• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
277
நீ உடல் நான் நிழல்🌚
பாகம் -13


மோர் விற்கும் ஆயாவிடம் டீல் பேசியவளை ஆயா தேவ் ஆனந்த் கோர்த்து விட்டு விட அவனும் தான் ஆயா பேசப் பேச ஹனிபால்ஸ் முகமாறுதலைப் பார்த்து விட்டு ஆயாவிடம் திரும்பி நீங்கள் சொல்லுங்க ஆயா இந்த பாப்பாவை என்ன செய்யலாம்.

சாமி உன் குணமே சொல்லுது நீ எனக்கு நியாயத்தைச் சொல்லுவேனு.. இந்த எடுபட்ட சிறுக்கி முன்னாலே பார்த்து வண்டி ஓட்டாமல் பொறாகால பார்த்து வந்து மேல விட்டதும் இல்லாமல் இன்னைக்கு குறி தப்பி விட்டது நாளைக்கு வா உன் மேலேயே ஏற்றிக் கொல்லுகிறேன். சொல்லுராருப்பா..

இந்த வயசிலேயும் என் ஓடிப்போன புருசன் வருவாரு என்று நானே நாளும் பொழுதுமா அந்த கூட்ஸ் வண்டி நிற்கிற இடத்தில் தவமா தவமிருக்கிறேன். என்ற மகராசனைப் பார்த்து விட்டு இந்த உசிரை விட வேண்டும் என்று ஆனா என்னை இவ கொன்னு போடனோம்முனு சொல்லாறாலே
நிறைவேறாத ஆசையோடு இறந்து நாயா பேயா சுத்தமுடியுமா? இந்த வயசான காலத்திலே.

ஆயா கம்முனு நான் கொடுத்த காசை வாங்கிட்டுப் போய் இருந்து இருக்கலாம். ஆனால் நீ என்னை புகழ்ந்து பேசுகிறேன் என்று இப்படி சந்துல சிந்து பாடி விட்டாய்? உன்கூட காலம் தள்ளமுடியாமல் ஆட்டக்காரி பின்னால் போன உன் புருஷ் இனி வரமாட்டார். அவர் தான் நேற்று கனவில் வந்து இடுப்பு எலும்பு உடைச்சு அந்தக் கிழவி கீழே தள்ளி விடு என்று சொன்னாங்க என்று நிழல் அவள் காதில் ஓதியதை அப்படியே சொல்ல.

தேவ் ஆனந்த் காதில் புகை தான் வந்தது. அடிப்பாவி உன் நினைவில் நான் நேற்று பூராவும் தூக்கம் இல்லாமல் உன் முகத்தை எப்ப பார்ப்போம் என்று ஒன்பது மணிக்கு வரவேண்டிய கல்லூரிக்கு எட்டு மணிக்கு அடிச்சு பிடிச்சு வந்தா வர்ற வழியில் ஒரு ஏழரையைக் கூட்டி வச்சதுமில்லாமல் கிழவன் உன் கனவில் வந்தான் சொல்லிட்டியே. இரு டி செல்லம் உனக்கு இன்றைக்கு எத்தனை கஷ்டமா கொஸ்ட்டியன் கொடுத்து உன் கண்ணைச் சுத்த விடுகிறேன். என்று மனதில் நினைத்துக் கொண்டு ஆயாவிற்கு அவனும் இரண்டு நூறு ரூபாய் தாள்களைத் கொடுத்து விட்டு அவளை ஏகத்திற்கும் முறைத்துக் கொண்டு.. பூவிழியைப் பார்த்து ,"உன் அக்காவை இனி வண்டி ஓட்ட விடாதே. நீயே ஓட்டு. இல்லாட்டி நான் நேரில் வந்து உங்கம்மாகிட்ட பேச வேண்டி வரும்" என்று மிரட்டி விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தவன் நேற்றைப் போலவே அவர்களை முன்னால் விட்டு இவன் பின்னால் வந்தான்.

பூவிழி இந்த பீஸ் போன பல்ப்புக்கு ஆனாலும் இத்தனை கொழுப்பு ஆகாதுடி இப்பவே இத்தனை நடிக்கிதே இது வயசில் என்ன ஆக்ட் விட்டு இருக்கும்.

தேனுக்கா யாருக்கா பீஸ் போன பல்ப்?

ஆயா தான் என்று சிரிக்காமல் சொல்லியவளைப் பார்த்து பூவிழி வந்த சிரிப்பை அடக்க முடியாமல்
வண்டியை ஓரம் கட்டியவள் இப்போது வண்டி லிருந்து இறங்கி நின்று கொண்டு சிரிக்க அவளின் நிலையோ? வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்து கண்ணில் தண்ணீர் வந்து விட்டது.

இவர்கள் பின்னால் வந்த தேவ் ஆனந்த் பூவிழி வயிற்றைப் பிடித்துக் கொண்டு கண்ணில் தண்ணீர் வர நின்று இருக்க என்னாச்சு என்று வண்டியை நிறுத்திக் கொண்டு கேட்க.

அவ்வளவு தான் பூவிழி அவனைப் பார்த்ததும் மறுபடியும் சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

பூவிழி உனக்கு என்னாச்சு ஏன் இப்படி சிரிக்கிறாய்? சொல்லிட்டு சிரிமா.. ஏதாவது சிரிக்கும் வியாதி இருக்கிறதா?

சார் தேனுக்கா ஆயா என்று சொல்லிவிட்டு.. ஹக்... ஹக்.. என்று மறுபடியும் சிரிக்க தேனருவிக்குத் தான் போச்சு வாத்தி வைச்சு செய்யும் காலேஜ் முடியும் வரைக்கும்.

( உன் ஆயுசுக்கும் வைச்சு செய்வான்டி. உனக்கு வேற ஆப்சன் இல்லை.)

ஆயாவை பீஸ் போன பல்ப் இப்படி எரிகிறது என்று தேனருவி சொன்னதை முழுதும் சொன்னவள் காலையில் இருந்து தனது அக்கா பேசிய பச்சை மிளகாய் வடை எல்லாம் சேர்த்து பூவிழி ஒன்று விடாமல் ஒப்பித்து விட.. ஆயா கூட டீல் பேசியது கடைசியில் ஆயா கால் வாரி விட என்று அனைத்தும் ஒப்பித்து அத்தோடு நிறுத்தி இருந்தால் கூடப் பரவாயில்லை.

அடுத்தது ஒரு குண்டு தூக்கிப் போட்டு விட்டாள். தேனருவி மேடம் முதல் நாள் இரவில் நடு ராத்திரியில் நிழல் என்று உளறியது முதற் கொண்டு சொல்லி விட.

பூவிழி வாயை இறுக்க தன் கை கொண்டு மூடியவள் தன் கண்கொண்டு அவளிடம் கெஞ்சினாள்.

அது தான் அணைக்கட்டு திறந்து விட்டதே பூராவும் வெளியே லீக் ஆனபிறகு எதுக்கு உன் தங்கச்சியை வாயில் சிமெண்ட் போட்டு அடைக்கிறாய்.

பூவிழி உன்னால் வண்டி ஓட்ட முடியுமா?

முடியும் சார். இந்த பீஸ் போன பாப்பாவை என்ன செய்யலாம்?

சார் நான் ஒன்றும் பீஸ் போன பல்ப் இல்லை என்கிட்ட இரண்டு கண் இருக்கு.. வாயில் முப்பத்திரண்டு பல் இருக்கு என்று கண்ணை உருட்டி வாயை திறந்து ஈ என இளித்து வைத்தாள்.

பூவிழி வண்டி ஓட்டும் நீ பின்னால் என்னைப் பார்த்து உட்கார்ந்து கொண்டு வா நீ எப்படி வாயடிக்கிறாய் என்று பார்க்கிறேன்.

தேனருவி மனதில் எனக்கு வந்த சோதனை என்று தான் தேவ் ஆனந்த் பார்த்தவாறு அமர்ந்து கொண்டு அவனை நல்லா சைட் அடித்துக் கொண்டு வந்தாள்.

அவனே சொல்லி விட்டானே என்னைப் பார் என்று அதனால் எதுக்கு என்னைப் பார்க்கிறாய்? என்று கேட்க முடியாது.

அவனுக்கும் இவளுடைய தரிசனம் தான் என்ன செய்ய? இப்பவே இழுத்து பிடித்து அனைக்கவேண்டும் என்று தான் தோன்றியது. அவளின் சேட்டையில் சீக்கிரம் வீட்டில் சொல்ல வேண்டும். இவள் வீட்டில் பேசச் சொல்லி இன்னும் மூன்று மாதத்தில் டிகிரி முடிந்து விடும். வேறு யாரும் முந்திக் கொள்ளும் முன் என் கை அணைவில் நீ அதுவரை என்ன ஆட்டம் வேண்டும் போட்டுக் கொள் என்று மனதோடு பேசியவன் கல்லூரிக்கு அருகில் வரும் போது அவர்களை முந்திச் சென்று விட்டான்.

மற்றவர்கள் பார்வையில் படும் முன் தனது முகத்தை மிலிட்டரி மாதிரி வைத்துக் கொண்டான்.

பூவிழி வண்டி ஓட்டி வர தேனருவி வண்டி பின்னால் திரும்பி உட்கார்ந்து வர மலர்க்கொடி சில்பா இருவரும் இவளுக்காக காத்திருந்தவர்கள் தேனருவி நீ என்ன ஸ்கூல் படிக்கும் போது செய்யும் சேட்டை எல்லாம் இப்போது செய்து வருகிறாய்?

பூவிழி எங்கே மீண்டும் தன் அக்காவைப் பார்த்தால் சிரிப்பு வந்து விடும் என்று வண்டிச் சாவியைக் கொடுத்து விட்டு சென்று விட.

புளுகு மூட்டை திறந்து கொண்டது இல்லைடி வாத்தி வேற இன்று டெஸ்ட் வைத்தே தீருவேன் என்று சொன்னதால் தான் படித்துக் கொண்டு வந்தேன்.

அது இரண்டும் பச்சைப் பிள்ளை போலவே இவள் சொன்னதை நம்பி விட்டது.

வகுப்பு ஆரம்பித்தது தேவ் ஆனந்த் அட்டணஸ் எடுத்து விட்டு இன்றைய பாடம் லோன் அதாவது கடன் கொடுப்பதற்கு வாடிக்கையாளரை எவ்வாறு கவரும் விதமாக பேசுவது என்று சொல்லி விட்டு தேனருவியைத் தான் பார்த்தான்.

அவளைப் பார்த்து மற்றவர்களுக்கு தெரியாமல் புருவத்தை ஏற்றி இறக்கி விட்டு இப்போது அதைப் பற்றி என்று சிறிது நேரம் யோசிப்பது போல் தேனருவியைப் பார்த்து விட்டு, அவளுக்கு உதறல் எடுத்த பிறகு தான் மாணவ மாணவிகளைப் பார்த்து உங்கள் கருத்துகள் ஏதாவது இருந்தால் சொல்லலாம். பேங்க் பற்றியும்.. அதன் வழிமுறைகளும் அந்த கடன் தொகையை திருப்பி செலுத்தாத பட்சத்தில் வாடிக்கையாளரிடம் எவ்வாறு வசூல் செய்து வங்கிக்கு நட்டம் வராமல் வசூலிப்பது என்று விட்டான் ராக்கெட் அனைவரும் தங்களுக்குத் தெரிந்த சில விடயங்கள் சொல்ல.

தேனருவி நீ சொல்லுமா? என்று கேட்டான் பாருங்கள் ஏதாவது ஸ்வீட்டா அதாவது மனதில் பதியுமாறு.. அது தான் மா உனக்கு எப்படியும் அனுபவம் இருக்கும். அது தான் இப்போது போன் செய்து லோன் வேண்டுமா? என்று கேட்டு தொல்லை செய்கிறார்களே.

அவள் தான் என்னத்தைச் சொல்லுவா? பிதுக பிதுக என்று முளிக்க.. ஆமா உனக்கு ஒன்று கூடத் தெரியவில்லை போல இருக்கிறது. சரி உட்கார் நானே சொல்கிறேன் என்று ஆரம்பித்தவனைப் பார்த்து. வாயை மூடிக் கொண்டு இருக்காமல் சார் உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருக்கிறதா? தேனருவி கேட்டு வைக்க.

கண்டிப்பாக உன்னைப் பாராட்டுகிறேன் மா.. உண்மையில் எனக்கு இது போல் ஒரு அனுபவம் நேற்று தான் நடந்தது.

அவுங்க லோன் பற்றி மட்டும் பேசவில்லை என் மனதையே பிடித்துக் கொண்டாங்க.. அப்படியே அவுங்க பேச்சு இருக்கே தேன் மாதிரி ஸ்வீட்.. அவுங்க பேசப் பேச என் மனசை அப்படியே அருவி போல் ஓட வச்சுட்டாங்க.

மாணவிகளுக்கு பொறாமையாக இருந்தாலும். தேவ் ஆனந்த் பெரிய இடம் என்பதாலும் சரியான மிலிட்டரி அதனால் சைட் மட்டும் அடிக்கலாம் வாழ்க்கை என்று வரும் போது சேவை செய்பவன் தான் வேண்டும் என்று அதில் எல்லாம் தெளிவாக இருந்தனர்.

மாணவர்களோ? சார் சொல்லுங்கள் சார் நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.

தேனருவி மட்டும் தான் பயத்தில் எச்சிலை முழுங்கிக் கொண்டு இருந்தாள். எங்கே தான் க்ளூ கொடுக்கிறேன் என்ற பெயரில் செய்த வேலையைச் சொல்லி விடுவானோ ?

அப்புறம் நான் விளக்கிச் சொன்னதும் அவுங்க சொன்னாங்க ?

சார்? என்ன சொன்னாங்க?

தடங்கலுக்கு வருந்துகிறோம் சொல்லி முடித்துக் கொண்டாங்க.

சரி நீங்கள் எல்லாம் அசைன்மெண்ட் எழுதுங்கள்.. ஏம்மா தேனருவி எக்ஸாம் எழுதாலாமா? உனக்கு நேற்று உடல்நிலை சரியில்லாமல் போனதால் இன்றைக்கு உனக்கு ஸ்பெஷலாக கொஸ்டியன் எடுத்து வந்து இருக்கிறேன். எழுதுமா? என்று கடைசியில் பேப்பர் கையில் கொடுத்து விட்டான்.

தேனருவி மனதில் முதலில் நிழலைத் தான் கூப்பிட்டாள். ஒழுங்கு மரியாதையா? புக்கில் பார்த்து விட்டு என் காதில் சொல்கிறாய். நான் எழுதி விடுகிறேன். ப்ளீஸ் என்று கேட்டாள்.

நிழலோ என் கண்ணில் தூசு விழுந்து விட்டது. என்னால் புக் பார்க்க முடியாது என்று கைவிட.

என்னமோ? அன்றைக்கு ரோபோ போல் நெஞ்சில் பட்டன் வைச்சு ஒரு டி. வி காமித்தாயே அது போல் என் முன் வந்து நெஞ்சை ஓப்பன் பண்ணு நான் எழுதி விடுகிறேன்.

தேவ் ஆனந்த் அவளின் அருகில் வந்தவன். நேற்றே இன்று தேர்வு இருக்கிறது என்று சொல்லி தானே அனுப்பினேன் படிக்கவில்லையா?

இல்லை சார் படித்தேன். இதோ எழுதிக் கொண்டு தான் இருக்கிறேன். என்று பேப்பர் காண்பித்தாள்.

அவள் கையில் இருந்த பேனா மூடியே திறக்கவில்லை. ஆனால் பேப்பரில்...



தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top