New member
- Joined
- Jul 12, 2025
- Messages
- 23
- Thread Author
- #1
பரிமளத்தின் குன்னூர் எஸ்டேட்
பரிமளத்திற்கு பயவுணர்ச்சிகள் அதிகரித்தது. அதன் காரணம் புலப்படவில்லை.
தன் மகன் அதிவீரனை குறித்து பயம் வந்தது. ஏனோ அவள் திரும்ப காட்டுக்குள் போகவே இல்லை.
தன் கணவனிடம் எதையும் மறைத்தது இல்லை . இந்த லாக்கெட்டை மறைத்தது அவளுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது . அதிவீரன் தான் பெரியவனாகி விட்டானே இனிமேலும் யார் உரிமை கொண்டாடி வருவார்கள் . அந்த ராக்கெட்டில் உள்ள புகைப்படத்தை காண்பித்து விடலாமா என்று பலமுறை யோசித்து இருக்கிறாள் .
இப்போதும் அதையே யோசிக்க .
அதிவீரன் உள்ளே வந்தான்.
அம்மா அம்மா என்று இருமுறை கூப்பிட்டான் .
ஏதோ பலத்தை யோசனைப் போல இருக்கு புள்ள கூப்பிடுறது கூட காதில் கேட்கலையா என்று வரதன் . அவளின் தோளை பற்றி கொண்டு சொல்லும் போது விழித்தாள்.
என்னம்மா யோசனை ……..........
ஒன்றுமில்லையடா …….....
சில சமயம் அம்மாவை பன்மையில் அழைப்பான் . நான் இப்பொழுது மிகுந்த உற்சாகத்தில் இருப்பதால்
பரிமளம் என்று கூப்பிட்டான் .
என்ன என்பது போல் பார்க்க
ஒரு தூக்கு நிறைய சுத்தமான மலைத்தேனில் ஊறிய பலாச்சுளைகளை கொடுத்தான்.
வேறொரு பாத்திரத்தில் தினை உருண்டைகள், பலகாரங்களும் இருந்தது.
மலைப் பழங்களையும் கொடுத்தான்.
- அம்மா,அப்பா உங்க இரண்டுபேருக்கும் தேனில் ஊறிய பலாபிடிக்குமே” என்று சொல்ல
அம்மாச்சியும்,, தாத்தாவும் அங்கு வர
என்ன பேராண்டி எங்களுக்கு பலாசுளை கிடையாதா””"என்று கேட்க,
கிடையாது. உங்க இரண்டு பேருக்கும் தர மாட்டேன். உடம்புல அவ்வளவு சுகரை வைத்துக்கொண்டு, பலா சுளை அதுவும் தேனில் ஊறிய பலா வேண்டுமோ.
அம்மா இவர்களுக்கு கொடுக்காதீர்கள் என்று அக்கறையாக சொல்ல,
ஒன்று கொடுக்கலாம் . ஒன்றும் பண்ணாது.
நான் டாக்டரரா.. இல்ல நீங்கள் டாக்டரா
அம்மாச்சி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டார்.
சரி சரி. ஒன்றே ஒன்று மட்டும் சாப்பிடுங்கள் ஆனால் அதற்கு நீங்கள் ஒரு KM.அதிகமா நடக்கவேண்டும்:
பரிமளம் அவர்களுக்கு ஒரு கிண்ணத்தில வைத்துக் கொடுக்க அதை அப்படியே தேன் சொட்ட சொட்ட ஒன்றை மட்டும் எடுத்து உண்டார்கள்.
ஆஹா…ஆஹா….என்ன சுவை. என்ன சுவை என்று சிலாகித்து பேச பரிமளமும், வரதனும் சாப்பிட்டுவிட்டு, வேலைக்காரர்களும் உண்டு மகிழ்ந்தனர்.
பரிமளம் அவனிடம்1”"” உனக்கு யார் கொடுத்தா எதாவது பேஷண்ட் வீட்டில் விசேஷமா.இல்ல சீனியா டாக்டர் கொடுத்ததா..என்று கேட்க
இல்லம்மா. என் நண்பன் வீரவேங்கையனின் அம்மா கொடுத்தது.
அவன் எங்க இருக்கிறான். நீ சொல்ற ஆனால் உன் நண்பனை எங்களுக்கு அறிமுகபடுத்த வில்லையே.
அவர்கள் எஸ்டேட்டில் விளைந்ததா
என்று பரிமளம் கேட்க
அது எஸ்டேட் இல்லை: வேட்டுவ மலை. பகுதியை சேர்ந்தவன்.
அது…என்று இழுக்க
வரதன் அவளை ஆழமான பார்வை
பார்த்து அதுதான் என்பதுபோல் தலையாட்டினான்.
கொல்லிமலையிலிருந்து குன்னூருக்கு வரும் வழியில் ஒரு காடு இருக்கிறது அதன் உள்ளே இருக்கும் மலைகிராமா என்று அதிர்ச்சியுடன் ,
நீ ஏன் அந்த காட்டுக்குள்ளபோன… என்று கோபமாக கேட்க,
காடா…இல்லையே.
வரதன் அவளிடம் இப்போது அந்த காட்டுவழியாக ஊருக்குள் போக முடியாது. வேலி போட்டு அடைத்துவிட்டார்கள்.
அன்னூர் வழியாகத்தான் அந்த வேட்டுவ மலைக்கு போக வேண்டும் .
எங்களிடம் சொல்லாமல் ஏன் அங்கு போனாய் .
நான் அது என் நண்பனோட ஊரு .
திருவிழாவுக்கு கூப்பிட்டான் . இதுல என்ன இருக்கு அவன் ஊருக்கு போனா என்ன .
அங்கு யாரைப் பார்த்தாய் .
ஊரில் உள்ள அனைவரையும் தான் பார்த்தேன் . அப்புறம் அம்மா.. வேங்கையனின்அம்மா..உங்களைப் போலவே மிகவும் அழகாக தெய்வீக அம்சத்துடன் இருக்கிறார்கள்.
இதைக் கேட்டதும், உள்ளே பூகம்பம் வெடித்தது போல் இருந்தது.
ஐய்யோ…என்றாள்.
என்னவென்று எல்லோரும் அவளையே பார்க்க: அவள் சாப்பிட்ட பலாசுளை கசந்தது.
தன் ஆசை மகனிடம் கோபமாக ‘“. என்னை கேட்காமல் வெளியே போற
அளவுக்கு ஆளாயிட்ட. போகும் போது என்னிடம் ஒரு வார்த்தை சொன்னாயா.
அந்தளவுக்கு நான் உனக்கு வேண்டாதவள் ஆகிட்டேனா. அம்மாவை மறந்து விட்டாய் “” என்று கோபமும் அழுகையுமாய் சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்று விட்டாள்.
இவனுக்கு .தலையும் புரியல. வாலும் புரியல.அம்மா எதுக்கு இதுக்கு போய் இவ்வளவு ரியாக்ட் பண்ண வேண்டும். நான் என்ன அப்படி தப்பு பண்ணிவிட்டேன்.”” என்று தன் தந்தையை பார்க்க.
விடுப்பா. அம்மா எதோ மூடில் இருக்கிறாள்.
சரிப்பா நான் எஸ்டேட் தொழிலாளர்களை பார்த்துவிட்டு வருகிறேன்.
தொழிலாளர்களக்கு, காய்ச்சல்) தலைவலி க்கெல்லாம் மாத்திரை கொடுத்து விட்டு வருவான்.
எதாவது பெரிய நோய்க்கான அறிகுறி இருந்தால், கோயம்புத்தூரில்தான் படிக்கும் கல்லூரி மருத்துவ மனைக்கு வரச் சொல்வான்.
எல்லோரையும் நேசிப்பான்.எல்லோராலும் நேசிக்கவும் படுவான்.
அவன் போன பிறகு, வரதன் பரிமளத்திடம், என்ன சின்னபுள்ளையாட்டம் பண்ற..நீயே காமிச்சிகொடுத்துவிடவ போல இருக்கே.
அந்த மலையில் உள்ளவர்கள் குழந்தைதான் இவ ன் என்ற நினைப்பு போகாதா. நானும் எத்தனையோ தடவை சொல்லிட்டடேன். வழியில் யாராவது கூட விட்டுச்சென்று இருக்கலாம். ஏன் அந்த மலையில்தான் அவன் பெற்றோரகள் இருக்கிறார்கள் என்று தெரிந்துக்கொண்டியா…….........?
என்று கேட்க அதிர்ச்சியாக அவரை பார்த்தாள்.
நீ இப்படி ஓவரா ரியாக்ட் பண்ணினா அவன் யோசிக்க ஆரம்பித்துவிடுவான் -
“எனக்கு பயமா இருக்குங்க. உண்மை தெரிந்து என்னை விட்டு போய் விட மாட்டான்ல்ல. அப்படி எதாவது நடந்தது என்றால் என்னால் உயிரோடு இருக்க முடியாது.”
‘“அடச்சீ… என்ன பேச்சு பேசற. முதலில் இந்த அவநம்பிக்கையை விடு.
உன் வளர்ப்பு. பெற்ற அம்மாவுக்கு மேலே பாசத்தை உண்மையா கொட்டி வளர்த்து இருக்க .பெற்ற அம்மாவுக்கு இவனை வளர்க்கும் பாக்கியம் இல்ல.
ஆண்டவன் அதை உனக்கு கொடுத்து இருக்கிறான்.
அதை தக்க வைப்பது உன் கையில் இருக்கு.’”
இனிமேல் எங்கப்பன் குதிருக்குள் இல்ல” என்பதுபோல் நடந்துக்கொள்ளாதே” என்று சொல்லி,
அழும் கண்ணீரை துடைத்து விட்டு .அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டார்.
இவளுக்கு தான் மறைந்த உண்மை மனதை போட்டு அறுத்தது.
இவ்வளவு கரிசனமா பேசறார். எப்பேர்பட்ட மனிதர். ‘இவரிடம் போய் உண்மையை மறைத்தேனே.
வெட்கி அழுதாள்.
அதி எங்கங்க.
அவன் எஸ்டேட்க்கு போய் இருக்கிறான்
அம்மா,அப்பா……?
அவர்கள் பலா சுளையை அவனுக்கு தெரிந்து ஒன்று, தெரியாமல் இரண்டு சாப்பிட்டு விட்டு, பயந்துபோய் வாக்கிங் போய் இருக்கிறார்கள்.
‘’.எதுக்கு கேட்கிற”
‘iஎன்னை மன்னிச்சிடுங்க”i
“இதுக்கு போய் மன்னிப்பு கேட்பார்களா… என்று அவனிடம்,
தயங்கிக் கொண்டே
“நான் ஒரு தப்பு பண்ணிட்டேன் “
என்றாள்.
“தப்பா… அதுவும் எனக்குத் தெரியாமலா
பண்ண மாட்டியே..”
அதைக் கேட்டதும் கண்ணீரோடு தலை குனிந்தாள்.
எழுந்து போய் தன் வார்ட்ரோபை
திறந்து .தன் துணிகளை ஒதுக்கி,
அடியில் ஒரு ஜீவல் பாக்ஸில்
வைக்கப்பட்டு இருந்த அந்த பென்டென்ட் செயினை கொண்டுவந்து காண்பித்தாள்.
“வாவ் …என்ன அற்புதம் ரொம்ப அழகா இருக்கு. நீ போட்டு நான் பார்த்ததே இல்லியே..”
“நான் இதை போடவும் மாட்டேன். போடவும் கூடாது. “
“பின்ன ஏன் வாங்கின…?”
இந்த நகையை வாங்கியதற்கா மன்னிப்பு கேட்ட… இந்த மாடலை பார்த்தால் பழைய ராஜா, ராணி காலத்து நகை போல் தெரிகிறது. இதைத்தான் மறைத்தேன் என்றாயா…? என்று கேட்க,
இல்லை என்று தலையாட்டினாள்.
பின்ன என்பதுபோல் அவர் பார்க்க .
இது…இது...... என்று சொல்ல தயங்கினாள்.
சொல்லுமா..
“நம்ம அதிவீரனை காட்டில் கண்டெடுத்தோமே “…
‘ஆமாம்.’
“அப்போது ஒரு வெள்ளை துணியில் சுற்றி வைக்கப் பட்டு தானே இருந்தான்.
அந்த துணிக்குள் இந்த நகை இருந்தது.”
“ஆ…. இத்தனை வருடங்கள் ஆகியும் நீ சொல்லலியே!!!!.
“என்னை மன்னித்து விடுங்கள்.”
“அப்படியே மறைத்து வைத்து விட்டாயா. “
அந்த லாக்கெட்டை திறந்து பார்த்தார்.
அழகான யுவதியும் யுவனும் இருந்தனர்.
இவர்கள் தான் பெற்றோராக இருக்க வேண்டும்.
“பாவி. அப்போதே சொல்லி இ|ருந்தால் இவர்களை தேடி இருக்கலாம்.. தாயையும் சேயையும் பிரிச்சிட்டியே”
“அது சரி. உனக்குத்தான் குழந்தை ஆசை பேராசையாக இருந்ததே.
இந்த பாவம் நம்மை சும்மா. விடுமா .”
அதிவீரன் வேட்டுவ மலைக்கு போனான் என்ற சொல்லும் போது நீ ஏன் அவ்வளவு கோபப்பட்ட ……………?
பயந்த……..........?
பேசாது இருந்தாள்.. கண்ணீர்மல்க தரையை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
சொல் என்று அதட்டினான்.
‘அங்கு இவளை பார்த்தேன் என்று கையை சுட்டிகாட்டினாள்.
அடிபாவி…இது எப்போ …………?
அதிக்கு 5 வயதாக இருக்கும் போது ‘’அப்போது அம்மாவுடன் போனேன்.அங்குதான் தான் அவளைபார்த்தேன்.
அப்பவும் நீ சொல்லல. அவளை பார்க்கும் போது உனக்கு மனசாட்சி உறுத்தலயா.
“என்னால் அதிவீரனைவிட்டு தரமுடியாது.
அவ வயிற்றில் சுமந்தாளா என்று தெரியாது. ஆனால், நான் அவனை நெஞ்சில் சுமந்தது உண்மை
அதுவுமில்லாமல் அவளை அம்மா என்று அழைக்க வேறெரு குழந்தை இருந்தது.”
“அடியேய்.. நாம ஆயிரம் நியாயம் சொல்லலாம். ஆனால்உண்மை ஒரு நாள் வெளியே வந்து தீரும்.
அதற்குள் மனதை திடப்படுத்திக் கொள்.”
“இதற்கெல்லாம் நானும் ஒரு காரணம் ஆயிட்டேன். காட்டில் குழந்தையை பார்த்தவுடன் நேரே போலீஸ் ஸ்டேசன் போய் இருக்கணும்.. அவர்கள் அனாதை ஆசிரமத்தில்தானே விடுவர்கள். அதற்கு பதில் நாமே சீறும் சிறப்புமாக வளர்க்கலாம் என்று நீ சொன்னதை ஏற்றுக்கொண்டேனே.
இவர்களை பார்த்தால் பெரிய இடத்து பிள்ளைகள் போல் இருக்கிறார்கள்.
என்ன வில்லங்கம் வரப்போகுதோ.”
என்று வரதன் கவலைப்பட்டான்.
அந்த நகையை வைத்த இடத்தில் வைத்து விட்டாள்.
கண்களை துடைத்துக்கொண்டு,’ “இதோ பாருங்க. உங்களிடம் இந்த லாக்கெட்டை மறைத்துவிட்டேனே என்ற உறுத்தல் மட்டும் தான் எனக்கு இருந்தது.
இவன் என் மகன்.எனக்கு சொந்தமானவன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இவன் பசிக்கு அழுதபோது நான் என் பசியை மறந்து இவனுக்கு அழுதூட்டி, உடம்பு குணமில்லாமல் இருந்த போது|இவனுக்காக இராப்பகல் பாராது கன் முழித்து பார்த்துக்கொண்டது நான். இவனை படிக்க வைக்க, நான் தூங்காமல் என்று சகலமும் இவனே கதி என்று இருந்து இருக்கிறேன். “
“இவளை பெற்றவளின் பந்தம் 10 மாதம். ஆனால், நான் அவனை 25 வருடங்கள் சுமந்திருக்கிறேன். இன்னும் சுமப்பேன்.”
‘தயவுசெய்து இந்த லாக்கெட் விடியத்தை யாரிடமும் கூறவேண்டாம்.”
அவளை பரிதாபமாக பார்த்தான்.
உண்மை ஒரு நாள் வெளியே வரும் என்றுகூட தெரியாமல் இருக்கிறாளே.
என்று மனதில் எண்ணிப்படி போய் விட்டான்
சிறிது நேரத்திலே அதிவீரன் வந்தான்.
அம்மா…என்று அழைத்துக்கொண்டே வந்தான்.
இவளும் முகத்தை அல ம்பிக்கொண்டு பளிச்சென்று சிரித்துக்கொண்டு வெளியே வந்தாள்.
“அம்மா என் மீது கோபம் போச்சா.”
“கோபமா உன் மீதா இல்லையடா.
காட்டில் கொடிய விலங்குகள் இருக்குமே என்று பயந்தேன்..அவ்வளவுதான்.”
உன் அப்பா தெளிவுபடுத்தி விட்டார் -
சரி. சாப்பிட வா
“வேண்டாம்மா. மதியமே ஒரு பிடி பிடித்துவிட்டேன். “
“சரி பாலாவது தருகிறேன். குடித்துவிட்டு தூங்கு” என்றாள்.
இவன் வேங்கையனின் தாயை பார்க்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்தாள்.
தொடரும்.