Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 335
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்
பாகம் -56
பாகம் -56
விஜயலதா தனக்குப் பின்னால் எதுவோ இருப்பது போல் திரும்பிப் பார்த்தாள். கரும்புகையாக அவளைச் சுற்றி வளைத்தது. அதில் பயந்தவள் யார்? நீ இங்கே என்ன செய்கிறாய்? என்று கேட்கவும்.
நான் தான் நீ நீ தான் நான் என்று அவளின் அருகில் வந்து விஜலதா நான் உனக்குள் தான் இருக்கிறேன். நீ என்னை மறந்து விட்டாயா?
ஹேய் என்ன உளறுகிறாய்? நான் யார்? என்று தெரியாமல் நீ கரும்புகையா சுற்றிக் கொண்டு என்மேல் பழி போடுகிறாயே என்று எக்காளமாய் சிரித்தாள்.
அடியே மாட்டினாயா? தொக்கா இதே போல் சிரித்துக் கொண்டு இரு விடியும் வரை என்று அவளைச் சுத்த விட்டது நிழல்.
இது என்ன நம் உடம்பு நாம் சொல்வது கேட்காமல் அது எங்கேயோ போகிறது. விஜயலதா நீ மட்டும் எத்தனை பட்டாலும் அடங்கவே மாட்டாயா? என்று அவளின் மனசாட்சி வந்து நின்றது. நீயே ஒரு பணப்பேய் உன்னிடம் நான் மனசாட்சியாக இருக்கிறேன் பாரு என்று அதுவே அலறி அடித்துக் கொண்டு அவளிடமிருந்து விடுபடப் போராடியது.
சுனைனா சுரேஷ் இருவரும் ஏற்கனவே குஜால் மஜாலாக இருந்ததால் அவர்களுக்கு தனியாக பர்ஸ்ட் நைட் வைக்கவில்லை. ஒருவேளை இரண்டு பேரும் திருமணத்திற்கு முதலே அதைக் கெண்டாடி விட்டார்களே அதனால் கூட இருக்கலாம்.
வானதி முதல் வேளையாக தனது தங்கையைப் பார்த்து வனிதா நீ நாளைக்கு நம் வீட்டிற்கு சென்று விடு இங்கே வேண்டாம்.
ஏக்கா அப்படி சொல்கிறாய்? அது தான் எனக்குப் போட்டியாக இருந்தவளுக்கும் இப்போது திருமணம் நடந்து விட்டதே. ஏன் இருக்கும் சான்ஸ் மிஸ் செய்ய வேண்டும்.
அதெல்லாம் எதுவும் வேண்டாம் டி நான் இந்த வீட்டில் தான் வாழவேண்டும். என்னால் எல்லாம் அவர் கூட சண்டைப் போட்டுக் கொண்டு அம்மா வீட்டில் வந்து இருக்க முடியாது.
நான் உனக்கு தங்கச்சியாகப் பிறந்ததிற்கு பதிலாக விஜயலதா அக்காவின் தங்கச்சியாகப் பிறந்து இருக்கலாம்.
ஏண்டி அப்படிச் சொல்கிறாய்?
பின்னே என்னக்கா அவங்க தங்கச்சியாக எந்த ரேஞ்சுக்கு வேலை பார்த்து இருக்கிறாங்க. ஆனால் நீ எனக்காக என்ன செய்தாய்??
இங்கே பாரு வனிதா உன் வாழ்க்கைக்கு உதவி செய்து என் வாழ்க்கையில் மண் அள்ளிப் போட நான் விரும்பவில்லை. தெரிந்தே பாழ் கிணற்றில் விழ நான் குருடு அல்ல எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கு அதனால் நான் இனிமேல் தேவ் ஆனந்த் வாழ்க்கைக்குள் உன்னை திணிப்பது போல் ஒரு செயலை செய்ய மாட்டேன். முதல் வேளையாக நாளைக்கே அப்பாவை வரச் சொல்கிறேன். கிளம்பி போகும் வழியைப் பார். சும்மா சும்மா கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் உனக்கு புத்தி சொல்ல முடியாது சரியா??
ஆமா ஆமா உனக்கு உன் தங்கச்சி வாழ்க்கை பெரியதாக இருந்தால் நீ அன்றைக்கு தேனருவி வீட்டில் என் முகத்தில் குழவி கடித்து நான் படும் துன்பத்தைப் பார்த்து நீ சிரித்து இருப்பாயா?
ஏண்டி அதை நியாபகப் படுத்துகிறாய்? உன் முகம் பப்பூன் மாதிரி இருந்தது. அதை இன்றைக்கு நினைத்தாலும் எனக்குச் சிரிப்பு வருகிறது. ஹா ஹா ஹா ஹா.
அக்கா நீ சரியில்லை என்னைக் காயப்படுத்தி பார்க்காதே என்று கோபமாகப் பேசியவள் இப்போது முகத்தை திருப்பிக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றாள்.
நிழல் அங்கே தான் இருந்தது. வாடி முகம் வீங்கினது உனக்குப் பத்தலையா?
நானே என் டார்லிங் தேனருவி திட்டி விட்டாளே என்று காண்டாகி
வந்தா இங்கே ஆளாலுக்கு அலும்பு செய்கிறீங்களா??
இப்போது தான் சாம்பிராணி போட்டு விட்டு வந்தேன் ஒருத்திக்கு நீ மட்டும் எதுக்கு மிச்சம் வைக்க வேண்டும் வா..
சுனைனா கடைசி நேரத்தில் நல்லவளாகி விட்டாள். அதனால் பாலைவன ரோஜாவாக இருந்தவளை பன்னீர் ராஜாவிற்கு பொண்டாட்டி ஆகி விட்டா உனக்கு விடியும் வரைக்கும் ஏதாவது சுத்த விட்டு சிக்கல் சிங்காரமா மாத்துல நான் பூர்வ ஜென்ம நிழல் இல்லை.
மொட்டை மாடிக்கு வந்த பாப்பா
நீ இப்போது எனக்கு
கிடைச்சிட்டே ஜோக்கா
என்று பாட்டுப் பாடிய நிழல் வனிதாவைச் சுற்றிலும் தன்னுடைய கல்லறைத் தோட்டத்தில் சும்மா வேலை செய்யாமல் ஓப்பி அடிக்கும் குறுக்கு வழி கோவிந்தனை வரச் சொல்லியது. அப்படியே சரசா அவளையும் வரச் சொல்..
நிழல் எஜமான் அவுங்க எல்லாம் எதுக்கு நானே முருங்கை மரத்தில் இருந்து ஜம்ப் பண்ணி வருகிறேன் என்று அங்கே இருந்த வேதாளம் கேட்க, டேய்
கோமாளித் தலையா நீயே விக்கிரமாதித்தன் முதுகில் தொங்கிட்டு இருக்கிறாய்? அதனாலே நீ வேடிக்கை மட்டும் பாரு நாங்கள் எல்லாம் கல்லறைத் தோட்டத்தில் கல்லூரியில் இதுக் என்றே தனியாகப் பயிற்சி எடுத்து இருக்கிறோம்.
என்ன நிழல் என்னமோ? எம்பிபிஎஸ் படிச்ச டாக்டர் மாதிரி டிரெயினிங் எடுத்தேன் என்று பீலா விடுகிறாய்? நீ இப்போது தான் நிழல் பேய் நான் எல்லாம் எப்பவுமே விக்கிரமாதித்தன் முதுகில் ஏறி சவாரி செய்யும் வேதாளம்.
சரி வேதாளம் உன் கூட வேதாந்தம் பேச நான் இங்கே வரவில்லை. எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கிறது. உன் கூட இன்னொரு நாள் நான் வார்த்தை விளையாட்டு விளையாட வருகிறேன்.
அட இந்த பொசுங்கினி எங்கே போனாள் என்று தெரியவில்லையே.
வனிதா வீட்டின் மேல் இருக்கும் தண்ணீர் தொட்டி மேல் ஏறி நின்று இருந்தாள்.
ஓஹோ அங்கே போய் கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடப்போகிறாயா?
இருமே நான் வருகிறேன் உன்னைக் அந்தரத்தில் காத்தில நீச்சல் அடிக்க வைக்கிறேன். விடிய விடிய எனக்கு ஒரு எண்டர்டெயின்மெண்ட் வேண்டும் தானே.. அச்சோ என்ன ஒரு சான்ஸ் ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறாய்? தேனருவி நீ வாழ்க என்று கூறிய நிழல் இப்போது கீழே குதிக்க நினைத்த வனிதாவை அப்படியே அந்தரத்தில் நிற்க வைத்து விட்டது.
இது என்ன கீழே விழுகாமல் மேலே போய்க் கொண்டு இருக்கிறோம். என்று மெதுவாக கண்ணைத் திறந்து பார்த்த வனிதா திகைத்தாள் தன்னைச் சுற்றி பிசாசுகள் போல் சுற்றிக் கொண்டு இருந்தது.
கொளகொளையா முந்திரிக்கா
குனிந்து பார்த்து மந்திரிக்கா
சேவக்கோழி கூவும் நேரம்
செகுடன் காதில் சங்கக்கா..
குதிச்சுப் பாரு நீ யக்கா
தல தெறிச்சுப் போகும் பாருக்கா
இன்றையோடு சோலி முடிஞ்சது
நாளைக்கு பேப்பரில் வருவாய்..
ஆமா நீங்க எல்லாம் யாரு எதுக்கு என்னைச் சுற்றி இப்படி பாடிக் கொண்டு ஆடுகிறீங்க.
நாங்க தான் நைட் ரைடர்ஸ் தி கிங் ஆஃப் தி வேர்ல்ட் என்று ஒரு பேய் சொல்ல.. ஆமா நீ சரியான இங்கிலீஷ் பேய் என்று தெரிகிறது. அதுக்குனு இப்படியா நேரம் காலம் தெரியாமல் பேசுவது.
ஏய் சரசு உனக்குப் பொறாமை நான் இங்கிலீஷ் பேசினால் நீ தங்கிலீஷ் பேசு நான் என்ன உன் கூட சண்டைக்கா வருகிறேன்.
பேயா இருந்தும் குழாய் அடி சண்டை போடாதீங்க.என்று மற்றொரு பேய் சமாதானம் செய்ய ஆமா நாட்டாமை ஆவி தீர்ப்பு சொல்ல வந்து விட்டது.
நிழல் உடனே சரியான அப்ரண்டீஸ் பேய்களா இருக்கீங்களே உங்களைப் போய் வேலை செய்ய வரச் சொன்னேன் பாரு என்று சவுண்ட் விட.
சாரி பாஸ் ஒரு ஆர்வக் கோளாறு தான் இனிமேல் எதுவும் சண்டை போட மாட்டோம்.
நாய்ச் சண்டை பார்த்து இருக்கிறேன். பேய்ச் சண்டை இப்போது தான் பார்க்கிறேன் என்று வனிதா சொல்லியவள். அது என்ன உங்களுக்கும் தலைவன் இருக்கிறானா?
ஆமாங்க யக்கா இது கவுன்சலரா
இருந்து செத்து வந்த
செத்ததால் கொம்பு மூளைச்சலவை பேய்.. இது ஏன் ரோஸ் கலரில் இருக்கிறது என்றால் ரோஸி என்று பெயர் வைக்கவில்லை என்று பேயாக மாறி சாயம் போட்டு விட்டாங்க?
யாரு?
அது எங்கள் கல்லறைத் தோட்டத்தில் இருக்கும் கல்லூரி டிராயிங் மாஸ்டர்.
ஆமா நீங்க எல்லாம் ஏன் இரவில் மட்டும் வருகிறீர்கள்.
அக்கா உனக்காவது எங்களைப் பார்த்து இப்படி கேட்க வேண்டும் என்று தோன்றியதே. அது எல்லாம் இந்த மனுசப் பயலுக தான் காரணம்.
ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்.
ரோடு பூரா வேகத்தடை போட்டு வைத்து இருக்கிறாங்க..
அதனால் என்ன நீங்கள் வண்டியா ஓட்டப் போகிறீங்க உங்களுக்குத் தான் கால் இல்லையே.
அது தான் காரணம் எங்களுக்கு கால் இல்லை அதனால் பறந்து வருவோம் தானே அது தான் காரணம் எல்லாரும் பட்டம் பறக்கிறது என்று எங்களைத் தொரத்தராங்க அப்புறம் வேற்று கிரக வாசிகள் ஏலியன் குட்டி என்று சொல்கிறார்கள்.
டேய் அப்ரசிண்டிகளா அந்தப் பெண்ணைப் பயப்படுத்த சொன்னால் அது கூட கதை அளந்து கொண்டு இருக்கிறீர்களே உங்களை எல்லாம் இப்போதே கல்லறைத் தோட்டத்தில் போய் களை எடுங்க
டேய் குப்புசாமி நல்லா பயப்படும் பேயா வரச் சொல்டா இவனுகள் எல்லாம் பேய் என்ற பெயரையே கெடுக்கிறாங்க நம் கெத்து என்னாவது. அந்த வட்டச் செயலாளர் வனஸ்பதி தலையனை வரச் சொல் என்று கூறிய நிழல் அந்தரத்தில் நின்று இருக்கும் வனிதாவிடம். சென்று அவளின் காதுக்குள் ஊதி விட்டது. அவள் காதில் இருந்து புகை வர ஆரம்பித்தது.
இது என்ன ஒரே கருகும் வாசனை வருகிறது. யார் இந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கிறாங்க என்று தன்னப் போல் பேசியவளைப் பார்த்து நிழல் நீ தான் உன் காதுக்குள் பட்டாசு வைத்து இருப்பாய் போல் இருக்கிறது. அது தான் ஒரே குஷ்டமா இருக்கிறது என்று கூறிய நிழல் அவளை மயங்க வைத்து இப்போது அவளை அந்தரத்தில் தூக்கிச் சென்று அவளின் அறைக்குள் வைத்து விட்டு வெளியே வந்து விட்டது.
நிழல் ஏன் இப்படி அவளுக்கு பயம் மட்டும் காட்டி விட்டு இப்போது வீட்டிற்குள் கொண்டு வந்து விட்டது என்றால் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வைத்து விளையாடுவதற்கு தான்.
வீட்டில் இருப்பவர்களுக்கு சந்தேகம் வரக் கூடாது இல்லையா? அது தான் பிறகு அதுவே தேனருவி திருமணத்திற்கு தடங்கல் ஆகி விடக் கூடாது என்று தான் இப்படி முடிவு எடுத்தது.
தொடரும்..