New member
- Joined
- Jul 12, 2025
- Messages
- 23
- Thread Author
- #1
பாகம். 7.
ஆறு அடிக்குஒரு அடி குறைவாக உள்ள அதிவீரன் ஒரு குதிரையில் இயற்கையின் அழகை காண கம்பீரமாக சென்று கொண்டிருந்தான் .
அப்போது வேறொரு குதிரையின் குளம்பொலி கேட்டது .
வெண் புரவியில் தலைமுடி காற்றில் ஆட ,குதிரையின் ஓட்டத்திற்கேற்ப அவளது காதணிகளும் உற்சாகமாக ஆட கயல்விழி வெள்ளை சட்டையும் கறுப்பு கால் சராயுமாக வந்தாள் .
ஹாய் என்று அவன் குதிரையின் அருகில் ஒன்றோடு ஒன்று உரசி படி
வேண்டுமென்றே வர .அவன் முகத்தை திருப்பிக் கொண்டு வேகத்தை கூட்டினான் .
நீ அதிவீரன் தான் டா அதுக்காக இப்படி ஓடாதடா இன்று அவளும் வேகத்தை கூட்டினாள் .
பதில் ஏதும் சொல்லாமல் அவளை முறைத்து விட்டு போக முயற்சிக்கையில் எதிரே ஒரு குதிரையில் வீர வேங்கையின் வர
கடிவாளம் இழுத்து நிறுத்தினான்.
அவனைப் பார்த்ததும் அதிவீரனின் முகம் மலர்ந்தது .
என்ன கயல் உங்கள் சண்டை இன்னும் முடியலையா என்று அவளைப் பார்த்து கேட்டான் .
இல்லன்னா இவன் ரொம்ப பிகு பண்றான் .
டேய் பாவம்டா அவள் ‘’
பின்ன என்ன பர்த்டேக்கு வராமல் என்ன அவளுக்கு முக்கிய வேலையாம் . .
கயல் அவனைப் பார்த்து சாரிடா முக்கியமான வேலை அம்மா கீழே விழுந்துட்டாங்க .
அச்சச்சோ இதையே நீ முதலிலேயே சொல்லி இருக்கலாமே..என்னாச்சு ஆன்ட்டிக்கு .
படிக்கட்டில் கால் தவறி விழுந்து விட்டார்கள் .
லெக்மெண்ட் டேர். கட்டு போட்டு இருக்கு . எப்படி வர முடியும் சொல்லு . அதுக்குத்தான் உனக்கு இப்ப சர்ப்ரைஸ் கிப்ட் வாங்கி வந்து இருக்கேன் .
இப்ப எப்படிமா இருக்காங்க என்று வேங்கையனும் அதிவீரனும் அக்கறையாக கேட்க .
கட்டு பிரிக்க நாளாகும் அண்ணா. ஊரில் இருந்து சித்தி வந்திருக்காங்க அவங்க பார்த்துப்பாங்க .
சரி உன்னை மன்னித்து விடுகிறேன் அதுவும் என் நண்பன் சொன்னதால். .எனக்கு ஸ்பெஷலா கிப்ட் வாங்கி வச்சி இருக்கேன் என்று சொன்ன. கையில் ஒன்றும் காணோமே. .
ரொம்ப ஸ்பெஷலா சம்திங் சம்திங் கொடுக்கப் போறியா.”என்று அவளை மட்டம் பார்த்து வேட்கையனுக்கு தெரியாமல் வாயை குவித்து கேட்டான்..
உதைபடுவ. என்று அடிக்க வருவது போல் சைகை காண்பித்தாள்..
இவன் கிடக்கிறான்.
நீங்களும் வாங்கன்னா என்று சொல்லி ஒரு இடத்திற்கு அழைத்துப் போனாள்.
அங்கு அவள் சித்தி செய்த மட்டன் பிரியாணி, மற்றும் நிறைய பலகாரங்களை எடுத்து வைத்தாள் .
இதுவா கிப்ட் என்று அதிவீரன் சிணுங்க,
முதலில் சாப்பிடுறா..
மூவரும் ரசித்து உண்டனர் .
தன் உள்ளங்கையில் ஒரு சின்ன பேழையை திறந்து இதிலிருந்து ஒளிரும் ஒரு மோதிரத்தை கையில் எடுத்து , அவன் கண்களை மூடச் சொன்னாள்.
அவன் கண்களை மூடியதும், மெதுவாக அவன் கைவிரல்களை பற்றி மோதிரத்தை அணிவித்தாள்.
கண்களை திறக்கச் சொன்னாள்.
அவள் அணிவித்த மோதிரத்திற்கு முத்தம் இட்டான் -
அதிவீரனும். என் பிறந்த நாளுக்கு உனக்கும், கிப்ட் வாங்கி வைத்து இருக்கின்றேன்.
கண்களை மூடணுமா”” என்று
கேட்க ‘
வேண்டாம்.
அவள் முன் மண்டியிட்டு, வில் யூ மேரி மீ” என்று கேட்டு. அவள் நாணத்துடன் ஒப்புதல் அளித்தவுடன் ,அவளின் விரல்களை பற்றி, ஒளிரும் தன்மையுடைய வைர மோதிரத்தை அணிவித்தான்.
வேங்கையன் கை தட்டி ரசித்தான்.
இவர்கள் இங்கே காதல் புரிய அங்கே அவர்களில் இரு குதிரைகளும் காதல் புரிந்தது.
அதை காண்பித்து வேங்கையன்
சிரித்தான்.
‘அங்க பாரேன். உங்க குதிரைகளும் உங்களை மாதிரியே இருக்கு".
‘“ இரண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் பாசத்தை வைத்துக்கொண்டு எனக்கு வேடிக்கை காண்பிக்கிறீர்களா”
என்று அவன் பங்குக்கு பொய் கோபம் காண்பிக்க ,
.”ஐயோ அண்ணா ப்ளீஸ் இந்தாங்க
உங்களுக்காக நானே என் கையால் செய்த பாதாம் அல்வா .”
“ம்ம்ம்.. அவனுக்கு மோதிரம் . எனக்கு அல்வாவா “ என்று சொல்ல,
கயல் அவன் வாயில் அல்வாவை திணித்தாள் .
மூச்சு விடக்கூடாது சாப்பிடுங்க .
‘“ஹேய் எனக்கும் அல்வா பிடிக்கும் டி
எல்லாத்தையும் உன் அண்ணனுக்கே கொடுத்து விடாதே .”
மூவரும் கலகலவென்று சிரிக்க குதிரைகளும் கனைத்தது .
அதிவீரனும், கயல் விழியும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் .
வேங்கையன் சட்டம் பயிலும் மாணவர் .
இவர்கள் மூவருக்கும் உள்ள ஒற்றுமை குதிரை ஓட்டுவதில் அலாதிப் பிரியம் .
ஒரு முறை போட்டியில் அதிவீரன் குதிரைக்கு குறும்புக்காரன் ஒருவன். போதை மருந்தை கொடுக்க, அது தறிக்கெட்டு ஓடியது .
எல்லோரும் அலறினார்கள்.
அதிவீரனுமே திகைத்தான்.
ஆபத்தின் விளிம்பில் இருந்த அவனை , தன் போட்டியையும் கைவிட்டு வேங்கையன் | தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினான் .
மக்கள் ஆரவாரம் செய்தனர் .
அதிவீரன் அவனை கட்டி அணைத்து நன்றி சொன்னான் .
இதற்கு காரணமானவர்கள் யார் என்று தெரியும் . வா என்று அழைத்துச் சென்று அவனை சட்டத்தை வைத்து போட்டியில் கலந்து கொள்ள தடை உத்தரவு வாங்கி கொடுத்தான் .
அன்றிலிருந்து அவர்கள் நண்பர்கள் ஆகினர் .
கயல்விழியை அதிவீரனுக்கு சிறுவயது முதற்கொண்டு தெரியும் .
இவனுடைய கோச்சுதான் அவளுக்கும் கோச் .
சிறு வயதில் நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறினார் .
மெல்ல இருள் கவிந்து கொண்டு இருந்தது .
ok கைஸ். அம்மா தனியாக இருப்பார்கள்.
பை குட் நைட் என்று சொல்லி
வேங்கையன் கிளப்பிச் சென்றான்.
அவன் போனதும், அதிவீரன் கயலிடம் நாம் ஒரே குதிரையில் போகலாமே. “” என்று ஆர்வமாக கேட்க
ஆசையை பாரு. அப்ப என் குதிரை………?
அது தன்னாலே வந்து விடும்.
நீ முன்னாடி. உனக்கு பின்னாடி நான்.
போடா. நீ நாட்டி பாய். நான் உட்கார மாட்டேன். கோச் பார்த்தால் தொலைத்து விடுவார்.
ப்ளீஸ்டி. கொஞ்ச தூரம் தானே என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கெஞ்ச.
சரி.வா. என்று சொன்னதும்,
அவன் அவன் இடையை சுற்றி வளைத்து. தூக்கி தன் குதிரையில் அமர வைத்தான்.
அவளின் இடுப்பை தன் இருகைகளால் கோர்த்துக் கொண்டான்.
இவள் லகானை பிடித்துக் கொண்டாள்.
அவளின் புரவி, அந்த புரவியை பார்த்து பொறாமை கொண்டு கனைத்தது.
இவன் குதிரை, அதனை பார்த்து, தன் கழுத்தை திருப்பி கொக்கரித்தது..
பார்த்தாயா என் மீது காதலர்கள் பவனி என்று சொல்வது போல் இருந்தது.
கடுகடுவென்று பின்னாலே அவளின் புரவி வந்தது.
குதிரை நகர தொடங்கியதும், அவள் காதில் கிசுகிசுப்பாக ஐ. லவ். யூ என்று சொல்ல. ‘அது உள்ளத்தில் பாய்ந்தது. அவள் லகானை தவற விட்டாள்.
எப்படியோ சமாளித்து லகானை பிடித்து விட்டாள்.
அவளின் கன்னம் வைத்து உரசினான்.
தன் முடியை தூக்கி குதிரைவால் கொண்டையாக போட்டிருந்ததாள்.
அது குதிரையின் அசைவிற்கேற்ப , இப்படியும் அப்படியுமாக ஆட ,அதை
விலக்கி,
கழுத்தில் முத்தமிட்டான்.
நெளிந்தாள்.
டேய் பேசாமல் வாடா.
இந்த சான்ஸ் எப்போ கிடைக்குமோ என்றான்.
தூரத்தில் கோச் இவர்கள் இருவரும் ஒரே குதிரையில் வருவதை பார்த்து விட்டார்.
அவரை பார்த்ததும். கயல் குதிரையிலருந்து கீழே இறங்கி
தன் குதிரைக்கு தாவி விட்டாள்.
இருவரும் அவரிடம். தலை குனிந்து மெளனமாக நிற்க, ‘நீங்கள் இருவரும் இன்னும் ஒரு வாரத்திற்கு குதிரையை தொடக் கூடாது. “” என்று பனிஷ்மென்ட்
கொடுத்தார்.
கயல் அதியை முறைத்து அவரிடம் ஸாரி. ஸாரி என்று சொல்ல.
மெளனமாக சென்று விட்டார்.
தொடரும்