New member
- Joined
- Jul 12, 2025
- Messages
- 23
- Thread Author
- #1
நிழலாக இருந்த ஒளி.
5.
செல்வன்,சிவகாமி இருவரின் உடல்கள் கிடைக்கவில்லை யென்றால், சொத்துக்கள் கிடைக்காது என்று மூத்த வக்கீல் சொன்னதும், உடல்களை தேட தானே களம் இறங்கினான்.
கோபத்துடன் ஆட்களை அழைத்துச் சென்று , பென்ஸ் கார் விழுந்த இடத்தில் ஆட்களை இறக்கி, தேடச் சொன்னான்.
அவர்களும் இறங்கினார்கள்.
இண்டு , இடுக்கு விடாமல் தேடுங்கடா என்று கர்ஜிக்க.
ஆட்கள் நன்றாக தேடி “”,ஐயா இரண்டு உடல்கள் கிடைத்து இருக்கு “” என்று சொல்லி மேலே கயிறு கட்டி இழுக்கக் சொன்னார்கள்.
மேலே வந்ததும் ஆர்வமாக தனபாலன் போய் பார்க்க .
அது யாரோ காதலர்கள் போலும்.
ஒருவரை ஒருவர் துணியால் இறுக கட்டிக்கொண்டு விழுந்து இருந்தனர் .
போலிஸ் அவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்றது .
தீயின் செந்நாக்குப் போல் போல் முகம் சிவந்து காணப்பட்ட தனபாலனை கண்டு அவனது வேலையாட்கள் அஞ்சினர் .
எல்லோரையும் தோப்புக்கு வரவழைத்தான் .
அங்கே அவர்கள் ஒவ்வொருவரையும் தென்னை மரத்தில் கட்டி சவுக்கு கொம்பு எடுத்து விளாரினான்.
ரத்த களரியாக இருந்த அவர்களில் சிலர் அடி பொறுக்க மாட்டாமல் உண்மையை கூறினர் .
செல்வனுக்கு முதுகிலும் தலையிலும் கத்தியால் குத்தினோம்
மயங்கி விழுந்தான் . சிவகாமி அம்மா காட்டுக்குள்ளே ஓடி தப்பித்தாள் . அவளை அங்கே புலி அடித்து சாப்பிட்டு இருக்கும் .
இதை சொன்னவன் அந்த ஊருக்கு புதியவன் .
அவனிடம் புலியை நீ பார்த்தாயா. ஒரு பொம்பள தைரியமா காட்டுக்குள் ஓடி இருக்கிறாள். உங்களால் அவளை தொடரத் தெரியலயா” என்று சொல்லி சொல்லி அடித்தான் .
சரிடா மயங்கி விழுந்தவன் எங்கே………?
காருக்குள் வைத்து, மலையுச்சியிலிருந்து தள்ளி விட்டோம் என்று பொய் சொன்னவன் யாரடா… என்று
கம்பை சுழற்றிக் கொண்டே கேட்க ,
தலை குனிந்து நின்றார்கள்.
தனபாலால் இதை தாங்கவே முடியவில்லை . அவர்கள் இறந்து விட்டார்கள் என்று ஊருக்கே தெரியும்படி வக்கீலை கூப்பிட்டு உயிலை தர சொல்லி இருக்கான்:
என் அண்ணனும் அவன் குடும்பமும் உயிரோடு இருக்கக் கூடாது முக்கியமாக அவன் குழந்தை. ஆணா பெண்ணா என்று தெரியவில்லை .போயும் போயும் இவன்களை நம்பி இருந்தேனே.
புலி இருக்கும் என்று சொன்னவனை நீ பார்த்து இருக்கியா என்று கேட்டு கேட்டு அடித்தே கொன்று விட்டான் .
அங்கே புலியும் கிடையாது நரியும் கிடையாது . வனவாசிகள் மட்டுமே .போங்கடா போய் தேடுங்க .
அங்க இருந்தா அவளையும் அவள் குழந்தையும் தூக்கிட்டு வாங்கடா’” என்று கட்டளையிட்டான்.
அவர்களில் ஒரு உயிர் போனதும்,
அவர்கள் அஞ்சி நடுங்கியபடியே ஓடினார்கள்.
அவர்களுடைய வீரத்தை வனவாசிகளிடம் காண்பிக்க
சென்றார்கள்.
வனவாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்தார்கள்.
வந்த அடியாட்கள் உடலெங்கும்
காயங்கள் இருந்தது. அதை விட கண்களில் கோபம் தெரிந்தது. எங்கோ மிதிப்பட்டு சவுக்கு கொம்பில் அடிவாங்கின வலி தெரிந்தது. அந்த வலியை கோபமாக மாற்றி அப்பாவி மக்களிடம் இறக்கி வைக்கலாம் என்று வந்தார்கள்.
வனவாசிகளின் பயிர்களை நாசம் செய்ய விழைந்தனர்.
‘“ஒரு இலை உதிர்ந்தாலும் உங்கள் உயிர் உடம்பில் இருக்காது “என்று அனைவரும் ஈட்டியுடன் அவர்களை குறிபார்த்தனர்.
பணிந்தார்கள்.
உள்ளே வரவிடாமல் தடுத்து நிறுத்தப் பட்டார்.
ஒரு கர்ப்பிணி பெண் இந்த பக்கமா 3 நாட்களுமுன் வந்தாளா,...?..
.’ நீங்கள் அவருக்கு அடைக்கலம் கொடுத்தீர்களா. அவரும் குழந்தையும் எங்களுக்கு வேண்டும்.
அவர்களை ‘எங்களுடன் அனுப்பி வைத்து விட்டீர்கள் என்றால் நாங்கள் பிரச்சனை பண்ணாமல் போய்விடுவோம்..”
:அப்படி யாரும் இங்கு வரவில்லை.’”
‘’’அதெப்படி …….நீங்கள் பொய் சொல்கிறீர்கள். அந்தம்மா இங்கு போனதை பார்த்தோம்.i
“உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. நாங்கள் போய் பார்க்க வேண்டும்.’”
தலைவன் மற்றவர்களிடம் கூடி பேசினார்.
ஒப்புக் கொண்டார்.
யாராவது ஒருவர் மட்டும் போய் பார்க்கலாம்.
கேள்வி கேட்டவனே போய் பார்த்தான் .
ஒவ்வொரு வீடாக போய் அலசினான் .
ஒரு வீட்டில் பச்சிளம் குழந்தைக்கு தாய் பால் கொடுத்து கொண்டு இருந்தாள் . அங்கு போய் அதைப் பார்க்க அங்கிருந்த பெண்டிர்கள் அவனை விரட்டினர் .
அங்கிருந்தே குரல் கொடுத்தான் டேய் பிறந்த ரெண்டு மூணு நாளே ஆன ஆண் குழந்தை இருக்குடா . என்று சொல்ல எல்லோரும் ஆரவாரம் செய்தார்கள் .
அந்த குழந்தையை ஏந்தி கொண்டு அந்த தாய் வெளியே வர குழந்தையையும், அந்தத் தாயையும் பார்த்து தலையை தொங்கப் போட்டுக் கொண்டே போனான் .
இது அவர்கள் இல்லடா என்று தலையை ஆட்டினான் .
அவர்கள் தனபாலிடம் ஒரு இடம் விடாமல் தேடி விட்டோம் எங்களை நம்புங்கள் . அங்கே சிவகாமி அம்மா இல்லை என்றே கூறினார்கள்.
வசந்தியும், ‘“அக்காவால் காட்டில் எல்லாம் வாழ முடியாது .மாமா இல்லாமல் அவர் ஒரு நாளும் வாழ வாய்ப்பு இல்லை” என்றாள்.
தனபால் ஏதோ யோசித்தவாறு பேசாது இருந்தான் .
ஆனால். அவன் மெளனத்திற்கு பின்னல் என்ன சதி இருக்குமோ என்று பயந்தாள்.
தொடரும்.