• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jul 12, 2025
Messages
23
பாகம்.15.


வீரவேங்கையன் தன் தாய் மைத்ரியுடன் வேட்டுவ மலை படையலுக்கு சென்றான்.



படையலின் போது,நடனம் ஆடிய மைத்ரி ஏனோ அழுதுக் கொண்டே வீட்டிற்கு ஓடினாள்.



அவள் பின்னாலே வேங்கையனும்
சென்றான்.


உள்ளே போய் பார்த்தால், அம்மா தலைகவிழ்ந்து முகத்தை மூடிக்கொண்டு அழுவதைக் கண்டான்.



மகனின் உள்ளம் பதறியது.


தாய் அழுவதைக் காண எந்த மகனுக்குத் தான் பொறுக்கும்.


அம்மா…அம்மா…அம்மா ….



என்று கூப்பிட்டான்.


அவன் அவள் அருகே போனதும், கதறி அவனைக் கட்டிக் கொண்டாள் -



என்னம்மா ஆயிற்று. யாராவது எதையாவது சொல்லிவிட்டார்களா…..?



இனிமேலும் முடியாது”” என்று அரற்றினாள்.


“சொல்லுங்கள் அம்மா.உன் மகன்தானே.எனக்கு உங்கள் கஷ்டம் தெரியக்கூடாதா.. நான் ஒன்றும் சிறுவன் இல்லையே.


கண்களை துடைத்துக்கொண்டாள்.


சொல்றேன் வீரா .’என் மனதில் புகைந்துக்கொண்டு இருக்கும் எல்லாவற்றையும் சொல்கிறேன்.
இல்லையென்றால் அந்த புகைச்சலில் நான் என்னவாவேனோ எனக்குத் தெரியாது “ என்று கதற,


மௌனமாக அவள் முகத்தை உற்று பார்க்க , தான் யார் என்பதை சொல்ல அதிர்ந்தான்.


“என் பெயர் சிவகாமி . மைத்ரி தலைவர் வைத்த பெயர்.”


தன் காதல் கணவர் செல்வனைப் பற்றியும், தனபாலால் வஞ்சிக்கப் பட்டதையும் சொன்னாள் .


கணவர் தன் உயிரை பொருட்படுத்தாது தன் மனைவி தன் குழந்தை உயிரே முக்கியம் என்று இந்த காட்டுக்கு அனுப்பபட்டதையும் சொன்னாள்.


நான் காட்டிற்குள் ஓடினேன். அன்புக் கணவனின் அலறல் சத்தம் கேட்டதும், மயங்கி விழுந்தபிறகு என்ன நடந்தது என்று தெரியாது என்றும் சொன்னாள்.

தன் கணவர் உயிருடன் இருக்கிறாரா என்றும் தெரியாது என்றாள்.



பிரசவித்து . பின் மூர்ச்சையாகி இருந்து வெகு நேரம் கழித்து மூர்ச்சை தெளிந்தேன்.



அவளுக்கு அந்த காட்சிகள் மனதில் அப்படியே பதிந்து இருந்தது.


சுற்றும் முற்றும் பார்த்தார். எதோ ஒரு குடியில் தான் படுக்க வைக்கப்பட்டு இருந்ததை பார்த்தாள்.


பலஹீனமான இரவில் அங்கிருந்த பெண்ணை கூப்பிட்டாள்.


அவள் இவரின் மூர்ச்சை தெளிந்தற்காக மகிழ்ச்சி அடைந்து தலையை ஆதரவாக கோதினாள்.


நான் எங்கு இருக்கிறேன் என்று கேட்டு, தன் வயிற்றை தடவிப்பார்த்தாள்.



குழந்தை எங்கே என்றாள்.


அங்கிருந்தோர் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.


தயவு செய்து சொல்லுங்கள். என் குழந்தை எனக்கு வேண்டும்.


பெண்டிர் தயக்கத்துடன், குழந்தை பிறந்ததும் இறந்து விட்டது .
நீங்கள் மூர்ச்சையாகி விட்டீர்கள் .
அங்கள் குல வழக்கப்படி இறந்த குழந்தையை வைத்திருக்கக் கூடாது .
அதனால்…….....


ஐயோ என்று அலறினாள் .


நான் என்ன பாவம் பண்ணினேன் .
உயிருக்கும் மேலாக நேசித்த கணவனை இழந்தேன் .
இப்பொழுது என் குழந்தை .
நான் ஒரு அபாக்யவதி . கடவுளே என்னையும் கொண்டு போய்விடு என்று கதறினாள்.


அதைப் பார்த்த பெண்டிரும் கண் கலங்கினர்.


அப்போது குழந்தையின் அழுகுரல் கேட்டது.


ஆர்வமாக சுற்று மற்றும் பார்த்தாள் .


அப்போது பிறந்து இரண்டே நாளான ஆண் குழந்தையை இவள் அருகில் வைத்தனர் .


தாய்மை பொங்க. தன் குழந்தையோ என்று பார்த்தாள்..


பெண்டிரில் கங்கா என்றவள் . ‘“இவளின் தாய் பிரசவித்த பின் ஜன்னி கண்டு இறந்து போனாள்.
தகப்பனும் பாம்பு கடித்து இறந்தான் .


மனதை தேற்றிக் கொண்டு, அந்தக் குழந்தையை கையில் ஏந்தினாள். பிறந்தவுடன் இந்த குழந்தை இவ்வளவு துக்கத்தை அனுபவிக்க வேண்டுமா? என்று எண்ணி தன் துக்கத்தை தூர போட்டாள் .


அழும் குழந்தைக்கு தன் தாய்ப்பாலை கொடுத்து மகனாக ஏற்றுக் கொண்டாள்.



இதையெல்லாம் அம்மா சொல்ல, சொல்ல , அந்த மகன் நானா என்று கேட்டான்.

‘ஆமாம்..என்றதும்,


அவளின் காலை பற்றிக் கொண்டு கதறினான் .


இவ்வளவு கொடுமை தங்களுக்கு நடந்தும், என்னை எங்கோ காட்டுவாசிக்கு பிறந்தவனை மகனாக ஏற்று என்னை வளர்த்து உள்ளீர்களே அம்மா” என்று கதற


நீ என் மகன். பெற்ற பிள்ளை தான் எமனுக்கு பறி கொடுத்தேன். உனக்கு என் உதிரத்தை பாலாக்கி கொடுத்தேன். நீயும் என் மகனே” என்று சொல்லும் போது தலைவர் ருத்ரன் வந்தார்.


மரியாதையுடன் எழுந்து நின்றாள்.

அவளை அமர சொல்லி, வேங்கையனையும் அமரச் சொன்னார்.

“அம்மா சிவகாமி. உனக்கு உண்மை சொல்லும் நேரம் வந்து விட்டது.”


“உன் கணவர் உயிருடன் இருக்கிறாரா என்று எனக்குத் தெரியாது. ஆனால்…ஆனால் …. என்று சொல்லி நிறுத்த ‘


அவர் என்ன சொல்ல போகிறார் என்று நெஞ்சை கையில் பிடித்துக் கொண் டு அவர் சொல்லப் போவதை கேட்டாள்.



“நீ அன்று காட்டுக்குள் ஓடி வந்த போது, சிவகாமி என்று உன் கணவனின் அபயக்குரல் கேட்டு மயங்கி விழும் போது, உன்னை ஒரு கரம் தாங்கி பிடித்தது அல்லவா.



அவர் வேறு யாரும் இல்லை.


சித்தர் பரம் ஜோதி தான்.”


அவர் அங்குள்ள மலைஜாதி
பெண்களிடம் ஒப்படைத்து, அவளின் பிரசவத்தை பார்க்க சொன்னார்.


மலைஜாதி பெண்களில் கங்கா என்பவள் அவளை ஆதரவாக தடவி கொடுத்து, குலதெய்வமான முருகனின் பாடங்களை பாடியும் பிரசவத்தை எளிதாக்கினாள்.

அவர்கள் பிரசவம் பார்ப்பதில் கை தேர்ந்தவர்களாக இருந்தனர்.

“நீ ஒரு ஆண் மகவை
ஈன்றெடுத்து மயக்க முற்றாய்.


சித்தர் என்னிடம் நீ யார் என்பதைக் கூறி, கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றார்.”


நானும், அவருக்கு பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதியளித்தேன்.


தாயும், மகனும் ருத்ரன் சொல்வதைக்
கவனமாக கேட்டனர்.


இருவர் மனதிலும் குழந்தை என்னவாயிற்று என்பதிலே இருந்தது.


அவர்களை பார்த்துக் கொண்டு தொடர்ந்தார்.


“சித்தர் பிறந்த குழந்தையை தன் கையில் ஏந்திக் கொண்டு விடுவிடுவென்று நடந்து போய் விட்டார்”.


“ஐயோ… அப்படியென்றால் என் குழந்தை உயிரோடு இருக்கிறதா."என்று மகிழ்ச்சி பொங்க கேட்டாள்.



ருத்ரன் தலையசைத்தார்.


மகிழ்ச்சியில் எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது.



பிரசவித்த பின், தூரத்தில் என் குழந்தை யை யாரோ தன் கைகளில் ஏந்திக் கொண்டு போவதை பார்த்தேன்.
என் காதில் உன் மகன் அம்சமாக வளருவான் என்ற குரல் அசரீர யாக கேட்டது. நான் மயக்க முற்றேன்.” என்று சொன்னாள்.


“”எங்கோ என் மகன் உயிரோடு இருக்கின்றான். அது போதும் எனக்கு..”
என்று வேங்கையன் தோளை பற்றி உலுக்கி சொன்னாள்..


ஆமாம் அம்மா. உங்கள் மனதிற்கு இனி எல்லாம் நன்றாக இருக்கும். உங்களை ஒன்று சேர்ப்பது தான் நான் உங்களுக்கு செய்யும் கைமாறு.


“பெரிய வார்த்தை யெல்லாம் சொல்லாத. நீ என் மூத்த மகன். ‘iஎன்று சொல்லி ஆதரவாக அவன் தலையை தடவி கொடுத்தார்.


‘“அந்த பொறுப்பில் தாம்மா நானும் இதை சொல்கிறேன்”. என்று சொல்ல ருத்ரன் அவனை ஆசிர்வதித் தார்.


ருத்ரனை பார்த்து “அப்பா சித்தர் யாரிடம் குழந்தைய கொடுத்தார் என்று தெரியுமா. “ என்று அவள் கேட்க,


‘“அது தெரியாதும்மா. ஒன்று மட்டும் புரிந்தது. தாய்க்கும் மகன் உயிருக்கு ஆபத்து என்று மட்டும் புரிந்தது. “


‘அதனால் தான் உன்னிடமிருந்து உன் மகனை பிரித்தார்.

அதற்கேற்றார் போல் உன்னத் தேடி பலர் வந்தனர். அவர்கள் வரும் போதெல்லாம் நாங்கள் உன்னை ஒளித்து வைத்ததும் அதற்குத்தான்.’”



ஆமாம். என்று தலையாட்டினாள்.



வேறு எங்கோ நல்லவர்களிடத்தில் வளர்கின்றான் என்று மட்டும் உறுதியாக சொல்வேன்.


காலம் கனியும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள்.”என்று ருத்ரன் நல்வாக்காக சொன்னது அவள் மனதிற்கு இனிமை சேர்த்தது.


அவளுக்கும் புரிந்தது. அரண்மனையில்
இருந்தால் தனபால் ஆட்களால் கொல்ல பட்டு இருப்போம். தப்பிப்பதற்கும் இடமில்லை. சித்தரின் மகிமையே மகிமை என்று. கிழக்கு திசை நோக்கி கையெடுத்து கும்பிட்டாள்.


. தன் கணவரும் எங்காவது உயிருடனே இருப்பார் என்று அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது.


செல்வன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா .என்று இனிவரும் தொடரில் காணலாம்.




தொடரும்
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top