எப்படிடா கல்யாணம் செஞ்சுக்குவேன்?"என்று எரிந்து விழுந்தான் சாகித்தியன்.

"அப்புறம் எப்படிட ஃபில் கவுண்டர்ல அந்தாளு உன்னோட மனைவி ஃபில்லுன்னு நீட்டரான்.அதை நீ அமைதியா வாங்கி பார்த்துட்டு பணத்த கொடுத்துட்டு வர.இதுக்கு நீ என்ன சொல்ர?"

சாகித்தியன் தன் நண்பனிடம் தனக்கும் சாதனாவிற்கும் நடந்த மோதலை நடந்ததை சுருக்கமாக கூறினான்.

"ஓ..அப்ப உன்ன பழிவாங்கதான் அந்த மேடம் உன் ஃவைப்னு சொல்லிருக்காங்க."

"எல்லாம் என் நேரம் டா.என் வாழ்க்கையிலயே இந்த மாறி பொண்ண பாத்துதே கிடையாது."என்று கடுப்பாக கூறியபடி தன் மகிழுந்தை நெருங்கி மகிழுந்தில் ஏறி அமர்ந்து வாகனத்தை உயிர்ப்பித்திருந்தான்.

"ஏய் என்னடி இப்படி பண்ணி வெச்சிருக்க?எனக்கு பயமா இருக்குடி."என்று விழிகளில் கலவரத்துடன் கேட்டாள் நிவேதா.

"இங்க பாருடி நாம இப்ப ரூம வெக்கேட் பண்ணிட்டு சென்னை போறோம்."என்று சாதனா கூலாக சொல்லவும்

"ஏண்டி அப்போ நாம வர்கலாவ சுத்தி பார்க்க முடியாதா?"ஏமாற்றத்துடன் கேட்டாள் நிவேதா.

"இல்லடி ஒரு பிஸ்னெஸ் சம்மந்தமா எனக்கொரு முக்கியமான மீட்டிங் நாளைக்கு இருக்கு.அதுல கண்டிப்பா நான் இருக்கனும்.இப்பதான் மெயில் வந்துச்சு.சாரிடி."என்று வருத்தமாக சாதனா சொல்லவும்

"பரவால்லடி.நாம கிளம்புலாம்."என்று நிவேதா சொல்லியிருக்க

"ரொம்ப தேங்க்ஸ்டி."எனக்கூறியபடி அனைத்தையும் ஃபேக் செய்ய ஆரம்பித்தாள் சாதனா.

தோழிகள் இருவரும் அரைமணி நேரத்தில் ரூமை வெக்கேட் செய்து வெளியே வந்தனர்.

'டே..நீ தப்பிச்சிட்ட.எனக்கு அந்த மெயில் மட்டும் வரலின்னா உனக்கு நல்ல பாடம் கத்து தந்திருப்பேன்.சோ சேட்.'என்று மனதில் நினைத்தவளுக்கு மின்னல் அடித்தாற் போல் அவளின் மூளையில் ஐடியா மின்னல் வெட்டியது.

அதை செயல்படுத்திவிட்ட திருப்தியுடன் மகிழுந்தை மகிழ்வாக செலுத்த ஆரம்பித்தாள்.

"உன்னோட மகிழ்ச்சிக்கான காரணம் என்னவோ?"

தான் செய்ததை பெருமையுடன் கூறியபடி வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தாள் சாதனா.

"அட பாவி!"என்ற அதிர்ந்தபடி கூறிய நிவேதா அதன் பிறகு அவளிடம் எதுவும் பேசவில்லை.அமைதியா கார் ஜன்னலின் கண்ணாடி வழியாக வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.

ஆனந்தி இல்லம்,

"அக்கா.. தரகர் வந்திருக்காங்க.நீங்க கீழ வாங்க."தன் கைபேசியில் செந்தாமரையிடம் கூறியவர் தரகரை எதிர் இருக்கையில் அமர சொல்லிவிட்டு நடுநாயகமாக இருக்கும் நீள் விருக்கையில் கம்பீரமாக அமர்ந்தார்.

"சொல்லுங்க ஐயா.எங்க குடும்பத்துக்கு தகுந்த பொண்ண பாத்திருக்கிங்களா?"என்று அவர் கேட்பதற்கும் செந்தாமரை அவரின் அருகில் வந்து அமர்வதற்கும் சரியாக இருந்தது.

"அம்மா பொண்ணு உங்க குடும்பத்துக்கு தகுந்த பொண்ணு தான்.அவங்க அப்பா உங்கள மாறி பிஸ்னெஸ் மேன்.

பொண்ணு பேரு சாதனா.எம்.பி.ஏ படிச்சிருக்கு.இப்பா கொஞ்ச நாளா அவங்க அப்பா பிஸ்னெஸ்ஸ அந்த பொண்ணும் பாத்திட்டு இருக்கு.இது அந்த பொண்ணோட போட்டோ."என்றபடி தரகர் அந்த போட்டோவை ஆனந்தி அவர்களை நோக்கி நீட்டியிருந்தார்.

அப்போட்டோவை வாங்கி பார்த்தவர் "பொண்ணும் அழகா இருக்கா.சாகித்தியனுக்கு ஏத்த ஜோடிதான்."என்றவர் அந்த போட்டோவை தன் அக்காளிடம் கொடுத்தார்.

போட்டோவில் இருந்த சாதனாவை பார்த்த செந்தாமரை "பேசி முடிச்சிடு ஆனந்தி."எனக்கூறியபடி அவரிடமே அந்த போட்டோவை திருப்பி தந்தார்.

"நான் நினைக்கிறேன் நீங்க சொல்லிட்டிங்க அக்கா."என்று மகிழ்ச்சியாக பேசியபடி தரகரிடம் "ஐயா பொண்ணு எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.நீங்க பொண்ணோட அப்பாட்ட பேசிட்டு சொல்லுங்க."என்று சில பணத்தாள்களை முன் பணமாக கொடுத்திருந்தார் ஆனந்தி.

"சரிங்க அம்மா.. அப்ப பொண்ணுவீட்டல பேசிட்டு என்ன செய்தின்னு உங்களுக்கு போன் பண்றேன்.அப்ப நான் வரேன்மா."என்று தரகர் அவர்களிடம் விடைபெற்று அவ்வீட்டை விட்டு வெளியேறி இருந்தார் .

"என்ன பெரியத்த சின்னத்த நம்ம சாகித்தியனுக்கு பொண்ணு பார்த்தாச்சா?"என்றபடி நீள்விருக்கையில் வந்து அமர்ந்தான் சந்தோஷ்.

"ஆமா சந்தோஷ்.பொண்ண பார்த்துட்டோம்.ஆனா பொண்ணு வீட்டுல என்ன சொல்வாங்கன்னு தெரியல?"என்று கவலையாக கூறினார் ஆனந்தி.

"அத்த டோன்ட் ஃபீல்.நீங்க வேணா பாருங்க பொண்ணு வீட்லயும் ஓகேனுதான் சொல்வாங்க."என்று நம்பிக்கையாக கூறினான் சந்தோஷ்.

"சந்தோஷ் நீங்க சொன்ன மாதிரி இந்த சம்பந்தம் கூடி வந்துச்சுன்னா எனக்கு ரொம்ப சந்தோஷம்.பார்க்கலாம்."என்று கூறிவிட்டு அமைதியானார் ஆனந்தி.

"அதெப்படி நடக்காம போகும்?உங்க நல்ல மனசுக்கு எல்லா நல்லதா நடக்கும் பெரியம்மா."என்றபடி தன் கணவனின் அருகில் அமர்ந்தாள் பூர்ணா.

"அதுதான."என்பது போல் தன் பெரிய அத்தயை பார்த்து வைத்தான் சந்தோஷ்.

"ஆமா ஆனந்தி.நீ எதுக்கும் கவலபடாத.எல்லா நல்லதா நடக்கும்."பெயருக்கு ஆறுதல் அளித்துவிட்டு தன் அறையை நோக்கி நடை போட்டிருந்தார் செந்தாமரை.

இதழரசன் இல்லம்,

இதழருவி நடுக்கூடத்தில் அமர்ந்து கதை புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தாள்.

அப்போது அவளின் கைபேசி சினுங்க அதில் கவனத்தை செலுத்தி அவ்வழைப்பை ஏற்று "ஹலோ"என்றாள்.

"இதழருவி சாப்டிங்களா?"என்று அவளுக்கு மட்டுமே உள்ள மென்மையில் அப்புறம் இதழரசன் கேட்டிருந்தான்.

"நான் சாப்டேன்.நீங்கதான் சாப்டவே இல்லையே."என்று கவலையாக சொன்னாள் இதழருவி.

அவள் தனக்காக கவலைப்படுவது அப்பக்கம் இதழரசனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

"அதுதான் நான் காலையிலயே சொன்னனே மதியம் வந்து சாப்டரேன்னு.நீங்க மறந்துட்டிங்களா?"

"ஆனா நீங்க காலையில சாப்பிடலயே? உங்களுக்கு பசிக்கலயா?"வருத்தமாக கேட்டாள்.

"யார் சொன்னது நான் சாப்பிடலன்னு.நான் இங்க பக்கத்தில் இருக்கிர மெஸ்ல வாங்கி சாப்பிட்டேன்."அவளுக்காக தான் சாப்பிட்டதாக பொய் உரைத்தான்.

"அப்ப ஓகேங்க."என்று இதழருவி உற்சாக குரலில் அப்பக்கம் கூறிய கேட்ட இதழரசனின் இதழ்கள் மெலிதாக விரிந்து சுருங்கியது.

"இதழருவி நீங்க ஈவினிங் ரெடியா இருங்க.நான் உங்கள வெளிய கூட்டிட்டு போரேன்.அதுவும் உங்களுக்கு விருப்பம் இருந்த.."என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்

"எனக்கும் விருப்பம்தான்."என்று அவசரமாக கூறினாள் இதழருவி.

"அப்ப சரிங்க.நாம ஈவினிங் பார்க்கலாம்."என்று அழைப்பை கட்செய்திருந்தான் இதழரசன்.

"ஹே.. அரிசி இன்னைக்கு நான் வெளிய போகப்போரேன்.எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு."என்று பஞ்சவர்ணகிளி அரிசியிடம் அவள் கூறிக்கொண்டிருக்கும் பொழுது அரிசி பறந்து அவளின் அறைக்குள் சென்றது.

இவளும் அரசியை பின்தொடர்ந்தது தன் அறைக்குள் சென்றாள்.அரசியோ அவளின் அறையில் உள்ள திறந்திருந்த ஜன்னல் வழியாக பறந்து சென்றது.

'ஓ.. அரசி வாயில் கதவு சாத்தியிருக்கங்காட்டி நம்ம ரூம் ஜன்னல் வழியா வந்திருக்கு.நாம எப்படி இத கவனிக்காம விட்டோம்?'என்று மனதில் நினைத்தபடி ஐன்னல் வழியாக அவள் வேடிக்கை பார்க்கும் பொழுது சிகப்பு ரோஜா செடியில் ரோஜா பூக்கள் பூத்திருந்தது அவளின் விழிகளுக்கு விருந்தாக அமைந்தது.

மறுநொடி இதழருவி அறையில் இருக்காது வாயில் கதவை திறந்து தோட்டத்திற்கு ஒடியிருந்தாள்.

அந்த சிகப்பு ரோஜா செடியை பார்த்தவளுக்கு அத்தனை ஆனந்தம்.

தோட்டத்தை சுற்றி தன் பார்வையை ஒடவிட்டாள்.'வாவ்..ஐ லைக் இட்.'என்று மனதில் நினைத்தபடி தோட்டத்தில் போடப்பட்ட ஊஞ்சலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் இதழரவி.

ஊஞ்சலில் அமர்ந்து ஆடினாள்.இயற்கை காத்து.அழகான தோட்டம்.அவளின் மனதை மெல்லிய தென்றல் கீற்றாக வருடியது.அவளின் மனது லேசானது போல உணர்ந்தாள்.

கேரளா(வர்கலா)

"அவங்க என் மனைவி கிடையாது.
யார் என்ன சொன்னாலும் நம்புவிங்களா?"என்று பீச் ரிசார்ட் மேனெஜரிடம் கத்திக் கொண்டிருந்தான் சாகித்தியன்.

"சார் இப்படி சொன்னா என்ன அர்த்தம்? அவங்க அவ்வளவு கான்பிடன்ட்டா சொல்லும்போது நாங்க எப்படி நம்பாம இருக்குறது?

கொஞ்சம் எங்க சூழ்நிலையை அண்டர்ஸ்டேன்ட் பண்ணுங்க சார்."

"ஏங்க இவ்வளவு பேசரிங்கள்ள?ஹஸ்பெண்ட் ஃவைப் ஒரே ரூமல ஸ்டே பண்ணுவாங்கன்னு உங்களுக்கு தெரியலையா?"காட்டமாக கேட்டான் அவன்.

"சார்..அவங்கிட்ட நீங்க ஏன் தனியா ரூம எடுத்து தங்கினிங்கன்னு கேட்டேன்.ஆனா, அதுக்கு அவங்க எனக்கும் என் ஹஸ்பெண்ட்க்கும் சண்டை.அதனால கோச்சிட்டு என் ப்ரண்டோட இங்க வந்து தனியா ரூம எடுத்து தங்கினேன்.

ஆனா அவரு என்ன சமதானப்படுத்த அவரோட பிரண்ட கூட்டிட்டு இங்க வந்து தனியா ரூம் எடுத்திருக்காரு.அவருக்கு சின்ன கண்ணாமூச்சி விளையாட்டு காட்டிட்டு அவர் கூட பேசலாம்னு நினைச்சேன்.

அதுனாலதா அவர் கிட்ட நீங்க ரூம் சார்ஜ வாங்கிக்கிங்க.அப்படின்னு சொல்லிட்டு அவங்க கிளம்பி போய்ட்டாங்க சார்."என்று மேனேஜர் சொல்லவும் சாகித்தியனுக்கு பயங்கரமாக கோபம் வந்தது.

'போய்த் தொலையட்டும்.'என்று மனதில் நினைத்தபடி ரூம் சார்ஜூக்கான பணத்தை கொடுத்துவிட்டு தன் அறையை நோக்கி நடை போட்டிருந்தான் சாகித்தியன்.

"டே..டென்டன் ஆகாதடா."என்று தன் நண்பனின் தோளை தொட்டான் கதிர்.

"எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலடா.என்னோட மூட அவ ஸ்பாயில் பண்ணிட்டா."என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் பொழுது அவனின் கைபேசி சினுங்கியது.

கைபேசியின் திரையில் "அம்மா"என்று மின்னிக்கொண்டிருக்க தனது கோபத்தை தூர தள்ளி வைத்துவிட்டு தன் அன்னையின் அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தான்.

"ஹலோ..அ
ம்மா."

"ஹேப்பி பர்த்டே டா.காலையில உனக்கு போன் பண்ணேன்.டவர் கிடைக்கல போலிருக்கு."

"இட்ஸ் ஓகே அம்மா."என்று குறுஞ்சிரிப்புடன் கூறியிருந்தான்.

தொடரும்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top