Member
- Joined
- Nov 16, 2024
- Messages
- 45
- Thread Author
- #1
அவள் பெயர் தமிழரசி,
காதலித்து அந்தக் காதலை பெற்றோர் உற்றோருக்காக மறந்து அவர்கள் காட்டிய மாப்பிள்ளையுடன் தனது மணவாழ்க்கையை ஆரம்பித்தாள்,
அவள் நினைத்ததை விட அவளது மணவாழ்க்கை நன்றாக அமைந்தது தனக்கு வாய்த்த அன்பான கணவரின் காதலில் அவளது முதல் காதலை கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்....
மணவாழ்கை நிறைவாக இருக்க கணவன் மனைவி இருவரது காதலுக்கு அடையாளமாய் ஒரு ஆண் மகவயும் பெற்றெடுத்தாள் வாழ்கை இனிமையாக சென்று கொண்டிருந்தது ஆனால் இந்த இனிமை எப்போதும் வாழ்வில் நிலையாய் இருப்பது கிடையாதே நிலையற்ற வாழ்வில் ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி என்பது தானே நியதி அப்படித்தான் தமிழ் அவள் வாழ்விலும் வந்தது.....
அன்று ஞாயிற்று கிழமை என்பதால் கணவன் குழந்தையோடு வார இறுதியை கொண்டாட திரையரங்கு சென்று பின் மதிய உணவிற்காக அந்த ஹோட்டல் உள்ளே நுழைந்தாள் அந்த நுழைவு அவளது வாழ்வை மாற்ற போகிறது என்பதை அப்போது அவள் அறிந்திருக்கவில்லை .....
" தமிழ் "
" மாமா "
" சாப்பிட என்ன வேணும் "
" நீங்களே எதாவது சொல்லுங்க மாமா "
" உனக்கு என்ன வேணும் சொல்லு டி "
" நீங்க என்ன சாப்பிட போறீங்களோ அதையே எனக்கும் சொல்லுங்க மாமா "
" என்ன தமிழ் நீ "
" ஏன் மாமா "
" இன்னைக்கு நீ என்ன சாப்பிட விரும்புறயோ அது தான் மாமாவும் சாப்பிட போறேன் டி அதனால நீயே ஆர்டர் பண்ணு "
" அச்சோ மாமா எனக்கு என்ன தெரியும் நீங்களே சொல்லுங்க "
" தமிழ் நீயும் படிச்ச பொண்ணு டி உனக்கும் சில விஷயம் தெரியும் அத எல்லாம் இந்த மாதிரி சமயம் கிடைக்கும் போது தான் நான் தெரிஞ்சுக்க முடியும் அதனால நீயே உனக்கு என்ன புடிக்குதோ அத ஆர்டர் பண்ணு நாம சாப்பிடுவோம் " என்று அவளின் கணவர் சொல்ல அதற்கு மேல் மறுத்து பேச அவளிடம் வழி இல்லாமல் போனது....
கையில் மெனு கார்டை எடுத்து பார்த்தாள் அதில் ஏராளமான உணவு வகைகளின் பெயர் இருந்தது அதிலும் சில பெயர்கள் என்ன என்று அவளுக்கு புரியவில்லை அது எப்படி இருக்கும் என்றும் அவள் அறிந்திருக்கவில்லை அதனால் அவளிடம் ஆர்டர் கொடுப்பதில் ஒரு சிறிய தடுமாற்றம் தெரிந்தது அதை உணர்ந்து கொண்ட தமிழின் கணவர் அவளின் அருகில் நெருங்கி அமர்ந்து அவளுக்கு ஒரு ஒரு உணவின் வகைகளையும் அது எப்படி இருக்கும் என்ற விளக்கத்தையும் கொடுத்தார் அதனால் அவளுக்கு இப்போது ஆர்டர் கொடுப்பதில் பெரிய சிரமம் இருக்கவில்லை உணவினை ஆர்டர் கொடுத்து சாப்பிட்டு முடித்த தமிழின் கணவர் குழந்தையை தூக்கி கொண்டு பில் கொடுக்க சென்றார், தமிழ் அப்போது தான் உணவினை உண்டு முடித்து கை கழுவ செல்ல அங்கு கை கழுவும் இடத்தில் நின்ற உருவத்தை பார்த்து திகைப்பு அடைந்தாள், ஏனோ அந்த உருவத்தை கண்டதும் ரத்த ஓட்டம் அதிகமானது, கை கால் நடுக்கம் கொடுக்க ஆரம்பித்து, உடலில் வியர்வை சுரப்பி தாறுமாறாக வெளியேறியது......
ஆனால் அவளுக்கு எதிரில் நின்ற உருவம் அவளை சிறிதும் கண்டுகொள்ளாமல் அவளை கடந்து வெளியே சென்றது.... அந்த உருவம் சென்ற பின்பும் கூட அவள் அதே நிலையில் நின்று இருக்க அவளின் கணவர் வந்து அவளை உளுக்கினான்,
" தமிழ் "
அதில் திடுக்கிட்டு சுயத்திற்கு வந்தவள் மிரண்ட விழிகளோடு கணவனை பார்க்க,
" என்ன தமிழ் கை கழுவ வந்த இடத்தில அப்படியே நிக்குற என்ன ஆச்சு "
அவள் பதில் சொல்ல திணறி வாயிலிருந்து வார்த்தையை கொண்டு வர முயற்சி செய்ய, அவளுக்கு சிரமம் கொடுக்க வேண்டாம் என்று எண்ணினானோ என்னவோ தெரியவில்லை,
" கை கழுவிட்டு வா தமிழ் போவோம் " என்றான் சிரித்து கொண்டே, அப்போதைய நிலைக்கு அவளுக்கு அது நிம்மதியை கொடுத்தாலும் அவளுக்கு அதற்கு மேல் ஏனோ இயல்பாய் இருக்க முடியாமல் போனது. அதனால் அதற்கு மேல் எங்கும் வெளியில் செல்லாமல் தனது கணவரிடம் வீட்டிற்கு செல்லலாம் என்று கூறி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்,
மதிய உணவு முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்ததால் தமிழின் கணவர் வந்ததும் படுக்கை அறைக்குள் நுழைந்து நித்திரையில் ஆழ்ந்தார்.
தமிழின் எண்ணம் முழுவதும் ஹோட்டலில் பார்த்த அந்த உருவத்தின் மீது நிலைத்திருந்தது, ஆம் அது அவளது முன்னாள் காதலன் தான்,
தனது நிலையினை அவனிடம் விளக்கிக் கூறி மனம் ஒத்து அவனிடமிருந்து விலகி வந்து தான் இந்த திருமண பந்தத்தில் தன்னை இணைத்துக் கொண்டாள் தமிழ். அவளுக்கு திருமணம் ஆகி ஆண்டு ஐந்து கடந்து விட்டது இதுவரை தனது முன்னாள் காதலனை அவள் கண்டதுமில்லை, அவனை பற்றி நினைத்ததும் இல்லை, அவனைப் பற்றிய நினைவுகள் எதுவும் இல்லாத போதிலும் இந்த எதிர்பாராத நேரத்தில் அவளின் முன்னால் அவன் வந்து நின்றதும் அவனின் தற்போதைய தோற்றமும் அவளை குழப்பம் அடைய செய்திருந்தது....
எப்போதும் தனது தாடியை அழகாய் ட்ரிம் செய்து, மீசையை கச்சிதமாக வைத்திருக்கும் அவன் தனது முகத்தில் சிகை அலங்காரம் என்பதே மறந்து போனது போல் தோற்றம் அளித்தான், அவனது கட்டழகான மேனியும் தனது இயல்பை இழந்து மெலிந்து போயிருந்தது. அவனது இந்த தோற்றம் ஏனோ அவளை வருத்தி கொண்டிருந்தது, அதற்கு காரணமும் இருந்தது,
கடைசியாக அவனிடம் பேசிவிட்டு பிரிந்து வரும் பொழுது அவன் உதிர்த்த வார்த்தைகள்,
" தமிழ்,
எனக்கு எப்பவும் உன்னோட சந்தோசம் தான் முக்கியம் நான் உன்ன விரும்பினேன்னு சொல்றத விட உன்னோட சந்தோசத்தை தான் அதிகமாக விரும்பினேன் இப்போ இப்படி ஒரு சூழல்ல நீ என்ன விட்டு பிரிஞ்சு போய் இன்னொரு கல்யாணம் பண்ணுனா தான் சந்தோசமா இருப்பேன்னு நீ நினைக்கிறது உனக்கு சந்தோசத்தை கொடுக்கணும்னா அந்த சந்தோஷத்தை உனக்கு கொடுக்குறதுக்கு நான் தயாராக இருக்கேன். இதுக்கு மேல உன்னோட வாழ்க்கையில எந்த சூழலிலும் குறுக்க வந்து நா நிக்க மாட்டேன் அதே போல என் வாழ்க்கையை பத்தின கவலையும் உனக்கு இருக்க வேண்டாம் உன்னோட நினைவுகள் என்னைக்கு என்னை விட்டு போகுதோ அன்னைக்கு தான் எனக்குன்னு தனியா ஒரு வாழ்கையை நா அமைச்சுக்குவேன் நீ எங்க இருந்தாலும் சந்தோசமா இரு " என்று சொல்லிவிட்டு தமிழின் பதிலை எதிர்பாராமல் அவளிடம் விடை பெற்று சென்றுவிட்டான் அவன்.
அன்று சென்றவன் இன்று தான் அவளின் கண்களில் தென்படுகிறான் அவன் சொன்னது போலவே அவளது வாழ்க்கையை விட்டு விலகி விட்டான்.
ஆனால் அவனது இந்த தோற்றம் தான் அவளது சிந்தையை சிதைத்தது அவனது வாழ்க்கையில் இருந்து தான் விலகி விட்டோமா இல்லையா என்ற சிந்தனையை அவளுக்கு கொடுத்தது...
அவனது அந்த தோற்றத்தை பார்த்ததும் நிச்சயமாக அவனது வாழ்க்கையில் இருந்து தான் விலகி இருக்க சற்றும் வாய்ப்பு இல்லை என்று அவள் நினைத்துக் கொண்டாள் அது உண்மையாக கூட இருக்கலாம்....
அதை நினைக்க நினைக்க அவளது மன நிம்மதி கொஞ்சம் கொஞ்சமாக கெட்டுப் போய்க் கொண்டே இருந்தது இத்தனை காலம் இருந்த மகிழ்ச்சி அவளது மனதை விட்டு விலகியதைப் போன்று உணர்ந்தாள் தன்னால் ஒருவரின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற குற்ற உணர்வை அவளால் தவிர்க்க முடியவில்லை, அந்த உணர்வு மெது மெதுவாக அவளது வாழ்க்கையை நரகமாக்கி கொண்டிருந்தது....
அன்பான கணவனிடமும் ஆசை குழந்தையிடமும் தனது அன்பை செலுத்த முடியாமலும் அவர்களது அன்பை முழுமையாக அனுபவிக்க முடியாமலும் தவித்துக் கொண்டிருந்தாள்....
அப்படியே நாட்கள் நகர நகர அவளது நடைமுறையிலும் மாற்றம் வந்து ஒட்டி கொண்டது இதை எப்படி சமாளிப்பது என்று அறியாமல் அவள் தவித்து கொண்டு நாட்களைக் கடத்த முடியாமல் போக தனது கணவனிடம் தனது நிலையை பற்றிய உண்மையை கூறி விடலாம் என்ற முடிவிற்கு வந்தாள்,
ஆனால் அவளது இன்னொரு மனம்
' வேண்டாம் கூறி விடாதே அப்படி நீ கூறினால் அது உன்னோட இந்த மகிழ்ச்சியான வாழ்வை பாதிப்பதாக கூட இருக்கலாம் அதனால தயவு செய்து கூற வேண்டாம் என்று அவளிடம் மல்லுக்கு நின்றது.... அவளது இந்த மன போராட்டம் அவளது உடல் நிலையை வெகுவாக பாதித்தது...
தமிழின் சமீபத்திய நாட்களின் நடவடிக்கையை அவளது கணவன் கண்காணித்துக் கொண்டுதான் இருந்தான் ஆனாலும் அவளது மன குழப்பத்தை அவளே தீர்க்கட்டும் நாம் ஏதாவது கேட்க போய் அது அவளை மேலும் பாதிப்படைய செய்து விடக்கூடாது என்று அமைதி காத்தான் ஆனால் அவளது நிலை இன்னும் மோசமாகிக் கொண்டே போனதாலும் அவளது மனதில் இன்னும் ஒரு தெளிவு கிடைக்கவில்லை என்பதையும் அவன் உணர்ந்த பின்பு இதற்கு மேல் கேட்காமல் விட்டால் நிச்சயமாக பின் விளைவு மிக மோசமாக இருக்கும் என்பதை தமிழின் கணவர் உணர்ந்து கொண்டார்.
அதனால் இன்று இரவில் அவளிடம் இதைப் பற்றி எப்படியாவது கேட்க வேண்டும் அதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்ற எண்ணத்தோடு இரவு படுக்கை அறையில் காத்திருந்தான்...
வேலை முடிந்தவுடன் இரவு விரைவாக படுக்கையறைக்கு வந்துவிடும் தமிழ் இப்போது அந்த வழக்கத்தை எல்லாம் மாற்றி இருந்தாள், படுக்கை அறையில் வந்து கணவனுடன் ஊடலும் கூடலுமாக இன்பத்தில் திழைத்தவள் இப்போது மொத்தமாக அதிலிருந்து விலகி இருந்தாள்.
அதையும் தமிழின் கணவர் அவளுக்காக ஏற்று கொண்டார் அவளது எண்ணத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இத்தனை நாள் எதையும் பெரிது படுத்தாமல் விட்டு விட்டான். தான் அப்படி விட்டதே தவறு என்பதை அவன் உணர்ந்து கொண்டு இப்போது அவளிடம் கேட்க தயாராக இருந்தான், ஆனால் அவள் இன்னும் அறைக்கு வரவில்லை காத்திருந்தான் நேரமும் மெதுமெதுவாக கழிந்து கொண்டே இருந்தது.
நேரம் நள்ளிரவை எட்டியிருந்தது அப்போதும் அவள் அறைக்கு வராததால் அவளை தேடி வெளியே வந்தான் வீட்டின் பின்புறம் நின்று வானத்தை பார்த்து சிலையாக நின்று கொண்டிருந்தாள் தமிழ்.....
அவளை எவ்வளவு அழைத்தும் திரும்பி பார்க்கவில்லை அவளிடம் எந்த அசைவும் இருக்கவில்லை அவளது உணர்வுகள் யாவும் அற்று போயிருந்தது அவளது சுயநினைவும் இப்போது இல்லாமல் போனது......
தன் ஆசை மனைவியை அப்படி கண்டதும் துடித்துப் போனான் தமிழின் கணவன்.....
" அய்யோ தப்பு பண்ணிட்டேனே எனக்கு உன் நடவடிக்கையில சின்னதா ஒரு மாற்றம் தெரியவும் உன்கிட்ட வந்து என்னன்னு கேட்டு இருந்தா என்னைக்கு உனக்கு இந்த நிலைமை வந்திருக்காதே அத நான் கேட்காம பெரிய தப்பு பண்ணிட்டேனே என்று கதறி துடித்தான் தமிழின் கணவன்
கதை முற்றும்......
கணவனோ மனைவியோ தனது துணையிடம் சிறியதாக ஒரு மாற்றம் தெரிந்தாலும் அது என்னவென்று உடனடியாக கேட்டு அவர்களிடம் விளக்கம் பெற்றுக் கொள்வது நல்லது. அப்படி விளக்கம் பெற வேண்டுமென்றால் உனக்கு எத்தனை பிரச்சனை வந்தாலும் துணையாக நான் இருக்கேன் நீ எதுக்கும் கலங்க வேண்டாம் என்ற நம்பிக்கையை கொடுக்க வேண்டியது ஒவ்வொரு துணையோட ( கணவன் / மனைவி ) கடமை.
அன்புடன்
மாரிமதி