Member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 32
- Thread Author
- #1
பகுதி – 13.1
'பத்திரமா வச்சிக்கோ, என் ஆசி பெற்ற இந்த மாங்கல்யம்
உரிய நேரத்தில்,
உரிய கழுத்துக்கு,
உரிமையுள்ள உன்னால்,
உனக்கானவளை தேடி சென்றடையும்' என்ற ரோஜாவின் வாக்கில் குழம்பி போன கதிர்வேலன் தன் கையில் இருந்த மாங்கல்யத்தை தவறுதலாக தவற விட்டவனின் கரங்களில் இருந்து நழுவி விழுந்த மஞ்சள் கயிர் கீழே விழாமல் தன் முந்தனையில் தாங்கி பிடித்திருந்தாள் மீனா.
மீனாவின் கையில் இருந்த மாங்கல்யத்தை முல்லை ஏக்கமாக பார்த்து இருக்க,
'அவன் தவற விட்ட மாங்கல்யத்தை நீ சொந்தம் கொண்டாட முடியாது, ம்...இன்னோர் பெண்ணுக்கு சேர வேண்டிய உடமைக்கு நீ ஆசைப்படாதே,
கொடு அந்த மாங்கல்யத்தை அவனிடம்'' என்று அஃரோஷமாக கத்தினாள் ரோஜா.
ரோஜாவின் கர்ஜனையில் மீனாவின் சப்த நாடியும் அடங்கி போக,'மாங்கல்யத்தை கொடு அவன் கையில.....' என்ற ரோஜாவின் கண்களில் கோவம் கொழுந்து விட்டு எறிந்தது.
மீனா தயக்கத்துடன் தன் கையில் இருந்த மாங்கல்யத்தை கதிர்வேலனிடம் நீட்ட, சட்டென்று அதை தன் வசம் பறித்துக்கொண்ட ரோஜா, கதிர்வேலனின் வலது புஜத்தில் அந்த மஞ்சள் கயிறை இறுக்கமாக கட்டினாள்.
யாரும் எதிர் பாராத வகையில் ரோஜாவின் மீது அருள் இறங்கி, பாண்டியனின் குடும்பத்திற்கு நல்ல வாக்கு சொல்லாத நிலையில்,
'ஐயா... முத்து பாண்டி பிள்ளைகளுக்கு நிச்சயம் நடக்க தான் உன் சன்னிதியை தேடி வந்து இருக்காங்க, உன் கையாள அவங்களுக்கு இந்த நல்ல காரியத்தை முடித்து கொடு' என்று பூசாரி கேட்டார்.
'முத்து பாண்டி வீட்டில் இப்போதைக்கு நல்ல காரியம் நடக்காது, மீறி நடந்தால் கண்டிப்பா அங்கே துக்க காரியம் ஒன்றும் நடந்தே தீரும், அது தான் இவன் தலையெழுத்து' என்ற ரோஜா,
நேரே கிணத்தடிக்கு சென்றவள், தண்ணீரை இரைத்து, தன் தலையில் ஊற்றிக்கொண்டு, கல், மண்,முள்ளு என்று எதையும் பாராமல் வேகமாக ஓடியவள்,
காட்டு பகுதியில் முதன் முதலில் சுயம்புவாக எழுந்த இவர்கள் குலதெய்வத்தின் முன்னே கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டு இருந்த கற்பூரத்தை எடுத்து வாயில் போட்டப்படி அப்படியே மயங்கி கீழே விழுந்தவளை அங்கிருந்த பெண் பக்த்தர்கள் சாந்தியடைய உதவி புரிந்தார்கள்.
நல்ல காரியம் நடக்கும் நேரத்தில் இப்படியொரு தெய்வ வாக்கை கேட்டு பாண்டியனின் மனதில் பாரம் குடிகொண்டது.
ரோஜாவின் வாக்கில் உள்ள வார்த்தைகளை புரிந்துகொள்ள முடியாமல் ஜீவானந்தம் குழம்பி போனார்.
தன்னை சுற்றி என்ன நாடகம் நடக்கிறது. யார் நம்மிடம் நடிக்க போகிறார்கள் என்று முல்லையும் ரோஜா உச்சரித்த வாக்கை எண்ணி குழப்பதுடன் இருக்க,
கதிர்வேலனோ தன் கையில் கட்டி இருந்த மாங்கல்யத்தை புரியாமல் பார்த்து இருந்தார்.
'அண்ணா...என்ன இது, பேசாம நம்ம ரோஜாவை வீட்டுலயே விட்டு வந்து இருக்கணும், இப்போ பாருங்க நடக்க வேண்டிய எந்த நல்ல காரியமும் நடக்காமல் போச்சு' என்று கோவமாக கஸ்தூரி சொன்னதும்,
'மச்சான்...பேசாம இவங்க நாலு பேருக்கும் ஜாதகம் பார்த்த பின்னாடி கல்யாண ஏற்பாடு பண்ணலாமா' என்று கேட்டார் ஜெகதீஷ்.
ரோஜாவின் வாக்கில் பாண்டியனுக்கு இதயத்தில் கனம் கூடி போக,'சரி... நாளைக்கே போய் இவங்களுக்கு ஜாதகம் பார்ப்போம்' என்ற பாண்டியன் அப்படியே சாமி சன்னிதானத்தில் மண்டியிட்டு அமர்ந்துகொண்டார்.
'முல்ல... நீ வா நம்ம ரோஜாவை போய் பார்ப்போம்' என்ற ஜீவா முல்லையின் கை பிடித்து அங்கிருந்து அழைத்து செல்ல,
'மாமா... அந்த தாலியை என்கிட்ட தரீங்களா, நான் பத்திரமா வச்சிக்கிறேன்' என்ற மீனாவை எப்போதும் போலவே கோவமாக முறைத்தபடி ரோஜாவை காண கதிர்வேலனும் சென்று இருந்தார்.
*******************
சில நிமிடங்களுக்கு முன்னே என்ன நடந்தது என்று அறிந்திடாத ரோஜா, அருள் தெளிந்து சோர்வாக எழுந்து அமர்ந்தவளுக்கு முல்லை பருக தண்ணீர் கொடுக்க, தான் எப்படி இங்கே வந்தோம் என அவளின் உள்ளுணர்வுக்கு புரியும் வண்ணம் ரோஜாவின் கைகளில் ஒரு எலுமிச்சை பழம் இருந்தது.
'என்ன மா ரோஜா... இப்போ நீ ஓகே தானே'
என்று ஜீவானந்தம் கேட்க,
'அண்ணா.. நான்... நான் எதாவது தவறுதலா வாக்கு சொல்லிட்டேனா' என்று ரோஜா ஏதோ புரிந்தவளாக கேட்டவளின் கண்களில் கண்ணீர் வர காத்து இருந்தது.
'அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல ரோஜா, நீ எல்லோருக்கும் நல்லதை தான் சொன்ன' என்ற ஜீவா தன் தங்கையை சமாதானம் செய்யும் தருணம், கதிர்வேலன் தன் தங்கையின் முன்னே மண்டியிட்டு அமர்ந்தவன், முள்ளினால் ரோஜாவின் காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்த ரத்தத்தை தன் கைக்குட்டையைக் கொண்டு துடைத்து இருந்தான்.
கதிர்வேலனின் செயலில் ரோஜா சட்டென்று தன் காலை அவள் வசம் இழுத்துக்கொண்டவள், 'அண்ணா... உங்களுக்கு நிச்சயம் நல்லப்படியா முடிஞ்சதா, அப்பா எங்கே' என்று ரோஜா ஜீவானந்ததிடம் கேட்டாள்.
'அது...நிச்சயம்' என்று ஜீவானந்தம் உண்மையை சொல்ல முடியாமல் தயங்கி இருக்க,'ஜாதகம் பார்த்த பின்னாடி நிச்சயம் பண்ணிக்கலாமுன்னு அப்பா சொல்லிட்டாரு' என்ற கதிர்வேலன், கைக்குட்டையை உதறி தன் சட்டை காலரின் உள்ளே சுற்றிக்கொண்டார்.
'என்ன ஜாதகமா... ஏன்!? அப்போ இங்க எதாவது தப்பா நடந்துச்சா' என்று மீண்டும் ரோஜா தயக்கத்துடன் கேட்க,
'அதெல்லாம் இல்ல ரோஜா...எல்லாம் சரியா தான் நடக்குது' என்ற ஜீவா எங்கே உண்மையை சொன்னால் தன் தங்கையின் மனம் வேதனை படுமோ என்ற எண்ணத்தினால் ரோஜாவிடம் எதையும் தெளிவாக சொல்லாமல் மறைத்து இருந்தார்.
என்னதான் இவர்கள் உண்மையை மறைத்தாலும்,அவர்களின் முகமாற்றத்தை அறிந்திருந்த ரோஜா,'முல்ல...நீ சொல்லு. இங்க என்ன நடந்துச்சு' என்று கேட்க,
பொய்யை கோர்வையாக சொல்லத் தெரியாத முல்லை திருட்டு விழி விழித்தாள்.
'சொல்லு டி...என் வாக்குல இங்க எதாவது பிரச்சனை வந்துடுதா' என கேட்டாள் ரோஜா.
'ப்ச் அம்மா... அதான் ஒன்னும் நடக்கலன்னு சொல்றோமே, இன்னும் ஏன் சும்மா அதையே கேக்குறீங்க' என கதிர்வேலன் ரோஜாவை கோபத்துடன் அதட்ட, பயந்தது என்னவோ முல்லை தான்.
கதிர்வேலனின் கோவப்பார்வைக்கே பாவையின் உடல் நடுக்கம் எடுக்க,
'மாமா சார்...ஏன் ரோஜாக்கிட்ட கோவப்படுறீங்க, அவ பாவம்'என முல்லை தன் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு ரோஜாவிற்காக பரிந்து பேசினாள்.
'இவளுக்கு என்னை தவிர வேற யாரை பார்த்தாலும் பாவமா தான் இருக்கும்' என்று கதிர்வேலன் தனக்குள் முணு முணுக்க,
'என்னடா... ஏன் வாய்க்குள்ள பேசிகிட்டு இருக்க, என்னாச்சு' என வினாவினார் ஜீவானந்தம்.
'ம்... இந்த ரவா லட்டை என்கிட்ட பேச வேண்டான்னு சொல்லி வை' என்ற கதிர்வேலன் கோவமாக முகத்தை திருப்பிக்கொள்ள,
நேற்றைய தினம் கதிர்வேலன் கடைக்கு அழைத்த சமயம் முல்லை பேசிய வார்த்தைகளை இன்னும் அவர் மறக்க வில்லை என்று முல்லையும் அறிந்து இருந்தாள்.
'இந்தாடி ரோஜா... அதான் உன்னால இங்க எந்த நல்ல காரியமும் நடக்காமல் போச்சே, இன்னும் ஏன் பிடித்து வைத்த பிள்ளையார் கணக்கா இங்கனயே உக்காந்து இருக்குற, எழுந்துடு வீட்டுக்கு போகலாம்' என கஸ்துரி குத்தல் பேச்சுடன் ரோஜாவை நோக்கி வந்ததும்,
'அத்த...நீங்க சும்மாவே இருக்க மாட்டிங்களா?' என ஜீவானந்தம் கஸ்தூரியை கடிந்துகொண்டார்.
'ரோஜா நீ வா மா நம்ம வீட்டுக்கு போகலாம்' என்று ஜீவானந்தம் தன் தங்கையின் கையை பிடித்து மேலே எழுப்ப, காலில் பட்ட காயத்தினால் ரோஜாவிற்கு அதிகப்படியான வலி ஏற்பட்டு அவள் முகம் வலியால் சுருங்கியது.
'அண்ணா...நீ நகரு நான் அம்மாவை அழைச்சிட்டு வரேன்' என்ற கதிர்வேலன் தன் தங்கையை யாரும் எதிர்பாராத வண்ணம் சட்டென்று அவர் கரங்களில் ஏந்திக்கொள்ள,
'ஐயோ வாத்தி என்ன பண்ணுறீங்க, கீழே இறக்கி விடுங்க' என பதறினாள் ரோஜா.
'என்னை இதயத்துல சுமக்குற அம்மாவை நான் கொஞ்ச நேரம் கையில சுமந்தால் தப்பு இல்லை' என்ற கதிர்வேலன் தன் தங்கையை தூக்கிக்கொண்டு கோவிலில் இருந்து வெளியேற...
'பார்த்தியா முல்லை எப்படியோ அண்ணனும் தங்கச்சியும் பேசிட்டாங்க ' என்று ஜீவானந்தமும் அன்பாக சிரித்துக்கொண்டார்.
'மாமா... நான் போய் கோவிலை சுத்திட்டு வரேன்' என்று முல்லை சொன்னதும்,'நானும் வரேன்' என்ற ஜீவானந்தம் முல்லையுடன் கோவில் வளாகத்தை சுத்தி முடிக்க,
'ஏய் முல்ல...' என்று தன் தோழியை அழைத்துக்கொண்டே சரண்யா தூரத்தில் இருந்து ஓடிவந்தாள்.
'சரண்யா... எப்படி டி இருக்க' என முல்லை விசாரிக்க,
'என்னை விடு நீ எப்படி இருக்க, என்னடி இப்போ நீ உன் அப்பா வீட்டுல இல்லையா' என ஜீவானந்ததை பார்த்தப்படியே சரண்யா முல்லையிடம் கேள்வி கேட்டாள்.
'அப்பா வீட்டுல கொஞ்சம் பிரச்சனை சரண்யா.நான் இப்போ பாண்டியன் மாமா வீட்டுல தான் இருக்கேன்' என்று முல்லை தயங்கியவாரே சொன்னாள்.
'ம்... கேள்வி பட்டேன் முல்ல...நான் உனக்கு போன் பண்ணேன், நீ எடுக்கல, அதான் உன் அப்பாவுக்கு போன் பண்ணி உன்னோட Certificates விஷயமா பேசுனேன். ஆனா அவரு என்னமோ முல்லைன்னு எனக்கு ஒரே பொண்ணே இல்லைனு போனை கோவமா கட் பண்ணிட்டாரு' என்று சரண்யா சொல்ல, முல்லையின் கண்கள் மேலும் கலங்கியது.
'அழாத முல்ல. மாமா கோவம் நமக்கு தெரிந்த விஷயம் தானே. எல்லாம் சரியாகிடும்' என்று ஜீவானந்தம் முல்லைக்கு ஆறுதல் சொல்ல,
'ஏய்... நாளைக்குள்ள போய் Certificate வாங்கிடு டி..நாளைய மறுநாள் காலேஜ்குள்ள வேலை நடக்க போகுது. அப்புறம் நீ இதெல்லாம் வாங்க ரொம்ப காலம் காத்து இருக்கனும்' என்றாள் சரண்யா.
'நாளைக்கா... நாளைக்கு எப்படி!?' என்று முல்லை யோசிக்கும் தருணம்,'நாளைக்கு தானே! பேசாம நம்ம போய் வாங்கிட்டு வந்துடுவோம் முல்லை' என்றார் ஜீவானந்தம்.
'மாமா...காலேஜ் வேலை முடிய சில நேரம் ஒரு நாள் கூட ஆகும் மாமா... நான் வேணும்னா பஸ்ல போயிட்டு வரவா' என்று முல்லை கேட்க,
'ஏன் நான் உன்கூட வர கூடாதா' என பாவமாக கேட்டார் ஜீவானந்தம்.
'ஐயோ... நான் அப்படி சொல்லல மாமா, சரி சரி பெரிய மாமா சம்மதிச்சா நம்ம ரெண்டு பேருமே போயிட்டு வரலாம்' என்ற முல்லையின் பிரச்சனையே இது தான்.
ஆம்... அவளுக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ...
ஆனால் அடுத்தவர் மனம் கவலைப்படக்கூடாது என்று எண்ணியே இவளின் உணர்வுகளை அடக்கி வைத்து பழகிய முல்லைக்கு இந்த நொடி வரை ஜீவானந்தம் மீது இருப்பது காதல் தான் என்று அவளே அவளை நம்ப வைக்க முயற்சி செய்துகொண்டு இருக்கிறாள்.