New member
- Joined
- Jul 12, 2025
- Messages
- 23
- Thread Author
- #1
பாகம்.. 11.
தனபாலை பற்றி பார்ப்போம்.
சிவகாமியும், செல்வனும் உயிரோடு இருக்கிறார்களா . இல்லையா என்ற தெரியாத பட்சத்தில் ‘ உடல்களும் கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில்,
வெறிக்கொண்டு திரிந்தான்.
ஜமீன் ஈச்சனார் காலத்திலிருந்தே ஒற்றை பிள்ளையுடன் தான் அந்த வம்சம் ஆளப்பட்டு வந்தது.
ஈச்சனாருக்கு அடுத்து கார்மேகம் , அடுத்து அவரது மகன் செல்வன்…… இப்படித்தாள் அந்த வம்சம் இருந்தது.
வாரிசுகள் யாவரும் தத்தம்கென்று சிறப்பான தகுதிகளிலும், திறமைகளிலும், மற்றும் நல்ஒழுக்கத்தாலும் தன் வம்சத்தை செழிக்க செய்துயிருந்தனர்
செல்வன் தன் மனைவி மீது கொண்டமோகத்தால் புத்தி தடுமாறி. தனபாலின் சூழ்ச்சியால் படுகுழியில்வீழ்ந்தான். அவனின் நிலை பரிதாபத்திற்குரியது.
தர்மம் தோற்றது. அதர்மம் வென்றது என்று மக்கள் பேசிக்கொண்டனர்.
ஆனால், அதர்மம் வென்றதாக வரலாறு இல்லை. ஒரு மாயத்தோற்றம் ஜெயித்தது போல்இருக்கும்..
இறுதியில் தர்மமே வெல்லும்’”" என்றும் ஒருசாரார் பேசிக்கொண்டனர்.
தனபால் தன் நண்பன் பூபதியை வரவழைத்தான்.
பூபதிக்கு தனபால் வயது இருக்கும். கொடூர கரடு முரடான முகம். கட்டுமஸ்தான அடியாள் தோற்றம் - அவனிடம் ஒரு வேலை சொன்னால் கச்சிதமாக முடிப்பான்.
தன் வலது கரம் போன்று இருக்கும் பூபதியிடம் எல்லோரும் இறந்துபோன செல்வனை பற்றியே பேசுகின்றனர்.
“இந்த மூத்த வழக்கறிஞர் ராமசுப்பு வேறு ரொம்ப கறாராக இருக்கிறார். என்னை ஒரு துச்சமாகவே மதிப்பது இல்லை.
எதாவது பண்ணனும்டா.”
“போட்டு தள்ளிடலாமா.” என்று பூபதி சர்வ சாதாரணமாக கேட்க,
யாரை…?
வக்கீலையா……….? என்று தனபால்
அதிர்ச்சி காண்பித்தான்.
ஆமாம்டா.
“அட போடா. என் ஆளுங்க கிட்ட ஒரு விஷயத்தை முடிக்க சொன்னேன்.
ஏழரையை கூட்டி டாங்க.
இவனுங்களை நம்ப முடியாது. சரியான தீனி பண்டாரங்க. வேறு யாராவது வெளியூர் காரனை வச்சி தான் முடிக்கணும்.”
“உனக்கு அவசரம். நான் மலேசியா போய் இருந்தப்ப, உன் ஆளுகளை
வச்சி முடிக்கலாம் பார்த்த. அது சொதப்பிடிச்சி.”
“சரிடா. நடந்துவிட்டது. அதைவிடு. உனக்கு அப்படி யாராவது தெரியுமா.”
“தெரியும். வடநாட்டுகாரன். காரியத்தை கச்சிதமா முடிப்பான்.”
“ஆமாண்டா.. முடிச்சிருவோம். இல்லனா சட்டம் பேசியே நமக்கு ஒன்றும் வராமல் பண்ணிருவான்.”
செல்வன் இருக்கும் போது நாலு காசு பார்த்தேன். ‘’
“பொன் முட்டை இடற கோழியை அறுத்து விட்டோமோ என்று நினைக்கும் போது, ரொம்ப பீல் ஆகுதுடா.”
“ நீ கவலைப்படாத. ரொம்ப தொகையாகும் . அதுக்கு முடியும் இல்ல.”
“அதெல்லாம் முடியும் .”
“அப்ப ரெடி பண்ணி வை . நான் ஆள் செட் பண்ணிட்டு சொல்றேன் .
முடிச்சி விட்டுடலாம் .”
“தாங்ஸ்டா மாப்பிள்ளை .”
“உன் தேங்க்ஸ் வேண்டாம் .
ரொம்ப நாளா கேட்ட ஐட்டம் வேணும் .
அது ரொம்ப காஸ்ட்லி. அதுக்கு ஏற்பாடு பண்ணா போதும்..”
“டேய்………. என்னை என்ன வேலை பார்க்க சொல்ற . பணம் தரேன் நீயே கொடுத்துக்கோ .”
“ வரமாட்டாடா. பெரிய அந்தஸ்துல இருக்கறவன் கூப்பிட்டா தான் வருவா .”
“நீ ஒன்றும் பண்ண வேண்டாம் போன் பண்ணி பேசு . நான் எஸ்டேட் ஓனர் என்று சொல்லு .”
ஈ…. என்று பல்லை இளிச்சுகிட்டு வருவா .
அப்படிப்பட்டவ யாருடா…………?
பெயரை சொன்னான்.
“இது தான் தொழிலா.”
‘இது தொழில் இல்லை .சினிமா ஹீரோயின் அதுதான் இந்த ஆட்டம் .”
தன பால் அவ்வளவாக சினிமா பார்க்க மாட்டான். அதனால் அவனுக்கு தெரியவில்லை .
போட்டோவை காண்பித்தான் .
போனில் போட்டோவை பார்த்ததும் அசந்து போனான்.
“என்னடா..இவ்வளவு அழகு. செம கவர்ச்சியாஇருக்காளே.”
“நம்பிடாதே இது பூராவும் மேக்கப்.
நமக்கு என்ன தேவையோ அது.போதும்.”
“சரிடா. முகூர்த்தத்தை எங்க வைத்துக்கொள்ளலாம்.”
“இந்த ஊர் வேண்டாம்.”
“என் பெண்டாட்டி வசந்தி இருக்காளே. அவளுக்கு இந்த ஊரில் ஏகப்பட்ட மரியாதை. யாராவது பார்த்தால் சொல்லி விடுவார்கள்”.
“பெண்டாட்டி என்றால் அவ்வளவு பயமா “எனது கேலியாக பூபதி கேட்க.
இருக்காதா பின்ன.
“சரி . அதை விடு. அந்த கிழட்டு வக்கீலை எப்படி தீர்த்து கட்ட போற.”
.சொல்றேன்.
சொன்னான்.
நாம மாட்டிக்க மாட்டோம்ல . அவன் எதுவும் சொல்லமாட்டான்தானே.
நீயும் , நானும் டைரக்டா இதில் இன்வால்வ் ஆக மாட்டோம்.
வேறு ஒருவர் மூலமாகத்தான் செய்யப்
போகிறோம்.
சரி. எதுக்கு அந்த ஆளை கொல்லனும் என்று நினைக்கிற “”என்று பூபதி கேட்க,
ரொம்ப லா பாயிண்ட் பேசறான்.
செல்வனின் விசுவாசி. இப்படியே விட்டா இந்த சொத்து முழுவதும், தர்மத்திற்கு போற மாதிரி பண்ணிடுவான்.
மீதி பேரின் வாயை நான் அடைத்து விடுவேன். கிழவன் என்னிக்குமே டேஞ்சர்.
சரி. விடு . நான் பார்த்துக்கிறேன்.
நீ அவளுக்கு போன் பண்ணி பேசிடு. அது முக்கியம்.
உன் காரியத்திலே கண்ணா இரு..முதலில் ராமசுப்பு வேலையை முடி . அப்புறம் நீ அந்த நடிகையோட………. என்று சொல்லி கண் சிமிட்டினான்.
ரொம்ப நாள் ஏக்கம்.
சரி.சரி. புரியுது என்று தனபால் கேவலமாக சிரித்தான்.
மளமளவென்று பூபதி காரியத்தில் இறங்கினான்.
அவனுக்கு தெரிந்த வடநாட்டு அண்டர் கிரண்டு தாதாக்களிடம் விஷயத்தை சொல்ல ,காதும் காதும் வைத்த மாதிரி
வக்கீலுக்கு நாள் குறிக்கப்பட்டது.
பெரும்தொகை கைமாறியவுடன்
மும்பையிலிருந்து இருவர் வந்தனர். இங்கேயே லாரி ஓட்டுனர்கள் போல். தங்கியிருந்து, அவரது நடவடிக்கைகளை நோட்டம் விட்டனர்..
எப்போது வீட்டைவிட்டு கிளம்புவார். எங்கு போவார். திரும்பிவரும் நேரம் என்ன என்பதெல்லாம் நிழலாக தொடர்ந்து கவனித்தார்.
அதற்கான சந்தர்ப்பம் வந்தது.
தனியே காரெடுத்து போகும் சூழ்நிலையை இவர்களே உருவாக்கினார்கள்.
கோத்தகிரியிருந்து தலைகுந்தா விற்கு போகும் வழியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் . யாரும் இரவு போக வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து இருந்தார்கள்.
இவர்களுக்கு அது வசதியாக போய் விட்டது.
வீட்டிலிருந்த ராமசுப்புக்கு போன் வந்தது.
முகத்தில் பதற்றம்.
போன் பேசியவர்கள் விஷயத்தை சொல்லிவிட்டு போனை வைத்தார்கள்.
மறுபடியும் செய்யலாம் . என்றால் நம்பர் இல்லை. மறுபடியும் போன் வந்தது.
இப்போது ராமசுப்பு பதற்றத்துடன் இதோ வருகிறேன். : உடனே வந்து விடுகிறேன்., உடனே தனியே காரெடுத்து கிளம்பினார்.
மனைவியிட்மும் எதுவும் சொல்லவில்லை.
“ வந்து விடுகிறேன். கதவை சாத்திக் கொள் என்று சொல்லிவிட்டு அந்த அர்த்த இராத்திரியில் கிளம்பினர்..
அந்த அம்மாளுக்கு போன் வந்ததும் தெரியாது.
அந்த இரவில் கணவர் தனியே காரெடுத்து போனதும், அவருக்கு கவலையாக போய் விட்டது. அப்படியென்ற அவசரம்…… என்று தவித்தார்.
மறுநாள் காலை சிறுத்தை அவரை குதறிய , அவரின் இரத்தம் தேய்ந்த உறுப்புக்கள் ஆங்காங்கே கிடந்தது.
விடிந்ததும் அதைப் பார்த்த ஊர் மக்கள் ஐயோ… இவர் யாரென்று தெரியவில்லை. ஒருவன் அவரின் காரை பார்த்துவிட்டு , சிறுத்தை கொதறி விட்டு போன கொஞ்சமுகத்தையும் பார்த்து விட்டு இவர் வக்கீல். கோத்தகிரியில் இருக்கிறார். “”என்றதும், போலீசாருக்கு தகவல் சொல்ல போலீசார் வந்தனர்.
அங்கிருந்த மக்களிடம் யார் இதை முதலில் பார்த்தது. என்று கேட்க
உள்ளுர்காரர் ஒருவர் முன்வந்தார்.
“"ஐயா. நான் தான் முதலில் பார்த்தங்க .
உனக்கென்ன இங்க வேலை
நான் காய்கறி வியாபாரி. காய்கள் வாங்க சந்தைக்கு போயிட்டு இருந்தேன்.
எத்தனை மணிக்கு.
6 மணிக்கு தாங்க. இலேசா விடிந்து இருந்தது.
கத்தி கூப்பாடு போட்டு எல்லோரையும் வரவழைத்து விட்டேன்.
அவரது உடல் போஸ்ட் மார்ட்டத்திற்கு அனுப்பப்பட்டது.
காரையும் எடுத்துச் சென்றனர்.
அவரின் வீட்டு கதவை தட்டியதும்,இரவெல்லாம் வராத கணவர் வங்து விட்டார் என்று மகிழ்ச்சியும், கோபமுமாக கதவை திறந்த அந்த அம்மாள் போலீசை பார்த்ததும் பயந்தார்.
திக்கி திணறி என்னவாயிற்று என்று கேட்க
ஸார் இல்லையா என்று கேட்க
அவர் இரவு வெளியே போனார் என்று சொல்ல, அவர்கள் தயங்கி விஷயத்தை சொன்னார்கள்.
அதுவும் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு அவர் அந்த இரவில் போக வேண்டிய என்ன அவசியம் வந்தது என்று போலீசார் கேட்க, அந்த அம்மாளோ மூர்ச்சையானார்.
மூர்ச்சை தெளிவித்த பின், போலீசார் கேட்ட கேள்விகள் எதற்குமே அவரிடம் பதிவில்லை.
போஸ்ட்மார்ட்த்தில் சிறுத்தை தாக்கி இறந்துள்ளார் என்றே வந்தது.
அவருடைய போனும் கிடைக்கவில்லை.
தொடரும்.