• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
277
நீ உடல் நான் நிழல்🌚
பாகம்- 12


தேனருவி நீ வரவரப் பொய் அதிகமாக சொல்ல ஆரம்பித்து விட்டாய்?

அம்மா ஏம்மா இப்படி சொல்கிறாய்? நான் எப்போதும் போல் தான் இருக்கிறேன்.

வண்டி வாங்கிக் கொடுத்தது என் தப்புடி இரண்டு பேரும் ஒரே காலேஜ் தான் போறாங்க அதனால் சேர்ந்தே போய் வரட்டும் என்று வாங்கிக் கொடுத்தால். நீ எத்தனை தடவை கீழே போடுவாய்? மெக்கானிக் கடைக்கு செலவு செய்வதற்கு பதில் அதை காயிலான் கடைக்குப் போட்டு விடலாம்.

பூவிழியைத் தான் தேனருவி முறைத்தாள். கண்ணாலேயே சண்டை போட்டாள் ஏண்டி எருமை அம்மாகிட்ட சொன்னாய்?

அங்கே என்னடி கண்ணில் ராக்கெட் விடுகிறாய்? சொன்னது அவள் இல்லை.

அப்புறம் வாத்தியா? இருக்குமோ? நான் தான் புத்திசாலித் தனமாக அம்மா நம்பர் கொடுக்கவே இல்லையே. அது தான் எனக்குத் தெரியுமே.. நேத்து செம கடலை போட்டாயே என்று தேவை இல்லாமல் மனசாட்சி காலவார.

அதைத் தள்ளியவள் தன் அம்மாவைத் தான் பார்த்தாள்.

சுமித்திரா ஆண்ட்டி தான் சொன்னாங்க நிறுத்திய வண்டியைக் கீழே போட்டு சண்டைக் கட்டிக் கொண்டு ரோட்டில் கீழே விழுந்து வெட்கமா இல்லையாடி?

ம்மா அது வந்து பூவிழி தான்மா காரணம் நான் எதுவுமே செய்யவில்லை.

வண்டி ஓட்டினது நீயா? இல்லை அவளா? பார்த்து சூதனமா போக வேண்டியது நீ தானே.

பொட்டப் பிள்ளைகள் நல்லா இருந்தாலே கரை சேர்க்கிறது கஷ்டம் இதில் கீழே விழுந்து கையைக் காலு முறிந்து விட்டு ஊனமானால் நான் என்னடி செய்வேன்.

வராத கண்ணீரை வந்தது போல் துடைத்த தேனருவி அம்மா பீல் பண்ணாதே.. நீ வாங்கிக் கொடுத்த வண்டியை சைக்கிளில் போறவன் எல்லாம் முந்திச் செல்கிறான். அதை நீ வாங்கும் போதே காயிலான் கடையில் யாரோ பேரிச்சம் பழத்திற்கு விற்றதை வாங்கிக் கொடுத்து விட்டு இத்தனை பில்டப் கொடுக்காதே. பூவிழி நீ வாடி நாம காலேஜ் போகலாம்.

அடிங் கழுதை சொலையா? ஒரு லட்சம் கொடுத்து யமாஹாவே தான் வேண்டும் என்று வாங்கிக் கொண்டு என்னமா? நடிக்கிறாய்? படிக்கிற வாசகர்கள் என்னைத் தானே கஞ்சப் பிசுனாரி என்று கழுவி ஊற்றுவாங்க.

தன் அம்மாவிற்கு பழிப்புக் காட்டி விட்டு கல்லூரி பேக் தூக்கிக் கொண்டு சென்று விட்டாள்.

பூவிழி நல்ல வேளைடி வண்டிக்கு பெருசா அடிபடலைடி இல்லாட்டி யசோதாகிட்ட லெக்சர் வாங்கியே நம் காதில் ரத்த ஆறு ஓடி இருக்கும்.

நல்ல வேளை டி நாம் ஆஸ்பத்திரி போனது தெரியவில்லை. என்று கூறிக் கொண்டு பின்னால் திரும்பிப் பார்க்க.

யசோதா கொலைக்காண்டில் நின்று கொண்டு இருந்தார். என்ன? இன்னும் போகலையா? லஞ்ச் பாக்ஸ் எடுக்காமல் போகிறாயே மதியத்திற்கு பசிக்குமே அப்பச் சோறு ஏதாவது பேய் வந்து கொடுக்குமா?

பூவிழி வாய்விட்டு சிரிக்க.

ஏண்டி சிரிக்கிறாய்? அன்றைக்கு வண்டியைக் கீழே போட்டதே பேய் டாபிக் எடுத்து தான்மா.

யசோதாவோ ? உண்மையைச் சொல்லு அந்தப் பூட்டிய அறைக்குள் போனாயாடி?

நான் எப்பமா என் மனசைப் பூட்டி வைத்தேன் அது எப்போதும் திறந்து தான் இருக்கிறது. உன்னிடம் பொய் சொல்வேனா? உன் பேச்சை மீறுவேனா? என் மேல் நம்பிக்கை இல்லாமல் பேசுகிறாயே.. நீ தான் மா சொல்வாய் என்னைப் பார்த்தால் உன் மாமியாரைப் பார்த்த மாதிரியே இருக்கிறது என்று உன் மாமியாரை நீ சந்தேகப் படலாமா?

ஐயகோ? அப்பத்தா நீ எப்போ செத்த ஆத்தா? உனக்கு உன் மருமகளைப் பற்றி எதுவுமே தெரியாமல் போய்ச் சேர்ந்து விட்டாயே.

உனக்கு அமாவாசை கும்பிடுகிறேன் சொல்லி பாயாசமும் பருப்பு வடையும் செஞ்சு வைச்சதால் நீ சொக்கிப் போய் விட்டாயா?

சனீஸ்வரர் வாகனத்தில் நீ வந்து அதைச் சாப்பிட்டு விட்டு ஹாயா? போய் மரத்தில் உட்கார்ந்து கொண்டு கா கா என்று கத்தினாயே அது கா ரா மா.. இருக்கிறது என்று தானே கத்தினாய்? அது எனக்குத் தானே தெரியும். அது பருப்பு வடை இல்லை பச்சைமிளகாய் வடை என்று..

தேனருவி சொல்லிய ஸ்லாங்கில் இப்போது யசோதாவும் சிரித்து விட்டு கழுதை எதையோ? ஒன்றை உளறி கோபமாக இருக்கும் என்னைக் கூட சிரிக்க வைத்து விட்டாய்? என்று இரு மகள்கள் கன்னத்தில் முத்தமிட்டு அனுப்பி வைத்தார்.

இன்று எங்கேயும் விழுகாமல் கூலாக பயமே ஜயம் என்று கல்லறைத் தோட்டம் கடக்கையில் மனசுக்குள் தடக் தடக் இருந்தாலும். நிழல் எப்போது நானும் இந்த வீட்டில் தான் பிறந்தேன். என்று சொன்னதோ? அதிலேயே நம்ம அல்லக்கை தான் நிழல் என்று கூலாக சென்றாள் தேனருவி..

வண்டியில் சைடு மிரர் எத்தேசையாகப் பார்க்க குல்லா போட்ட குந்தாணி போல் நிழல் அவள் முதுகில் தான் சவாரி செய்தது.

நிழல் இருப்பது பூவிழிக்குத் தெரியாது ஆனால் தேனருவிக்குத் தெரிந்து விட்டது. பரவாயில்லை நிழல் நாற்றம் அடிக்கிறது என்று சொன்னதால் மருக்கொழுந்து செண்ட் அடித்துக் கொண்டு வந்து இருக்கிறது.

ஆனாலும் நான் சொன்ன சந்தூர் சோப்பு போட்டு குளிக்கவில்லை.

தேனக்கா மருக்கொழுந்து வாசம் செமயா இருக்கிறது. யாராச்சும் கல்லறைத் தோட்டத்தில் மருக்கொழுந்து மாலை போட்டு இருப்பாங்க. மல்லிகைப் பூ தானே பேய்க்கு எல்லாம் பிடிக்கும்.

நீ என்னமோ பேசிக்கோ நான் எதுக்கு பயப்படப்பேகிறேன் என்ற ரீதியில் தேனருவி வண்டி ஓட்டிக் கொண்டு வர.

தேனக்கா உன் முதுகில் யாராச்சும் ஏறி உட்கார்ந்து வராங்களா? சொங்கி மாதிரி வளைஞ்சு கொண்டு வண்டி ஓட்டுகிறாய்? அப்புறம் உனக்குத் தான் பின்னாலே பிரச்சினை ஆகும்.

எனக்கு எதுக்கு பின்னால் பிரச்சினை ஆகப் போகிறது. நீ தாண்டி என்னை நெருக்கிக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறாய்? என்ன நானா? நீ வேண்டும் என்றால் பின்னால் திரும்பிப் பார் அக்கா எத்தனை இடம் இருக்கிறது.

தேனருவி உடனே தான் ஒரு அறிவு ஜீவி என்பதை உணர்த்துவதற்காகவே பின்னால் திரும்பிப் பார்க்க வண்டி எதிலையோ? முட்டி நின்றது.

சாவுகிராக்கி பொடனையில் திரும்பிப் பார்க்க எதுக்குடி வண்டி ஓட்டிக்கினு வரங்கிங்கோ போச்சு என் மோர் பானை என்று மோர் விற்கும் ஆயா திட்ட..

நல்லவேளை ஆயா உனக்கு ஆயுசு கெட்டி நீ இந்த வாட்டி தப்பித்து விட்டாய். நாளைக்கும் இதே மாதிரி நீ வா நான் உன் மேல் ஏற்றுகிறேன்.

அடிக் குமரி என் மோர் பூராவும் போய் விட்டது. பானையும் உடைந்து விட்டது. இரண்டிற்கும் காசு கொடு இல்லாட்டி இந்த வண்டியைக் கொடுத்து விட்டு போ.

என்ன ஆயா? ஏற்கனவே உடைஞ்ச பானையில் துணியைக் கட்டி நீ ரோடு பூராவும் இந்த புளிச்ச மோரை ஊற்றி நாறடிக்கிறதும் இல்லாமல் அதுக்கு காசு கேட்டாய் சரி ஆனா நீ என் வண்டியைக் கேட்கிறாயே இது உனக்கே அநியாயமாகத் தெரியவில்லையா???

இது என்ன ஏரோப்ளேனா? பையன்கள் குச்சியை வைச்சு டயரை தட்டிக்கிட்டு ஓடுவானுங்க நீ அதுக்குப் பதிலா குச்சியை கையில் பிடித்துக்கொண்டு உட்காந்து போற.

இது ஹேண்டில் ஆயா குச்சி என்று சொல்லி விட்டாயே.. பையன்கள் பிஞ்சு போன பஞ்ஜர் ஆன டயரை ஓட்டை டவுசரு இடுப்பில் இருந்து நழுவும் அந்த கேப்பில் டையரை ஒரு கையில் இடுப்பு டவுசரை ஒரு கையில் என்று ஓடுவாங்க அவனுங்க கூட என்னைக் கம்பேர் செய்து விட்டாயே ஆயா.. என்று அவளோட பாடிலேங்வேஜ் தனியா பாடம் எடுக்க.

பூவிழிக்குத் தான் தன் அக்கா சொன்ன விதத்தில் அவளை நினைத்து சிரித்து சிரித்து வயிறு தான் வலித்தது. கண்ணில் தண்ணி வந்து விட்டது.

தேனருவி பூவிழியிடம் சென்றவள் ஏண்டி எருமை நான் கிழவி கூட நாக்குத் தள்ள லவட்டிட்டு இருக்கிறேன். நீ கெக்கப் பிக்கே... கெக்கப்.. பிக்கேனு சிரிக்கிற இன்னைக்கு நடந்ததும் நீ தான் காரணம் என்று நீ எதுக்குடி என்னைத் திரும்பிப் பார்க்க சொன்னாய்?

நான் சொன்னால் நீ உடனே திரும்பி விடுவாயா? அது தான் சைடு மிரர் இருக்குதுல அதில் பார்க்க வேண்டியது தானே.

சைடு மிரரில் பார்த்தா நிழல் தான் எருமை மாதுரி பல் செட் இல்லாத வாயைக் காமிக்குது. பெரிய ஐஸ்வர்யா ராய் அப்படினு நினைப்பு இந்த நிழலுக்கு அதனுடைய கூந்தல் வேற விரிச்சுப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து இருந்தால் நான் எப்படி அந்த மொகறையைப் பார்க்க சைடு மிரரில் பார்த்து சைட் அடிக்கவா முடியும்.

மினுக்கிட்டுப் போகத் தெரியுது தானே உனக்கு காசக் கொடு இல்லாட்டி கழுத்தில் இருக்கிற
சங்கிலியைக் கழட்டி கொடுடி என்று இப்போது ஆயா தன் ஆட்டபாம்மை அவிழ்த்து விட.

காடு வா வாங்குது உனக்கு ரோஸ் கோல்டு சங்கிலி கேட்குதா?

ஏண்டி ஆத்தா இந்த செம்பு சங்கிலி கொடுக்கக் கூட உனக்கு மனசு வரலையா? என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போதே பின்னால் புல்லட் சவுண்ட் கேட்க.

போச்சு சோளமுத்து உனக்கு வந்த சோதனையைப் பாரேன். இன்றைக்கும் வாத்திகிட்ட மாட்டி
அவர் பாத்திகட்டி அடிப்பதற்குள் மாத்தி யோசி மச்சான் வேற எக்ஜாம் வைக்கிறேனு சொன்னானே அதிலிருந்து தப்பிக்க வழி கிடைத்து விட்டது.

ஆயா உனக்கு என்ன பணம் தானே வேண்டும் அதை உனக்கு நான் தருகிறேன். ஆனால் நீ அந்த வாத்தி கிட்ட என்னைப் பற்றி புகழ்ந்து பேச வேண்டும் சரியா?

தேர்தலில் ஓட்டுப் போடுபவர்களை எப்படி வாழ்த்தி பெரிய மகராசி அந்த மாதிரி சரியா நான் உனக்கு ஐம்பது ரூபாய் தருகிறேன்.

ஐம்பது ரூபாய் நீ கொடுப்பாய் அது மோர் க்கு சரியா போச்சு பானைக்கு யார் கொடுப்பா?

அதற்கு தனியாக எத்தனை கொடுக்க வேண்டும் நூறு ரூபாய் கொடு.. தேனருவிக்குத் தான் யசோதா கிட்ட இந்த பணத்தை வாங்குவதற்குள் எத்தனை டிராமா அரங்கேற்றம் செஞ்சு ஒரு ஷால் வாங்க காசு சேர்த்து வைச்சது எல்லாம் இந்த புளிச்ச மோருக்கு போகுதே..

தார் ரோட்டில் பினாயில் லாரி லாரியா ஊற்றினால் கூட இந்த கப் போகாதே..

தேவ் ஆனந்த் இன்றைக்கு எதுக்கு டப்பா வண்டி இங்கே நிற்குது என்று பார்த்துக் கொண்டு அங்கே வண்டியை நிறுத்த ஆயா அந்தர் பல்டி அடித்து விட்டது.

ராசா சொக்கா போட்ட துரை இந்த குழாய் சிக்கவச்ச சிறுக்கி என்ற பொழைப்பையே சுக்கு நூறா உடைச்சுப் போட்டா நான் என்ன செய்வேன்..

கண் தெரியலையா ? கிழவி என்று என்னையே திட்டுதா சாமி? நீதியரசர் மாதிரி நீ தான் எனக்கு தீர்ப்பு சொல்லவேண்டும் சாமி.

ஆயா நேற்று தான் முதல் மரியாதை படம் பார்த்து இருக்க அதில் எனக்கு ஒரு உண்மை தெரியனும் சாமி என்று ஒருத்தர் நடிப்பாரே அதே மாதிரி நடித்துக் கொண்டு நின்றது.


தொடரும்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top