• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jul 12, 2025
Messages
23
பாகம்…8

வேங்கையன் தன் சட்டக் கல்லூரிக்கு அருகிலே தன் அம்மாவுடன் வசித்து வந்தான்.


அவன் அம்மா வீட்டிலே விதவிதமாக துணிகள் தைப்பதும், ஊறுகாய் போடுவதுமாக இருந்தார். அதிலேயே அவனை படிக்கவும் வைத்தார்.


அவனும் அவளுக்கு அதிக சிரமத்தை கொடுக்காமல் நன்றாக படித்தான்.


இவன் வரவை நோக்கி. வாசலுக்கும். உள்ளுக்குமாக நடையாய் நடந்தாள்.


ஸாரி மா ஸாரி மா என்ற படி வேங்கையன் வந்தான்.


“ஏம்பா லேட்டு….?


“இன்று அதியையும் , கயலையும் பார்த்து விட்டு வர்ரேன்மா.”



“அப்படியா ஒரு நாள் கூட்டிட்டு வீட்டுக்கு வாப்பா.”



“வர்ரேன்மா.”


வேங்கையன் வக்கீலுக்கு படித்துக் கொண்டே பார்ட்டைம் வேலையாக ஹார்ஸ் டிரயினியா இருக்கிறான்.



இரவு உணவை இருவரும் உண்டனர்.



இரவு படுக்க பாயை உதறி போட்டார்.



சிறிது நேரத்தில் களைப்பில் வேங்கையன் உறங்க , அவனின் அம்மா விசிம்புவது திரும்பி படுத்த அவனுக்கு கேட்டது.


நிலவு வெளிச்சம் உத்திரவின்றி உள்ளே வர அம்மாவின் முதுகு குலுங்குவது தெரிந்தது.


அம்மா…அம்மா ….என்று கூப்பிட்டான்


“உங்களுக்கு என்ன மா பிரச்சனை. இரவால் தினம் தினம் அழுகிறீர்கள்.
இப்பவாவது உங்கள் வேதனையை என்னிடம் பகிர்ந்துக் கொள்ளக் கூடாதா.”


“அதை சொல்ல வேண்டிய நேரம் வரும். அப்போது சொல்கிறேன்”.


ப்ளீஸ்மா…என்று நகர்ந்து அவர் காலடியில் அமர்ந்துக் கொண்டு கேட்க,


“என் கடந்த காலத்தை விட உன் எதிர்காலம் எனக்கு ரொம்ப முக்கியம். இப்போது படிப்பில் மட்டும் கவனம் செலுத்து.
இனிமேல் நான் அழ மாட்டேன்.’என்று சொல்லி, தன் கண்களை துடைத்துக் கொண்டார்.


ஒன்றும் செய்வதறியாது, இதற்கு மேலும் அம்மாவை ஒன்றும் கேட்க இயலாது "சரிம்மா என்று சொல்லி தன் பாயில் படுத்துக் கொண்டான்.


தூக்கம் வரவில்லை.


ஒரு முடிவுக்கு வந்தான்.


அம்மா இப்படி இரவில் அழுவதை நிறைய தடவை பார்த்து இருக்கிறான்.

தன்னை சீராட்டி | பாலூட்டி வளர்த்து படிக்க வைத்து சமூகத்தில் நல்ல அந்தஸ்து உள்ளவனாக மாற்றியதற்கு அவன் தன் அம்மாவுக்கு கைமாறு செய்ய வேண்டும் என்று எண்ணினான். ..

இல்லையென்றால் தான் ஒரு நல்ல பிள்ளையாக இருக்க முடியாது என்று யோசிக்கையில் அவனுக்கு தூக்கம் வராமல் போய்விட்டது .



விடிந்ததும் முதலில் மருதமலை கோவிலுக்கு சென்றான் .


என் அம்மாவின் துக்கத்தை போக்க வேண்டும். அவர் படும் பாட்டிற்கெல்லாம் தீர்வு கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு வீட்டிற்கு வந்தான் .


இவனைப் பார்த்து தான் அம்மா அதிசயத்தாள். காலையிலே குளித்து கோவிலுக்கு போயிட்டு வந்துட்டியா .



.”ஆமாம் அம்மா அப்புறம் தாத்தா போன் செய்து இருந்தார் .”


“நம் குல சாமிக்கு படையல் போட போகிறார்களாம் வரச்சொல்லி இருந்தார்.”



சிறிது நேரம் யோசித்து போலாம் பா என்றாள்



இந்தப் படையல் திருவிழாவை காண அதிவீரனையும் கயலையும் கூப்பிடலாம் என்று இருக்கிறேன் .


அப்படியே செய்ப்பா .நானும் பார்க்க ஆசைப்படுகிறேன் என்றாள்.



அம்மா செய்யும் செயல்களில் எல்லாம் ஒரு நளினத்தை பார்த்து இருக்கிறான் . அதேதான் அவனும் பின்பற்றுகிறான் . எல்லோரிடமும் நாசுக்காகவும், இதமாகவும் பதமாகவும் அன்பாகவும் பேச கற்றுக் கொண்டான் .


இந்த குலதெய்வ பூஜைக்கு போகணும் என்று சொல்வதற்கு காரணங்கள் உள்ள இரண்டு உள்ளது .



ஆம் ஒன்று அம்மாவின் கடந்த காலத்தை பற்றி தெரிந்து கொள்வது .


இரண்டாவது அவன் காதலி பத்மா. அவளைப் பார்க்கும் சந்தர்ப்பம் இதுவே.


பத்மாவை சிறு வயதிலிருந்தே அவனுக்கு தெரியும்


பத்மா ஒரு அழகான , கருணை மனதுடைய நர்சிங் மாணவி. மனித நேயமும் அன்பும் அவளுடை.ய இயல்புகள் . தன் சமூகத்திற்கு மருத்துவ சேவை செய்யவே நர்சிங் தேர்ந்தெடுத்தாள் .



ஆனால் அவன் பத்மாவை சிறுவயதில் பார்த்தது .


பிறகு தன் பெரியப்பாவுடன் படிக்கப் போய்விட்டாள் .


நர்சிங் முதலாம் ஆண்டு படிக்கும்போது படையலுக்கு ஊருக்குள் வந்தாள்.


அப்போது ஊரில் சில திருடர்கள் கொள்ளை அடிக்க திட்டமிட்டு நுழைந்தனர் .


வேங்கையனும்ம் அவன் நண்பர்களும் திருடனை அவர்களுக்கு தெரியாமலே பிடிக்க வேண்டும் என்று ஒருவர் பின் ஒருவர் பின்னாலே போனார்கள் .


இப்போது ஒரு திருடன் வேறு வழியில் போக, இவன் அவன் பின் போக அதை பார்த்த பத்மா இவனை திருடன் என்று நினைத்துக் கொண்டு, அவனை பின்னால் இருந்து கட்டிப்பிடித்து திருடன் திருடன் என்று கத்திக் கொண்டே.,அவனை கீழே தள்ள முயற்சிகளில் அவனும் அவளும் அங்கிருந்தே பள்ளத்தில் உருண்டனர் .


அவளின் மெத்தென்ற உடம்பை நன்கு அணைத்துக் கொண்டான் .



டேய் விடுடா விடுடா என்று கத்த ‘“நான் திருடன் தானே நல்லா புடிச்சுக்கோ’ என்று உருண்ட பிறகும் அவளை விடாமல் கட்டிப்பிடித்துக் கொண்டே இருந்தான்.



மேலே இருந்து சிரித்த குட்டி “பசங்களிடம் அந்த ஊசியை கொடுங்கடா இவனுக்கு போட்டால்தான் மயங்கி விடுவான் "என்று அவர்களிடம் தன் பையை கேட்க ,



“அம்மா தாயே நீ இப்பதான் நர்சிங் முதல் வருஷம் படிக்கிற அதற்குள் எக்க தப்பா ஊசியை போட்டு விடாதே” என்று சொல்லி அவளை தன் பிடியிலிருந்து விடுவித்தான் .



“ சாரி வீரா”..


“போடி என்ன போய் திருடன் என்று நினைத்து விட்ட இல்ல .’


‘“கழுத்துல யாராவது இந்த கலர் கலர் துணியை போட்டு இருப்பார்களா .
முகத்தை வேறு மறைச்சு வச்சுட்ட .
ஆனாலும் நீ திருடன் மாதிரி தான் இருந்த ‘’



“ஐயோ நான் வக்கீலுக்கு படிக்கிறேன்மா.சரி உருண்டதில் உடம்பு வலிக்குது கையை கொடு .”



“நீ மட்டுமா. என்னையும் நீ உருண்ட வச்சிட்ட” .



நீ எங்கடி உருண்ட உன்னை ஒரு பூவை அணைத்து கொள்ற மாதிரி ஒரு குழந்தையை அணைத்துக் கொள்கிற மாதிரி இல்லை நெஞ்சோடு அணைச்சுக்கிட்டேன். நல்ல மரிக்கொழுந்து வாசம் "என்று அவளை மேலும் இழுத்து முகர்ந்தான்.


அடச்சீ… விடு.. என்று பொய் கோபம் காட்டி அவன் அணைப்பிலே இருந்தாள்.



“இந்த பாரு உனக்கு ஒரு சிராய்ப்பு கூட இருக்காது எல்லாம் எனக்குத்தான் இருக்கும்” என்று கை, கால்களில் காண்பிக்க அங்கங்கே சிராய்ப்புகள் இருந்தது .



ஆம்… அவள் உடம்பில் ஒரு சிராய்ப்பு கூட இல்லை அவ்வளவு லாபகமாக அணைத்து ஒரு உருண்டான் .



அவன் கையைப் பிடித்து தூக்கும் போது அவன் பாரம் தாங்காமல் அவன் மேலே அவள் விழ ,


மேலிருந்து பசங்கள் வாங்கடா அக்காவும் மாமாவும் காதல் பண்ணுகிறார்கள் நாம் போய் விடுவோம் என்று பசங்கள்
ரயில் வண்டி விடுவது போல் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டே ஓடிவிட்டார்கள் .



பள்ளத்திலிருந்து எழ போனவளை பிடித்து இழுத்து தன் மடியில் கடத்திக் கொண்டான் .



ப்பா… என்ன வேகம் அவன் தலையை தன் கைகளால் அளைந்துக் கொண்டே அவன் கண்களை பார்க்க அவனும் அப்படியே பார்க்க , வெள்ளை உடை உடுத்திய தேவதைகள் அவர்களை சுற்றிப் பாட்டு பாடினார்கள் .




மேலிருந்து அவள் அம்மா இருவர் மீதும் கல்லை எடுத்து அடித்தாள்.



அவள் கத்திய கத்தலில் தேவதைகள் ஓடோடி போயினர்.



காதல் கேக்குதா காதல் கேக்குதா அதுவும் இந்த ‘……..... . இந்த செல்லும்போது தலைவர் ருத்ரா வர.
சொல்ல வந்த வார்த்தையை மென்று முழுங்கினாள் .



அவர் எச்சரிக்கை செய்தார். .



மேலேறி வந்த இருவரிடம் ருத்ரன் “கவனம் படிப்பில் இருக்கட்டும் வேறு எந்த ஆசாபாசத்திற்கும் இடம் கொடுக்கக் கூடாது . நீங்கள் இருவரும் நம் சமூக மக்கள் நலனுக்காக இந்த படிப்பை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள் அதில் மட்டும் கவனம் இருக்கட்டும் “என்று கனிவாகவும் அதே சமயம் உறுதியாகவும் சொன்னார் .


தலை குனிந்து நின்றார்கள்.


“நம் மக்கள் யாரிடமும் தலை குனிந்து
நிற்கும் அபாக்கியம் வரக்கூடாது. புரிகிறதா”……..... என்று கர்ஜிக்க



“புரிகிறது ஐயா’ என்றார்கள்.


அவர் போனபின்பு,



அவளிடம் ஸாரி என்றான்.


“ என்னால் தான் உனக்கும் திட்டு. நானும் ஸாரி என்றான். ‘’


அவள் அம்மா அவள் கையை பிடித்துதரதரவென்று பிடித்துக் கொண்டு போனாள்.



இந்த சம்பவம் நடந்து மூன்று வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் பார்க்கப்போகிறான்.



மூன்று வருடங்களுக்குப் பிறகு உன்னை சந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டு தான் சென்றாள் .



இதோ இப்போது இந்த படையல் பூஜைக்கு வருவாள் என்று ஆவல் மிகுதியில் நிலை கொள்ளாமல் தவித்தான் -.



என் பத்மாவை மூன்று வருடங்கள் கழித்து பார்க்கப்போகிறேன்.



ஆனால், அவள் அம்மா கங்கம்மாவிற்கு ஏன் என்னை பிடிக்கவில்லை.. எங்கள் காதல் கைகூடுமா . திருமணத்தில் முடியுமா என்றெல்லாம் யோசிக்க |
படையல் திருவிழாவும் வந்தது.


முன்பே அதிவீரனையும், கயலையும் வரச்சொல்லி இருந்தான்.


அவர்கள் ஓய்வெடுத்துக்கொள்ள நம் வீடபோதும் என்ற முடிவுக்கு வந்தவுடன் அம்மாவிடம் சொல்ல, தாராளமா தங்கலாம்.முன்கூட்டியே போய் ஏற்பாடுகளை கவனிக்கலாம் என்று சொன்னாள்.


தன் தாயின் கதையை யாரிடம் கேட்பது என்று யோசனையில் ஆழ்ந்தான் .




தொடரும்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top