Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 277
- Thread Author
- #1
நீ உடல் நான் நிழல்

பாகம் - 9
பாகம் - 9
தேனருவி விட்டால் போதும் சாமி என்று வகுப்புக்குள் வந்தவள். தனது தோழிகள் இருவரின் பார்வைக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு அவர்களைப் பார்த்து எச்சில் விழுங்கினாள்.
தேனருவி சார் ரொம்ப கவனித்து விட்டாரோ? அது தான் துண்டைக் காணம் துணியைக் காணம் என்று ஓடி வந்து விட்டாயா?
நேற்று நீ எழுதியதைப் பார்த்து அவருக்கு குளிர் ஸூரம் வந்து விட்டது என்று சொன்னாய்? ஆனால் பார்த்தால் நிலமை வேறு மாதிரி அல்லவா? போய்ட்டு இருக்கு. ஆமா உன் பேப்பர் எங்கே?
போடி நாம் என்ன ஸ்கூல்லா படிக்கிறோம் பேப்பர் வைத்து கம்பேர் செய்து பார்ப்பதற்கு கல்லூரி இறுதி ஆண்டு படிக்கிறோம்.
ஓ மேடம் அப்படி வருகிறீர்கள் அதுவும் சரிதான் அப்புறம் எதுக்கு நேத்து மேடம் நாளைக்குத் தெரியும் தேனருவி டேலண்ட் என்ன என்று எல்லாரும் எனக்கு சேவகம் செய்வார்கள் என்று சொன்னாய்?
எங்கே உனக்கு சேவகம் செய்யும் சேடிப் பெண்கள் இளவரசியாரே.
தாங்கள் மகாராஜாவை சந்தித்து பேசிவிட்டு வரும் போது அங்கேயே அவர்களை விட்டு விட்டு வந்து விட்டீர்களா? இளவரசியாரே.
அடிப் போங்கடி நான் அந்த ஆளுகிட்ட இருந்து தப்பித்து வந்து இருக்கிறேன். அதுவும் இன்றைக்கு ஏப்ரல் ஒன்று என்று கூறி விட்டு அவர் அடுத்து பேசி திட்டுவதற்குள். கோசலை மேடம் வந்து காப்பாற்றி விட்டாங்க உண்மையில் அவங்களுக்கு கோயில் கட்டி கும்பிட வேண்டும்.
அப்படீனா எதுவுமே எழுதவில்லையா? இல்லை ஏதாவது கதை எழுதி விட்டாயா?
சரி விடுடி அது தான் தேவ் சார் உன்னை அனைவரும் முன்னால் திட்டாமல் தனியா அழைத்து திட்டி இருக்கிறார். அப்படீனா நீ அவருக்கு ஸ்பெஷல் தான் என்று மலர்க்கொடி சொல்ல.
ஒரு வெங்காயமும் இல்லை. நாளைக்கு ஒழுக்கமா படித்து வரச் சொல்லி விட்டார். நானும்
இதே கேள்வியாகத்தான் இருக்கும் என்று வெகு வெசையாக தலையாட்டி விட்டேன். பிறகு தான் சொல்லி விட்டார் டி.. நாளைக்கு வேறு கொஸ்டியன் தான் தருவேன் அதனால் நல்லா படித்து வா என்கிறார். வரவர ஸ்கூலை விட மோசமாக போகுதுடி காலேஜ்.
தேவ் ஆனந்த் வகுப்பறைக்குள் வந்ததும் அன்றைய பாடத்தை நடத்த ஆரம்பித்து விட்டான்.
இடை இடையே அவனுடைய கண்கள் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தது.
அவனுக்கு நேற்றைய தினம் அவளைக் தூக்கித் சென்றதிலேயே அவன் மனம் அவளின் பின்னால் சென்று விட்டது. ஆனாலும் தான் ஒரு ஆசிரியர் என்பதால் அவள் படிப்பை முடிக்கட்டும் அதுவரை
தனது மனதில் தோன்றும் ஆசையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் என்று தான் அவள் எது செய்தாலும் கொஞ்சம் பொறுத்துப் போகிறான்.
தேனருவிக்கு அது எல்லாம் மண்டையில் உரைக்கவே இல்லை. அவள் தான் நிழல் சொன்ன கதையில் சிக்கி தன் யோசனை அதில் வைத்து உட்கார்ந்து இருக்கிறாளே.
நிழலிடம் இன்று கேட்க வேண்டும். எதனால் இறந்தது என்று கேட்க வேண்டும் பாவம் அதன் ஆசை நிறைவேறாமல் செத்து விட்டு அது எப்படி அலைகிறது.
ஆமா இப்போது என்ன செய்து கொண்டு இருக்கும். அவளின் யோசனையில் நிழல் அவள் காதோரம் நான் உன் பக்கத்தில் தான் உட்கார்ந்து இருக்கிறேன்.
என்னது? இத்தனை நேரம் நீ இங்கே தான் உட்கார்ந்து இருந்தாயா?
நீ உன் வாத்தியாரிடம் திட்டு வாங்கும் போது அங்கு தான் இருந்தேன்.
நிழல் நேற்று நான் பேப்பரில் விடை எழுதி இருந்தேன். ஆனால் சார் தான் ஒன்றுமே இல்லை. என்று என் முகத்தில் தூக்கி வீசுகிறார். எனக்கு அழுகை அழுகையா வந்தது.
நீ என் கூடத் தான் இருந்தாய்? அந்த பேப்பரில் மேஜிக் செய்து விடை வரவழைத்து இருக்கலாமே.
ஐய்யோ? விட்டால் தொழிலையே மாத்தி விட்டு விடுவாய் போல் இருக்குதே. நான் தான் பதில் பூராவும் மாற்றி விட்டது இவளுக்குத் தெரியவில்லை என்று நிழல் கூலாக அவளைப் பார்த்து சொன்னது.
ஏய் உன்னால நான் நாளைக்கு ஒரு தடவை டெஸ்ட் எழுதவேண்டும்.
எழுது பாப்பா.. ஆமா யாரோ பிரியாணி கொண்டு வந்து இருக்கிறார்கள். வாசனை மூக்கைத் துளைக்கிறது. நான் போய் யார் என்று பார்த்து வருகிறேன்.
என்னையப் புலம்ப விட்டுட்டு நீ பிரியாணி சாப்பிட பேகிறாயா? நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் என்று நிழலிடம் சொல்வது போல் இப்போது சத்தமாக சொல்லி விட்டாள்.
மொத்த வகுப்பறையுமே இவளைத் தான் பார்த்தது. இவளோ? சன்னல் வழியாக தெரிந்த மரத்தைப் பார்த்து கை ஆட்டி ஆட்டித் திட்டிக் கொண்டு இருந்தாள்.
இவளைப் பார்த்த சில்பா அவளின் மண்டையில் கொட்டி ஏய் எருமை மாடு என்னடி நினைத்துக் கொண்டு இருக்கிறாய்? நேற்று தூங்கித் தொலைத்தாய். இன்று எதுக்கு வெளியே பார்த்து கத்திக் கொண்டு இருக்கிறாய்?
தேவ் ஆனந்த் என்ன அங்கே சத்தம். பாடம் கவனிக்கப் பிடிக்கவில்லை என்றால் மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் வெளியே போய் நின்று கொண்டு பொழுதுக்கும்
மரத்தைப் பார்த்து பேசுமா என்று கூறிவிட.
அவனின் கூற்றில் மொத்த வகுப்பறையுமே சிரித்து விட. கூடவே இவளும் சிரித்து விட்டாள்.
கொஞ்சம் மாச்சும் சொரனை இருக்குதா? இவளைத் தான் வைச்சு செய்கிறார். அதையும் மீறி சிரிக்கிறாள் சில்பா எனக்கு என்னமோ? இவளைப் பார்த்து பயமாக இருக்கிறது. இந்த வகுப்பில் தானே சீனியர் அக்கா போன வருடம் தூக்கு மாட்டி செத்துப் போய் விட்டாங்க.
ஆமாண்டி அவுங்க பேர் கூட தேன் என்று தான் தொடங்கும்.
ஒருவேளை இவள் மேல் ஆசைப்பட்டு இறங்கி விட்டாங்களோ? என்று இருவரும் இவளுக்குப் பயத்தைப் போட,
உண்மையில் தேனருவி அப்படீனா இந்த நிழல் தான் அந்த அக்காவா? எதனால் இங்கே தூக்கு மாட்டி செத்து இருப்பார்கள் என்று தலைக்கு மேலே சுற்றிக் கொண்டு இருக்கும் மின் விசிறியைப் பார்த்தவள் கண்ணில் அங்கே ஒரு பெண் நாக்கை வெளியே தள்ளிக் கொண்டு தொங்குவது போல் தான் தோன்றியது.
இவளின் பயத்தை பார்த்து அடியே லூசு எது சொன்னாலும் நம்பி விடுவாயா? நாங்க சும்மா தாண்டி சொன்னோம். நீ உடனே அதை நிஜம் என்று நம்பி விட்டு மறுபடியும் ஏதாவது கேணத்தனம் செய்து வைக்காதே தோழிகள் இருவரின் கூற்றில் பயம் நீங்கி இருந்தாலும்.. நான் பயந்து விட்டது இவர்களுக்குத் தெரியாமல் கெத்து காட்டி விடும் நோக்கில் நான் எதுக்கு பயப்படுகிறேன் வாயில் விரல் வைத்து சூப்பிக் கொண்டு இருக்கும் சின்னப் பாப்பாவா?
ஒத்தையாளா பத்து பேய் வந்தாலும் சமாளிக்க என்னால் முடியும்.
ஓஹோ அப்படியா? கொஞ்சம் தலையைத் திருப்பி உன் பின்னால் இருப்பவரைப் பார்த்து இதே டயலாக் சொல்லு.
இன்னும் எத்தனை பேர் வந்தாலும் எனக்கு எந்த பயமும் இல்லை என்று சொல்வதற்கு எனக்குத் தையரியம் இருக்கிறது.
எவ அவ என்று தெனாவட்டாக சொல்லிக் கொண்டு திரும்பியவள் முகம் தொங்கிப் போச்சு தனக்கு முன்னால் கையில் வீச்சருவாள் மட்டும் தான் இல்லை அய்யனார் மாதிரி நின்று கொண்டு இருந்த வாத்தியைப் பார்த்து பேச வந்த நாக்கு மேலே பச்சக் என்று ஒட்டி விட..
தேவ் ஆனந்த் புருவ உயர்த்தவும், போச்சு டோட்டல் தேனருவி அவுட். அவள் கண்சிமிட்டாது அவனையே பார்த்து வைக்க. கடைசியில் அவனுக்குத் தான் ஒரு மாதிரி ஆகி விட்டது.
அனைவரும் பார்க்கிறார்கள் என்பதை மறந்து இவள் பொம்மை மாதிரி நிற்கவும் சில்பா அவளோட காலை மிதித்தாள்.
அதில் சுயதிற்கு வந்தவள் அப்போது தான் தன் முன்பு நிற்கும் வாத்தி பார்த்து எச்சில் விழுங்கினாள்.
அவன் முறைத்துப் பார்க்கவும் தான் நேற்று போல் எதுவோ? செய்து விட்டோம் என்று பயத்தில் அவள் செய்ததை மறந்து விட்டு இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா? என்று பார்த்து வைக்க.
உனக்கு என்ன ஆச்சு நேற்றிலிருந்து நீ சரியில்லை. உடம்புக்குச் சரியில்லை என்றால் விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டியது தானே.
முடியாமல் வந்து விட்டு பாடத்தையும் கவனிக்காமல் இப்படி பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்து கொண்டு நீ எதுக்கும் நாளைக்கு உன் அம்மாவை அழைத்து வா இது சரியில்லை என்று சொன்னான்.
தேனருவி அழுதே விட்டாள் சார் இந்த ஒரு தடவை மட்டும் எக்ஸ் யூஸ் கொடுங்கள் நான் இனி மேல் கவனமாக இருக்கிறேன் என்று கூறியவள் எங்கம்மா வேண்டாம் சார் என்று கெஞ்சுபவளைப் பார்த்து முறைத்தவன். சரி உன் அம்மா போன் நம்பர் கொடு நான் அவர்களிடம் பேச வேண்டும் என்று வாங்கிச் சென்று விட்டான்.
என்னடி போன் நம்பர் கேட்டதும் கொடுத்து விட்டாய். நானும் கூட உன் அம்மா நம்பர் கொடுப்பாய்
என்று பார்த்தால், எதுக்குடி உன்னுடைய இரண்டாவது சிம் நம்பர் சொல்லி இருக்கிறாய்? சாருக்குத் நீ சீட்டிங் செய்தது தெரிந்தது அவ்வளவு தான் வாய்ப்பே இல்லை.
நான் என்ன லூசா என் அம்மா நம்பர் கொடுத்தால் அவங்க இருக்கிற காண்டுல நான் வீட்டில் செய்யும் சேட்டைகளை வாத்தியிடம் வத்தி வைத்து விட்டால் பிறகு நம் வாத்தி என்னை பிடில் வாசித்து விடும்.
நீ என்ன இசைக்கருவியா? அவர் உன்னை வாசிக்க. அப்போ நீ நம்ம சாருக்கு ரூட் விடுகிறாயா?
தேனருவிக்கே இன்னும் சரியாகத் தெரியவில்லை அதைப் பற்றி கேட்டால் அவள் என்ன சொல்வாள் அது தான் போடி உங்களுக்கு விவஸ்தையே இல்லை.
எது எங்களுக்கு விவஸ்தை இல்லையா? நீ தான் கண்ணைச் சிமிட்டாமல் சார் முகத்தைப் பார்த்து ஜலக்கிரீடை விட்டு கொண்டு இருந்தாய்? அது வகுப்பில் இருப்பவர்கள் அனைவரும் பார்த்தார்களே. அப்போ மட்டும் விவஸ்தை எங்கே ஓடிப் போச்சு என்று தேனருவியின் குனிந்த தலையை நிமிர்த்தி கேட்டாள் மலர்க்கொடி.
நீ பெரிய ஆள் தாண்டி விஸ்வாமித்திரர் மாதிரி இருந்த சாரையே மனசுக்குள் மந்திரித்து
விட்டு இருக்கிறாய்? அது தான் அவரும் ரொமாண்டிக் ஹீரோ போல் உன்னைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். உன் அருகில் வந்து நின்று கொண்டு புருவத்தை தூக்குகிறார். நீ அதில் சொக்கிப் போகிறாய் என்று அவருக்குத் தெரிந்து விட்டது. நீ என்ன செஞ்சாலும் அவருக்கு உன் மேல் கோபமே வரவில்லை. அப்படி என்ன விசயம் போகுதோ?
அவரின் நிழலாக இருக்க உனக்கு ஆசை வந்து விட்டதோ???
தொடரும்...
தேவ் ஆனந்த் போன் செய்யும் போது தேனருவி செய்யும் தில்லாலங்கடி..