• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
128
தீமையே 🔱 வெ[கொ]ல்லும்.

✨படலம் - 5

கதிருக்கும் முல்லைக்கும் எப்படி பழக்கம் என்று சித்ரா யோசிக்கும் நேரம்,'பாப்பா பாப்பா' என்று மாறன் பதற...
'முல்ல...' என்று கதிரும் பதறி தான் போனான்.

'அக்கா ரத்தம் வருது' என்று கந்தன் துடிக்க,'வா வா உடனே ஹாஸ்பிடல் போகலாம்' என்ற கதிர் முல்லையை கை தாங்கலாக தூக்கினான்.

தன் நெற்றியில் வடிந்த ரத்தத்தை கூட பொருட்படுத்தாமல் முல்லை கதிரை ஆச்சிரியமாக பார்த்து இருக்க...
'ஈஷா...' என்று அந்த இடமே அதிரும்ப்படி கத்தினாள் சித்ரா.

'மேடம் நீங்க இருங்க நான் பார்த்துக்குறேன்' என்ற ஈஷா வேகமாக அவள் இயக்கும் காரில் இருந்து முதல் உதவி பெட்டியை எடுத்து முல்லைக்கு முதலுதவி கொடுக்க,'முல்ல வா ஹாஸ்பிடல் போகலாம்' என்றான் கதிர்.

'ஆமா பாப்பா... வா ஹாஸ்பிடல் போகலாம்' என்று மாறனும் சொல்ல,
'இன்னும் 10 minsல டாக்டர் இங்க வருவாரு. இப்போ நீங்க மூணு பேரும் உள்ள போகலாம்' என்று சித்ரா..முல்லை மாறன் கந்தனை பார்த்து சொன்னவள்,'ஹே யூ... ஜஸ்ட் கெட் அவுட்' என்றவளின் கண்கள் கதிரை சுட்டேரித்தது.

'ஏய்... நீ யாருடி என்னை வெளியே போக சொல்ல... முல்லை நீ வா நம்ம ஹாஸ்பிடல் போகலாம்' என்ற கதிர் முல்லையின் வலது கையை பிடித்து தன்னோடு அழைத்ததும், அவன் பின்னே பூனைக் குட்டியை போல முல்லை செல்ல... சட்டென்று அவளின் இடது கையை பிடித்து தன் வசம்
இழுத்தாள் சித்ரா.

சித்ரா இழுத்த வேகத்தில் முல்லை சுருண்டுப்போய் ஈஷா மீது மோதி நின்று விட..' ஏய்... அவளை என்கூட அனுப்பு' என்றான் கதிர்.

கதிரின் பேச்சைக்கேட்டு அடி மேல் அடி வைத்து அவனை நெருங்கி,'இன்னும் ஒரு நிமிஷத்துல உன்கூட வந்த அல்லு சில்லை எல்லாம் அழைச்சிக்கிட்டு இங்க இருந்து நீ போகலைனு வையேன்!!' என்று சித்ரா தன் வார்த்தையை நிறுத்தினாள்.

சித்ரா மீது ஏற்கனவே கோவமாக இருந்த கதிர்,'என்னடி... என்ன பண்ணுவ!?' என்று அவளிடம் மீண்டும் சண்டைக்கு நிற்க,
'முழுசா வீடு போய் சேர மாட்ட' என்றவளை பார்த்து கதிர் நக்கலாக சிரித்தான்.

'கதிர் கதிர்... இங்க என்னமோ சரியில்ல.நீ வா நம்ம போய் அப்பாவை அழைச்சிட்டு வரலாம். அங்க பாரு உதயா வேற வலியால துடிக்கிறான்' என்று ரம்யா கன்னம் வீங்கிய நிலையில் கதிரை தன்னோடு அழைக்க.
'போங்க போங்க... வீட்டுல யாராவது பெரியவுங்க இருந்தா அழைச்சிட்டு வாங்க' என்றாள் சித்ரா.

'ஏய்... நான் யாருன்னு தெரியாம நீ என்கிட்ட மோதி பாக்குற டி' என்று கதிர் பல்லை கடித்துக்கொண்டு சித்ராவை முறைக்க,

'ஹேய்... நீ எல்லாம் என் லிஸ்ட்லையே இல்ல...வீனா என்கிட்ட முறுக்கிகிட்டு நிக்காத. அப்புறம் முடிச்சு விட்டு போய்கிட்டே இருப்பேன்' என்ற சித்ரா
'உள்ள போங்க' என்று மாறனை பார்த்து கர்ஜித்தாள்.

சித்ராவின் கோவத்தை கண்டு மாறன் சற்று பயந்து போனவன் முல்லையை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல... முல்லையோ கதிரை ஏக்கமாக பார்த்தப்படி வீட்டுக்குள் போனவளின் மொத்த கோவமும் சித்ரா மீது தான் இருந்தது.

கதிர் ரம்யா என்று இருவரும் சித்ராவை முறைத்து பார்க்க,'Mr. செல்வா' என்று வாட்ச் மேனை மரியாதையுடன் அழைத்தவள், 'இனி இவங்க யாரும் இந்த பங்களாக்குள்ள வர கூடாது. மீறி வந்தா' என்று வார்த்தையை நிறுத்தி... கதிரை முறைத்து பார்த்தவள்,'பரமனுக்கு நீ மகனா இருக்க மாட்ட' என்றவள் ரெண்டே அடியில் பங்களாக்குள் சென்று இருந்தாள்.

'சார்.... ஏன் இப்படி தேவையில்லாம எங்க மேடமை கோவப்படுத்தி பார்க்குறிங்க. இந்த பங்களாவை அவங்க காலையில தான் வாங்குனாங்க. உங்களுக்கு எதாவது பேசணும்னா XMla சம்பத் சாரை போய் கேளுங்க' என்ற ஈஷாவும் சித்ராவை தொடர்ந்து பங்களாக்குள் நுழைந்து இருந்தாள்.

'கதிர் இங்க என்னமோ சரியில்லை...நீ வா நம்ம அப்பாகிட்ட போய் பேசி இவளை இந்த ஊரை விட்டே அடித்து துரத்துவோம்' என்று ரம்யா சொல்ல...
'ஆனா முல்லை எப்படி இங்க இருக்குறா?' என்று வாய் விட்டு புலம்பிய கதிர் அதே யோசனையோடு கீழே சரிந்து கடந்த உதயாவை காரில் தூக்கி போட்டான்.

'கதிர் யாரு அந்த பொண்ணு!?' என்று ரம்யா முல்லையை பற்றி விசாரிக்க... அதே தருணம் வெள்ளை நிற காரில் பெண் மருத்துவர் ஒருவர் அந்த பங்களாவின் வாசலில் வந்து இறங்கினார்.

'கதிர் இவங்க Dr.சீதா ஆன்ட்டி தானே!?' என்ற ரம்யா வேகமாக அந்த மருத்துவரை நெருங்கியவள்.'ஆன்ட்டி... நல்ல நேரத்துல வந்திங்க நீங்க... வாங்க வாங்க...காருல உதயா பேச்சு மூச்சு இல்லாம இருக்கான்'என்ற ரம்யா அந்த மருத்துவரின் கையை பிடித்து தன்னோடு அழைத்தாள்.

'ஹாங் ரம்யா... இரு இரு.. ஒரு பத்து நிமிஷத்துல நான் CR மேடம் ஏன் போன் பண்ணாங்கன்னு கேட்டுட்டு வந்து உதயாவை பார்க்குறேன்' என்ற மருத்துவர் தலைத்தெரிக்க பங்களாக்குள் ஓடியதும்.

'ஏய் கதிர்... யாருடா அவ!?. அவ ஒரு ஆளுன்னு இந்த டாக்டர் X mla பையனை கூட பார்க்காம போறாங்க' என்ற ரம்யாவின் கேள்வி தான் கதிரின் மனதிலும் எழுந்து இருந்தது.

'கதிர் அங்க பாரு உதயா வலியில துடிக்கிறான்' என்று ரம்யா சொல்ல...
திரும்பி அந்த பங்களாவை அழுத்தமாக பார்த்த கதிர், புருவம் இடுங்கி உதயாவின் காரில் ஏறி அமர்ந்தவன் பல குழப்பதோடு ரம்யாவை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று இருந்தான்.
 
Joined
Feb 6, 2025
Messages
128
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

இதே தருணம் மருத்துவர் சீதா பங்களாக்குள் நுழைய...அங்கே சாய்வு இருக்கையில் சித்ரா கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தவள்,'ஈஷா...' என்று கண்ணால் கட்டளையிட்டப்படி அவள் அறைக்கு சென்றாள்.

'டாக்டர்... இவங்களுக்கு தான் அடிபட்டு இருக்கு' என்று ஈஷா முல்லையை சுட்டிக்காட்ட,'அடி எல்லாம் படல, இப்போ மேல போனாங்களே அவங்க தான் என்னை அடிச்சாங்க' என்று சித்ரா மீது புகார் செய்தாள் முல்லை.

'பாப்பா கொஞ்சம் அமைதியா இரு' என்று மாறன் முல்லையை சமாதானம் படுத்த.
'நீ என்னமா CR மேலையே பழி சொல்லுற...என்கிட்ட சொன்ன மாதிரி வேற யாரிடமும் பேசிடாத' என்ற டாக்டர். முல்லைக்கு மேலும் சிகிச்சை கொடுத்தார்.

'என்ன நீங்க... எனக்கு இந்த காயம் பட்டதே அவங்கனால தான்னு சொல்லுறேன். ஆனா நீங்க என்னமோ அவங்களுக்கு சப்போர்ட் பண்றீங்க' என்றாள் முல்லை.

'நீ யார பற்றி குறை பேசுறோம்ன்னு தெரியாம பேசிகிட்டு இருக்க' என்ற மருத்துவர். சில மருந்தை லெட்டர் பேடில் எழுதி ஈஷாவிடம் நீட்டியவர்,'அடி ஆழமா எல்லாம் படல. எதுக்கும் pain கில்லர் ஆயின்மென்ட் எழுதிருக்கேன்' என்றார்.

தனக்கு அடிப்பட்டதற்கு காரணமே சித்ரா தான் என்று எண்ணிய முல்லைக்கு மருத்துவர் சித்ராவை பற்றி உயர்வாக பேசியது பிடிக்காமல் போக, அவள் வெடுகென்று எழுந்து தன் அறைக்குள் சென்று கதவை அடித்து சாத்திகொண்டாள்.

'தேங்க்ஸ் டாக்டர். உங்க பீஸ்' என்று ஈஷா சொல்லும் முன்னே,'ஐயோ மேடம்... CR என் பையனுக்கு பண்ண உதவிக்கு நான் காலமெல்லாம் அவங்களுக்கு கடன் பட்டு இருக்கேன்' என்ற மருத்துவர்.'நான் கிளம்புறேன். CR கிட்ட சொல்லிடுங்க' என்றார்.

மருத்துவர் அங்கிருந்து வெளியேறியதும்,
'உங்க சிஸ்டரை பார்த்துக்கோங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல மருந்து எல்லாம் door டெலிவரி ஆகிடும்' என்றாள் ஈஷா.

சித்ராவின் அதிகார தோரணை. அவள் வாட்ச் மேன்னுக்கு கொடுக்கும் மரியாதை. மருத்துவர் சித்ராவை பற்றி உயர்வாக பேசிய விதம் என்று மாறன் அனைத்தையும் ஒன்றிணைந்து பார்த்தவன்.
'ஏங்க...உங்க மேடம் என்ன மலேசியாவுல பெரிய டான்னா!?' என்று ஈஷாவிடம் கேட்டான்.

மாறனின் கேள்விக்கு ஈஷா மெலிதாக சிரித்தவள்,'ஆமா இன்னைக்கு என்ன லஞ்ச் பண்ணட்டும்!?' என்று கேட்டுக்கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள்.

'என்னங்க... அப்போ நீங்க தான் எங்களுக்கு இனிமே சமையல் பண்ண போறீங்களா' என்ற மாறனும் சமையலறைக்குள் நுழைந்தான்.

'இல்ல... இன்னைக்கு மட்டும் தான் நான் சமையல் பண்ணுவேன். நாளையில் இருந்து நமக்கு சமையல் பண்ண இன்னும் கொஞ்ச நேரத்துல மலேசியாவில் இருந்து எங்க குக் வருவாங்க' என்றாள் ஈஷா.

'என்ன!! சமையல் பண்ண மலேசியாவில் இருந்து ஆள் வராங்களா!?' என்று கந்தன் ஆச்சிரியமாக கேட்க,'ஆமா கந்தா' என்றாள் ஈஷா.

'ஏன்!! இங்கெல்லாம் குக் இல்லையா என்ன!?' என்று மாறன் கேட்க, 'மேடம் நம்பிக்கைக்குறிய ஆளுங்கள மட்டும் தான் அவங்க கூட வச்சிப்பாங்க' என்றாள் ஈஷா.

'என்னமோ போங்க. உங்க மேடமை பார்த்தா புரியாத புதிர் மாதிரியே இருக்கு' என்ற மாறன் நேரே முல்லையின் அறைக்குள் செல்ல... அவனை தொடர்ந்து கந்தனும் அங்கே சென்றான்.

சில நிமிடங்களில் ஈஷா உணவை தயாரித்தவள் நேரே சித்ராவின் அறைக்கு செல்ல,'அந்த பரமன் மகனுக்கும் கீழ இருக்குற பொண்ணுக்கும் என்ன சம்மந்தம்!?' என்று கேட்டாள் சித்ரா.

அவள் கேள்வியில் குழம்பிய ஈஷா,'யாருங்க அது பரமன் மகன்?' என்று கேட்க,

'கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் முன்னே நின்னு துள்ளிக்கிட்டு இருந்தானே, அவன் தான் பரமாவின் ஒரே மகன்' என்றாள் சித்ரா.

இதுநாள் வரை பல நாடுகளை சித்ராவுடன் சுற்றி வந்த ஈஷாவுக்கு எப்படி இந்தியாவில், அதுவும் இந்த கிராம பகுதியில் இருக்கும் கதிரின் குடும்பத்தை பற்றி அணைத்தும் தெரிந்து இருக்க கூடும் என்ற சந்தேகம் எழுந்தது.

ஈஷாவின் முக மாற்றத்தை வைத்தே அவளின் எண்ண ஓட்டத்தை அறிந்து இருந்த சித்ரா,'ரொம்ப யோசிக்காத. சீக்கிரமா உனக்கு எல்லா உண்மையும் தெரிய வரும்' என்றாள்.

'மேடம்... அந்த பையனை எப்படி முல்லைக்கு தெரியுமுன்னு நான் வேணா மாறான்கிட்ட கேட்டு சொல்லவா!?'என்று ஈஷா கேட்க,

'ஹ்ம் ஹ்ம்...அது சரிவராது. Leave it நானே இந்த விஷயத்தை பார்த்துக்குறேன்' என்றாள் சித்ரா.

'மேடம்... நான் அவங்களுக்கு சாப்பாடு ரெடி பண்ணிட்டேன். நீங்க...' என்று ஈஷா வார்த்தையை இழுக்க...'நீங்க சாப்பிடுங்க. நான் வந்து எனக்கு தேவையானதை பார்த்துக்குறேன்' என்றாள் சித்ரா.

ஈஷாவிற்கு சித்ராவை பல வருடமாக தெரிந்து இருந்தாலும், இன்று வரை சித்ரா அவளுக்கான உணவை அவளே தயார் செய்து சாப்பிடுவதற்கு காரணம் என்ன என்று பல முறை யோசித்து இருந்தாலும், அவளிடம் நேரே கேட்கும் தைரியம் தான் ஈஷாவிற்கு இல்லாமல் போனது.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top