• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 5, 2025
Messages
32
12.2

இன்னும் சற்று நேரத்தில் தனக்கு நிச்சியம் நடக்க போகிறது என்ற மகிழ்ச்சியே இல்லாமல் முல்லை சோகமாக அமர்ந்து இருந்தவளை பாண்டியன் கேள்வியாக பார்த்தவாரு,'என்னமா முல்லை உன் அப்பா நினைவு வந்துடுதா' என்று கேட்டதும், முல்லையின் விழிகள் கலங்கியது.
'கவலைப்படாத முல்லை... உன் அப்பா ஆசிர்வாதம் இல்லாமல் உன் கல்யாணம் நடக்காது' என்று பாண்டியன் சொல்ல,
'அப்போ இவங்க கல்யாணம் நடக்க வாய்ப்பில்லையா அண்ணா ' என்ற கஸ்தூரியின் கிண்டலான கேள்வியில் அனைவரின் முகமும் மாறியது.
'இங்க பாரு கஸ்தூரி, நல்ல விஷயம் நடக்குற நேரத்துல இந்த மாதிரி ஆபாசகுனமா பேசுற வேலையெல்லாம் வச்சிக்காத' என்று பாண்டியன் தன் தங்கையை திட்ட, எப்போதும் போலவே கஸ்தூரி தன் உதட்டை சுழித்து முல்லையை பார்த்து பொறாமையில் பொங்கினார்.
கஸ்தூரியின் இயல்பே இது தான் என்று அனைவரும் அறிந்திருந்த காரணத்தினால் யாரும் அவர் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்காத நிலையில் வேன் பாண்டி கோவிலின் வாசலில் நின்றது.
'ஜீவா... பூஜை பொருளை கோவிலுக்கு எடுத்துட்டு போங்க' என்று பாண்டியன் சொல்ல, ரோஜா தன் தலையில் கை வைத்துக்கொண்டு இருக்கையில் கண்கள் மூடி அமர்ந்து இருந்தாள்.
'ரோஜா... கோவிலுக்கு வந்தாச்சு மா, வா கீழ இறங்கு ' என்று பாண்டியன் சொன்னதும்,'அப்பா... நான் வண்டியில இருக்கேன், நீங்க போயிட்டு வாங்க' என்றாள் ரோஜா.
'என்னமா நீ... உன் அண்ணனுங்களுக்கு இன்னைக்கு நிச்சயம் நடக்க போகுது, நீ கூட இல்லாம எப்படி டா' என்று பாண்டியன் கேட்க,
'அப்பா... சொன்ன புரிஞ்சிக்கோங்க, நான் வேன்ல இருக்கேன், நீங்க எல்லாம் போய் நிச்சியத்தை நல்லப்படியா முடியுங்க' என்ற ரோஜாவின் பதிலில் பெருமுச்சுடன் அவள் அருகே வந்து அமர்ந்தார் கதிர்வேலன்.
'இப்போ என்ன! உள்ள வந்தா மறுபடியும் அருள் வரும்னு பாயப்புடுறிங்களா' என்ற கதிர்வேலனின் கேள்விக்கு ரோஜா பதில் சொல்லாமல் அமைதியாக அமர்ந்து இருந்தாள்.
'கதிர் மாமா... ரோஜா பயத்திலும் ஒரு அர்த்தம் இருக்கு தானே, போன முறை ரோஜாவிற்கு அருள் வந்து அவ சாமி ஆடிணதை பார்த்து இன்னவரை அவள் கோவிலுக்கு வர கூட பயப்புடுறாள்' என்று மீனா சொன்னதும்,
'ரோஜா... நீயே ஏன் அப்படியெல்லாம் நினைக்கிற, உனக்கு இந்த முறை அருள் வராதுன்னு நினைச்சுக்கிட்டு உள்ள வா' என்றாள் முல்லை.
'வேண்டாம் முல்லை. நல்ல விஷயம் நடக்கும் போது நான் வந்து எதாவது தப்பா ஆகிடுதுனா எனக்கு மனசு கேட்காது, அதனால நான் வேன்லயே இருக்கிறேன்' என்று பிடிவாதமாக ரோஜா சொல்ல,
'சரி சரி ஒரு மணி நேரம்தானே...ரோஜா வண்டியில இருக்கட்டும்.வாங்க நல்ல நேரத்துல நம்ப ஆக வேண்டிய நல்ல காரியத்தை பார்ப்போம்' என்று கஸ்தூரி சொன்னதும்,பாண்டியன் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பாண்டி முனிஸ்வரர் கோவிலுக்குள் சென்றவர்கள்.
முல்லையும் ஜீவானந்தமும் ஒன்றாக நடந்து செல்ல, மீனாவோ கதிர்வேலனுடன் நடக்க ஆசைக்கொண்டு வேகமாக நடந்தவளை கண்டுகொள்ளாமல் முன்னே நடந்து சென்றார் கதிர்வேலன்.
மீனாவிற்கு இருக்கும் மகிழ்ச்சி கதிர்வேலனின் முகத்தில் தெரியாமல் இருக்க,முல்லையும் அதே நிலையில் தான் இருந்தாள்.
'முல்ல... என்னாச்சு உனக்கு?
ஏன் ஒரு மாதிரி இருக்க' என்று ஜீவானந்தம் கேட்டதும்,
'தெரியல மாமா... என்னமோ பயமா இருக்குற மாதிரி தோணுது'என்றாள் முல்லை.
'ஏன் முல்ல...ஏன் திடிர்னு இப்படி சொல்லுற, உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தானே' என்று ஜீவா கேட்டதும்,
'ஐயோ மாமா... உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தான்' என்ற முல்லையின் விழிகள் அவளின் கட்டுப்பாட்டை மீறி கதிர்வேலனை தேடியது.
முல்லையின் மனதில் ஏதோ குழப்பம் இருப்பதை அறிந்ந்துகொண்ட ஜீவானந்தம்,'முல்ல...இப்போவே நம்ம கல்யாணம் நடக்கணும்னு அவசரம் இல்லை மா, இன்னும் ரெண்டு வருடம் உனக்காக காத்து இருக்கக்கூட நான் தயாரா தான் இருக்கேன். அதனால உன் மனசுல என்ன சஞ்சலம் இருக்குனு வெளிப்படையா என்கிட்ட பேசு' என்ற ஜீவானந்தத்தை பார்த்து மெலிதாக சிரித்தாள் முல்லை.
'என்ன முல்ல... கல்யாணத்தை தள்ளி வைக்க சொல்லி அப்பாகிட்ட பேசவா' என்று ஜீவானந்தம் கேட்க,
'வேண்டா மாமா... நீங்க ஏற்கனவே எனக்காக இரண்டு வருஷம் காத்து இருந்துட்டீங்க, இனிமேலும் உங்களை காக்க வைக்குறதுல எனக்கு விருப்பம் இல்லை. ஒரு வேள நீங்க சொன்ன மாதிரி அப்பா என்கூட இல்லைன்னு தான் எனக்கு ஒரு மாதிரி பீல் ஆகுதுன்னு நினைக்கிறேன்' என்ற முல்லைக்கே, உண்மையில் அவளின் மனநிலை என்ன என்று அவளே உணர்ந்து கொள்ள முடியாமல் தான் தவித்து இருந்தாள்.
'அப்போ உனக்கு இந்த நிச்சியத்துல சம்மதம் தானே' என்று ஜீவானந்தம் கேட்க,'ம்... சம்ம...' என்று முல்லை தன் வார்த்தையை முடிக்கும் முன்னே முனிஸ்வரன் கோவிலில் உடுக்கை ஒலி எழும்பியது.
கோவிலில் நடக்கும் பூஜையின் மணி சத்தம் ஒரு பக்கம், உடுக்கை சத்தம் மறுபக்கம் என்று அந்த இடமே பக்தி பரவசமாக இருந்த தருணம்,
'ஜீவா, கதிர்... ரெண்டு பேரும் மீனா முல்லையை அழைச்சிட்டு இப்படி வந்து உக்காருங்க' என்றார் பாண்டியன்.
தன் தந்தையின் வார்த்தையை கேட்டு ஜீவாவும் கதிரும் ஒன்றாக வந்து சாமி சன்னிதானத்தின் முன்னே நிற்க,
'ஐயரே... இவங்க நாலு பேருக்கு தான் கல்யாணம். இப்போ சாமி உத்தரவோட, பாண்டி முனிஸ்வரன் முன்னாடி என் பசங்க மோதிரம் மாத்திகிட்டா! அடுத்த முகூர்த்தத்தில் இவங்களுக்கு ஊரை கூட்டி மண்டபத்தில் கல்யாண ஏற்பாடு பண்ணிடலாம்' என்றார் பாண்டியன்.
'நல்லது பாண்டியா...இருங்க மோதிரத்தை சாமி காலடியில் வச்சி ஆசிர்வாதம் வாங்கி எடுத்துட்டு வரேன்' என்ற ஐயர் மோதிரத்தோடு சாமி சன்னதிக்குள் நுழைந்து, இறைவனின் ஆசிர்வாததுடன் நான்கு மோதிரத்தையும் எடுத்து வந்து பாண்டியன் கையில் கொடுக்கும் தருணம்,
'டேய் முத்துப்பாண்டியா.........' என்ற அஃரோஷாமான குரலில் பாண்டியன் அலண்டு போய் திரும்பி பார்க்க, அங்கே ரோஜா தலைவிரி கோலமாக நின்று இருந்தவளை பார்த்து பாண்டியனின் கைகள் தானாக ரோஜாவை வணங்கியது.
************************
'ஐயோ ரோஜா...' என்ற அழைப்புடன் முல்லை அவளை நெருங்கி செல்ல,
'இரு மா இரு மா...கிட்ட போகாத, அந்த பொண்ணு மேல சாமி இறங்கி இருக்கு' என்ற பூசாரி,
'ஐயா... உன்னையே நம்பி உன் ஆசிர்வாதத்தை வாங்க வந்த உன்னோட பிள்ளைகளுக்கு நல்ல வார்த்தை சொல்லு பாண்டி ஐயா' என்றவாரு ரோஜாவின் முன்னே விபூதி தட்டை நீட்டினார்.
'நல்ல வார்த்தையா!
நான் முத்து பாண்டிக்கு நல்ல வார்த்தை சொல்ல இங்க வரல பூசாri ...முத்து பாண்டியின் பிள்ளைகளை எச்சரிக்க தான் டா நான் வந்து இருக்கேன்' என்ற ரோஜாவிற்கு பாண்டி முனிஸ்வரன் அருள் இறங்கும் காரணத்தால் தான் அவள் இன்று வரை கோவிலுக்குள் வர தயங்கி, கோவில் வாசலிலேயே நின்று விடுவாள்.
'ஐயா...என்ன சொல்லுறீங்க, என் பசங்க தான் என்னோட உசுரு... அவங்க நல்லா வாழறதை பார்க்க தான் நான் இன்னும் உயிரோட இருக்கேன்' என்ற பாண்டியனின் முன்னே கால்களை தட்டி தட்டி தலையை இடப்பக்கமும் வலப்பக்கமும் அசைத்தப்படி நின்று இருந்தாள் ரோஜா.
ரோஜாவின் உக்கிரமான முகத்தை பார்த்து முல்லையும் கைகள் கூப்பி அவள் முன்னே நின்று இருக்க,
கதிர்வேலனும் ஜீவானந்தமும் தன் தந்தையின் அருகே வந்து நின்றார்கள்.
ரோஜாவின் வாக்கை கேட்டு கலங்கி போன பாண்டியன்,'ஐயா... என் பசங்களுக்கு நல்லதொரு வாழ்கை அமைய நீங்க தான் அருள் புரியனும்' என்றவாரு அப்படியே ரோஜாவின் முன்னே மண்டியிட்டு அமர்ந்தார்.

'அது நடக்காது முத்து பாண்டி,உன்னோட பிள்ளைங்க ஆளுக்கொரு திசையில பிரிந்து உனக்கு நிம்மதி இல்லாமல்,நீ வாழும் போதே உனக்கு நரகத்தை காட்ட போறாங்க முத்து பாண்டி' என்ற ரோஜாவின் ஆகரோஷமான குரலுடன் முல்லையை நெருங்கி வந்தாள் ரோஜா.
நம்பியவர்களுக்கு கல்லும் கடவுள் என்பதை போல, அந்த தெய்வமே ரோஜாவின் வார்த்தையில் குடி கொண்டுள்ளது என்று எண்ணி
முல்லை கண்கள் கலங்கி கைகள் கூப்பி ரோஜாவின் முன்னே நின்றாள்.
கண்கள் இரண்டும் அகலமாக விரித்து, முல்லையை அழுத்தமாக பார்த்த ரோஜா,
'உன்னோட வாழ்க்கையை தட்டி பறிக்க இங்க பல நாடகம் நடக்கும், நம்பாத... இங்க இருக்குற சிலரை நம்பாதே ' என்ற ரோஜாவின்
வார்த்தைகள் முல்லையின் உள்ளத்தில் பாய்ந்து, அவள் புருவம் சுருங்கி, உள்ளம் கலங்கியது.
ரோஜாவின் வார்த்தையை கேட்டு ஜீவானந்தமும் கதிர்வேலனும் ஒரே கேள்வியுடன் முல்லையை பார்த்தார்கள்.
'ஐயா...உங்களுக்கு நாங்க எதாவது குத்தம் குறை வச்சிட்டோமா, ஏன் எங்க குடும்பதுல பிரச்சனை வரும்னு சொல்றிங்க, அப்போ என் பசங்க வாழ்கை நிம்மதியா இருக்காதா' என்று பாண்டியன் நடுங்கிய குரலில் கேட்டார்.
ரோஜா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியப்படி நின்று இருந்தவள், அருகே இருந்த எலுமிச்சை பழத்தை எடுத்து நர நரவென்று மென்னு தின்றாள்.
ரோஜாவின் கண்ணில் படாமல் மீனா கதிர்வேலனின் பின்னே ஒளிந்து இருக்க,
'எந்த வாழ்க்கையை வாழ நீ ஆசைப்பட்டியோ அந்த வாழ்கை உனக்கு நரகமாகும்' என்ற ரோஜா தன் பார்வையை அப்படியே கதிர்வேலனின் பக்கம் திருப்பினாள்.
'மனிதனை மனிதன் ஏமாற்றலாம்,
ஆனால் கடவுளையும் அவன் படைத்த இயற்கையையும் யாராலும் ஏமாற்ற முடியாது. இன்றைக்கு எது உனக்கானது என்று இவர்கள் உனக்காக தீர்மானிக்கிறார்களோ, அது உண்மையில் உனக்கானது இல்லை' என்ற ரோஜாவின் பார்வை கதிர்வேலனில் தொடங்கி ஜீவானந்தத்தின் பக்கம் முடிந்தது.
'ஐயா...எங்க வீட்டுல ரொம்ப வருஷம் கடந்து இப்போ தான் ஒரு நல்ல காரியம் நடக்க போகுது, எங்ககூடவே காவல் தெய்வமா இருந்து நீங்க தான் எங்களுக்கு அருள் புரியனும்' என்ற ஜெகதீஸ் ரோஜாவின் முன்னே கைகள் கூப்பி நிற்க,
'உன் கெட்ட எண்ணமே உன்னை ஒரு நாள் அழிக்கும்' என்ற ரோஜா, ஜெகதீஷை பாராமல் அதே அஃரோஷத்தோடு கஸ்தூரியை பார்த்து முறைத்தாள்.
நல்லது நடக்கும் நேரத்தில் ரோஜாவின் வாக்கை கேட்ட பாண்டியனின் குடும்பத்துக்கு மனதில் இன்பம் மறைந்து பயம் தான் எழுந்தது.
'ஐயா...நாங்க யாருக்கு என்ன பாவம் பன்னொன்னு தெரியல , அப்படி நாங்க எங்களையும் அறியாமல் பண்ண தவறுகளை மன்னித்து எங்களுக்கு நீங்க தான் அருள் புரியனும்' என்ற பாண்டியனின் வேண்டுதலை கேட்டு ரோஜா இரண்டே எத்தில் சாமி சன்னதியில் இருந்த மாங்கல்யத்தை எடுத்துக்கொண்டு கதிர்வேலனின் அருகே சென்றாள்.
ரோஜாவை தன் தங்கையாக இல்லாமல் அங்கே அவள் மேல் இவர்களின் குலதெய்வம் இறங்கி இருக்கிறது என்று நம்பிய கதிர்வேலனும் பக்தியுடனே ரோஜாவின் முன்னே கைகள் கூப்பி நின்று இருக்க,
'நீ ஆசைப்பட்ட வாழ்கையை உன்கிட்ட இருந்து எடுத்துக்கொண்ட நானே, உன்னை ஆசைப்படும் பெண்ணோடு சீக்கிரமா சேர்த்து வைப்பேன்'
என்ற ரோஜா தன் கையில் இருந்த மாங்கல்யத்தை கதிர்வேலனின் கரங்களில் ஒப்படைத்தவள்,
'பத்திரமா வச்சிக்கோ, என் ஆசி பெற்ற இந்த மாங்கல்யம்
உரிய நேரத்தில்,
உரிய கழுத்துக்கு,
உரிமையுள்ள உன்னால்,
உனக்கானவளை தேடி சென்றடையும்' என்ற ரோஜாவின் வாக்கில் குழம்பி போன கதிர்வேலன் தன் கையில் இருந்த மாங்கல்யத்தை தவறுதலாக தவற விட்டவனின் கரங்களில் இருந்து நழுவி விழுந்த மஞ்சள் கயிர் கீழே விழாமல் தன் முந்தனையில் தாங்கி பிடித்திருந்தாள்.

தொடரும் 🌹
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top