Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 387
- Thread Author
- #1
பொள்ளாச்சி:
செழியா இது தேவையா என்று ருத்ரன் கேட்க,கண்டிப்பாக ணா.அங்க எது நடந்தாலும் நீங்க எல்லாரும் அமைதியா இருங்க அது போதும்,சரி டா. என்னமோ சொல்ற பண்ணிட்டு போ என்றான்.
கிச்சனுக்குள் அடி எடுத்து வைக்கும் போது உள்ளே ஒரு பெண்மணி இருப்பதை பார்த்த ஷமீரா,அம்மா கொஞ்சம் டீ போட்டுக்கட்டுமா என்கவும்,தனது மகள் குரலாச்சே என்று அடுப்பில் வேலையாக இருந்தவர் திரும்ப...
எஸ்தரை பார்த்தவளோ அம்மா என்று அதிர்ந்து போக,அவரோ கையில் இருந்த பாத்திரத்தை கீழே விட,அதில் இருந்த பொருட்கள் எல்லாம் நாலா பக்கமும் சிதறி ஓடியது.
பின்னர் சுதாரித்தவள் நீ எப்படிம்மா இங்கே என்று அவர் கையை பிடித்து கேட்க,அதில் சுய நினைவிற்கு வந்தவர் ஷமீ நம்ப மோச போய்ட்டோம் டி என்று மகளை அணைத்துக் கொண்டு கதறி அழுதார்.
தாய் அழுவதை பார்த்தவள் என்னம்மா உன் புருஷனுக்கு இன்னொரு பொண்டாட்டி இருக்கிற விஷயம் தெரிஞ்சிருச்சா என்கவும்,அழுது கொண்டிருந்தவரோ அதிர்ந்து போய் தனது மகளை பார்க்க,விரக்தியாக சிரித்தவள் எனக்கு தெரிந்து 15 வருஷம் ஆகுது மா என்று அலுங்காமல் குண்டை தூக்கி எஸ்தரின் தலையில் போட்டாள்.
மகள் சொல்லியதை கேட்டவர் உனக்கு தெரியுமா ஷமீ என்று கண்ணீரோடு கேட்க,தெரியும் மா.உன் புருஷனை நான் அப்பான்னு கூப்பிட்டு எத்தனை வருஷம் ஆகுதுன்னு யோசிச்சு பாத்திருக்கியா என்கவும்,அப்போது தான் மகள் சில வருடங்களாக அப்பா என்று சொல்லாமல் உன் புருஷன் என்று சொல்வது நினைவுக்கு வந்தது..
உனக்கு எப்படி தெரிஞ்சது என்று அழுது கொண்டே கேட்க உன் புருஷனும் அவரோட அம்மாவும் பேசிக்கிட்டு இருந்ததை கேட்டன் மா.
உலகத்திலேயே இல்லாத புருஷன் உனக்கு கிடைச்சிருக்க போல நீ பேசிட்டு இருக்க.அந்த ஆளு அப்படின்னு சொல்லி உன்னை கஷ்டப்படுத்த எனக்கு மனசு வரலை.அதனாலதான் அந்த உண்மை தெரிஞ்ச பிறகு என் வாழ்க்கையில் இருந்து அப்பா என்கிற உறவை ஒதுக்கி வைத்து விட்டேன்.
"அது போய் தொலையட்டும்"
நீ எப்படி இங்கு வந்த?உனக்கு எப்படி வெற்றி அண்ணாவை தெரியும்?,அப்பொழுது உள்ளே வந்த செழியனை பார்த்த எஸ்தர்,வாங்க தம்பி என்றார்.
அங்கு கண்ணீரோடு இருப்பவரை பார்த்தவன் ஏங்கத்தை இவ்வளவு நடந்திருக்கு உங்க பொண்ணு கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு உங்களுக்கு தோணவே இல்லையா?
நீங்க பாட்டுக்கு வீட்டை விட்டு போயிட்டீங்களே அங்கே அந்தோணி அப்பாவும் பாட்டியும் உங்களை நினைச்சு எவ்வளவு வருத்தப்படுறாங்கனு யோசிக்கவே இல்லையா? உங்கள் கவலையிலே பாட்டிக்கு உடம்பு முடியாமல் போய்விட்டதாமே என்றான்.
என்னங்க சொல்றீங்க என்று கணவன் சொன்னதை கேட்ட ஷமீராவோ அதிர்ந்து போய் கேட்க,அத்தை வீட்டை விட்டு போய் இரண்டு மாசம் ஆகுது.எனக்கே நேற்று தான் இந்த விஷயமே தெரியும்.அண்ணன் சொன்னாங்க..
அதன் பிறகு தான் இங்கு கூப்பிட்டு வந்தேன் என்கவும்,கண்ணீரோடு நிற்கும் தனது தாயின் கண்களை துடைத்து விட்டவள் பெத்த பொண்ணு நான் உயிரோட தான் இருக்கேன் மா...
நீயும் என்னை வேணாம்னு தலை மூழ்கிட்டியா?...அய்யோ ஷமீ அப்படி எல்லாம் பேசாதே டி. தாலி கட்டின புருஷன் இப்படி ஒரு துரோகியா இருக்கான்னு தெரிஞ்சு எந்த பொண்ணுக்கு தான் அந்த வீட்டில் இருக்க மனசு வரும் சொல்லு?
நான் உன்கிட்ட வந்து இருந்தா
நிச்சயமா என்னை தேடி வந்து அங்கே உன் நிம்மதியை கெடுப்பார். அதனால தான் எங்கேயாச்சும் போய் செத்துடலாம் என்று முடிவு பண்ணி போகும்போது ரோட்டில் மயங்கி விழுந்துட்டேன்.
ருத்ரன் தம்பியும் ஜூலியும் தான் என்ன காப்பாத்தி டெல்லிக்கு கூப்பிட்டு போனாங்கள் என்கவும் தாய் சொன்னதை கேட்டவளோ கதறி அழுதாள்.
அழாதடி என மகளின் கண்ணீரை துடைத்தவர்,வா வா உனக்கு அவங்களை அறிமுகப் படுத்துறேனென்று மகளை அழைத்துக் கொண்டு ஹாலிற்கு வந்தவர் அங்கிருந்த ஜூலியிடம் உன்னோட தங்கச்சி ஷமீரா என்க அப்படிங்களா மா.
ம்ம்...ஷமி இது உன்னோட அக்கா ஜூலி அது உன்னோட அக்கா வீட்டுக்காரர் ருத்ரன்.இது தீபன் உன்னோட அண்ணன்.அது ரூபா உன்னோட அண்ணி என்று அவர்களை அறிமுகப்படுத்த புதிதாய் தனக்கு உடன்பிறப்புகள் கிடைத்திருக்கிறார்கள் என்பதை நினைக்கவும் ஷமீராவுக்கு மேலும் சந்தோஷத்தில் அழுகை வந்தது.
அப்பாடா எப்படியோ எல்லாரும் ஒண்ணு சேர்ந்துட்டோம் அது போதும்.ஷமீராவை அங்கு வீட்ல பார்த்த உடனே ருத்ரனுக்கும் எனக்கும் சந்தேகம் வந்துருச்சு.பிறகு தான் வெற்றி கிட்ட விசாரித்தோமென தீபன் சொல்ல, தாயைப்போல பிள்ளைன்னு சும்மாவா சொல்லிருக்காங்க என்று வெற்றி சொல்ல ஆமாடா என்றான்.
அம்மாவோட இப்ப நமக்கு தங்கச்சியும் கிடைச்சாச்சு அதை செலிப்ரேட் பண்ணனுமே என்று தீபன் சொல்லும்போது அதுக்கு முன்னாடி சித்தப்பாவும் ஆன்ட்டியும் எங்க போனாங்க?
அவர்களை பார்க்கணுமே என்று செழியன் சொல்ல,அவங்க பேசிட்டு வரட்டும் பா.நான் போய் சமையலை பார்க்கிறேன் என்ற எஸ்தரோ தனது கண்களை துடைத்துக்கொண்டு கிச்சனுக்கு போக,ஷமீராவோ கணவனுக்கு டீயும் தனக்கு காப்பியும் போட்டு எடுத்துட்டு வந்தவள் செழியனுக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்தாள்.
பின்னர் ஜூலியும் ரூபாவும் அவளிடம் என்ன படிச்சிருக்க என்று விசாரித்தவர்கள் அவர்களைப் பற்றியும் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தனர்
தந்தையை பற்றி தெரிந்து,இத்தனை வருஷமும் மனதுக்குள்ளே வைத்து வேதனைப் பட்டிருக்கும் மகளை நினைக்கும் போது மகியின் மேல் அவ்வளவு ஆத்திரம் வந்தது.
மனசாட்சி இல்லாமல் இப்படி ஒரு துரோகத்தை பண்ணிட்டு உங்களால் எப்படி புருஷனா நடந்துக்க முடிந்தது என்று நினைத்தவருக்கு தனது அம்மா அப்பவே சொன்னாங்களே இவன் வேண்டாம் என்று நாம் கேட்கவில்லை என்று தன்னை தானே நொந்து கொண்டார்.
அப்பொழுது மாடியில் இருந்து தன்ராஜும் பாயலும் சிரித்துக் கொண்டே கீழே வர என்ன சித்தப்பா சமாதானம் ஆகியாச்சா என்க..வேகமாக வந்து செழியனின் கையை பிடித்து கண்ணில் ஒத்தியவர் என் வாழ்க்கையை எனக்கு திருப்பி கொடுத்திருக்க யா.
சாகுற வரைக்கும் யாரை பாக்க முடியாதே என்று ஒவ்வொரு நொடியும் செத்துகிட்டு இருந்தேனோ அவ உயிரோடு இருக்கிறான்னு கண்ணு முன்னால் காட்டிட்டியே இதைவிட என்னப்பா வேணும்னு கலங்கினார்
எனக்கு ஒரு முக்கியமான விஷயம் உன்கிட்ட இருந்து வேணும்.அதனை செய் சித்தப்பா என்பவனை பார்த்தவர் என்ன செய்யணும் சொல்லு அப்பா உடனே செய்றேன் என்றார்.
ஒன்றுமில்லை,சித்தியை முறைப்படி மனைவியாக ஏத்துக்கப்பா அது போதும் என்கவும் இப்படி ஒரு விஷயத்தை செழியன் சொல்லுவான் என்று எதிர்பார்க்காத பாயலும் தன்ராஜும் சந்தோஷத்தில் கண்கலங்கினர்.
அதுக்கு என்ன யா தாராளமாக பண்ணிட்டா போது.நான் இன்னும் யங்கா தான் இருக்கிறேன்.ஆனால் உன் சித்தி தான் கொஞ்சம் வயசான போல இருக்கிறாள் என்கவும்,பாயலோ தனது காதலரை முறைத்துப் பார்த்தார்.
பாயலை பார்த்து சிரித்தவர் கண்டிப்பா கண்ணு,நம்ப சொந்த பந்தங்கள் எல்லாருக்கும் முன்னாடி உன் சித்தியை பொண்டாட்டியா ஏத்துக்கிறேன் போதுமா என்கவும் இது போது சித்தப்பா என்க...
ஹம்..நாளைக்கு உன் சித்தியை கூப்பிட்டு நான் ஊருக்கு போறேன்னு சொல்ல,தாராளமா போகலாம் என்கவும் பின்னர் இரவு உணவை சந்தோஷமாக சாப்பிட்டுவிட்டு படுக்க போனார்கள்.
வனிச்சூர்:
சீக்கிரம் ரெடியாகு டி மேள சத்தம் வேற கேக்குது.அவங்க வந்துகிட்டு இருக்காங்க என்க,பொண்ணு பாக்குறதுக்கு எதுக்கு டி மேள தாளத்தோடு அந்த மானங்கெட்டவன் வீட்டுல இருந்து வராங்க,இதுதான் நடக்காதே என்று மலர் திட்டிக் கொண்டிருக்க,தனது வீட்டினரை திட்றாளே என்று நினைத்தாலும் சிரிப்பு தான் வந்தது.
மாப்பிள்ளையை பார்த்து நீ கவுரமா இருந்தா போதும் டி என்னும் கண்மணியை முறைத்தவள் உலகமே வந்தாலும் உன் அண்ணனைத் தவிர வேற ஒரு பயலுக்கும் நான் மயங்க மாட்டேன்னு பல்லை கடித்துக் கொண்டே சொல்லியவள் தனது அம்மா கொடுத்துட்டு போன நகைகளை எடுத்து போட்டுக் கொண்டவள் ஜன்னல் வழியாக யாரெல்லாம் வருகிறார்கள் என்று எட்டிப் பார்க்கலாம் என்று நினைத்து மலர் கதவை திறக்கப்போக,இன்னும் கொஞ்ச நேரத்துல தான் மாப்பிள்ளையை பார்க்க போறியே,அதுக்குள்ள அவசரமா என்ற கண்மணியோ அவள் மூடை மாற்றி விட்டாள்.
சொந்த பந்தங்களோடு கண்ணன் வீட்டினர் பத்மா வீட்டிற்கு வர அங்கே அவர்கள் நெருங்கிய உறவுகள் சிலர் முன்பே வந்திருக்க,அவர்களை பார்த்து மரியாதை நிமித்தமாக கையை கூப்பி பத்துமாவும் பரமுவும் வாங்க என்றனர்
சரித்தா நேரத்தை வளர்க்க வேண்டாம் மலர கூப்பிட்டு வா முறைப்படி தட்ட மாத்திக்கலாம்னு வீரையன் சொல்ல,சரிங்க மாமா என்ற பத்மாவோ மகள் இருக்கும் ரூம் கதவை தட்ட கண்மணி வந்து கதவை திறந்தாள்.
கண்ணு எல்லாரும் வந்துட்டாங்க டி. மலரை கூப்பிட்டு வா.சரி அத்தை இதே என்றாள்.மலரோ இருவரையும் பார்த்து முறைக்க எதுக்குடி முறைக்கிற என்ன பிரச்சனை உனக்கென்று பத்மா கோவப்பட அத்தை நீ போ நான் பாத்துக்குறேன்.
பத்மாவும் அங்கிருந்து சென்றுவிட மலரு என்ன தாண்டி உனக்கு பிரச்சனை என்று கோவப்பட,நான் தான் உன் அண்ணனை கல்யாணம் பண்ணிக்கணும் இல்லனாக்க எனக்காக என்ன வேணாலும் பண்ணுவேன்னு சொன்னியே டி..
இன்னைக்கு என்ன டி எவனோ ஒருத்தன் பொண்ணு பாக்க வந்திருக்க, நீயே என்னை அலங்கரித்து விடுறியே என்ன இதெல்லாமென்ற மலருக்கு அழுகை வந்தது.வழக்கம் போல ஏதாவது குறை சொல்லி நிறுத்திடு சிம்பிள் என்று கண்மணி சொல்ல...
அட ஆமா..
நான் ஏன் தேவையில்லாம கவலைப்பட வேண்டுமென்று தனது கண்ணை துடைத்துக் கொண்டு கண்மணியோடு வெளியே வரும்போது,அவளுக்கு அண்ணி முறை உள்ளவரோ இந்தா மலரு என டிரேவை கொடுக்க,அதை வாங்கிக் கொண்டு கீழே குனிந்தபடியே போனவளுக்கு அங்கு சொந்த பந்தங்கள் எல்லாரும் இருப்பது தெரிந்தது.
பின்னர் சோபாவில் உட்கார்ந்திருக்கும் பெரியவர்களுக்கு கொடுத்துக் கொண்டே வரும்போது இந்த மொகரை தான் மாப்பிள்ளை நல்லா பார்த்துக்கத்தா.
அப்புறம் அது சொத்தை இது சொத்தைன்னு சொல்லாத.ஓட்டை ஓடிசலா இருந்தாலும் தட்டிக்கலாம் என்று வீரையன் தாத்தா சொல்லவும், "எந்த பரதேசி பயலா இருந்தா எனக்கு என்ன தாத்தா"
நான் ஏன் இந்த வீணா போல பயலை பாக்கணுமென்று மனதிற்குள் திட்டிக் கொண்டவள் வேண்டா வெறுப்பாக பக்கத்து ஷோபாவில் உட்கார்ந்திருப்பவனின் முன்பு டிரேவை நீட்ட,டீ எடுக்க நீளும் கரத்தில் இருக்கும் கை செயினை பார்த்தவள் இது அவங்க போட்டிருப்பதாச்சேனு நிமிர்த்துப் பார்க்க,அவளை பார்த்துக் கொண்டே கண்ணனும் டீயை எடுத்துக் கொள்ள இவங்களாயென்று அவள் விழிகள் விரிப்பதை ரசனையோடு பார்த்தான்.