Member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 32
- Thread Author
- #1
நல்லதொரு நாளில்...மூன்று வருடத்திற்கு முன்னதாகவே ஜீவானந்தம் அவர் விருப்பத்தை முல்லையிடம் தெரியப்படுத்தி இருக்க,
'நான் யோசிச்சு சொல்லுறேன் மாமா...' என்று முல்லை கால அவகாசம் கேட்டவளின் மனதில், அடிக்கடி கைபேசி மூலம் அன்பாக பேசி, அவள் மனதை மாற்றியது ஜீவானந்தம் தான்.
முதலில் தன் மாமன் மகன் என்ற உரிமையில் முல்லை ஜீவாவிடம் பேச ஆரம்பிக்க,
நாளிடைவில் ஜீவானந்ததின் உண்மையான அன்பை முல்லையும் புரிந்துக்கொண்டாள்.
என்னதான் முல்லை ஜீவானந்ததை புரிந்துகொண்டாலும். அவள் மனதில் ஓரத்தில் ஒரு ஏமாற்றம் மறைந்து தான் இருக்கிறது.
அந்த ஏமாற்றம் என்று மாற்றமாக மாறுகிறதோ, அன்று ரோஜாவின் அருள் வாக்கு பலிக்கும் என்பதே கடவுளின் சித்தம்.
********************
இன்றைய தினம் நடக்க இருந்த நல்ல காரியம் நடக்காமல் தடைப்பட்டு போனதை எண்ணி பாண்டியன் சோகமாக கோவிலில் அமர்ந்து இருந்தார்.
'அப்பா... கிளம்பலமா' என தன் தந்தையின் மன நிலையை அறிந்து தனக்கு எந்த வித கவலையும் இல்லை என்பதை போல இயல்பாக பேசினார் ஜீவானந்தம்.
சிறு கலகத்துடன் தன் மூத்த மகனை பார்த்து,'உனக்கு வருத்தமா இல்லையா' என பாண்டியன் கேட்க,
'இதுல வருத்தப்பட என்ன இருக்கு அப்பா, இன்னைக்கு நிச்சயம் நடக்கலைனா இன்னொரு நாள் இதை விட சிறப்பா நடக்கப்போகுது' என ஜீவானந்தம் சிரித்த முகத்துடனே பேசினார்.
தன் மகனின் பொறுமையை எண்ணி மனதார மகிழ்ந்த பாண்டியன்,'ரோஜா எங்கே' என கேட்க,
'எல்லோரும் வேன்ல இருக்காங்க. வாங்க நம்ம போகலாம்' என ஜீவானந்தம் தன் தந்தையை கோவிலில் இருந்து அழைத்து சென்றார்.
'டேய் நாகா வண்டியை எடு' என்று கதிர்வேலன் சொல்ல, நாகராஜன் தன் வாகனத்தை பாண்டியனின் வீட்டை நோக்கி பயணித்தார்.
வேனில் ஏறிய தன் தந்தையை பார்த்து,'அப்பா...' என்று அழைத்த ரோஜாவின் குரலில் கலக்கம் தெரிய,
'எதை பற்றியும் யோசிக்காத ரோஜா, எல்லாம் அந்த முனிஸ்வரன் சித்தம்' என்ற பாண்டியன் மேற்கொண்டு பேசாமல் இருக்கையில் அமர்ந்து இருக்க,
'என் மக ராசி என்னைக்குமே நல்ல ராசி தான். எதுக்கும் முல்லை ஜாதகத்தை வாங்கி நீங்க அவளுக்கு கல்யாண யோகம் இருக்கான்னு பாருங்க, இவ பிறந்ததில் இருந்தே இப்படி தான் எதுவும் இவளுக்கு நிலைக்காது' என்ற கஸ்தூரியின் நாராசமான பேச்சில் முல்லையின் இதழ்கள் மலர, அவளின் விழிகள் மட்டும் கண்ணீரை சிந்தியது.
என்றுமே தனக்காக பரிந்து பேசும் ரோஜா, பாண்டியன் ஏன் ஜீவானந்தம் முதல் யாருமே இந்த இடத்தில் முல்லைக்காக பேசாமல் இருந்தது மேலும் அவளுக்கு வலியை உண்டாக்கியது.
முல்லைக்காக இவர்கள் பரிந்து பேச வில்லை என்பதற்க்காக கஸ்தூரி பேசிய வார்த்தைகளை இவர்களும் நம்புகிறார்களா என்ற எண்ணம் முல்லைக்கு எழும் தருணம்.
'ஏய் எரும...உனக்கு அறிவே இல்லையா, ஒரு நாள் இல்லை ஒரு நாள் அந்த வாய் மேல வண்டியை ஏத்த போறேன் பாரு' என்ற கதிர்வேலனின் குரலில் முல்லை கதிரை பார்க்க,
'நான் என்ன பண்ணேன் நண்பா??ஏன் என்னை வசைபாடுற' என கேட்டான் நாகராஜன்.
'இன்னா கதிரு... என்னை தானே எருமன்னு சொல்லுற' என கஸ்தூரி கேட்க,'நீ அவ்ளோ அழகாவா இருக்க!?' என்று கேட்டார் ஜெகதீஸ்.
'யோவ் என்ன லந்தா... கட்டின பொஞ்சாதியை வயசு வித்தியாசம் இல்லாம அவன் மரியாதை இல்லாம பேசுறான், அவனை என்னன்னு கேக்க உனக்கு துப்பில்ல, என்னை அழகா பழகான்னு கோவப்படுத்தி பாக்குறியா' என்ற கஸ்தூரியின் வார்த்தையை காதில் வாங்காமல் ஜெகதீஷ் வேறு இருக்கையில் சென்று அமர்ந்துக்கொண்டார்.
என்னதான் தன் மீது கோவம் இருந்தாலும் கதிர்வேலன் தனக்காக கஸ்தூரியை கண்டிதத்தை எண்ணி முல்லை சின்னதாக மகிழ்ச்சி அடைய,
இவர்கள் அனைவருமே பொழுது சாயும் நேரத்தில் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.
*********************
'அண்ணா...அதான் இங்க ஒரு நல்லதும் நடக்கலயே,நாங்க கிளம்புறோம். ஏய் மீனா வா போகலாம். நாளைக்கு உனக்கு வேலை இருக்கு தானே' என்று கஸ்தூரி தன் மகளை தன்னோடு அழைக்க,
'அம்மா... நான் இங்கேயே இருக்கேனே' என்று கெஞ்சலுடன் கேட்டாள் மீனா.
'என்ன! இங்க இருக்க போறியா!? ஏய்... என்னதான் இது உன் தாய் மாமன் வீடா இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னாடியே நீ இங்கெல்லாம் தனியா தங்கக்கூடாது புரியுதா' என்று கஸ்தூரி கண்டிப்பாக சொன்னவளின் பார்வை முல்லை மீது படிந்தது.
கஸ்தூரியின் பார்வையில் ஒரு ஏளனம் தெரிய,'நீ உன் அம்மா கூட கிளம்பு மீனா. உன் அம்மாவுக்கு உன் மேல நம்பிக்கை இல்லை போல' என்ற ரோஜா முல்லையின் கை பிடித்து அவள் அறைக்கு அழைத்து சென்றாள்.
'அண்ணா... இருந்தாலும் உன் பொண்ணுக்கு இவ்வளவு வாய் ஆகாது, போற இடத்துல இப்படி எல்லாம் பேசுனா, போன அன்னைக்கே இவ வீடு திரும்ப வேண்டியது தான்' என்ற கஸ்தூரி திரும்பி பார்க்காமல் வேகமாக தன் மகளை அழைத்துக்கொண்டு அவர் வீட்டுக்கு சென்று இருந்தார்.