Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 335
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் - 48
பாகம் - 48
மலைக்கோவில் முருகன் கோவிலில் சுரேஷ் சுனைனா இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் முடித்து அனைவரும் கிளம்பி அரண்மனை வீட்டிற்குச் சென்றனர்.
தேவ் ஆனந்த் கல்லூரிக்கு கிளம்பிச் சென்றான். அவனுக்கு அவன் ஹனிபால்ஸ் பார்க்க வேண்டும். நேற்று இரவு அவளோடு போனில் உரையாடியது. பிறகு சோர்வினால் உறங்கி விட்டான். காலையில் நடந்த கூத்தெல்லாம் அவனுக்குத் தெரியாது.
வீட்டில் சிசிடிவி இருந்தாலும் அதைச் பரிசோதிக்கவில்லை அவன்.
தேனருவி இன்று கல்லூரிப் பேருந்தில் செல்ல வேண்டும் என்பதையே மறந்து வண்டியில் தான் போவோம் என்று மெதுவாக குளித்து ரெடியாகிக் கொண்டு இருந்தாள்.
அடியே தேனு ஆடி மாசத் தேர் மாதிரி அசைஞ்சு ஆடி ரெடியாகிறாய்? என்ன கல்லூரி செல்ல மனசுல நினைப்பு இருக்குதா? இல்லையா? உனக்கு வேண்டி பூவிழி அப்பாலையா இருந்து காத்திட்டு இருக்கா.
அம்மா வந்துட்டேன். நான் வந்து விட்டேன். காலையிலேயே உன் சுப்ரபாதத்தை ஆரம்பிக்காதே நாள் துவங்கும் போதே உன் திட்டோட ஆரம்பித்தால் இன்று பூராவும் வெளங்கிடும். இன்றைக்கு ப்ராஜெக்ட் சப்மிட் செய்ய வேண்டும்.
அருவிக்கா நீயோ காமர்ஸ் உனக்கு எப்படி ப்ராஜெக்ட் இருக்கும் என்ன ஏதாவது இன்போசிசன்ஸ் தான் எல்லார் கிட்டையும் ப்ராக்ஜெக்ட் என்று பீலா விடுகிறாயா?
பூவிழி நீயா கற்பனை பண்ணிட்டு பேசாதே!!கொஞ்சமாவது உன்னோட அக்கா அப்படிங்குற மரியாதை இருக்குதா? உனக்கு என்னடி பிரச்சினை என்னைப் பற்றி என்ன நினைச்சுட்டு இருக்க நான் எல்லா யாரு?
ஏன்? உனக்கே தெரியலையா நீ யாருன்னு..
நம்மளுக்கு பின்னால் பிறந்துட்டு இருந்தாலும் இவளுக்கு இத்தனை புத்திசாலித்தனமாகாது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் வளர விடக்கூடாது.
தேனருவி உஷார் இருடி நான் பேசுவதிலேயே உன் வாயை மக் போட்டு அடைத்து விடுகிறேன் இனி வாய தொறப்ப மவளே!!
அக்கா ஏன் உனக்கு நீ யாருங்கிறது மறந்து போச்சா இப்படி யோசிச்சிட்டு இருக்கே. .
கண்ணா உன்னை பார்த்தேன்...
காதலில் விழுந்தேன்....
கிடா மீசை வளர்த்தாய்
கன்னி மனதை கிள்ளி சென்றாய்....
காதலில் விழுந்தேன்
கனவினில் உழன்றேன்.
என்று பூவிழியை பார்த்து தேனருவி புருவத்தை உயர்த்தினாள்.
அக்கா நீ யாரைப் பற்றி பேசுகிறாய்? யார் கன்னி யார் கிடாமீசை ஏதாவது கனவு கண்டு பயந்து விட்டாயா? நினைச்சேன் நீ இப்படி சம்பந்தம் இல்லாமல் பேசும் போதே நேற்று ஏதாவது பார்த்து பயந்து விட்டாயா?
பூவிழி உனக்கு நான் அக்காடி நான் படிச்ச ஸ்கூல்ல தான் நீ படிச்ச என்கிட்டேவே உன்னோட வேலை காமிக்கிறயா? என்று இல்லாத காலரை தூக்கி விட்டாள்.
அக்காவை குழப்பி அடிக்கலாம் அப்படின்னு பார்த்தா? அவ நம்மளுக்கே கேட் போட்றாளே!!! "இது நல்லதுக்கு இல்லையே" என்று யோசித்த பூவிழி. "என்னக்கா நேரமாச்சு வா போகலாம்."
ஏன் யசோதாவிடம் சொல்லி விடுவேன் என்று பயப்படுகிறாயா? என்னை மட்டும் மாட்டி விடுகிறாய்? அந்த வில்லன் சாரை உனக்கு பிடித்து விட்டதா?
தேனுக்கா அது வந்து எனக்கு அவர் நினைவாவே இருக்கிறது. அது தான் இதிலிருந்து வெளியே வர எனக்கு ஏதாவது ஐடியா கொடேன்.
இப்போ கேட்டாய் பாரு இது எனக்கு பிடித்து இருக்கிறது. சரி மேட்டருக்கு வருவோம். நீ இதனால் சில இழப்புகளை சந்திக்க வேண்டி வரும் பரவாயில்லையா ??
தேனுக்கா உனக்கு என்ன ஆச்சு? நான் என்னமோ ஓடிப் போவதற்கு ஐடியா கேட்பது போல் நீ பீலா விடுகிறாய்?
உனக்கு யோசனை வேண்டுமா? வேண்டாமா? குறுக்கே பேசாதே நான் ப்ளான் போட வேண்டும். என்ன இருந்தாலும் நீயும் இந்த அக்காவை மதிச்சு உதவி கேட்டு விட்டாய்.
அதுக்கு.. உனக்கு ஏதாவது எழுதித் தரவேண்டுமா?
அதெல்லாம் இல்லை நான் கை வலித்தாலும் பரவாயில்லை என்று விடிய விடிய எழுதி விடுவேன்.
( நிழல் தான் இருக்கும் போது நீ கைவலிக்க எழுதி விடுவேன்
என்னமா பீலா விடுகிறாள்)
பிறகு வேறு என்ன எதிர்பார்க்கிறாய்? மாமா சார் உனக்கு வாங்கிக் கொடுக்கும் தீனியில் பங்கு கேட்கக் கூடாதா? நானும் பாவம்ல நீ எனக்கும் கொஞ்சமா கொடுத்து விட்டு சாப்பிடு சரியா??
போடி லூசு நான் அப்படி ஒன்றும் சுயநலவாதி இல்லை. இத்தனை நாட்களாக என்னிடம் ஆட்டையப் போட்டு உன் அலமாரி எல்லாம் நிரப்பி வைத்து இருக்கிறாயே அதை எல்லாம் என்னிடமே திருப்பி கொடுக்க வேண்டும். அவ்வளவு தான் ஜ்ஜூப்பி மேட்டர்.
என்னக்கா நீ என்னை சந்தேகப் படுகிறாயா?
இல்லையே நீ உனக்கு வேண்டும் என்றால் யசோவை வாங்கித் தரச் சொல்ல வேண்டும். அதை விட்டு என் பொருளை எடுத்துக் கொண்டு நான் யசோ கிட்ட திட்டு வாங்கும் போது நீ வேடிக்கை தானே பார்த்தாய்?
அக்காதானே நீ எனக்காக இதைக் கூட விட்டுக் கொடுக்க மாட்டாயா? இல்லை என்ன இப்போது அம்மாவிடம் சொல்லி விடுவேன் என்று சொல்கிறாயா? சொல்லிக் கொள் எனக்கு எந்தப் பயமும் இல்லை. அப்படியே உன் மேட்டரும் என் கையில் இருக்கிறது. நானும் அம்மாவிடம் சொல்வேன் தெரிந்து கொள் என்று பூவிழி மிரட்டல் விடவும்.
நான் என்னடி செய்தேன். நீ என்னை மாட்டி விடுவேன் என்று சொல்கிற அளவுக்கு நீ தான் அந்த கிடா மீசைக்காரன் கூட ரோடு என்பதை மறந்து ஈ என பல்லக் காண்பித்து வந்தவள் தானே !!
ஏய் அங்கே என்னாங்கடி குசுகுசுவென ஞயாம் வேண்டிக் கிடக்கிறது. காலேஜ் போங்க என்று யசோதா சத்தம் போட.
"இதோ போறோம் மா" என்று இருவரும் கோசம் போட.
இதுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. இரண்டு பேரும் அரசியல்வாதிகளுக்கு அல்லக்கையா? போறதுக்கு பத்துப் பொருத்தமும் பக்காவா பொருந்தி இருக்குது.
யசோ இது உனக்கே நியாயமா இருக்குதா? எப்போ இருந்து நீ இப்படி எல்லாம் பஞ்ச் பேச ஆரம்பித்தாய்?
ஏண்டி!!!
ஒரு வீட்டில் இருப்பதே மூன்று பேர் மூன்று பேரும் பஞ்ச் டயலாக் அடிச்சா நாடு தாங்குதுமா? நாடு தாங்காது என்று தேனருவி சொல்லிய விதத்தில் மற்ற இருவரும் சிரித்து விட.
சரிம்மா பை என்று இருவரும் கிளம்பிச் சென்றனர்.
தேவ் ஆனந்த் கல்லூரிக்கு எப்போதும் தனது என்பீல்டு வண்டியில் தான் வருவான். இன்றைக்கு மகிழுந்து ஹோண்டா சிட்டியில் வந்து இறங்கும் போது தான் கல்லூரி மொத்தமும் அவன் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டு பார்த்து இருந்தனர்.
மீரா மிஸ் தேவ் ஆனந்த் கல்லூரி என்று பாராமல் சைட் அடித்துக் கொண்டு இருந்தாங்க அதைப் பார்த்த தேனருவிக்கு காதில் புகை வராத குறை. அவளுக்கு
தேவ் ஆனந்த் மேல் தான் கோபம் பின்னர் இருக்காதா? ஏதோ திருமண மாப்பிள்ளை போல் கோட் சூட் அணிந்து வந்தால் எல்லோரும் சைட் அடிக்கத் தான் செய்வாங்க அவளுக்கு மட்டும் இப்போது சக்தி இருந்தால் எல்லோர் கண்ணையும் நோண்டி விடுவாள்.
ஹலோ தேவ் சார் என்ன இரண்டு நாளாக வரவில்லை என்று மீரா மிஸ் அவன் அருகில் வந்து கேள்வி கேட்டதும் இல்லாமல் உரசுவது போல் நடந்து வந்ததும் தேவ் ஆனந்திற்கு கோபம் வந்தது. அவன் விலகி விலகிச் சென்றாலும் மீரா நெருங்கி வரவும் அவன் நேராக இப்போது இவர்களையே பார்த்து கண்ணில் பொங்கிய படி நின்ற தன்னவளிடம் சென்று விட்டான்.
அதில் கோபம் அடைந்த மீரா விற்கு இப்போது தேனருவியை கன்னத்தில் சப்பென்று அடிக்க வேண்டும் போல் தோன்ற ஆனாலும் கல்லூரி என்பதை மனதில் வைத்து அவளை முறைத்துக் கொண்டு நின்று இருந்தாள்.
தேனருவி அருகில் வந்ததும். ஹேய் ஏண்டி பொண்டாட்டி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்குது.
உங்களை யாருங்க இத்தனை அழகான டிரஸ் போட்டு வரச் சொன்னது. அந்த மிஸ் தான் உரசிட்டு வருகிறாங்க என்று தெரிகிறதுல நீங்க அவுங்க கன்னத்தில் நல்லா சப்புனு ஒரு அரை கொடுத்து இருக்க வேண்டாமா??
அப்புறம்?
நான் என்ன கதையா? சொல்கிறேன் அப்புறம் விழுப்புரம் என்று சொல்வதற்கு.
தேனருவி அந்த மேம் போய் விட்டார்களா?
நான் என்ன பேசுகிறேன் அதைக் கவனியாமல் உங்களுக்கு அவுங்க நியாபகம் எதுக்கு வருது வாத்தியாரே கொஞ்சம் கூட வருங்காலப் பொண்டாட்டி கண்முன்னே நிற்கிறாளே அவளைப் பார்த்து உனக்கு இந்த சுடிதார் நல்லா இருக்கிறது. இந்த வளையல் நல்லா இருக்கிறது என்று சொல்லத் தோணுதா?
அடியேய் போட்டேனா? பாரு இது என்ன நம் வீடா இல்லை இரண்டு பேரும் ஹனிமூன் போய் இருக்கிறோமா? காலேஜ் டி ஹனிபால்ஸ் இன்னும் உனக்கும் எனக்கும் தான் திருமணம் முடிவு ஆகி இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. நீ இப்போது ஓகே என்று சொல். நாம் இரண்டு பேரும் சேர்ந்தே போய் பிரின்ஸ்பால் சார் கிட்ட சொல்லி விடலாம். ஓகேவா. என்று அவளின் கையைப் பிடிக்கவர..
மாமா சார் வேண்டாம் அது நாம் பத்திரிக்கை கொடுக்கும் போது தெரிந்து கொள்ளட்டும். இப்போது எனக்கு வகுப்பிற்கு நேரமாச்சு நான் போகிறேன் என்று ஓடி விட்டாள்.
சில்பா ஏண்டி எருமை என்னைய விட்டுட்டு எங்கேடி போனாய் உன் பேக் என் தோளில் சிக்க வைத்து விட்டு போய் விட்டாய் பிணமாட்டம் கணக்குது லூசு இந்தா உன் புளிமூட்டை நீயே வைத்துக் கொள் என்று தேனருவி கல்லூரிப் பேருந்தில் இறங்கியவள் தேவ் ஆனந்த் காரைப் பார்த்து தான் அவனை சைட் அடிக்க வந்தவள் தனது தோழி சில்பாவிடம் பேக் கொடுத்ததை மறந்து இத்தனை நேரம் தேவ் ஆனந்திற்கு சூடம் ஏற்றியவள் மறந்தே விட்டாள் அவளை.
என் செல்லம்ல கோவிச்சுக்காதேடி. என் ஆளை அந்த மீரா மேம் உரசியே ஒரு பக்கம் தேய்த்து எடுத்து விடுவாள் போல் இருக்கிறது. அது தான்டி அவரை நல்லா டோஸ் விட்டு விட்டு வந்தேன்.
நிஜமா நீ அவரை டோஸ் விட்டாயா? இல்லை அவரைப் பார்த்து ஜொள்ளு விட்டாயா?
போடி இவளே நான் உண்மையைத் தான் சொல்கிறேன். உன் மேலே சத்தியம்.
தேனருவி உனக்கு இப்போது காதல் கைகூடி அடுத்த கட்டத்தில் அடி எடுத்து வைக்கிறாய்? ஆனால் நான் இன்னும் பச்சை மண்ணுடி. இன்னும் எனக்கான ஆளைப் பார்க்கவே இல்லை பிறகு காதலில் தொபுக்கட்டீர்னு விழுந்து அது எல்லாம் நடக்கவே நிறைய நாட்கள் ஆகும். என் தலை மேல் நீ ப்ராமிஸ் செய்து என் ஆயுஸை குறைச்சு விடாதே ராசாத்தி.
தொடரும்...